தமிழ்ப் பழமொழிகள் 3
கி. வா. ஜகந்நாதன்
தமிழ்ப் பழமொழிகள்
தொகுதி 3
தொகுத்தவர்
கி. வா. ஜகந்நாதன்
ஜெனரல் ப்ளிஷர்ஸ்
ஜெனரல் பப்ளிஷர்ஸ்
முதற் பதிப்பு - 2001
இரண்டாம் பதிப்பு - 2006
உரிமை பதிப்பு
ஆசிரியருக்கு
விலை ரூ. 100.00
ஜெனரல் பப்ளிஷர்ஸ்
244, ராமகிருஷ்ண மடம் சாலை,
தபால் பெட்டி நெ. 617,
மயிலாப்பூர், சென்னை-600 004.
தொலைபேசி : 494 1314
Jai Ganesh Offset Printers,
Chennai - 600 004. முகவுரை
இந்தப் புத்தகத்தில் ஏறத்தாழ 25,000 பழமொழிகள் உள்ளன. இவை கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் சேகரித்தவை. சொற்பொழிவு செய்யும் பொருட்டு வெளியூர்களுக்குச் சென்ற காலங்களில் அங்கே உள்ள ஆடவர்களிடமும் பெண்மணிகளிடமும் கேட்டுப் பழமொழிகளை எழுதி வந்தேன். பெரும்பாலும் முதிய பெண்மணிகளே பல பழமொழிகளைச் சொன்னார்கள். பழமொழியை முதுமொழி என்றும் வசனம் என்றும் கூறுவர். பழமொழிகள் அடங்கிய பாடல்களைப் பெற்ற நூல்கள் பழமொழி நானூறு, கோவிந்தசதகம், தண்டலையார் சதகம், இரத்தின சபாபதி மாலை, அருணாசல கவி இராம நாடகக் கீர்த்தனை முதலியவை.
இந்தப் பழமொழிகளில் பல்வேறு சாதியினரைக் குறை கூறி உள்ளவை பல உண்டு. அவற்றைக் கண்டு அந்தச் சாதியைச், சேர்ந்த அன்பர்கள் சினம் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். இழித்துக் கூறுவதில் எந்தச் சாதியினரையும் விட்டு வைக்கவில்லை. பார்ப்பனர்களை இழித்துக் கூறும் பழமொழிகள் பல. அத்தகையவற்றை அப்படி அப்படியே காட்டியுள்ளேன். தமிழ் மக்களுடைய எண்ணம் எவ்வாறு படர்ந்தது என்பதை இவை காட்டுகின்றன.
நாடோடி இலக்கியத்தைச் சார்ந்தவை பழமொழிகள். அறிவு தெரிந்த சிறுவர் முதல் முதுமை உடையவர்கள் வரை யாவரும் தாம் பேசும் பொழுது பழமொழிகளை ஆளுவார்கள். அவரவர்களுடைய அனுபவத்துக்கு ஏற்ற வகையில் அவை இருக்கும். உபநிடதம், இலக்கிய இலக்கணங்கள் ஆகியவற்றைப் பற்றிய பழமொழிகளும் உண்டு. விலங்கினங்கள், பறவைகள், நீர்வாழ் பிராணிகள், ஊர்வன, புழுபூச்சிகள் முதலியவற்றைப் பற்றிய பழமொழிகள் பல. இவற்றை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதலாம். பல பெரியோர்களுடைய வரலாறுகள் சம்பந்தமான பழமொழிகளும் உண்டு. கம்பன், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்களைப் பற்றிய பழமொழிகள் சில உள்ளன.
சில சில ஊர்களைப் பற்றிய பழமொழிகளும் பல உண்டு. அந்த ஊர்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களைப் பற்றிய பழமொழிகளும் உள்ளன.
இவ்வாறு பல பல துறைகளில் அமைந்த இந்தப் பழமொழிகள் அறிவைத் தூண்டுகின்றவை.
தமிழ் மக்கள் இந்தப் புத்தகத்தில் உள்ள பழமொழிகளைப் படித்து இன்புறுவார்கள் என்று நம்புகிறேன்.
கி. வா. ஜகந்நாதன்
'காந்தமலை'
சென்னை—28
4—5—88
உட்தலைப்புகள்
‘செ’ வரிசை
‘சே’ வரிசை
‘சை’ வரிசை
‘சொ’ வரிசை
‘சோ’ வரிசை
‘சௌ’ வரிசை
‘த’ வரிசை
‘தா’ வரிசை
‘தி’ வரிசை
‘தீ’ வரிசை
‘து’ வரிசை
‘தெ’ வரிசை
‘தொ’ வரிசை
‘ந’ வரிசை
‘ப’ வரிசை
‘பா’ வரிசை
‘பி’ வரிசை
‘பீ’ வரிசை
‘பூ’ வரிசை
‘கி. வா. ஜ.’(பின்னட்டை)
தொகுதி 3
செ
செக்கானிடம் சிக்கின மாடும் பார்ப்பானிடம் சிக்கிய ஆளும் உருப்படமாட்டார்கள்.
(உருப்படவே முடியாது.)
செக்கில் அரைபட்ட எள்ளுப் போல.
செக்கில் அரைபட்ட எள் திரும்ப முழுசு ஆகுமா? 11210
செக்கில் அரைபட்ட தேங்காய் பிண்ணாக்கு ஆவது போல.
(பிண்ணாக்கைப் போல.)
செக்கு அடிக்கும் தம்பூருக்கும் ஒத்து வருமா?
செக்கு அடி முண்டம் போல உட்கார்ந்திருக்கிறான்.
செக்கு அடி முத்தி, எனக்கு என்ன புத்தி?
செக்கு அளவு பொன் இருந்தாலும் செதுக்கி உண்டால் எத்தனை நாளுக்குக் காணும்? 11215
(செதுக்குத் தின்னக் குறையும். செக்குப் போல.)
செக்கு உலக்கைபோல் நிற்கிறான்.
செக்கு உலக்கையை விழுங்கினவனுக்குச் சுக்குக் கஷாயம் மருந்து ஆமா?
(தின்றவனுக்கு சுக்குக் கஷாயம் குடித்தாற் போல)
செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியாதா?
செக்குக் கண்ட இடத்தில் எண்ணெய் தேய்த்துச் சுக்குக் கடை இடத்தில் பிள்ளை பெறுவது.
(தலை முழுகிப் பிள்ளை பெறலாமா?)
செக்குக்கு ஏற்ற சிவலிங்கம். 11220
செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன்.
செக்குக்கு மாடு கொடுத்தாலும் கொடுக்கலாம்; சீவலப்பேரியில் பெண் கொடுக்கக் கூடாது.
செக்கு நக்குகிற தம்பிரானே, உன் திருவடிக்குத் தண்டம்; அந்தண்டை நக்குடா பிள்ளாய்; ஐசுவரியம் பெருகி இருப்பாய்,
செக்கு நக்குகிற தம்பிரானே, தண்டம்; நீ தென்புறம் நக்கு; நான் வடபுறம் நக்குகிறேன்.
செக்கும் சிவலிங்கமும் தெரியாதா? 11225
செக்குமாட்டைக் கவலையிலே கட்டினாற் போல.
செக்குமாடு போல் உழைக்கிறான்.
செக்கை நக்குகிற தம்பிரானே, தண்டம், நீ தென்புறம் நக்கு;நான் உட்புறம் நக்குகிறேன்.
செக்கை வளைய வரும் எருதுகளைப் போல்.
செக்கை விழுங்கிவிட்டுச் சுக்குத் தண்ணீர் குடித்தாற் போல. 11230
செங்கதிர் முன்னே வெண்கதிர் அடங்கினது போல.
செங்கோல் அரசனே தெய்வம் ஆவான்.
செங்கோல் ஓங்குபவன் திரித்துவத் தேவன்.
செங்கோல் கோணினால் எங்கும் கோணும்.
செங்கோலுக்கு முன் சங்கீதமா? 11235
செஞ்சி அழிந்தது; சென்னை வளர்ந்தது.
(சென்னப் பட்டணம் தோன்றியது.)
செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன்.
(+ துலுக்கச்சிக்கு எதற்கு உருக்கு மணி!)
செட்டிக்கு உறக்கம் உண்டு; வட்டிக்கு உறக்கம் இல்லை.
செட்டிக்கு எதற்குச் செம்புச் சனியன்?
செட்டிக்கு ஏன் சென்மச் சனியன்? 11240
செட்டிக்கு ஒரு சந்தை; திருடனுக்கு ஓர் அமாவாசை.
செட்டிக்கு ஒரு தட்டு; சேவகனுக்கு ஒரு வெட்டு.
செட்டிக்குத் தெற்குச் செம்புச் சனியன்.
செட்டிக்கும் பயிருக்கும் சென்மப் பகை.
செட்டிக்கும் மட்டிக்கும் சென்மப் பகை. 11245
செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.
செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை.
(காப்பு.)
செட்டிகள் மாடு மலை ஏறி மேயுமா?
செட்டி கூடிக் கெட்டான்; சேணியன் பிரிந்து கெட்டான்.
செட்டி கெட்டால் பட்டு உடுத்துவான். 11250
(கெட்டும். உடுப்பான்.)
செட்டி கொடுத்துக் கெட்டான்.
செட்டி சிதம்பரம்,
செட்டி சுற்றாமல் கெட்டான்; தட்டான் தட்டாமல் கெட்டான்.
செட்டி நீட்டம் குடி தலையிலே.
செட்டி நட்டம் தட்டானில்; தட்டான் நட்டம் ஊர்மேலே. 11255
(யாழ்ப்பாண வழக்கு.)
செட்டிப் பிள்ளையோ? கெட்டிப் பிள்ளையோ!
செட்டி பட்டினி, கால்பணம் சொட்டினான்.
செட்டி படை வெட்டாது; செத்த பாம்பு கொத்தாது.
செட்டி படை வெல்லுமா? சேற்றுத் தவளை கடிக்குமா?
செட்டி பணத்தைக் குறைத்தான்; சேணியன் நூலைக் குறைத்தான். 11260
(காலை.)
செட்டி பிள்ளை கெட்டி.
செட்டி புறப்படப் பட்டணம் முடியும்.
செட்டி போன இடம் எல்லாம் வட்டம் காற்பணம்.
செட்டி மகன் கப்பலுக்குச் செந்துாரான் துணை.
செட்டி முறை எட்டு முறை; எட்டு முறையும் கெட்ட முறை. 11265
(நாஞ்சில் நாட்டு வழக்கு.)
செட்டியார் கப்பலுக்குத் தெய்வமே துணை.
(செந்துாரான்.)
செட்டியார் பிணம் சீத்தென்று போயிற்று.
செட்டியார் பிள்ளை செல்லப் பிள்ளை ஆனால் படைக்குப் போகிற நாயக்கரைப் பயமுறுத்தலாமா?
செட்டியார் மிடுக்கா? சரக்கு மிடுக்கா?
(முடுக்கா? + அம்மி முடுக்கா, அரைப்பு முடுக்கா?)
செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும். 11270
(செத்தால்தான்.)
செட்டியாருக்கு ஒரு காலம்; சேவகனுக்கு ஒரு காலம்.
செட்டியாரே, செட்டியாரே என்றால் சீரகம் பண எடை முக்காற் பணம் என்கிறான்.
செட்டியாரே, செட்டியாரே என்றால் சீரகம் மணக்கிறது என்பாள்.
செட்டியாரே, வாரும்; சந்தையை ஒப்புக் கொள்ளும்.
செட்டியும் தட்டானும் ஒன்று; கட்டிப் புரண்டாலும் தனி. 11275
செட்டியை நீலி தொடர்ந்தது போல.
(நீலி கதை.)
செட்டி வீட்டில் பணம் இருக்கிறது; ஆல மரத்தில் பேய் இருக்கிறது.
செட்டி வீட்டு நாய் சேர் காத்திருந்தது போல.
செட்டி வீட்டு நாயும் கணக்குப் பார்த்துக் கடிக்கும்.
செட்டி வெள்ளரிக்காய் என்றால் நரி நொட்டை விட்டுத் தின்னுமாம். 11280
(சொட்டாங்கு விட்டு.)
செட்டுக்கு ஒரு தட்டு; தேவடியாளுக்கு ஒரு மெட்டு.
செட்டும் கட்டுமாக வாழ்ந்தான்.
செடி இல்லாத குடி போல.
செடி கண்டு பேளாதான் வாழ்க்கை தடி கொன்ட நாயோடு ஒக்கும்.
செடியில் இருக்கிற ஓணானை மடியில் கட்டிக் கொண்டு குடைகிறது குடைகிறது என்றாள். 11285
செடியில் வணங்காதது மரத்தில் வணங்குமா?
செடியை வைத்துக் கொண்டு விலை கூறலாமா?
செண்ணூருக்குப் போகிறேன்; செம்மை உண்டா என்ற கதை.
செத்த அன்று வா என்றால் பத்தன்று வருவான்.
(என்று சொன்னால் பத்தாம் நாள் வருவான்.)
செத்த ஆட்டுக்குக் கண் பெரிது; தாய் இல்லாப் பிள்ளைக்கு வயிறு பெரிது. 11290
செத்த ஆடு காற் பணம்; சுமை கூலி முக்காற் பணம்.
செத்த இடத்தில் புல் முளைத்துப் போகும்.
செத்தது செத்தாயே, செட்டி குளத்தில் விழுந்து சாகலாமா?
செத்த நாய் ஊதினாற் போல.
செத்த நாய் செருப்பைக் கடித்தது போல, 11295
செத்த நாய் திரும்பக் கடிக்காது.
(திருப்பி.)
செத்த நாயில் உண்ணி கழன்றது போல.
செத்த நாயை இழுத்து எறிவது போல.
செத்த பாம்பு வருகிறதே அத்தை, நான் மாட்டேன் என்றதைப் போல.
செத்த பாம்பை அடிப்பது எளிது. 11300
செத்த பாம்பை ஆட்டுகிறான்.
செத்த பாம்பை ஆட்டுவாளாம் வித்தைக்காரப் பெண் பிள்ளை.
(வித்தைக்காரன் மனைவி.)
செத்த பாம்பை எட்ட நின்று அடிப்பான், சீனத்து அதிகாரி.
செத்த பாம்பை எட்டித் தள்ளி நின்று அடிக்கும் தீரன்.
செத்த பிணத்திற் கடை, உற்றார்க்கு உதவாதவன். 11305
செத்த பிணத்துக்கு அருகே நாளைச் சாகும் பிணம் அழுகிறது.
(இனிச் சாகும்). .
செத்த பிணத்துக்கு இனிச் சாகும் பிணம் அழுகிறது.
செத்த பிணத்துக் கண் ஏன்? சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன்?
செத்த பிணத்தைச் சுற்றித் திரிந்தாற் போல.
செத்த பிறகே செய்தவனுக்குச் செய்கிறது? 11310
(செத்தவனுக்கு.)
செத்த பிறகா செல்வம் அநுபவிக்கிறது?
செத்தபின் எப்படிப் போனால் என்ன?
செத்தபின் வீட்டில் கெட்டவன் யார்?
செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்தரிக்காயை அறுக்கும்.
செத்த மாடு புல் தின்னுமா? 11315
செத்தவன் இருக்கச் சவுண்டி சாப்பிட்டது நிஜம் என்பது போல்.
செத்தவன் உடலம் சுமந்தவன் கண்மேலே.
செத்தவன் உடைமை இருந்தவனுக்குக் கிடைக்கும்.
(இருந்தவன் சொத்து. )
செத்தவன் கண் கடாக்கண்; இருந்தவன் கண் இல்லிக்கண்.
செத்தவன் கண் செந்தாமரைக் கண்; இருக்கிறவன் கண் நொள்ளைக் கண். 11320
செத்தவன் கண் பெரிய கண்.
செத்தவன் காதில் சுக்கு வைத்து ஊதினாற் போல.
செத்தவன் கையில் வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம்.
(வெறும் பாக்குக் கொடுத்தது போல.)
செத்தவன் சாட்சிக்கு வருவது இல்லை.
செத்தவன் செந்தாமரைக் கண்ணன். 11325
செத்தவன் தலை கிழக்கே இருந்தால் என்ன? மேற்கே இருந்தால் என்ன?
செத்தவன் தலையில் எத்தனை வண்டி ஏறினால் என்ன?
செத்தவன் நான் இருக்கச் சவுண்டி சாப்பிட்டவன் நான் என்றானாம்.
செத்தவன் பாரம் சுமந்தவன் தலையில்.
செத்தவன் பிழைத்தால் வெற்றி கொள்கிறது ஆர்? 11330
செத்தவன் பிட்டத்தில் நெய் எடுத்துத் திருவண்ணாமலைக்கு விளக்கு ஏற்று.
செத்தவன் பிட்டம் தெற்கே கிடந்தால் என்ன? வடக்கே கிடந்தால் என்ன?
(கிழக்கே இருந்தால் என்ன? மேற்கே இருந்தால் என்ன?)
செத்தவன் பிள்ளை இருககிறவனுக்கு அடைக்கலம்.
செத்தவன் பெண்டாட்டியை இருந்தவன் கொண்டது போல.
(பெண்சாதியை.)
செத்தவன் பெண்டினைக் கட்டினாலும் விட்டவன் பெண்டினைக் கட்டக் கூடாது. 11335
(யாழ்ப்பாண வழக்கு.)
செத்தவன் வாயிலே மண்; இருந்தவன் வாயிலே சோறு.
செத்தவன் வீட்டில் கெட்டிவன் யார்?
செத்தவன் வீட்டில் பாடுபட்டவர் ஆரோ?
செத்தன்று வா என்றால் பத்தன்று வருவான்.
செத்தாருக்கு உவமானம் வையகத்தில் இல்லையா? 11340
செத்தாரைச் சாவார் சுமப்பார்கள்.
செத்தால் செடியைக் கா; பிழைத்தால் வீட்டைக் கா.
செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு.
செத்தால் பிழைக்க மாட்டான்,
செத்துக் கிடக்கிற பிணத்தைக் கண்டால் சிறுக்கச் சிறுக்க வெட்டுவேன் என்ற கதை. 11345
(சிறுக்கிறவரை.)
செத்துச் சுண்ணாம்பாய்ப் போகிறேன்.
செத்துத் தெய்வமாய் நிற்கிறாள்.
செத்துப் போகும் போது தலையில் கட்டிக் கொண்டு போகிறானோ?
செத்துப் போன தாதன் மொட்டுப் போல முளைத்தான்.
செத்துப் போன பசுவைக் கெட்டுப் போன பாப்பானுக்குத் தாரை வார்த்த கதை. 11350
செத்துப் போன பாட்டின் இருந்தால் தாடியைப் பிடித்துக் கொண்டு தொங்கலாம்.
(தெரிவிக்கலாம்.)
செத்துப் போன பாட்டி இருந்தால் கூட இரண்டு சிற்றப்பனைப் பெற்றிருப்பாள்.
செத்துப் போன பார்ப்பானுக்குச் செட்டிப் பெண்ணைக் கொடுத்தாளாம்.
செத்துப் போன பிறகு நித்திய சிராத்தம் செய்கிறது.
செத்துப் போன மாடு உயிரோடு இருந்தால் உடைந்து போன கலயத்தால் ஒன்பது கலயம் கறப்பேன் என்றாளாம். 11355
செத்தும் கொடுத்தான் சீதக்காதி.
(சீதக்காதி-செய்து அப்துல் காதர்.)
செத்தும் கொடுத்தான் சீவரத்துக் கிராமணி.
(சீயபுரத்து.)
செத்தும் சாகாதவன் தியாகம் கொடுப்போன்.
செத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தை மேலே வைத்தால் அது செத்தையைச் செத்தையைத்தான் நாடும்.
(யாழ்ப்பாணத்து வழக்கு.)
செத்தைக் கூலி கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம். 11360
செந்தழலை முன்றானையில் முடியலாமா?
செந்நாய்க் கூட்டத்துக்குச் சிறுத்தையும் அஞ்சும்.
செந்நாயைச் செருப்பால் அடி; கருநாயைக் கழியால் அடி.
செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?
(செப்பிடு வித்தை.)
செப்படி வித்தை எப்படிப் போவேன்? 11365
செப்பு இல்லாக் குடிக்கு அப்பாப் பட்டமா?
(பாடமா?)
செப்புக் கொட்டப்பா, செப்புக் கொட்டு, அப்பம் தின்னலாம் செப்புக் கொட்டு, அவல் இடிக்கலாம் செப்புக் கொட்டு.
(நாஞ்சில் நாட்டு வழக்கு.)
செப்பும் பந்தும் போல.
செம்பால் அடித்த காசும் கொடாத லோபி.
(காசு தர மாட்டேன்.)
செம்பிலும் இல்லை; கல்லிலும் இல்லை. 11370
செம்பரம்பாக்கத்தான் பெயர் பெற்றான்; மாங்காட்டான் நீர் பெற்றான்.
செம்பாடு அடித்தால் என் பாடு தீர்ந்தது.
செம்பு, கம்பளி, எம்பெருமான், பாதேயம், பாதரக்ஷணம்.
(பாதேயம்-கட்டுச்சோறு, பாதரக்ஷணம்-செருப்பு.)
செம்பு நடமாடினால் குயவன குடி போவான.
(நடமாடக் குயவன் தன்னால் ஒதுங்குவான்.)
செம்பொற் சோதி, தம்பிரான சடையைச் சோதி. 11375
(ஒரு கதை செம்பொனி சோதி, திருவையாற்றில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.)
செம்போத்து உண்டானால் சம்பத்து உண்டாகும்.
செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓநாய் உள்ளே.
செம்மறிக் குளத்தான் சுரைக் கொடிக்குப் பாத்தி வெட்டியதுபோல.
செய்கிறது எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப்பானையில் கை அலம்பினாளாம்.
செய்கிறது சிரைக்கிற வேலை; நினைக்கிறது சிரஸ்தார் வேலை. 11380
செய்கிறதை விட்டு விட்டுச் சினையாட்டுக்கு மயிர் பிடுங்குகிறான்.
(மயிர் தானே கொட்டிவிடும்.)
செய்கிறவர்களுக்குச் சொல்லத் தெரியாது; சொல்கிறவர்களுக்குச் செய்யத் தெரியாது.
செய்த தீவினை செய்பவர்க்கே.
செய்த நன்றியைச் செத்தாலும் மறக்கலாமா?
செய்த பாவத்தைச் சொல்லிக் கழி. 11385
செய்தவம் மறந்தால் கைதவம் ஆகும்.
செய்தவர் பாவம் சொன்னவர் வாயோடே.
செய்தவனுக்குச் செய்ய வேணும்; செத்தவனுக்கு அழ வேணும்.
செய்த வினை செய்தவர்க்கே எய்திடும்.
செய்த வினை செய்தவனையே சாரும். 11390
செய்தார்க்குச் செய்வது செத்த பிறகோ?
செய்தானை ஒவ்வாத பாவையோ இல்.
(பழமொழி நானூறு.)
செய்தும் சிரிப்பாணி.
செய்யாத வித்தை எல்லாம் செய்தாலும் தேங்காய்க் குடுக்கையிலே மூத்திரம் பெய்வாளா?
செய்யாப் பிள்ளை வரப்பிலே செய்வாய், செய்வாய் என்றேனே; நீ செய்யேன்; செய்யேன் என்றாயே; நீ பார்த்துக் கொள்; நீ கேட்டுக் கொள். 11395
செய்யும் தொழில் எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கின் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை.
செய்வன திருந்தச் செய்.
(செய்வினை.)
செயற்கை வாசனையோ? இயற்கை வாசனையோ?
செருப்பாக உழைத்தான்.
செருப்பால் அடித்தாலும் திருட்டுக்கை நில்லாது. 11400
செருப்பால் அடித்துக் கருப்பட்டி கொடுப்பது போல.
செருப்பால் அடித்துக் குதிரைக் கொடை கொடுத்தாற் போல.
செருப்பால் அடித்துக் குதிரையோடு தீவட்டி பிடித்தாற்போல.
(தீவட்டி கொடுத்தாற் போல.)
செருப்பால் அடித்துப் பட்டுப் புடைவை கொடுத்தாற்போல.
செருப்பால் அடித்துப் பருப்புச் சோறு போட்டது போல. 11405
செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
செருப்புக் கடித்தால் திருப்பிக் கடிப்பதா?
செருப்புக்காகக் காலைக் குறைக்க முடியுமா?
(குதியைத் தறிக்கிறதா?)
செருப்புக் காலைக் கடித்தால் நாம் செருப்பைக் கடிப்பதா?
செருப்புக்கு அச்சாரம் துரும்பு. 11410
செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டுவதா?
செருப்புப் போட்டவன் கூடவும் சந்நியாசி கூடவும் துணை போகாதே.
செருப்பு வைத்துச் சேவடி தொழுமாப் போலே.
செல் அரித்த காதுக்கு வெள்ளைக் கம்மல் ஏன்?
செல்லக் குடுக்கைத் தேங்காயே, பல் இடுக்கிலே புகுந்தாயே! 11415
செல்லச் சக்கிலிப் பிள்ளை செருப்புச் செருப்பாய்த் தின்று கழிகிறது.
செல்லச் சிறுக்கி அகமுடையான் செவ்வாய்க்கிழமை செத்தானாம்; வீடு வெறிச்சாய் போகுமென்று வெள்ளிக்கிழமை எடுத்தாளாம்.
செல்வத்தில் ஒரு பெண் பிறந்தது; செட்டித் தெரு எல்லாம் திரிந்து விட்டு வந்தது.
(அலைந்து விட்டு, நொட்டிவிட்டு.)
செல்லப் பிள்ளை; ஒன்றும் சொல்லப் புள்ளை.
(சொல்ல முடியவில்லை.)
செல்லப் பிள்ளை சீலை உடாதாம், பிள்ளை பெறுமட்டும். 11420
செல்லப் பிள்ளை செத்தாலும் சொல்லப் பிள்ளை சாகாது.
செல்லம் சறுக்காதா? வாசற்படி வழுக்காதா?
(சறுக்குதா? வழுக்குதா?)
செல்லம் சிரிப்பாணி, சீரங்கத்துத் குந்தாணி.
செல்லம் சீர் அழிக்கும்.
(அழியும்.)
செல்லம் சொல்லுக்கு அஞ்சாள்; அழகி நடைக்கு அஞ்சாள். 11425
செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?
செல்லம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டலமும் செல்லும்.
செல்லன் சொல்லுக்கு அஞ்சான்; அழகன் நடைக்கு அஞ்சான்.
செல்லாக் கோபம் பொறுமைக்கு அடையாளம்.
செல்லாத காசு என்றைக்கும் செல்லாது. 11430
(எங்கும். பணம்.)
செல்லாத பணம் என்று எண்ணாதே; செட்டியார் இருக்கிறார்; காட்டிக் கொள்.
செல்லிக்குச் சிரங்கு; சிறுக்கிக்கு அரையாப்பு; பார்க்க வந்த பரிகாரிக்குப் பக்கப் பிளவை.
(பரிகாரி-வைத்தியன்.)
செல்லுகளால் தினந்தோறும் வளர்க்கப் படாத புற்றுப் போல்.
(செல்-கறையான்.)
செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?
செல்லும் செல்லாததற்குச் செட்டியாரைக் கேள். 11435
(செட்டியார் இருக்கிறார். இது ஒரு கதை.)
செல்லும் பொழுது செலுத்துவாய் சிந்தையை.
செல்வச் செருக்கினால் திரட்டுப்பால் குமட்டுகிறது.
செல்வ நிலையில் சேட்டன் கீழ்க் குரு.
(சேட்டன்-தமையன்.)
செல்வப் பெண் சீரங்க நாயகிக்குச் சீதனம் வந்ததாம் வறையோடு.
செல்வப் பொருள் கொடுத்தால் குறையும்; கல்விப் பொருள் குறையுமோ? 11440
செல்வம் உண்டாகும் காலம் செய்கை உண்டு; வல்லமை உண்டு.
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே.
(குமர குருபரர் வாக்கு.)
செல்வம் சகடக்கால் போல வரும்.
செல்வம் சீர் அழியுமா?
செல்வம் சீரைக் கெடுக்கும். 11445
செல்வம் செருக்குகிறது; காசுக்கு வழி இல்லை.
செல்வம் செருக்குகிறது; வாசற்படி வழுக்குகிறது.
(சறுக்குகிறது.)
செல்வம் சொல்லுக்கு அஞ்சாது.
செல்வம் தொகற்பால போழ்தே தொகும்.
(பழமொழி நானூறு)
செல்வம் நிலைகவ; சேட்டன் கீழ் இரு. 11450
செல்வம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டபமும் செல்லும்.
செல்வமும் சீரும் வளர்த்தாளோடே போயின.
செல்வமே ஜீவாதாரம்.
செல்வர் எழுந்தருள்வது காலக்ஷேபத்துக்கு விரோதம்.
(சீரங்கத்தில்.)
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல். 11455
செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான்.
செலவில் குறைந்த வரவானால் சேமிப்பது எப்படி?
(சேமப்படுகிறது.)
செலவு அதிகம்; வரவு போதாது.
செலவு இல்லாச் செலவு வந்தால் களவு இல்லாக் களவு வரும்.
செலவு இல்லாத சிங்காரம் போல. 11460
செலவு இல்லாப் பணத்துக்குச் சில்லறைக் கடை வைத்துப் பார்த்தானாம்.
செலவு உண்டானால் சேவகம் உண்டு.
செலவோடு செலவு, கந்தப் பொடிக்குக் காற்பணம்.
செவ்வாய் நட்டுப் புதன் அறுக்கல் ஆகாது.
செவ்வாய் புதன் வடக்கே சூலம். 11465
செவ்வாய் வெள்ளி செலவிடாதே.
செவ்வாயோ? வெறுவாயோ?
செவிட்டில் அடித்தால் ராகம் போட்டு அழத் தெரியாது.
(செவிடு - கன்னம்.)
செவிட்டில் அறைந்தாலும் தேம்பி அழத் தெரியாது.
செவிட்டுக்குச் சூன்யம்; அசட்டுக்கு ஆங்காரம். 11470
செவிடன் காதிலே சங்கு ஊதின மாதிரி.
(செவிடன் முன்னே.)
செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போல்.
செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம்.
செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற் போல.
செவிடு இருந்தால் ஊமை இருக்கும். 11475
செழிப்புக்குத் தேன் குருவி.
சென்மக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.
சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல.
சென்மத்தில் பிறந்தது செருப்பால் அடித்தாலும் போகாது.
(சென்மத்தோடே வந்தது.)
சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி. 11480
சென்ற இடம் சிறப்பும், கொண்ட இடம் காணியும்.
சென்ற காசுக்கு வட்டம் இல்லை.
சென்ற காரியத்தைப் பார்த்து, வரும் காரியத்தை அறி.
சென்றது எல்லாம் போகப் பிள்ளையாரே வாரும்.
சென்றும் செலவழித்தும் சீர் அழிந்த குடித்தனம். 11485
சென்னிமலை, சிவன்மலை, சேர்ந்ததொரு பழனிமலை.
சென்னைக்கு வந்து சிவம் ஆனேன்.
சே
சே என்றதற்கு நாய் சேலை கட்டாமல் அலைகிறது.
சேடனுக்கு ஏன் குரங்கு?
(சேடன்-நெசவு வேலை செய்கிறவன்.)
சேடனுக்கு ஏன் குரங்குப் புத்தி? சேற்றில் கிடப்பவனுக்கு ஏன் சோமக் கட்டு? 11490
சேணியன் குடுமி சும்மா ஆடுமா?
சேணியன் நூலை விற்பான்; செளராஷ்டிரன் சேலையை விற்பான்.
சேணியனுக்கு ஏன் குரங்கு?
சேணியனைக் கெடுக்கச் சாண் குரங்கு பற்றாதா?
(போதும்.)
சேத நினைவுக்குப் பூதம் சிரிக்கும். 11495
சேப் பணத்துப் பட்ட ஈப் போல.
சேப்பு ஆத்தாள் வண்டவாளம் போய்ப் பார்த்தால் தெரியும்.
சேம்பு கொய்யச் சிற்றரிவாள் ஏன்?
(வேணுமா?)
சேம்பு சொறியும்; வேம்பு கசக்கும்.
சேயின் முகம் பார்க்கும் தாயின் முகம் போல. 11500
சேர் இடம் அறிந்து சேர்.
சேர்க்கைக்குத் தக்க பழக்கம்.
சேர்க்கை வாசனையோ? இயற்கை வாசனையோ?
சேர்த் துரைக்கு மணங்குச் சேவகன்.
சேர்த்து வைத்துப் பசுக் கறக்கலாமா? 11505
(பால் கறக்கலாமா?)
சேர்ந்தவர் என்பது கூர்ந்து அறிந்த பின்.
சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை.
சேர இருந்தால் செடியும் பகை; தூர இருந்தால் தோட்டியும் உறவு.
(சேடியும் பகை.)
சேரச் சேரச் செடியும் பகை.
(சேடியும் பகை.)
சேரச் சேரப் பண ஆசை; பெறப் பெறப் பிள்ளை ஆசை. 11510
சேரப் போனால் செடியும் பகை.
சேராத இடத்தில் சேர்ந்தால் வாராத துன்பம் வரும்.
சேராரோடு சேராதே; சேம்பைப் புளியிட்டுக் கடையாதே.
சேரியும் ஊரும் செல்வமும் கல்வியும்.
சேலத்துக்குப் போகிறவன் தடம் எது என்றால் செவலைக் காளை இருநூறு என்றானாம். 11515
சேலம் சர்க்கரை சிற்றப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா.
சேவகம் செட்டியாரிடம்; சம்பளந்தான் லொட லொட்டை.
சேலைமேல் சேலை கட்டும் தேவரம்பை ஆனாலும் ஓலைமேல் எழுத்தாணி ஊன்றும் பெண் ஆகாது.
சேவல் கூவினால்தான் பொழுது விடியுமா?
சேற்றால் எடுத்த சுவர். 11520
(சோற்றால்.)
சேற்றில் கல்லைவிட்டு எறிந்தால் எறிந்தவன் மேலே தெறிக்கும்.
சேற்றில் சிக்கிய ஆனை போல.
சேற்றில் செங்கழுநீர் பூத்தது போல.
சேற்றில் தாமரை முளைத்தது போல.
சேற்றில் நட்ட கம்பம் எந்தச் சாரியும் திரும்பும். 11525
சேற்றில் நட்ட தூண் போல.
(கம்பம் போல)
சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவானேன்?
சேற்றிலே சிரிப்பு; நெல்லிலே நெருப்பு.
(சேற்று முகத்தில், நெல்லின் முகத்தில்)
சேற்றிலே புதைந்த ஆனையைக் காக்கையும் கொத்தும்.
(குத்தும்)
சேற்றிலே முளைத்த செந்தாமரை போல. 11530
சேற்றிலே மேயும் பிள்ளைப் பூச்சி போல.
சேற்று நீரில் தேற்றாம் வித்தை உரைத்தால், சேறு வேறு, நீர் வேறு பிரிந்திருப்பது போல.
சேறு கண்ட இடத்திலே மிதித்து ஜலம் கண்ட இடத்திலே கழுவியது.
சேறு போகச் சேற்றால் கழுவுகிறதா?
சேனைக்குப் பட்டமோ, சேனாபதிக்குப் பட்டமோ? 11535
சேனைத் துரையை வாரிக் கொடுத்துச் சீர் அழிந்தேன்.
சேஷ ஹோமம் செய்த வீடு மாதிரி.
சை
சை எனத் திரியேல்.
சைகை அறியாதவன் சற்றும் சங்கதியா அறியான்.
(சங்காத்தியா அறிவான்)
சைவத்துக்கு ஆசைப்பட்டு மரக்கறியைத் தள்ளிவிட்டேன். 11540
சைவத்தைக் கெடுக்கப் பண்டாரம்; வைணவத்தைக் கெடுக்கத் தாதன்.
சைவப் பழம், வில்வக் கிளை.
சைவம் முற்றி எலும்பு எலும்பாய்க் கழிகிறது.
சைவ முத்தையா முதலியாருக்குச் சமைத்துப் போட வள்ளுவப் பண்டாரம்.
சைனன் கையில் அகப்பட்ட பேனைப் போல். 11545
சொ
சொக்கட்டான், சோழி, சதுரங்கம் இம் மூன்றும் துக்கம் அற்றார் ஆடும் தொழில்.
சொக்கட்டான் விளையாட்டு, பொல்லாத சூது.
(சொக்கட்டான் சூது)
சொக்கட்டானும் செட்டியும் தோற்றினாற் போல.
சொக்கநாதர் கோவிலுக்குப் புல்லுக்கட்டுக் கட்டினாற் போல.
சொக்கர் உடைமை அக்கரை ஏறாது. 11550
(சொக்கன் காசு அக்கரை சேராது.)
சொக்கனுக்குச் சட்டி அளவு; சொக்கன் பெண்டிாட்டிக்கும் பானை அளவு.
சொக்கனும் செட்டியும் தொற்றினது போல.
சொக்கா, சொக்கா, சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டா.
சொக்காயை அவிழ்த்தால் சோம்பேறி.
சொக்காரன் குடியைப் பிச்சை எடுத்துக் கெடுப்பான். 11555
(சொக்காய்க்காரன்.)
சொக்குப் பொடி போட்டு மயக்குகிறான்.
சொட்டையிலே உள்ள சீலம் சுடலை வரை.
(நாஞ்சில் நாட்டு வழக்கு.)
சொட்டை வாளைக் குட்டி போல் துள்ளி விழுகிறது.
சொத்தி கை நீளாது; நீளக் கை சுருங்காது.
சொத்துக் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம். 11560
சொத்துக் குடலிலே சோறு புகுந்தால் தத்தக பித்தக என்ற கதை.
சொத்தைக் கொடுத்துப் புத்தி வர வேண்டும்; இல்லாவிட்டால் செருப்படி பட்டும் புத்தி வர வேண்டும்.
சொத்தைப் போல வித்தைப் பேணு.
சொந்தக்காராய் இருந்தாலும் பெட்ரோல் இருந்தால் தான் கார் நகரும்.
சொந்தக் கோழி தோல் முட்டை இடுகிறது. 11565
சொந்த மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைக்கப் பறை ஏன்?
சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு உதவுமா? கனவு கண்ட பணம் செலவுக்கு உதவுமா?
சொப்பனத்தில் கண்ட பணம் செலவுக்கு ஆகுமா?
சொப்பிலே சோறு ஆக்கினால் சுளுவுதான்; சும்மா இருந்து பிள்ளை பெற்றால் அழகுதான்.
சொர்க்கத்திலே தோட்டியும் சரி; தொண்டைமானும் சரி. 11570
சொர்க்கத்துக்கு நான் போனால் போகலாம்.
(நான் அகங்காரம்.)
சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கத்திலே மூட்டை ஆகுமா?
(ஏன்?)
சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கத்திலே கழுதைக் குட்டியா?
சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கக்திலே ராட்டினமா?
சொர்க்கத்துக்குப் போகிறபோதும் பக்கத்திலே கூத்தியாரா? 11575
சொர்க்கத்துக்குப் போயும் ராட்டினமா?
சொர்க்கத்துக்குப் போனாலும் கட்கத்திலே அக்ஷயபாத்திரமா?
சொர்க்கத்துக்குப் போனாலும் கட்கத்திலே ஒரு பிள்ளை ஏன்?
சொருக்கி போனாள், சிறுக்கி வந்தாள்.
சொருக்குக் கொண்டைக்காரி, சொக்குப்பொடி போடுவாள். 11580
சொருகி இருந்த அகப்பை சொத்தென்று விழுந்ததாம்.
சொருகிக் கிடந்த அகப்பையும் சோறு அள்ளப் புறப்பட்டது.
சொருகி வைத்த அகப்பை.
சொல் அம்போ, வில் அம்போ?
சொல்கிறது ஒன்று; செய்கிறது ஒன்று. 11585
சொல்கிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்குத் தலைச் சுமை.
சொல் கேளாப் பிள்ளையினால் குலத்துக்கு ஈனம்.
சொல்திறம் கூறல் கற்றவர்க்கு அழகு.
சொல்லச் சொல்லச் செவிடி புக்ககம் போனாளாம்.
சொல்லச் சொல்லப் பட்டிப் பெண்ணைப் பெற்றான். 11590
சொல்லச் சொல்ல மட்டி மண்ணைத் தின்றான்.
சொல்லப் போனால் பொல்லாப்பு; சொறியப் போனால் அரையாப்பு.
(நொள்ளாப்பு.)
சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவன் பட்ட பாடுபோல.
சொல்லாது பிறவாது; அள்ளாது குறையாது.
சொல்லாது விளையாது; இல்லாது பிறவாது. 11595
சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்.
சொல்லாமல் செய்வார் நல்லோர்; சொல்லியும் செய்யார் கசடர்.
(பெரியோர்.)
சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில் நிற்கும்?
சொல்லிச் செய்வார் சிறியோர்; சொல்லாமற் செய்வார் பெரியோர்; சொல்லியும் செய்வார் கயவர்.
(சொல்லிச் செய்வார் நல்லோர், சொல்லியும் செய்யார் கசடர்.)
சொல்லிப் போக வேணும் சுகத்துக்கு; சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு. 11600
சொல்லின் உறுதி நல்ல நெறியே.
சொல்லுக்கு அரிச்சந்திரன்.
சொல்லுக்குச் சொல் சிங்காரமா?
(சிங்காரச் சொல்லா?)
சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதான்; சோதிக்கும் சாதிக்கும் நடு ஆனான்.
சொல்லும் சொல், ஆக்கமும் கேடும் தரும். 11605
சொல்லும் சொல் கேட்டால் சுட்டாற் போல் கொடுப்பார்.
சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி.
சொல்லுவதிலும் செய்து காட்டுதல் நல்லது.
(மேல்.)
சொல்வது யார்க்கும் எளிது; சொல்லியபடி செய்தல் அரிது.
சொல்வது லேசு, செய்வது அல்லவா பிரயாசம்? 11610
சொல்ல வல்லவனை வெல்லல் அரிது.
சொல்லியும் கொடுத்து எழுதியும் கொடுத்துப் பின்னோடே போனாளாம்.
சொல்வதைக் கேளாத பிள்ளையும் நீட்டின காலை மடக்காத நாட்டுப் பெண்ணும்.
சொல்வதை விடச் செய்வது மேல்.
சொல்வளம் இல்லாத நற்கதை, சொல்லில் அதுவே துர்க்கதை. 11615
சொல்வார் எல்லாம் துணிவாரா தீப் பாய?
சொல்வார் சொன்னால் கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?
(மதி இல்லையா.)
சொல் பேச்சையும் கேளான்; சுய புத்தியும் இல்லை.
சொறி சொறிகிற சுவாரசியத்தில் ஆனை விலைகேட்ட மாதிரி.
சொறிந்து தேய்க்காத எண்ணெயும் எண்ணெய் அல்ல; பரிந்து இடாத சாதமும் சாதம் அல்ல. 11620
சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
சொறி நாய்க்குக் குட்டையே சொர்க்கம்.
சொறி நாய் சுகம் பெற்றது போல.
சொறி நாய் சோர்ந்து விழும்; வெறி நாய் விழுந்து கடிக்கும்.
சொறி பிடித்த நாயானாலும் வீட்டைக் காக்கும். 11625
சொறியக் கொடுத்த பசுப் போல.
சொறியாந் தவளையும் வேட்டை ஆடுகிறதாம்.
சொன்ன சொல்லுக்கு இரண்டு இல்லாமல் வருவான்.
சொன்னது இருக்கச் சுரை பிடுங்குகிறாய்.
(பிடுங்குகிறான்.)
சொன்னதைச் சொல்லடி, சுரணை கெட்ட மூளி. 11630
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
சொன்னதை சொல்லுமாம் கிளி; செய்ததைச் செய்யுமாம் குரங்கு.
சொன்னதை விட்டுச் சுரையைப் பிடுங்குகிற மாதிரி.
சொன்னபடி கேட்காவிட்டால் மண்ணை வெட்டி மாப்படைப்பேன்.
சொன்னபடி கேட்டால் மாப்படைப்பேன்; கேளாவிட்டால் மண்ணை வெட்டிப் படைப்பேன். 11635
சொன்னபடியே கேட்பவனுக்குச் சோறும் இல்லை; புடைவையும் இல்லை.
சொன்னபடி கேட்டால் சுட்டவுடன் தருவேன்.
(தருவாள்.)
சொன்னால் ஆய் செத்துப் போவாள்; சொல்லாவிட்டால் அப்பன் செத்துப் போவான்.
சொன்னால் குற்றம்; சொறிந்தால் அரிப்பு.
சொன்னால் துக்கம்; அழுதால் வெட்கம். 11640
சொன்னால் வெட்கக் கேடு; அழுதால் துக்கக் கேடு.
சொன்னால் பெரும்பிழை; சோறு என்றால் பட்டினி.
சொன்னால் போலக் கேட்டால் சுட்டாற் போலக் கொடுப்பேன்
சொன்னாலும உறைப்பதில்லை; சுட்டாலும் உறைப்பதில்லை.
சொன்னாலும் பொல்லாது; சும்மா இருந்தாலும் தோஷம். 11645
சொன்னான் சுரைக்காய்ககு உப்பு இல்லை என்று.
சொன்னேன், சுரைக்காய்ககு உப்பு இல்லை, பாகற்காய்க்குப் பருப்பு இல்லை என்று.
சோ
சோணாசலத்திற்குச் சிறந்த க்ஷேத்திரம் இல்லை; சோமவாரத்திற் சிறந்த விரதம் இல்லை.
(சோணாசலம்-திருவண்ணாமலை.)
சோதி இல்லா வானமும் நீதி இல்லா அரசனும்.
சோதி பிறவாதோ? சம்பா விளையாதோ? 11650
(சோதி-சுவாதி நட்சத்திரம்.)
சோதி மின்னல்.
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.
சோம்பல் அம்பலம் வேகிறதே என்றால் அதைச் சொல்வானேள்? வாய் வலிப்பானேன் என்பானாம்.
சோம்பல் இல்லாத தொழில் சோதனை இல்லாத் துணை.
(இல்லாத துணை.)
சோம்பலுக்குத் தொடர்ச்சி இளைப்பு; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி முடம். 11655
(மூடத்தனம்.)
சோம்பலே சோறு இன்மைக்குக் காரணம்.
(பிரதானம்.)
சோம்பலே துன்மார்க்கத்திற்குப் பிதா,
சோம்பேறி அம்பலம் தீப்பற்றி எரியுதடா; அதைத்தான் சொல்வானேன்? வாயைத்தான் நோவானேன்?
சோம்பேறிக்கு ஒரு வேலையும் தீராது.
சோம்பேறிக்குச் சோளம் வேளாண்மை. 11660
சோம்பேறிக்குச் சோறு கண்ட இடம் சுகம்.
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
சோம்பேறி கோல் எடுத்தால் நூறு ஆடு ஆறு ஆடு ஆயினவாம்.
சோம்பேறித் தனத்துக்குப் பசிதான் மருந்து.
சோமசுந்தரம், உம் சொம்பு பத்திரம். 11665
சோழ நாடு சோறுடைத்து; பாண்டி நாடு முத்துடைத்து; சேர நாடு வேழம் உடைத்து.
சோழ நீதி பெண்டு விற்றுப் போகிறதா?
சோழபுரத்தானோ? சூது பெருத்தானோ?
சோழ மண்டலமோ? சூது மண்டலமோ?
சோழவரத்துக் குப்பு, சோப்புப் போட்டுக் குப்பு. 11670
(ருப்பு.)
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
(சிண்டு.)
சோழியன் குடுமியைச் சுற்றிப் பிடித்தாற் போல.
சோழியன் கெடுத்தான்.
(தொண்டரடிப் பொடியாழ்வார் திருமலையைப் பாடவில்லை.)
சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி.
சோளக் கொல்லையில் மாடு மேய்ந்தால் சொக்கனுக்கு என்ன? 11675
சோளப் பயிரை மேய்ந்த மாட்டுக்குச் சொர்க்க லோகம் வேண்டுமா?
சோளி சோளியோடே, சுரைக் குடுக்கை ஆண்டியோடே.
சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது?
சோற்றால் எடுத்த சுவர்.
(அடித்த.)
சோற்றில் இருக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன் மோகனக் கல்லைத் தாங்குவானா? 11680
சோற்றில் இருக்கும் கல்லைப் பொறுக்கு என்றால் சொக்கநாதர் கோயில் மதிலைப் பிடுங்குகிறேன் என்கிறான்.
சோற்றில் இருக்கும் கல்லைப் பொறுக்க முடியவில்லை. சொக்கநாத சுவாமி அடிக்கல்லை பேர்க்கிறானாம்.
சோற்றில் இருந்த கல்லை எடுக்காதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?
(இருந்த ஈயை)
சோற்றில் கல் எடுக்க அறியாதவன் முகவணைக் கல் எடுப்பானா?
சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன், ஞானத்தை எப்படி அறிவான்? 11685
சோற்றிலே மலம்; தெளிவாய் இறு.
(வாரு.)
சோற்றின் மறைவில் பத்தியம் பிடிக்கிறது.
சோற்றுக்கு அலைந்தவன் சோளத்தைப் போடு; காய்க்கு அலைந்தவன் பீர்க்கைப் போடு.
சோற்றுக்கு ஆளாய்ப் பறக்கிறான்.
சோற்றுக்கு இல்லாச் சுப்பன் சொன்னதை எல்லாம் கேட்பான். 11690
(இல்லாத பார்ப்பான்.)
சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ?
சோற்றுக்கு இல்லாத வாழைக்காயைப் பந்தலில் கட்டித் தொங்கவிடுகிறதா?
சோற்றுக்கு இளைத்தாலும் சொல்லுக்கு இளைக்கிறதா?
சோற்றுக்கு ஏற்ற பலம்.
சோற்றுக்குக் கதிகெட்ட நாயே, பெரும் பொங்கல் அன்றைக்கு வாயேன். 11695
சோற்றுக்குக் கதி கெட்ட நாயே, மாட்டுப் பொங்கலுக்கு வாயேன்.
சோற்றுக்குக் காற்றாய்ப் பறக்கிறது.
சோற்றுக்குக் கேடு; பூமிக்குப் பாரம்.
சோற்றுக்குச் சூறாவளி; வேலைக்கு வெட்ட வெளி.
சோற்றுக்குத் தாளம் போடுகிறான். 11700
சோற்றுக்கும் கறுப்பு உண்டு; சொல்லுக்கும் பழுது உண்டு.
சோற்றுக்கு வீங்கி.
சோற்றுக்கு வீங்கினவன் பேளுக்குறிச்சி போக வேண்டும்; அடிக்கு வீங்கினவன் போச்சம்பாளையம்போக வேண்டும்.
(போச்சம் பாளையம்-திருச் செங்கோட்டுக்கு அருகில் உள்ள ஊர்)
சோற்றுக்கே தாளமாம்; பருப்புக்கு நெய் கேட்டானாம்.
சோற்றுக்கே திண்டாடும் நாய் சிங்கத்துக்குச் சிம்மாசனம் போட முடியுமா? 11705
சோற்றுச் சுமையோடு தொத்தி வந்த நொள்ளை.
சோற்றுப் பானை உடைந்தால் மாற்றுப் பானை இல்லை.
சோற்று மறைவிலே யாரடா? சுரக்காரன் பத்தியம் பிடிக்கிறேன்.
சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?
சோற்றைக் கொடுத்துத் தொண்டையை நெரிப்பபது போல. 11710
சோற்றைப் போட்டு மென்னியைப் பிடித்தாற் போல
சோற்றை விடுவானேன்? சொல்லுக கேட்பானேன்?
(தூற்றை.)
சோறு அகப்பட்ட இடம் சொர்க்கம்.
(சோறு கண்ட இடம்.)
சோறு இல்லாமல் செத்தவன் இல்லை.
சோறு இல்லையேல் ஜோலியும் இல்லை. 11715
சோறு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும்.
சோறு என்ன செய்யும்; சொன்ன வண்ணம் செய்யும்.
சோறு கண்ட இடம் சுகம்.
சோறு கண்ட இடம் சொர்க்கம்; கஞ்சி கண்ட இடம் கைலாசம்.
சோறு கிடைக்காத நாளில் ஜோடி நாய் எதற்கு? 11720
சோறு சிந்தினால் பொறுக்கலாம்; சுணை சிந்தினால் பொறுக்கலாமா?
(பா - ம்.) சுனை நீர் சிந்தினால்.
சோறு சிந்தினால் பொறுக்கலாம்; நீர் சிந்தினால் பொறுக்கலாமா?
சோறு சிந்தினால் பொறுக்கலாம்; மானம் சிந்தினால் பொறுக்கலாமா?
சோறும் சீலையும் கேளாமல் இருந்தால் சொந்தப் பிள்ளையைப் போலப் பார்த்துக் கொள்கிறேன்.
(பெற்ற பிள்ளையைப் போல வளர்த்துக் கொள்கிறேன்.)
சோறும் இலையும் கேளாமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்குச் சமானம். 11725
சோறும் துணியும் கேளாமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்குச் சமானம்.
சோறும் துணியும் தவிர மற்றதுக்கெல்லாம் குறைவு இல்லை.
சோறு போட்டு மலமும் வார வேண்டியது ஆயிற்று.
சோறு வேண்டாதவன் கருப்புக்குப் பயப்படான்.
(கருப்பு - பஞ்சம்.)
சௌ
சௌப்யம் பேசேல். 11730
(ஆத்திசூடி.)
ஞ
ஞயம் பட உரை.
ஞா
ஞாபகம் இல்லை என்று எவனும் சொல்வான்; ஞானம் இல்லை என்று எவனும் சொல்லான்.
ஞாயப்பிரமாணம் இல்லாத குருக்கள் வீண்.
ஞாயிற்றுக் கிழமை அன்று நாய்கூட எள்ளுக்காட்டிப் போகாது.
ஞாயிற்றுக்கிழமை ஒரு பொழுது; நண்டு வேண்டாம்; சாறு விடு. 11735
ஞாயிற்றுக் கிழமை சென்றால் நாய் படாத பாடு.
(பிறந்தால்.)
ஞாயிற்றுக் கிழமை நாய்கூட எள்ளுக் காட்டில் நுழையாது.
ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர் நாய் படாத பாடு படுவர்.
ஞாயிற்றுக்கிழமை ருதுவானால் நாய்படாத பாடுதான்.
ஞாயிற்றுக் கிழமை மறைப்பார் இல்லை. 11740
(பழமொழி நானூறு)
ஞானத்துக்கு உலகம் பகை; உலகத்துக்கு ஞானம் பகை.
ஞானம் இல்லாத சேயர்கள் ஆவின் கற்றிலும் அதிகம் அல்ல.
ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை.
ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும்.
ஞானம் முற்றி எலும்பு எலும்பாய்க் கழிகிறது. 11745
ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.
(நாலு.)
ஞானிக்கு மன்னன் துரும்பு.
ஞானிக்கு இல்லை, இன்பமும் துன்பமும்.
ஞானிக்கு இல்லை. ஞாயிறும் திங்களும்.
ஞானிக்கு நார் துரும்பு. 11750
ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லையே.
ஞானியார் ஆடும் திருக்கூத்தோடே நானும் ஆடுகிறேன்.
ட
டக்கு டம்மாரம்.
டம்பப் பொடி மட்டை; தட்டிப் பார்த்தால் வெறும் மட்டை.
டம்பாசாரி பொடி மட்டை, தட்டிப் பார்த்தால் வெறுமட்டை. 11755
டமாரக் காளை போல் அலையாதே.
டமாரம் அடிபட, மரகதம் உடைபட.
டா
டா என்றால் டூ என்கிறான்.
டாம்பீகனை நம்பாதே.
டால் டம்மாரம் போட்டுக் கொண்டு போகாதே. 11760
டி
டில்லிக்குப் பாட்சாவானாலும் தல்லிக்குப் பிட்டா.
(தாய்க்கு; குழந்தை.)
டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளை.
டில்லி ராணி சொல்லிவிட்டால் கல்லிலிருந்து நெல் விளையும்.
டீ
டீக்காவுக்கு ஒரு டூக்கா வேணும்.
த்
த்ரி விதம் துஷ்ட லக்ஷணம்.
த்ரி ஜாக்கி யம தரிசனம்.
(சீட்டாட்டத்தில்.)
த
தக்க வாசல் இருக்கத் தாளித்த வாசலிலே நுழைகிறது.
தக்கா புக்கா தண்டடி தடியடி.
தக்கோன் எனத் திரி.
தகப்பன் ஒரு பாக்கு; பிள்ளை ஒரு தோப்பு.
தகப்பன் தேடக் கர்த்தன்; பிள்ளை அழிக்கக் கர்த்தன்.
தகப்பன் பட்டத்தைப் பிள்ளைக்குக் கட்டினால் தகப்பன் சாஷ்டாங்க தண்டம் செய்ய வேண்டும் அல்லவா?
தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?
தகப்பன் பேரை எடுக்கிற பின்ளையே பிள்ளை.
தகப்பன் வெட்டின கிணறு என்று தலைகீழாய் விழுவார்களா? 11775
(துரவென்று விழலாமா.)
தகப்பனுக்கு இட்டது தலைச்சனுக்கு.
தகப்பனுக்க ஒட்டுக் கோவணமாம்; மகன் எடுத்துப் போட்டது வேண்டும் என்கிறான்.
தகப்பனுக்கு ஒட்டுக் கோவணமாம்; பிள்ளைக்கு எங்கே இழுத்துப் போர்த்துகிறது.
தகப்பனுக்குக் கட்டக் கோவணம் இல்லை; மகன் தஞ்சாவூர் மட்டும் நடை பாவாடை போடச் சொன்னானாம்.
தகப்பனுக்குக் காய்ச்சுகிற பாலில் ஆடையைத் துவைக்கிற பிள்ளை. 11780
(குதியைத் தேய்க்கிற பிள்ளை.)
தகப்பனைக் கொன்ற பாவம் மாமியார் வீட்டில் ஆறு மாதம் இருந்தால் போகும்.
(போதும்.)
தகப்பனைக் கொன்ற பிள்ளை.
தங்கக் கத்தி என்று கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா?
(சூரி.)
தங்கக் கத்தி என்று வயிற்றைக் கிழித்துக் கொள்ளலாமா?
தங்கக் குடத்துக்குப் பொட்டு இட்டுப் பார்த்தாற் போல். 11785
தங்கக் கொழு என்றால் நெஞ்சிலா இடித்துக் கொள்வது?
தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆகுமா? தண்ணீர்க் குடமும் தன் குடம் ஆகுமா?
தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால் தவத்துக்குப் போவானேன்.
(திருவிளையாடற் புராணம்.)
தங்கச் செருப்பு ஆனாலும் தலைக்கு ஏறாது.
தங்கத் தூள் அகப்பட்டாலும் செங்கல் தூள் அகப்படாது. 11790
தங்கத்தை உருக்கி விட்டது போல.
தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும் தன் புத்தி விடுகிறது இல்லை என்கிறான்.
தங்கத்தைத் தவிட்டுக்கு மாறுவதா?
தங்கத்தை விற்றுத் தவிடு வாங்கினது போல.
தங்கப் பெண்ணே, தாராவே, தட்டான் கண்டான் பொன் என்பான்; தராசிலே வைத்து நிறு என்பான்; எங்கும் போகாமலே இங்கேயே இரு. 11795
தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.
தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்.
தங்கம் தரையிலே கிடக்கிறது; ஒரு காசு நார்த்தங்காய் உறி கட்டித் தொங்குகிறது.
தங்கம் தரையிலே; தவிடு பானையிலே.
தங்கம் புடத்தில் வைத்தாலும் தன் நிறம் போகாது. 11800
தங்கம் விற்ற கையால் தவிடு விற்க வேணுமா?
தங்க முடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.
(ஆடினாலும் தங்கள் குலம் போகாது, கயவர்.)
தங்கமும் பொன்னும் தரையிலே; ஒரு காசு நார்த்தங்காய் உறியிலே.
தங்க வேலை அறியாத ஆசாரியும் இல்லை; தாய்ப் பால் குடிக்காத குழந்தையும் இல்லை.
தங்கின வியாழன் தன்னோடு மூன்று பேர். 11805
தச்ச வாசல் இருக்கத் தாளித்த வாசலாலே புறப்படுகிறது.
(தக்க.)
தச்சன் அடிக்கக் கடா இழுத்தது.
தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சி கடிக்க உலாவித் திரிகிறான்.
(திரிந்தேன்.)
தச்சன் அடித்த வாசலில் எல்லாம் தலை குனிகிறது.
(தாழக் குனிகிறது.)
தச்சன் கருமான் தள்ளுபடி, மற்றவை எல்லாம் ஏறுபடி. 11810
தச்சன் கோணல் நிமிர்ந்தான்; தப்பிதச் சொல்லாகப் பேசாதே.
தச்சன் தொட்டு என்றால் தச்சத்தி அரிசி என்பாள்.
தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன? கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் என்ன?
தச்சன் பெண்சாதி தரையிலே; கொல்லர் பெண்சாதி கொம்பிலே.
தச்சன் லொட்டு என்றால் அவன் பெண்டாட்டி துட்டு என்பான். 11815
தச்சன் வீட்டில் தயிரும் எச்சன் வீட்டில் சோறும் எப்படிச் சேரும்?
தச்சன் வீட்டில் பால் சோற்றை நக்காதே, வெள்ளாளா.
தச்சன் வீட்டுப் பாயசம்.
தசமி எண்ணெய் தந்தால் தேய்த்துக் கொள்ளலாம்; ஏகாதசி எண்ணெய் இரந்தும் தேய்க்கலாம்; துவாதசி எண்ணெய் தந்தாலும் கூடாது.
தச வாக்யேஷு பண்டித: 11820
தசை கண்டு கத்தியை நாட்ட வேண்டும்.
தஞ்சம் என்ற பேரைக் கெஞ்ச அடிப்பதா?
தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
தஞ்சாவூர் எத்தனும் திருவாரூர் எத்தனும் கூடினாற் போல.
தஞ்சாவூருக்கப் போனக்கால், சண்டை கிண்டை வந்தக்கால், ஈட்டி கிட்டி உடைந்தக்கால், ஊசிக்கு இத்தனை இரும்பு தருகிறேன். 11825
தஞ்சி தாப்பாளு, தச்சப் பையன் கூத்தியார்.
தஞ்சையில் திருட இங்கிருந்தே பம்ப வேணுமா?
தட்சிணை இல்லாவிட்டாலும் அப்பத்தில், பார்த்துக் கொள்ளலாம்.
(தட்சிணை குறைந்தால்; பார்த்துக் கொள்கிறேன், மலையாளப் பார் பான் கூற்று.)
தட்சிணையோடே பட்சணமாம்.
தட்டத் தட்ட எள்ளு; கொட்டக் கொட்டக் கேழ்வரகு. 11830
தட்டார்கள் புரட்டைக் கூற எட்டாறு வழியும் போதா.
தட்டார் தட்டினால் வாழ்வர்; தட்டாமல் போனால் தாழ்வார்.
தட்டாரச் சித்துத் தரையிலே; வண்ணாரச் சித்து வழியிலே.
(சித்துக்கு வகை இல்லை.)
தட்டாரச் சித்துத் தறிசித்து; வண்ணாரச் சித்துக்கு வராது.
தட்டாரப் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும். 11835
தட்டான் ஆத்தாளுக்குத் தாலி செய்தாலும் மாப்பொன்னில் காப்பொன் திருடுவான்.
தட்டான் இடத்தில் இருக்கிறது; அல்லது கும்பிடு சட்டியில் இருக்கிறது.
தட்டான் காப்பொன்னிலும் மாப்பொன் எடுப்பான்.
தட்டான் கொசு தடுமாறுகிறது போல.
தட்டான் தட்டினால் தட்டாத்தி துட்டு என்பாள். 11840
தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் திருடுவாள்.
தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.
(பெய்யும்.)
தட்டான் பறந்தான் கிட்டமழை.
தட்டான் பொன் அறிவான்; தன் பெண்களுக்கு ஒன்று செய்யான்.
தட்டானிடம் இருந்தால் என்ன? கும்மிட்டியில் இருந்தால் என்ன? 11845
தட்டானுக்குப் பயந்தல்லவோ, அணிந்தான் சிவன் சர்ப்பத்தை?
தட்டானும் செட்டியும் ஒன்று ஆனால் தங்கம் கொடுத்தவன் வாயிலே மண்.
தட்டானும் செட்டியும் தலைப்பட்டாற் போல.
தட்டானும் செட்டியும் கண்; சட்டியும் பானையும் மண்.
தட்டானைச் சேர்ந்த தறிதலை. 11850
தட்டானைத் தலையில் அடித்து வண்ணாணை வழி பறித்தது.
(வண்ணானை வழியிலே மறி.)
தட்டிக் கொடுத்தால் தம்பி தலைவிரித்து ஆடுவான்.
தட்டிப் பேச ஆள்இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
தட்டிப் போட்ட வடையைத் திருப்பிப் போட நாதி இல்லை.
(ஆளும் இல்லை.)
தட்டிப் போட்ட வறட்டியைத் திருப்பிப் போட நாதி இல்லை. 11855
(புரட்டிப் போட ஆள் இல்லை.)
தட்டினால் தட்டான்; தட்டா விட்டால் கெட்டான்.
தட்டுக் கெட்ட சால்ஜாப்பு.
தட்டுக் கெட்டு முறுக்குப் பாய்ந்து கிடக்கிறது.
தடவிப் பிடிக்க மயிர் இல்லை; அவள் பெயர் கூந்தல் அழகி.
தடவிப் பிடிக்க மயிர் இல்லை; அவன் பெயர் சவரிராஜப் பெருமாள். 11860
தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனா?
(செங்கல்பட்டு வழக்கு.)
தடி எடுத்தவன் தண்டல்காரன்.
தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினது போல.
தடிக்கு மிகுந்த மிடா ஆனால் என்ன செய்யலாம்?
(தடிக்கு மிஞ்சின.)
தடிக்கு மிஞ்சின மாடா? 11865
தடிக்கு மிஞ்சின மிடாவானால் என்ன செய்யலாம்?
தடித் திருவாரூர்.
தடி பிடிக்கக் கை இல்லை; அவன் பெயர் செளரியப் பெருமாள்.
தடி மழை விட்டும் செடி மழை நிற்கவில்லை.
தடிமனும் தலையிடியும் தன் தனக்கு வந்தால் தெரியும். 11870
(தடிமன்-ஜலதோஷம். யாழ்ப்பாண வழக்கு.)
தடியங்காய் திருடினவன் தோளைத் தடவிப் பார்த்துக் கொண்டானாம்.
தடுக்கில் பிள்ளை தடுக்கிலேயா?
(யாழ்ப்பாண வழக்கு.)
தடுக்கின் கீழே நுழைந்ததால், கோலத்தின் கீழே நுழைகிறான்.
(நுழைகிறது.)
தடுங்கித் தள்ளிப் பேச்சுப் பேசுகிறது.
தடுக்கு விழுந்தால் தங்கப் போகிணி; எகிறி விழுந்தால் இருப்புச் சட்டி. 11875
தடுக்கி விழுந்தால் பிடிக்குப் பாதி.
தடும் புடும் பயம் நாஸ்தி; நிஸப்தம் ப்ராண சங்கடம்.
தடைக்கு அஞ்சாத பாம்பு.
தண்ட சோற்றுக்காரன் குண்டு போட்டால் வருவான்.
(தண்ட சோற்று ராமா, குண்டு போட்டு வாடா.)
தண்ட சோற்றுத் தடிராமன். 11880
தண்ட சோற்று ராமா, குண்டு போட்டு வாடா.
தண்டத்துக்கு அகப்படும்; பிண்டத்துக்கு அகப்படாது.
தண்டத்துக்குப் பணமும்திவசத்துக்குக்கறியும் அகப்படும்.
(காசும் வந்துவிடும்.)
தண்டத்துக்குப் பணமும் திவசத்துக்குக் காசும் அகப்படும்.
(காசும் வந்துவிடும்.)
தண்டத்துக்குப் பெற்றுப் பிண்டத்துக்கு வளர்த்தேன். 11885
தண்டத்துக்கு வந்தான் பண்டாரவாடையான்.
தண்டரிந்த முக்கு; தலைக்கு இரண்டு அமுக்கு.
தண்டிகை ஏறப் பணம் இருக்கிறது; தலையில் கூடத் துணி இல்லை.
(கட்ட.)
தண்டில் போனால் இரட்டிப்புச் சம்பளம்.
தண்டிலே போனால் இரண்டிலே ஒன்று. 11890
(தண்டு-படை.)
தண்டுக்கு ரொட்டி சுட்டுப் போடுகிறவன்.
தண்டு முண்டுக்காரனுக்குத் தயிறும் சோறும்; அடிபிடிக்காரனுக்கு ஆனமும் சோறும்.
தண்டு முண்டுக்காரனுக்குத் தயிறும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீர்க் சோறு.
தண்டை இட அத்தை இல்லாவிட்டாலும் சண்டை இட அத்தை உண்டு.
தண்ணீர் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு. 11895
தண்ணீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
தண்ணீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?
தண்ணீர்க்குடம் உடைந்து தவியாய்த் தவிக்கையிலே கோவணத்தை அவிழ்த்துக் கொண்டு குதியாய்க் குதிக்கிறாயே!
தண்ணீர் கண்டாயா? பால் கண்டாயா?
(பார்.)
தண்ணீர்க்குடம் உடைந்தாலும் ஐயோ! தயிர்க்குடம் உடைந்தாலும் ஐயோ! 11900
தண்ணீர் காட்டினான்.
தண்ணீர் கிடக்கும் நாக்குத் தலை கீழாய்ப் புரளும்.
தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலை இட்ட காதும் சரி.
தண்ணீர் தகராறு, பிள்ளை பதினாறு.
தண்ணீர் தவளை குடித்ததும் குடியாததும், யார் அறிவார்? 11905
தண்ணீர் பட்ட பாடு.
தண்ணீர் மிஞ்சினால் உப்பு; உப்பு மிஞ்சினால் தண்ணீர்.
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும்.
தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்டதார்? குடியாததைக் கண்டதார்?
தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான். 11910
தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.
தண்ணீரில் உள்ள தவளை தண்ணீர் குடித்ததோ, இல்லையோ?
தண்ணீரில் மூச்சு விட்டால் தலைக்கு மேலே.
தண்ணீரில் விழுந்தவர்களுக்கும் தடுமாறி நிற்பவர்களுக்கும் ஆனைப்பலம் வந்து விடும்.
தண்ணீரிலே தடம் பிடிப்பான். 11915
தண்ணீரிலே போட்டாலும் நனையாது; கரையில் போட்டாலும் காயாது.
தண்ணீரிலேயே தன் பலம் காட்டுகிறது.
தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
(வளர்ந்த உப்பு.)
தண்ணீருக்குள் கிடைக்கும் தவளை தண்ணீரைக் குடித்ததும் குடிக்காததும் யாருக்குத் தெரியும்?
தண்ணீரின் கீழே மூச்சுவிட்டால் தலைக்கு மேலே. 11920
(குசு விட்டால்.)
தண்ணீருக்குள் குசுவினாலும் தலைக்கு மேலே வந்துவிடும்.
தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே.
தண்ணீரும் தாமரையும் போல.
தண்ணீரும் பாசியும் கலந்தாற் போல.
தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும். 11925
தண்ணீரைத் தடிகொண்டு அடித்தாலும் தண்ணீரும் தண்ணீரும் விலகுமா?
தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?
தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
தத்திக் குதித்துத் தலைகீழே விழுகிறது.
தத்தி விழுந்தால் தரையும் பொறுக்காது. 11930
தத்துவம் அறிந்தவன் தவசி.
தந்தவன் இல்லை என்றால் வந்தவன் வழியைப் பார்க்கிறான்.
(வந்தவன் வந்த வழியை பார்க்க வேண்டும்.)
தந்தனம் பாடுகிறான்.
தந்தானா என்பது பாட்டுக்கு அடையாளம்.
தந்தால் ஒன்று; தராவிட்டால் ஒன்று. 11935
தந்தி தாழ்ப்பாள் தச்சப் பையன் கூத்தியார்.
தந்திரத்தால் தேங்காய் உடைக்கலாமா?
தந்திரம் படைத்தவன் தரணி முழுவதையும் ஆள்வான்.
தந்திரம் பெரிதா? மந்திரம் பெரிதா?
தந்தை எவ்வழி, தனையன் அவ்வழி. 11940
(புதல்வன்.)
தந்தைக்குத் தலைப் பிள்ளை, தாய்க்குக் கடைப் பிள்ளை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தப்படி எடுத்துத் தாடையில் போடாதே.
தப்பில் ஆனவனை உப்பிலே போடு.
(தப்பிலி.)
தப்பு அடித்தவன் தாதன்; சங்கு ஊதினவன் ஆண்டி. 11945
(தப்பை எடுத்தவன்.)
தப்புப் புடலுக்கு நல்ல ருசி.
தப்பும் திப்பும் தாறுமாறும்.
தபசே அணிகலன்; தாழ்மையே மேன்மை.
தம் இனம் தம்மைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான். 11950
(உள்ளான் சண்டைக்கு.)
தம்பி உழுவான்; மேழி எட்டாது.
(மேழி - கலப்பை.)
தம்பி கால் நடையிலே; பேச்சுப் பல்லக்கிலே.
தம்பி குசு தவிடு மணக்கும்; வேற்றுக் குசுவாக இருக்கிறது, ஏற்றடி விளக்கு.
தம்பி சமர்த்தன்; உப்பு இல்லாமல் கலக் கஞ்சி குடிப்பான்.
தப்பி சிம்புகிற சிம்பலுக்குத் தயிரும் சோறும் சாப்பாடு. 11955
தம்பி சோற்றுக்குச் சூறாவளி: வேலைக்கு வாரா வழி.
தம்படி நாஸ்தி; தடபுடல் ஜாஸ்தி.
தம்பி தலை எடுத்துத் தறி முதலும் பாழாச்சு.
தம்பி தாய் மொழி கற்கத் தாளம் போடுகிறான்; அண்ணன் அந்நிய மொழியிலே ஆர்ப்பாட்டம் செய்கிறானாம்.
தம்பி தெள்ளு மணி; திருட்டுக்கு நவமணி. 11960
தம்பி படித்த படிப்புக்குத் தயிரும் பழையதுமாம்; ஈரவங்காயமாம்,எலுமிச்சங்காய் ஊறுகாயாம்.
தம்பி பள்ளிக்கூடத்தான்.
தம்பி பிடித்த முயலுக்கு மூன்றேகால்.
தம்பி பிள்ளையாண்டான் அலுவல், தலை சொறிய நேரம் இல்லை.
தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆச்சு. 11965
தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி.
தம்பி பேச்சைத் தண்ணீரில்தான் எழுத வேண்டும்.
தம்பி மொண்டது சமுத்திரம் போல.
தம்பி ரோசத்தில் ராஜபாளயத்தான்.
(நாய் வகை.)
தம்பி வெள்ளோலை வாசிக்கிறான். 11970
(வெள்ளோலை சங்கரமூர்த்தி வாசிக்கிறான்.)
தம்பி ஸ்ரீரங்கத்தில் கோதானம் கொடுக்கிறான்; தன்னைப் பெற்ற தாய் கும்பகோணத்தில் கெண்டிப் பிச்சை எடுக்கிறாள்.
(கெஞ்சி.)
தம்ளர் தீர்த்தம் இல்லை; பேர் கங்கா பவானி.
தமக்கு மருவார் தாம்.
(பழமொழி நானூறு.)
தமக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குக் சகுனப்பிழை வேண்டும்.
தமிழுக்கு இருவர் கதி. 11975
(கதி-கம்பரும் திருவள்ளுவரும்.)
தமிழுக்கு இருவர்; தத்துவத்துக்கு ஒருவர்.
தமையன் தந்தைக்குச் சமம்; தம்பி பிள்ளைக்குச் சமம்.
தயிர் குடிக்க வந்த பூனை சட்டியை நக்குமா?
தயிர்ப் பானை உடைந்தால் காக்கைக்கு விருந்து.
தயிர்ப்பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற் போல. 11980
தயிர்ப் பானையை உடைத்து நாய்களுக்கு பங்கு வைத்தாற் போல.
தயிருக்குச் சட்டி ஆதாரம்; சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
(ஆதரவு.)
தயிரும் பழையதும் கேட்டான்; கயிறும் பழுதையும் பெற்றான்.
தயை தாக்ஷிண்யம் சற்றாகிலும் இல்லை.
தர்மத்துக்கு அழிவு சற்றும் வராது. 11985
தர்மத்துக்கு உள்ளும் பாவத்துக்குப் புறம்பும்.
தர்மத்துக்குத் தாழ்ச்சி வராது.
தர்மத்துக்குத் தானம் பண்ணுகிற மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்க்கிறதா?
தர்மத்தைப் பாவம் வெல்லாது.
(கொல்லாது.)
தர்ம புத்திரனுக்குச் சகுனி தோன்றினாற் போல. 11990
தர்மம் உள்ள இடத்தில் ஜயம்.
தர்மம் கெடின் நாடு கெடும்.
தர்மம் தலை காக்கும்.
தர்மமே ஜயம்.
தரகுக்காரப் பயலுக்குத் தன் காடு பிறன் காடு ஏது? 11995
தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா? தலையை முழுகிப் போட்டுப் போகட்டுமா?
தராதரம் அறிந்து புராதனம் படி.
தரித்திரப் பட்டாலும் தைரியம் விடாதே.
தரித்திரப் பட்டி மகன் பேர் தனபால் செட்டி.
தரித்திரம் அறியாப் பெண்டாட்டியால் பயன் இல்லை. 12000
தரித்திரம் பிடித்தவள் தலைமுழுகப் போனாளாம்; அப்போதே பிடித்ததாம் மழையும் தூற்றலும்.
தரித்திரம் பிடித்தவள் தலை முழுகப் போனாளாம்; ஏகாதசி விரதம் எதிரே வந்ததாம்.
தரித்திரன் சந்தைக்குப் போனால் தங்கமும் பித்தளை ஆகும்.
தரித்திரனுக்கு உடம்பெல்லாம் வயிறு.
தரித்திரனுக்குப் பணம் கிடைத்தது போல. 12005
(புதையல் கிடைத்தது போல.)
தரித்திரனுக்கு விஷம் கோஷ்டி.
தரைக்குப் பண்ணாடி; மலைக்கு மண்ணாடி.
தரையில் படுத்தவன் பாய்க்குப் போவான்; பாயில் படுத்தவன் தரைக்கு வருவான்.
தரக்கு வந்தால் சரக்கு விற்கும்.
(தரகு வந்தால்.)
தரை நீக்கிக் கரணமா? 12010
தரையில் தேளும் தண்ணீரில் தேளி மீனும் கொட்டியது போல.
தலை அளவும் வேண்டாம்; அடி அளவும் வேண்டாம்; குறுக்கே அள அடா படியை.
தலை ஆட்டித் தம்பிரான்.
தலை இடிக்குத் தலையணையை மாற்றி ஆவது என்ன?
தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். 12015
(சங்கடமும்.)
தலை இருக்க வால் ஆடுமா?
தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்துக் கொள்வோம்.
தலை எழுத்து இருக்கத் தந்திரத்தால் ஆவது என்ன?
தலை எழுத்துத் தலையைச் சிரைத்தாற் போகுமா?
தலை எழுத்தை அரி என்று சொல்வார், அதல்ல. 12020
தலை எழுத்தோ, சிலை எழுத்தோ?
தலைக்கு ஏற்ற குல்லாயா? குல்லாய்க்கு ஏற்ற தலையா?
தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும்.
தலைக்குத் தலை நாட்டாண்மையாய் இருக்கிறது.
(நாயகமாய்.)
தலைக்குத் தலை பண்ணாட்டு. 12025
தலைக்குத் தலை மூப்பு.
தலைக்குத் தலை பெரிய தனம்; உலைக்குத்தான் அரிசி இல்லை.
தலைக்கு மிஞ்சிய தலைப்பாகை.
தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; காலுக்கு மிஞ்சின உபகாரம் இல்லை.
தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; கோவணத்திற்கு மிஞ்சின தரித்திரம் இல்லை. 12030
(தலைக்கு மீறிய தண்டமும்.)
தலைக்கு மிஞ்சின மிடா.
தலைக்கு முடியோ? காலுக்கு முடியோ?
தலைக்கு மேல் ஐசுவரியம் இருந்தாலும் தலையணை மேல் உட்காராதே.
(தலைக்கு மேல் போனாலும்.)
தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?
(தலைக்கு மேல் ஓடின தண்ணீர்.)
தலைக்கு மேலே கை காட்டுகிறதா? 12035
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
(தலைபோக வந்தது கையோடு போச்சு.)
தலைக்கு வந்தது மயிரோடே போச்சு.
தலைக்கு வேறே, தாடிக்கு வேறா?
(சிகைக்காய்.)
தலை கண்டால் பெண் சிணுங்கும்.
தலை கழன்றவனுக்கு உலகமெல்லாம் சுற்றும். 12040
(சுழன்றவனுக்கு.)
தலை கழுத்தில் நிற்கவில்லை.
(-செருக்கு.)
தலைகீழ் நின்றாலும் வராது.
தலைகீழ்ப் பாடம்.
தலைகீழாய் இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலந்தான் வந்து கூட வேண்டும்.
(வந்தால்தான் கூடும்.)
தலைகீழாய் நிற்கிறான். 12045
தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தைரியம் சொன்னாளாம்.
(புத்தி சொன்னாளாம்.மருத்துவம் பார்த்தாளாம்.)
தலைச்சன் பிள்ளைக்காரிக்குத் தாலாட்டும், தாலி அறுத்தவளுக்கு ஒப்பாரியும் தாமே வரும்.
(அகமுடையான் செத்தவளுக்கு.)
தலைச்சன் பிள்ளைக்கு இல்லாத தண்டையும் சதங்கையும் இடைச்சன் பிள்ளைக்கு வந்தனவா?
தலைச்சனுக்குத் தாலாட்டும் கணவன் செத்தால் அழுகையும் தாமே வரும்.
தலைச் சுமை தந்தான் என்று தாழ்வாய் எண்ணாதே. 12050
தலை சுழன்றவனுக்கு உலகமெல்லாம் சுற்றும்.
தலை சொறியக் கொள்ளி தானே வைத்துக் கொண்டது.
தலை சொறியக் கொள்ளியா?
(கொள்ளி போல.)
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.
(பிழைத்தது பாக்கியம்.)
தலை தெரியாமல் எண்ணெய் தேய்ப்பதா? 12055
தலை தெரியாமல் தத்தித் தடவுகிறது.
தலை தெறிக்க ஓடி வருதல்.
தலை நோய்க்குத் தலையணையைத் திருப்பிப் போட்டால் தீருமா?
தலை நோவும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.
தலைப்பாகை மாற்றுபவன். 12060
தலைப் பிள்ளை ஆண்; தப்பினால் பெண்.
தலைப் புறத்தைத் தந்தால் தருவேன் மருந்துப் பையை.
தலை பெரிது என்று கல்லில் முட்டிக் கொள்ளலாமா?
தலை போக வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
(பாரதக் கதை.)
தலை போனாலும் விலையைச் சொல்லாதே. 12065
தலை மயக்கமே சர்வ மயக்கம்.
தலைமாட்டில் சொல்வன் தலையணை மந்திரம்.
தலைமாட்டிற்குக் கொள்ளி தானே தேடிக் கொண்டாய்.
(கொண்டான்.)
தலைமுறை இல்லாத தாழ்வு.
(தலைமுறையில்.)
தலைமுறை தலைமுறையாய் மொட்டை; அவள் பேர் கூந்தலழகி. 12070
தலைமேல் அம்பு பறந்தாலும் நிலையிற் பிரிதல் ஆகாது.
தலைமேல் ஓடின வெள்ளம் சாண் ஓடினால் என்ன? முழம் ஓடினால் என்ன?
தலைமேலே இடித்தால்தான் குனிவான்.
(குனியான்.)
தலைமேலே தலை இருக்கிறதா?
தலைமொட்டை; கூந்தலழகி என்று பெயர். 12075
தலையார் உறவு தலைக்கு.
தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
(வேண்டியமட்டும் திருடலாம்.)
தலையாரி வீட்டில் திருடி அதிகாரி வீட்டில் ஒளித்தது போல.
தலையாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்.
தலையாலே மலை பிளப்பான். 12080
தலையில் இடித்த பின் தாழக் குனிவான்.
(பிறகா. குனிகிறது.)
தலையில் இடித்தும் குனியாதா?
தலையில் எழுத்து இருக்கத் தந்திரத்தால் வெல்லலாமா?
தலையில் எழுத்துக்குத் தாய் என்ன செய்வாள்?
தலையில் களிமண்ணா இருக்கிறது? 12085
தலையில் விடித்தால் அரைப்பு; இலையில் விடித்தால் பருப்பு.
தலையிலே, இடி விழ.
தலையிலே கொள்ளிக் கட்டையால் சொறிந்து கொள்ளலாமா?
தலையிலே விறகுக் கட்டு; காலிலே தந்தப் பாதுசையா?
தலையும் தலையும் பொருதால் மலையும் வந்து பொறுக்கும். 12090
(மோதினால், பொருத்தினால்.)
தலையும் நனைத்துக் கட்டியும் நாட்டின பிறகா?
தலையைச் சுற்றிப் பிடிக்கிறான்.
தலையைச் சுற்றியும் வாயாலே.
தலையைச் சுற்றுகிற மாடும் கூரையைப் பிடுங்கித் தின்கிற மாடும் குடும்பத்துக்கு ஆகா.
தலையைத் தடவி மூளையை உரிய வேண்டாம். 12095
(உறிஞ்ச வேண்டாம். உறிஞ்சுவான்.)
தலையைத் திருகி உரலில் போட்டு இடிக்கச்சே, சங்குசக்கரம் கடுக்கள் உடைந்து போகப் போகிறது என்றானாம்.
தலையும் நனைத்தாச்சு; கத்தியும் வைத்தாச்சு.
தலையை வெட்டிச் சமுத்திரத்தின்மேற் போடலாமா?
தலைவலிக்குத் தலை அணையைத் தானே மாற்றிப் போட்டாற் போல.
தலைவலி போகத் திருகுவலி வந்தது. 12100
(திரு வலி.)
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
தலைவலியும் பசியும் தனக்கு வந்தால் தெரியும்.
(தலையிடியும்.)
தலைவன் சொற் கேள்.
(+நன்னெறி தவறேல்.)
தலைவன் நிற்கத் தண்டு நிற்கும்.
(தண்டு-சேனை.)
தலைவன் மயங்கச் சர்வமும் மயங்கும். 12105
தவசிக்குத் தயிரும் சாதமும் விசுவாசிக்கு வெந்நீரும் பருக்கையும்.
தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம்.
தவசுக்கு என்று வந்து அச்சப்படுகிறதா?
தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்.
தவசே அணிகலன்; தாழ்மையே மேன்மை. 12110
தவத்தில் இருந்தால் தலைவனைக் காணலாம்.
தவத்து அளவே ஆடுமாம் தான் பெற்ற செல்வம்.
தவத்துக்கு ஒருவர்; கல்விக்கு இருவர்; வழிக்கு மூவர்.
தவத்துக்கு ஒருவர்; தமிழுக்கு இருவர்.
(கல்விக்கு.)
தவத்தோர் மனம் அழுங்கச் செய்யக் கூடாது. 12115
(மனம் முறிய.)
தவம் இருக்க அவம் செய்தாற் போல்.
தவழும் குழந்தைக்கு நடக்கும் குழந்தை யமன்.
தவளை கத்தினால் உடனே மழை.
தவளை கூவிச் சாகும்.
தவளை தண்ணீருக்கு இழுக்கிறது; ஓந்தி மேட்டுக்கு இழுக்கிறது. 12120
(ஓணான்.)
தவளை தன் வாயால் கெடும்.
தவளை தாமரைக்குஅருகில் இருந்தும் அதன் தேனை உண்ணாது.
தவளை வாழ்வும் தனிசு வாழ்வும் ஆகா.
(தனிசு-கடன்.)
தவிட்டுக்கு ஆசைப்பட்டுத் தீட்டிய அரிசியை நாய் கொண்டு போனதாம்.
(தவிட்டுக்கு மன்றாடி)
தவிட்டுக்கு வந்த கைதான் தங்கத்துக்கும் வரும். 12125
(தனத்துக்கும்.)
தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை தன் பிள்ளை ஆகுமா?
தவிட்டுப் பானைக்குள்ளே எலி குமரி ஆனது போலே.
தவிட்டை நம்பிப் போகச் சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.
தவிடு அள்ளின கை தனம் அள்ளும்.
தவிடு தவிடு என்றால் குருடு குருடு என்கிறான். 12130
தவிடு தின்கிறதில் ஒய்யாரம் வேறா?
தவிடு தின்பவன் அமுதை விரும்புவானா?
தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற் போல.
தவிடு தின்னும் அம்மையாருக்கு விளக்குப் பிடிக்க ஓர் ஆளா?
தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிப்பவன் மந்திரி. 12135
தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத பாவி.
தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு; பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.
தழைத்த மரம் வளையாத கணக்கும் உண்டோ?
(அருட்பா.)
தழைந்து போனால் குழைந்து வருவான்.
தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளைப் பிடிப்பானேன்? 12140
தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளை மெள்ள மெள்ளத் திறப்பானேன்?
தள்ளரிய தாறு வந்து தாய் வாழையைக் கெடுத்தாற் போல.
தள்ளாதவன் மனைவி பிள்ளைத்தாய்ச்சி; தள்ளிவிட்டு ஓடுதாம் குள்ளநரி.
தள்ளாவிட்டால் ஆசாரம் இல்லை; இல்லாவிட்டால் உபசாரம் இல்லை.
தள்ளாதவனுக்கு ஆசாரம் இல்லை; தரித்திரனுக்கு உபசாரம் இல்லை. 12145
(இல்லாதவருக்கு )
தள்ளி ஊட்டினது தலைக்குட்டி.
தள்ளிப் பேசினாலும் தழுவிக் குழைகிறது.
(குழைகிறதா?)
தளபதி இல்லாத தளம், கரை இல்லாத குளம்.
தளர்ந்த கிழவனுக்குச் சோறும், இடிந்த சுவருக்கு மண்ணும் உண்டானால் சில நாட்கள் நிற்கும்.
தறுதலைக்குத் தயவு ஏது? 12150
தறுதலைக்கு ராஜா சவுக்கடி.
தன் அழகு தனக்குத் தெரியாது.
தன் அறிவு வேணும்; இல்லை என்றால் சொல்லறிவு வேணும்.
தன் ஆள் இல்லா வேளாண்மையும்; தான் உழாத நிலமும் தரிசு.
தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும். 12155
(ஆளும்.)
தன் இனம் தன்னைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும்.
தன் உயிர் கருப்பட்டி.
(வெல்லம்.)
தன் உயிர் தனக்குச் சர்க்கரை.
தன் உயிர் போல மண் உயிர் காக்க.
(திணை. எண்ணுவர்.)
தன் உயிரைத் தின்கிறான். 12160
தன் உயிரைப் போல மண்ணுயிருக்கு இரங்கு.
(மண்ணுயிரை நினை. மண்ணுயிரையும் காக்கவேண்டும்.)
தன் ஊர் கிழக்கு, தங்கின ஊர் மேற்கு, வேட்டகம் தெற்கு, வேண்டா ஊர் வடக்கு.
(தலைவைத்துப் படுக்கும் திசை.)
தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும்.
தன் ஊரில் தாய் அடிக்காதவன் அயலூரில் ஆனை அடித்தானாம்.
தன் ஊருக்கு அன்னம், பிற ஊருக்குக் காகம். 12165
தன் ஊருக்கு ஆனை; அயலூருக்குப் பூனை.
(மன் ஊருக்குப் பூனை.)
தன் ஊருக்குக் காளை; அயல் ஊருக்குப் பூனை.
தன் ஊருக்குப் புலி; அசலூருக்கு நரி.
தன் கண் இரண்டும் போனாலும் அயலான் கண் ஒன்றாவது போகவேண்டும்.
தன் கண் தனக்குத் தெரியாது. 12170
தன் கண்ணைக் கொடுத்து வெங்கண்ணை வாங்க வேண்டும்.
தன் கஷ்டத்தை விடப் பெண் கஷ்டம் பொல்லாது.
தன் காசு செல்லாவிட்டால் தட்டானைக் கட்டி அடித்தானாம்.
தின் காயம் தனக்குத் தித்திப்பு.
தன் காரியதுரந்தான், பிறர் காரியம் வழவழ என்று விடுகிறவன். 12175
தன் காரியப் புலி.
தன் காரியம் என்றால் தன் சீலையும் பதைக்கும்.
தன் காரியம் தனக்குத் தித்திப்பு.
தன் காரியம் பாராதவன் சதைக்கு ஒரு புழுப் புழுப்பான்.
(சதையால்.)
தன் காரியம் ஜரூர், சாமி காரியம் வழவழா. 12180
தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும்.
(பார்த்தான் நடந்தால் போதாதோ?)
தன் காலைத் தானே கும்பிட்டுக் கொள்ளலாமா?
தன் கீர்த்தியை விரும்பாதவனைத் தள்ளிவிடு.
தன் குஞ்சு என்று வளர்க்குமாம், குயிற் குஞ்சைக் காகம்.
தன் குணம் போல் தனக்கு வரும் வாழ்வு. 12185
தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா?
தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது.
(தெரியாது.)
தன் குற்றம் தனக்குத் தெரியாது.
தன் குற்றம் பார்ப்பவர் இங்கு இல்லை.
தன் குற்றம் முதுகில்; பிறர் குற்றம் எதிரில். 12190
தன் குற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியா.
தன் குற்றமும் முதுகும் தனக்குத் தெரியா.
தன் கை ஆயுதம் பிறன் கையிற் கொடுப்பவன் பதர்.
தன் கைத் தவிடு உதவுவது போலத் தாயார் கைத்தனம் உதவாது.
(தன் கைத்தனம்.)
தன் கையே கண்ணைக் குத்தினாற் போல. 12195
தன் கையே தனக்கு உதவி.
(உதவும்.)
தன் கொல்லையில் கீரையை வைத்துக் கொண்டு அசல் வீட்டுக்குப் போவனேன்?
தன் சோற்றில் உள்ள கல்லைப் பொறுக்கமாட்டாதவன் சொக்கனார் கோயில் மதிற் கல்லைப் பிடுங்கப் போனானாம்.
தன் சோற்றைத் தின்று தரையில் இருந்தால் வீண் சொல் கேட்க விதியோ!
தன் சோறு தின்று, தன் புடைவை கட்டி, விண் சொல் கேட்க விதியோ? 12200
(தன் துகில் தரிப்பார்க்கு, விதி ஏன்?)
தன் தப்புப் பிறருக்குச் சந்து.
தன் தலையில் அக்ஷதை போட்டுக் கொள்கிறான்.
தன் தார் தார் பரதார புத்திரன்.
(தாரதார.)
தன் தொழிலைப் பாராதவனுக்குத் தலையளவு பஞ்சம்.
தன் நாயை உசுப்பியே தன்னைக் கடிக்கச் செய்யலாம். 12205
தன் நாற்றத்தைத் தானே. கிளப்பிக் கொள்கிறதா?
தன் நிலத்தில் குறுமுயல் தந்தியிலும் வலிது.
(யானையிலும் :)
தன் நிழல் தன்னைக் காக்கும்.
தன் நிழல் தன்னோடே வரும்.
தன் நெஞ்சு அறியாத பொய் இல்லை; தாய் அறியாத சூல் இல்லை. 12210
தன் நெஞ்சே தன்னைச் சுடும்.
தன் நோய்க்குத் தானே மருந்து.
(பழமொழி நானூறு.)
தன் பணம் செல்லா விட்டால் தட்டானைக் கட்டி அடித்தானாம்.
(தாதனை.)
தன் பல்லைக் குத்திப் பிறர் மூக்கில் வாசனை காட்டுவது போல.
தன் பல்லைக் குத்தித் தன்னையே நாத்திக் கொள்ளலாமா? 12215
(நாற்றி.)
தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?
தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்.
(கொண்டு.)
தன் பாவம் தவினோடே.
தன் பானை சாயப் பிடிக்கிறது இல்லை.
(பிடிப்பார் உண்டோ?)
தன் பிள்ளை என்று தலைமேல் வைத்துக் கொள்ளலாமா? 12220
தன் பிள்ளைக்குப் பதைக்காதவள் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?
தன் பிள்ளையைத் தான் அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறது போல.
(கேட்டு வர வேண்டுமா?)
தன் மகன் போனாலும் குற்றம் இல்லை; மருமகள் தாலி அறுக்க வேண்டும்.
தன் மனம் பொன் மனம்.
தன் மா ஆனால் தின்னாளோ? தானே வாரி மொக்காளோ? 12225
தன் முதுகில் அழுக்கு இருப்பது தெரியாமல் பிறன் முதுகில் அழுக்கு அழுக்கு என்பது போல.
தன் முதுகு ஒரு போதும் தனக்குத் தெரியாது.
தன் மூக்கு அறுபட்டாலும் எதிரிக்குச் சகுனப் பிழை.
தன்மை உடைமை தலைமை.
தன் வயிற்றைத் தான் உலர வைக்கலாமா? 12230
தன் வாய்க் கஞ்சியைக் கவிழ்த்துப் போட்டான்.
தன் வாயிலே சீதேவி, முன் வாயிலே மூதேவி.
தன் வாயால் தவளை கெட்டது.
தன் வாயால்தான் கெட்டதாம் ஆமை.
தன் வாயால் தான் கெட்டான். 12235
தன் வாலைச் சுற்றிக் கொள்ளும் நாய் போல.
தன் வினை தன்னைச் சுடும்; ஒட்டப்பம் வீட்டைச் சுடும்.
(பட்டினத்தார் கதை.)
தன் வீட்டு அகமுடையான் தலை மாட்டிலும் அசல் வீட்டு அக முடையான் கால் மாடும் நலம்.
(கால் மாட்டிலும்.)
தன் வீட்டுக் கதவை இரவல் கொடுத்துவிட்டு விடிய விடிய நாய் காத்தாளாம்.
தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற் போல. 12240
(வைத்து விடிகிற மட்டும் நாய் ஓட்டினாளாம்.)
தன் வீட்டுக்குத் தவிடு இடிக்கவில்லையாம்; ஊரார் வீட்டுக்கு இரும்பு இடிக்கப் போனாளாம்.
தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை அசல் வீட்டுக்குப் போகச் சொன்னால் போவானா?
தன் வீட்டு நாய் என்று தாவ விடுவதா?
தன் வீட்டுப் படலை இரவல் கொடுத்துவிட்டு விடிய விடிய நாய் காத்தானாம்.
தன் வீட்டு விளக்கு என்று முத்தம் இடலாமா? 12245
(இருக்கிறதா?)
தன் வீட்டு விளக்குத் தன்னைச் சுடாதா?
தன் வீடு தவிர அசல் வீட்டுக்கு மேட்டு வரி என்றான்.
தன்னது தன்னது என்றால் குசுவும் மணக்கும்.
தன்னந் தனியே போகிறாள்; திமிர் பிடித்து அலைகிறாள்.
தன்னவன் செய்கிறது மன்னனும் செய்யான். 12250
தன்னவன் தனக்கானவனாய் இருந்தால் தலைப் பாதியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன?
(பரிமாறுகிறவனாய் இருந்தால், )
தன்னால் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு.
(தன் ஆள் இல்லாத)
தன்னால் தான் கெட்டான் பத்மாசுரன்.
தன்னாலே தாழ் திறந்தால் தச்சன் என்ன செய்கிறது.
தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார். 12255
(அண்ணாவியார் - உபாத்தியாயர்.)
தன்னில் எளியது தனக்கு இரை.
தன்னை அழுத்தினது சமுத்திரம்.
தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
தன்னை அறிந்தவன் தானே தலைவன்.
தன்னை அறிந்து பின்னைப் பேசு. 12260
தன்னை அறியாச் சன்னதம் உண்டா?
(அறியாத சன்னதம் இல்லை.)
தன்னை அறியாதவன் தலைவனை அறியான்.
தன்னை அறியாப் பேயாட்டம் உண்டா?
தன்னை இகழ்வாரைப் பொறுத்தலே தலையாம்.
தன்னை ஒளித்து ஒரு வஞ்சனை இல்லை. 12265
தன்னைக் கட்டக் கயிறு யானை தானே கொடுத்தாற் போல்.
தன்னைக் காக்கிற் கோபத்தைக் காக்க வேண்டும்.
தன்னைக் கொல்ல வந்தது ஆயினும் பசுவைக் கொல்லல் ஆகாது.
(திருவாலவாயுடையார் திருவிளையாடல் 36-21.)
தன்னைக் கொல்லவந்த பசுவைத் தான் கொன்றால்பாவம் இல்லை.
தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு 12270
(தன்னைப் பார்த்துச் சிரிக்குமாம்.)
தன்னைச் சிரிப்பாரைத் தான் அறியான்.
தன்னைத் தானே பழிக்குமாம். தென்ன மரத்திலே குரங்கு இருந்து,
தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக்கட்டை.
தன்னைப் பணிவாரைத் தான் பணியக் காலம் வந்தது.
தன்னைப் பாடுவான் சம்பந்தன்; என்னைப் பாடுவான் அப்பன்; பொன்னைப் பாடுவான் சுந்தரன். 12275
(சிவபெருமான் கூற்று.)
தன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லையாம் தென்னமரத்துக் குரங்கு; பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறதாம் பலா மரத்துக் குரங்கை.
தன்னைப் புகழ்தலும் தரும் புலவோர்க்கே.
(நன்னூல்.)
தன்னைப் புகழ்வானும் சாண் ஏறி நிற்பானும் பொன்னைப் புதைத்துப் போவானும் பேய்.
தன்னைப் புகழாத கம்மாளன் இல்லை.
தன்னைப் புகழாதவரும் இல்லை; தனித்த இடத்தில் குசுவாத வரும் இல்லை. 12280
தன்னைப் பெற்ற ஆத்தாள் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்; தம்பி கும்பகோணத்தில் கோதானம் பண்ணுகிறான்.
தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப்பிச்சை வாங்குகிறாள்; தங்கத்தாலே சரப்பளி தொங்க ஆடுகிறதாம்.
தன்னைப் பெற்றவள் கொடும்பாவி; தன் பெண்ணைப் பெற்றவள் மகராசி.
தன்னைப் போல வேணுமாம் தவிட்டுக்குக் கட்டை.
தனக்காகப் புத்தி இல்லை; பிறத்தியார் சொல் கேட்கிறதும் இல்லை. 12285
தனக்கு அழகு மொட்டை; பிறர்க்கழகு கொண்டை.
(கூந்தல்-தனக்குக் கொண்டை, பிறர்க்கு மொட்டை.)
தனக்கு அழகு மொட்டை, பிறர்க்கு அழகு கொண்டை.
தனக்கு ஆகாத பானை உடைந்தால் என்ன? இருந்தால் என்ன?
தனக்கு இல்லாத அழகு தண்ணீர்ப் பானையைப் பார்த்தால் தீருமா?
(தண்ணீரை.)
தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. 12290
(பழமொழி நானூறு. )
தனக்கு உகந்த ஊணும் பிறர்க்கு உகந்த கோலமும்.
தனக்கு உண்டு; எதிரிக்கு இல்லை.
தனக்கு உதவாத பாலைக் கொட்டிக் கவிழ்த்தாளாம்.
தனக்கு உதவாத பிள்ளை ஊருக்கு உதவும்.
தனக்கு எளிய சம்பந்தம்; விரலுக்குந் தகுந்த வீக்கம். 12295
தனக்கு எளியது சம்பந்தம்; தனக்குப் பெரியது விம்மந்தம்.
(ஒம்மந்தம், யாழ்ப்பாண வழக்கு.)
தனக்கு என்றால் பிள்ளையும் களை வெட்டும்.
தனக்கு என்றால் புழுக்கை கலம் கழுவி உண்ணான்.
தனக்கு என்று அடுப்பு மூட்டித் தான் வாழும் காலத்தில் வயிறும் சிறுக்கும்; மதியும் பெருக்கும்.
தனக்கு என்று இருந்தால் சமயத்துக்கு உதவும். 12300
தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.
தனக்கு என்று கொல்ல நாய் வெடுக்கென்று பாயும்.
(சொல்ல.)
தனக்கு என்ன என்று இருக்கல் ஆகாது; நாய்க்குச் சோறு இல்லை ஆயின்.
தனக்கு ஒன்று, பிறத்தியாருக்கு ஒன்று.
தனக்குக் கண்டுதானே தானம் வழங்க வேண்டும்? 12305
தனக்குச் சந்தேகம்; அடைப்பைக்காரனுக்கு இரட்டைப் படியாம்.
தனக்குத் தகாத காரியத்தில் பிரவேசிப்பவன் குரங்கு பட்ட பாடுபடுவான்.
தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆளுக்குப் பிராண சேதத்துக்கு வரும்.
தனக்குத் தங்கையும் தம்பிக்குப் பெண்டாட்டியும்.
தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது; ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளும். 12310
தனக்குத் தவிடு குத்த மாட்டாள்; அயலாருக்கு இறுங்கு இடிப்பாள்.
(இறுங்கு-ஒருவகைச் சோளம்.)
தனக்குத் தனக்கு என்றால் தாய்ச்சீலையும் பதக்குக் கொள்ளும்.
(தாய்ச்சீலை-கௌபீனம்.)
தனக்குத் தனக்கு என்றால் பிடுங்கும் களை வெட்டும்.
(ஒருகை பிடுங்கும், மற்றொரு கை களை வெட்டும்.)
தனக்குத் தாறும் பிறைக்குத் தூணும்.
தனக்குத் தானே கனியாத பழத்தைத் தடி கொண்டு அடித்தால் கனியுமா? 12315
தனக்கும் தெரியாது; சொன்னாலும் கேட்கமாட்டான்.
தனக்குப் பிறந்த பிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம்; ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கல்யாணம் செய்கிறானாம்.
தனக்குப்பின் தானம்.
தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன? கவிழ்ந்து என்ன?
(நிமிர்ந்து என்ன?)
தனக்குப் பின்னால் வாழ்ந்தால் என்ன? கெட்டால் என்ன? 12320
தனக்குப் பெரியாரைத் தடிகொண்டு அடிக்கிறது.
தனக்குப் போகத் தானம்.
தனக்கும் உயர்ந்த குலத்தில் பெண்ணைக் கொடு; தன்னிலும் குறைந்த இடத்தில பெண்ணை எடு.
தனக்கு மிஞ்சித்தான் பரோபகாரம்.
தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை வேண்டும். 12325
தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.
தனக்கே தகராறாம்; தம்பிக்குப் பழையதாம்.
தனக்கே தாளமாம்; தம்பிக்குப் பலகாரமாம்.
தனத்தால் இனம் ஆகும்; பணத்தால் ஜனம் ஆகும்.
தனம் இரட்டிப்பு; தானியம் முத்திப்பு. 12330
தனிக் காட்டு ராஜா.
தனி மரம் தோப்பு ஆகுமா?
தனி வழி போகாதே; அரவத்தொடு ஆடாதே.
தனிவழியே போனவளைத் தாரம் என்று எண்ணாதே.
தா
தாக்ளா மோக்ளா இல்லை. 12335
தாகம் இருக்கிறது; இரக்கம் இல்லை.
(இறக்கம்.)
தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேல் ஏறுகிறான்.
தாங்கினால் தலைமேல் ஏறுகிறான்.
தாங்குகிற ஆள் உண்டு; தளர்ச்சி உண்டு.
தாசரி தப்புத் தண்டவாளத்துக்குச் சரி. 12340
தாசிக்குப் பாளையம் கொடுத்தால் தகப்பனும் போகலாம்; பிள்ளையும் போகலாம்.
தாசி பகட்டும் தாவணி மிரட்டும் போகப் போகத் தெரியும்,
தாசி பிள்ளைக்குத் தகப்பன் யார்?
தாசில் தடுமாறிப் போகிறது!
தாசில்தார் கோழி முட்டை சம்சாரி அம்மிக்கல்லையும் உடைக்கும். 12345
தாசில்தாருக்குத் தாசில் வேலை போனாலும் சமையல்காரனுக்குச் சமையல் வேலை போகவில்லை.
தாசில்தாருக்கு வேலை போச்சு; சமையல்காரனுக்கு என்ன கவலை?
தாசி வீட்டுக்குப் போனபின் தாய் இல்லாப் பிள்ளை என்றால் விடுவாளா?
தாட்டோட்டக்காரனுக்குத் தயிறும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீரும், பருக்கையும்.
தாட்டோட்டக்காரனைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம். 12350
(தாட்டோட்டக்காரனுடன்.)
தாடிக்குப் பூக் கட்டலாமா?
(சூடலாமா?)
(இரத்தின சபாபதி மாலை.)
தாடிக்கும் பூண் கட்டலாமா?
தாடிக் கொம்புத் தள வரிசை மாதிரி.
தாடி பற்றி எரியும் போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டது போல.
தாடி வளர்த்தவர்கள் எல்லாம் தத்துவ ஞானிகளா? 12355
தாதத்தியைக் கெடுத்தவன் தாதன்; குயவனைக் கெடுத்தவள் குயத்தி.
தாதன் ஆட்டம் திருப்பதியிலே தெரியும்.
தாதன் கையிலே அகப்பட்ட குரங்கு போல அலைகிறான்.
தாதனும் பறையனும் போல.
தாதனைக் கண்டால் ரங்கன். ஆண்டியைக் கண்டால் லிங்கன். 12360
(தூதனைக்கண்டால் லிங்கன்.)
தாதா கோடிக்கு ஒருவர்.
(ஒளைவயார் பாடல்.)
தாது அறியாதவன் பேதை வைத்தியன்.
தாதும் இல்லை, பிராதும் இல்லை.
தாபரம் இல்லா இளங் கொடி போல.
தாம் கெட்டாலும் பிறருக்குக் கேடு நினைக்கல் ஆகாது. 12365
தாம்பும் அறுதல், தோண்டியும் பொத்தல்.
தாம்பூலத் தட்டுச் சாதிக்காதது இல்லை,
(சிசுபாலன் வதம்.)
தாம்பை விட்டு வாலைப் பிடிக்கிறது போல,
தாம்வளர்த்ததோநேச்சு மாமரம் ஆயினும் கெடார்.
(திருவாசகம்.)
தாம் வளைவார் பிறருக்கு ஊற்றங்கோள் ஆகார். 12370
தாமதம் தாழ்வுக்கு ஏது.
தாமரை இல்லாத் தடாகம் போல.
(சந்திரன் இல்லா வானம் போல.)
தாமரை இலைத் தண்ணீர் போல.
தாமரை இலையில் தண்ணீரைப் போல் தவிக்கிறான்.
தாமரையில் விழுந்த மழைத் துளி போல. 12375
தாய் அவிடே, தாக்கோல் இவிடே.
(மலையாளம்.)
தாய் அற்றால் சீர் அறும்.
தாய் அறியாத சூல் இல்லை.
(தன் நெஞ்சு அறியாப் பொய் இல்லை.)
தாய் இட்டி பேரை ஊர் இட்டு அழைக்கும்.
தாய் இடப் பிள்ளை இடந் தானே மனம் மகிழ. 12380
தாய் இருந்தால் நாய் வருமா?
தாய் இல்லாக் குழந்தை தானே வளரும்.
தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.
தாய் இல்லாத பிள்ளை ஊருக்கு ஆகுமா?
(ஆகாது.)
தாய் இல்லாத பிள்ளை தறுதலை. 12385
தாய் இல்லாத பிறந்தகமும் கணவன் இல்லாத புக்ககமும்.
தாய் இல்லாதவனுக்கு ஊர் எல்லாம் தாய்.
தாய் இல்லாப் பிள்ளை என்றால் தேவடியாள் கேட்க மாட்டாள்.
தாய் இல்லாப் பிள்ளைக்கு நாய் பட்ட பாடு.
தாய் இல்லாப் பிள்ளையைத் தலையிலே தட்டலாமா? 12390
தாய் உள்ளமட்டும் சீராட்டு.
தாய் உறவோ? நாய் உறவோ?
தாய் ஊட்டாத சோற்றைத் தயிர் ஊட்டும்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.
தாய் ஏழு அடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள். 12395
தாய் ஒரு பாக்குத் தான் கமுகத் தோப்பு என்கிறாள்.
தாய்க் கண்ணோ, நாய்க் கண்ணோ?
தாய்க் கிழவி எப்போது சாவாளோ? தாழ்வாரம் எப்போது ஒழியுமோ?
தாய்க்கிழவியும் வெறிநாயும் பிடித்தால் விடார்.
தாய்க்கு அடங்காதவன் ஊருக்கு அடங்கான். 12400
தாய்க்கு அடங்காதவன் ஊருக்கு அடங்கான்; ஊருக்கு அடங்காதவன் ஒருவருக்கும் அடங்கான்,
தாய்க்கு அடுத்தது தாரம்.
தாய்க்கு ஆகாத பிள்ளை ஊருக்கு ஆகாது.
(+ஊருக்கு ஆகாத பிள்ளை ஒருவருக்கும் ஆகாது. ஊருக்கு ஆகுமா?)
தாய்க்கு ஆகாத பிள்ளையும் தட்டானுக்கு ஆகாத பொன்னும் பதர்.
தாய்க்கு ஆகாத மகன் ஆருக்கு ஆவான்? 12405
தாய்க்கு உள்ளது மகளுக்கு.
தாய்க்கு ஒளித்த சூலா?
தாய்க்குச் சுகம் ஆனால் கர்ப்பத்துக்குச் சுகம்.
தாய்க்குச் சோறு இருக்கிறது ஊருக்குப் புகழ்ச்சியா?
தாய்க்குத் தலைப் பிள்ளை. 12410
தாய்கருத் தவிடு இடியான்; தம்பிரானுக்கு இரும்பு இடிப்பான்.
(அடிப்பான்.)
தாய்க்குத் தாலி செய்தாலும் தட்டான் திருடுவான்.
தாய்க்குப் பின் தகப்பனும் தாயாதி.
தாய்க்குப் பின் தாரம் தன்மை கெட்டால் அபதாரம்.
தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன். 12415
தாய்க்கு மிஞ்சி உறவும் இல்லை; சுக்குக்கு மிஞ்சி மருந்தும் இல்லை.
தாய்க்கு மூத்துத் தகப்பனுக்கு விளக்குப் பிடிக்கிறான்.
(வழக்கு முடிப்பான்.)
தாய்க்கு விளைந்தாலும் தனக்கும் விளைய வேண்டும்.
தாய்க்கு விளைந்தாலும் தனக்கு விளையத் தவம் செய்வாராம்.
தாய் கஷ்டம் தலையிலே; மகள் கஷ்டம் மடியிலே, 12420
தாய் காணாது தவிக்கும் சேய்போல்.
தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள், மகன் கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.
தாய் கூடப் பிறந்த மாமனிடத்தில் குலமும் கோத்திரமும் சொன்னது போல.
தாய் கேட்டுப்பட்டி, தகப்பன் காவடிப்பட்டி, தங்கை மோருப்பட்டி! தமக்கை சாதப்பட்டி.
தாய் கைக்குத் தோஷம் இல்லை. 12425
தாய் கையில் இருக்கிற தளத்தைப் பார்க்கிலும் தன்கைத் தளமே மேல்,
(பொன்னைக் காட்டிலும்.)
தாய் கொட்டையூரில் முட்டி எடுக்கிறாள், பையன் கும்பகோணத்தில் கோதானம் பண்ணுகிறான்.
(மூட்டி-பிச்சை.)
தாய் கொண்டு பொறுக்காததை ஆர் பொறுப்பார்?
தாய்ச் சீலைக்குக் சாண்துணி இல்லை; தலைக்கு மேலே சரிகை மேற்கட்டி.
(தாய்ச்சீலை-கோவணம்.)
தாய் செத்தால் மணம், மகள் செத்தால் பிணம். 12430
தாய் செத்தாள்; மகள் திக்கற்றாள்.
தாய் சொல் கேளாப் பிள்ளை தறுதலை.
தாய் சொல் கேளாதவன் நாய்வாய்ச் சீலை.
தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை.
தாய் சொல் விரதத்தை விட்டு வேறே விரதத்தை எடுக்கிறதா? 12435
தாய் தகப்பன் பட்டினி கிடக்க ஊரில் அன்னதானம் செய்கிறானாம்.
தாய் தட்டுப் பிச்சை எடுக்கிறாள்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் பண்ணுகிறான்.
தாய் தந்தை இறந்தாலும் பிழைக்கலாம்; நாணயம் இழந்தால் பிழைக்கப்படாது.
தாய் தவிட்டுக்கு அழுகிறாள்; மகள் இஞ்சிப் பச்சடி கேட்கிறாள்.
(அழுகையிலே).
தாய் தன்னை அறியாத கன்று இல்லை. 12440
(கம்பராமாயணம்.)
தாய் தனக்கு ஆகாத மகள் ஆர்தனக்கு நல்லவள் ஆவாள்?
தாய் தேடியும் பிள்ளை தேடியும் மடிசீலை ஒன்று.
தாய் தூற்றினால் ஊர் தூற்றும்; கொண்டவன் துாற்றினால் கண்டவன் தூற்றுவான்.
தாய் நக்கத் தழுவணி உதிர.
(தழுவணி-சேனை.)
தாய் பேர் போனாலும் போகட்டும்; தம்பி சக்கிலியனானால் சரி. 12445
(தம்பியை இழித்தபடி.)
தாய் பொறுக்காததை ஊர் பொறுக்குமா?
தாய் பொன்னிலும் மாப்பொன் திருடுவான் தட்டான்.
தாய்போல் பெண்ணும் தகப்பன் போல் பிள்ளையும்.
தாய் மனம் பித்து, தகப்பன் மனம் கல்.
தாய் மனைக்கு வந்தது பிள்ளை மனைக்கும். 12450
தாய் மாமன் இடத்தில் குலம் கோத்திரம் சொன்னாளாம்.
தாய் மாமன் வீட்டிலேயா குலம் கோத்திரம் கேட்கிறது?
தாய் மிதிக்க ஆகா முடம்.
(பழமொழி நானூறு.)
தாய் மிதிக்கக் குஞ்சு முடம் ஆகாது.
தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டா. 12455
தாய் முகம் பார்க்கும் சேய் முகம் போல.
தாய் முலை குடித்துத் தாகம் தணிய வேணும்.
தாய் முலைப்பாலுக்குப் பால் மாறினது போல.
தாய் வசவு பிள்ளைக்குப் பலிக்குமா?
தாய் வயிற்றில் இராது பிறந்தது போல். 12460
தாய் வயிற்றைப் பார்ப்பாள்; பெண்டாட்டி மடியைப் பார்ப்பள்.
(பெண்டாட்டி இடுப்பைப் பார்ப்பாள்.)
தாய் வளர்த்த பிள்ளை தறுதலை.
தாய் வார்த்தை கேளாத பிள்ளை நாய் வாயிற் சேலை.
தாய் வீட்டுக்குப் போனாலும் தன்னைப் பேணிப் போக வேணும்.
தாய் வீட்டுப் பெருமையை அக்காள் தங்கச்சி பேசிக் கொண்டாற்போல. 12465
தாய் வீடு ஓடிய பெண்ணும் பேயோடாடிய கூத்தும்.
தாய் வைத்த பெயர் தலையில் இருக்க நாய் வைத்த பெயர் நடு நாயகமாக விளங்கிற்றாம்.
தாயாதிக்காரன் வாழவைத்த வீடு உண்டா?
தாயாதிக்குக் குணம் இல்லை; கோவணத்துக்கு மணம் இல்லை.
தாயாதிச் சண்டை. 12470
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
தாயும் தகப்பனும் தவிரச் சகலமும் வாங்கலாம்.
தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த பங்காரவாசி.
தாயும் பிள்ளையும் ஆனால் தாய் எந்த வழியோ பிள்ளையும் அந்த வழி.
தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே. 12475
தாயே என்று போனாலும் நாயே என்று வருகிறது.
தாயை அடக்கி அவிசாரி போனாளாம்.
(போனாற்போல.)
தாயை அடக்கி மகள் ஊரில் சுற்றுகிறாளாம்.
தாயைக் கண்ட கன்று போல.
தாயைக் கன்டான்; மகளைக் கொண்டான். 12480
தாயைக் கொன்றவன் சொல்லுக்கு அஞ்சான்.
தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே பாதிப் பேர்.
தாயைச் சேர்ந்த உறவு ஆனாலும் அறுத்துத்தான் உறவாட வேண்டும்.
தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால் பெண்ணைச் சந்தைக் கடையில் பார்க்கலாம்.
தாயைப் பகைத்தாலும் ஊரைப் பகைத்தல் ஆகாது. 12485
தாயைப் பழித்தவன் சேயைப் பழிப்பான்.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே.
தாயைப் பழித்து மகள் அவிசாரி ஆடுகிறாள்.
(ஆடினாளாம்.)
தாயைப் பழித்து மகள் செய்வது போல.
தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள்; பாலைப் பார்த்துப் பசுவைக் கொள். 12490
தாயைப் பார்த்து மகளைக் கொள்.
தாயைப் பிரிந்த கன்று போல.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே.
(தள்ளினாலும் தள்ளாதே.)
தாயைப் போல உறவில்லை; காயத்திரியைப் போல மந்திரம் இல்லை.
தாயைப் போல் பிள்ளை; நாயைப் போல் வால். 12495
தாயைப் போல் பிள்ளை; நூலைப் போல சீலை.
தாயை மறக்கடிக்கும் தயிரும் பழஞ் சோறும்.
தாயோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்.
தாயோடு போயிற்றுச் செல்வம், தேரோடு போயிற்றுத் திருநாள்.
தாரத்தை ரட்சியாதவன் வீரம் எதற்கு உதவும்? 12500
தாரம் தேடக் கிடைப்பாள்; தம்பி தேடக் கிடைப்பானா?
தாரம் வாய்த்தது வள்ளுவருக்கு; தம்பி வாய்த்தது ராமருக்கு.
தாரமும் குருவும் தலைவிதிப்படி.
(தலையில் எழுத்து.)
தாரமும் குருவும் தன் வினைப் பயனே.
தாராப் பெட்டை போல. 12505
தாராளக் கையே, தலைமேல் சற்று வையேன்.
தாராளன் தண்ணீர் பந்தல் நீர் சோற்றுத் தண்ணீர் நெய்பட்ட பாடு.
தாராளம் தண்ணீர் பட்ட பாடு; நீர்மோர் நெய் பட்ட பாடு.
தாலாட்டும் பிலாக்கணமும் தரமறிந்து சொல்ல வேணும்.
தாலி அறுத்தவள் ஏன் இருக்கிறாள்: தாரம் தப்பினவனுக்குப் பொங்கலிட. 12510
தாலி அறுத்தவள் வீட்டிலே தடவினது போல.
தாலி அறுத்தவன் வீட்டிலே தலைக்குத் தலை பெரிய தனம்.
(அநுத்தவள் குடித்தனம்)
தாலி அறுத்தவளுக்கு மருத்துவச்சி தயவு ஏன்?
(உதவி.)
தாலி அறுத்த வீட்டில் ஆளுக்கு ஆள் அதிகாரம்.
தாலி அறுப்பான் கல்யாணத்தில் தலைக்குத் தலை நாட்டாண்மை. 12515
தாலி ஒழிந்தது எல்லாம் அமைந்ததாம்; பெண்ணுக்குக் கூறை ஒழிந்தது எல்லாம் கொண்டவன்தானாம் அகமுடையான்.
தாலி கட்டும் பெண்ணின் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா?
தாலிப் பறி, சீலைப் பறியா?
தாலிப் பேச்சு ஆனாலும் அறுத்துப் பேச்சு.
(செட்டி நாட்டு வழக்கு.)
தாலியை அறுத்துப் பீலி பண்ணினாளாம். 12520
தாவத் தஞ்சம் இல்லா இளங் கொடி போலத் தவிக்கிறாள்.
(தவிக்கிறான்.)
தாழ் இட்டவன் தாழ் திறக்க வேண்டும்.
தாழ்குலத்தில் பிறந்தாலும் புத்தியினால் அரளிப் பூவைப்போல் பிரயோசனப்படுவர்.
தாழ்ந்த இடத்தில் தண்ணீர் தங்கும்.
தாழ்ந்தது தங்கம்; உயர்ந்தது பித்தளை. 12525
தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார்.
தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.
தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.
தாழ்வதும் வாழ்வதும் சகடக் காய் போல.
தாழ்விலே பெருமையும், வாழ்விலே தாழ்மையும் வேண்டும். 12530
தாழ உழுதால் தளிர் ஓடும்.
(ஆழ உழுதால் ஆட்டுரத்துக்கும் அதிகம்.)
தாழப் பொறுத்தாலும் வாழப் பொறுக்க மாட்டாள்.
தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்.
(குடலும்.)
தாழியும் தாழியும் தமுக்கிட்டாற் போல.
தான் உண்ட நீரைத் தலையாலே தரும் தென்னை. 12535
தாள் ஏற நீர் ஏறும்.
தாளம், வேதாளம்.
(பரிகாசம்.)
தாளுக்கும் அகப்படாமல் தாழ்ப்பாளுக்கும் அகப்படாமல்.
தாறு புறப்பட்டுத் தாய் வாழையைக் கெடுத்தாற் போல.
தாறு மாறும் தக்கட வித்தையும். 12540
தான் அடங்கத் தன் குலம் அடங்கும்.
(தன் குலம் விளங்க.)
தான் அறியாச் சிங்காரம் தன் பிடரிக்குச் சேதம்.
(யாழ்ப்பாண வழக்கு; தனக்கு அடாச் சிங்காரம்; சிங்களம் சிங்களம் அன்று.)
தான் அறியாத ஆவேசம் உண்டா?
தான் அறியாதது நஞ்சோடு ஒக்கும்.
தான் ஆடாவிடினும் தன் சதை ஆடும். 12545
தான் ஆண்ட உலக்கையும் தங்கப் பூஞ்சரமும் தலைமருமகளுக்கு.
(பூஞ்சரடும்.)
தான் இருக்கிற அழகுக்குத் தடவிக் கொண்டாளாம் வேப்பெண்ணெயை.
தான் உள்ள போது உலகம்.
தான் ஏற நீர் ஏறும்.
தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். 12550
தான் கள்ளன் பிறரை நம்பான்.
தான் கற்ற ஒன்றைத் தரிக்க உரை.
தான் குடிக்கக் கூழ் இல்லை; வாரத்துக்கு இரண்டு பன்றிக் குட்டி வளர்க்கிறான்.
தான் குடிக்காத பாலைக் கவிழ்த்து விடுகிறதா?
தான் கும்பிடும் தெய்வம் ஆனாலும் பொய்ச் சத்தியம் செய்தால் பொறுக்குமா? 12555
தான் கெட்டதும் அல்லாமல் சந்திர புஷ்கரிணியையும் கெடுத்தானாம்.
(சந்திர புஷ்கரிணி- ஸ்ரீரங்கத்தில் உள்ளதொரு தீர்த்தம்.)
தான் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.
தான் சம்பாதித்தால் தனக்கு உதவும்; ஊர் சம்பாதித்தால் உதவமாட்டாது.
(உதவுமா?)
தான் சாக மருந்து உண்பார் இல்லை.
(தின்பார்களா?)
தான் செத்தபின் உலகம் கவிழ்ந்தென்ன, நிமிர்ந்தென்ன? 12560
தான் செத்துக் கைலாசம் காணவேண்டும்.
தான் தளும்பல், பிறருக்கு ஊன்றுகோல்.
தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பைத்தியக்காரப் பட்டமும் கட்டிக் கொண்டான்.
தான் திருடி அயல் வீட்டுக்காரரை நம்பமாட்டாள்.
(அயலாரை.)
தான் திருடி, பிறரை நம்பாள்; சிறுதனக் கள்ளி விருந்தறியாள், 12565
தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.
(எரிக்கும்.)
தான் தின்னச் சோற்றுக்கு வழியைக் காணோம்; வாரத்துக்குக் கோழி வளர்த்தானாம்.
தான் தின்னத் தவிட்டைக் காணோம்; வாரத்துக்கு இாண்டு பன்றிக் குட்டியாம்.
தான் தின்னத் தவிடு இல்லை; தங்கத்தாலே தாலி தொங்கப்போடச் சொன்னாளாம்.
தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான். 12570
தான் தின்னி பிள்ளை வளர்க்காள், தவிடு தின்னி கோழி வளர்க்காள்.
தான் தேடாத பொன்னுக்கு மாற்றும் இல்லை, உரையும் இல்லை.
தான் தேடிய பொருளைச் செலவழிக்க அடுத்த வீட்டுக்காரன் உத்தரவு வேண்டுமா?
தான் தொழும் தெய்வம் ஆனாலும் பொய்ச் சத்தியம் செய்தால் சகிக்குமா?
தான் தோன்றித் தம்பிரானாய் இருக்கிறான். 12575
தான் தோன்றிப் பெருமாள்.
தான் பத்தினியாய் இருந்தால் தேவடியாள் தெருவிலேயும் குடியிருக்கலாம்.
(பதிவிரதையானால்...வீட்டிலும்.)
தான் பாதி; தெய்வம் பாதி.
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்,
தான் பெற்ற குழந்தையைத் தானே சீராட்டுமாம் காம்பு இல்லாத கத்தரிக்காய். 12580
(பிள்ளையை,)
தான் பெற்றால் தாலாட்டு; தாயார் செத்தால் பிலாக்கணம்.
தான் போக மாட்டாதவன் தண்ணீர் மிடாவுக்குச் சீட்டு எழுதி விட்டானாம்.
தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு, விளக்குமாற்றையும் கெளவிக் கொண்டு போனதாம்.
தான் போகாத காரியத்துக்கு ஆள் போனால் ஒரு செட்டு.
(சொட்டு.)
தான் போகிற இடத்துக்குத் தம்பியை அனுப்பாதே. 12585
தான் போகிற காரியத்துக்கு அடைப்பக்காரன் ஒரு சொட்டு.
தான் போட்ட தாறு வந்து தாய் வாழையைப் பழித்த கதை.
தான் போனால் தாகத்துக்குத் தண்ணீர் கிடையாது; எழுதடா நூறு குடம் தயிருக்கு என்றானாம்.
தான் போனால் மோருக்கு வழி இல்லை; தயிருக்குச் சீட்டு எழுதி விட்டான்.
(தண்ணீர் மோருக்கு; தயிர் மிடாவுக்கு.)
தான் மகிழ வெண்ணெயும் எடுத்துப் புருஷன் மகிழப் பிள்ளையும் பெற்று. 12590
தான் வாழ்க்கைப்பட்டல்லவா தங்கைக்கு வரன் தேட வேணும்?
தான் வாழத் தன் சீலை வாழும்.
தான் வெட்டின குழி தனக்குத்தான்.
(குழியில் தானே விழுந்தது போல.)
தான்றிக் காயில் சனியன் புகுந்தது போல,
(தான்றி மரத்தில்.)
தானப்பனுக்கு மூக்கு இல்லை. ஆனால் சாட்சி சொல்ல நாக்குப் போதாதா? 12595
தானத் தனத்தான் சகல சம்பந்தன்.
தானத்தில் நிதானம் பிரதானம்.
(தானத்தில் பெரிது நிதானம்.)
தான தர்மம் இல்லாத உடைமைக்குத் தம்பி தாண்டவராயன் புறப்பட்டான்.
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தானாம்.
தானம் வந்த குதிரையைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே. 12600
தானமது விரும்பு.
தானாக ஆடுகிற பேய் கொட்டைக் கண்டால் விடுமா?
தானாகக் கனியாததைத் தடியால் அடித்தால் கனியுமா?
தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.
தானாகத் தின்று தலையாய்ப் போக வேண்டும். 12605
தானாகப் பழுப்பது பழமா? தள்ளிப் பழுப்பது பழமா?
தானாக வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
தானானா என்றால் பாட்டுக்கு அடையாளம்.
தானும் இடான்; இட்டவர்களைப் பார்த்தறியான்.
தானும் உண்ணான்; தசையிலும் போடான். 12610
தானும் உண்ணான்; பிறருக்கும் கொடான்.
தானும் ஓர் ஆளாம்; தவிடும் ஒரு கொழுக்கட்டையாம்.
தானும் போகான்; தரையிலும் கிடக்கான்.
(கிடைக்கான்.)
தானும் வாழ்கிற காலத்தில் வயிறும் சிறுக்கும்; மதியும் பெருகும்.
தானே அழகி, தம்பிரான் பெண்டாட்டி. 12615
தானே அறியாதவன் பிறர் சொன்னால் கேட்பானா?
தானே கவர்னர்; தன் புத்தி பட்லர்.
தானே கனியாததைத் தடிகொண்டு அடித்தால் கனியுமா?
தானே தான் குருக்கள் என்பார் தனங்கள் வாங்கச் சதாசிவன் பேர் பூசை செய்வார்.
(தானங்கள் வாங்க.)
தானே தானே என்பது பாட்டுக்கு அடையாளம். 12620
தானே பழுத்தால் பழமா? தடியால் அடித்தால் பழமா?
தானே வளர்ந்து தவத்தார் கொடி எடுத்தாள்.
தானே வாழ்ந்து தலைமகள் அறுக்க வேண்டுமாம்.
தாகூகிண்யம் தலைநாசம்.
(தன நாசம்.)
தி
திக்கு அற்ற ஊருக்குத் திருடன் கருட கம்பம், 12625
திக்கு அற்றவருக்குத் தியாலஜி.
திக்கு அற்றவருக்குத் தெய்வமே துணை.
திக்குக் கெட்டுத் திசை மாறிப் போகிறது.
திச்குத் தெரியாத ஊருக்குத் திருடன் கருட கம்பம்.
திக்கு லேனிவாரிகி டிமார்க்கேஷன் ஆபீஸ். 12630
(தெலுங்கு.)
திக்கு விஜயம் செய்பவனுக்கு ஜய சுபஜய காலம் தெரியாது.
(விஜயம் கொள்பவனுக்கு; வெற்றி தோல்வி.)
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
(எதற்கு?)
திகைப்பூண்டு மிதித்துத் திக்குக் கெட்டாற் போல.
திகைப்பூண்டை மிதித்தவன் போல அழுகிறான்.
திங்கள் சனி கிழக்கே சூலம். 12635
திங்கள் துக்கம் திரும்பி வரும்.
திங்களில் கேட்டார் திரும்பக் கேட்பார்.
திங்களும் சனியும் தெற்கே பார்க்க வேண்டும்.
(நோக்க.)
திங்களை நாய் குரைத்தற்று.
(பழமொழி நானுாறு.)
திசை தவறினாலும் வசை தவறாது. 12640
திசைப் புரட்டனுக்குப் புளுகுக்குத் தாழ்ச்சி இல்லை.
திட்டத் திட்டத் திண்டுக்கல்; வைய வைய வைரக்கல்.
திட்ட வந்து கொட்ட வந்து வட்டக் காயைப் பிதுக்கிப் போட்டாள்.
திட்டிக் கெட்டாரும் இல்லை; வாழ்த்தி வாழ்ந்தாரும் இல்லை.
திட்டுத் திடுக்கென்று விட்ட கணவனைப் போல. 12645
திட மனப்படு, தீம்பருக்கு அருகில்.
திடுக்கென்று போகிற சீவனைப் பத்திரமாய் நம்புகிறதா?
திடுக்கென்று வாழ்க்கைப்பட்டு வெடுக்கென்று அறுத்தாளாம்.
திண்டிக்கு அவசரம்; வேலைக்கு ஒளிப்பு.
திண்டிக்குத் திம்ம ராஜா; வேலைக்கு போத்த ராஜா. 12650
(செங்கற்பட்டு வழக்கு.)
திண்டுக்கல் உப்பு இரண்டுக்கு ஒன்று.
திண்டுக்கு மிண்டென்று உளறுகிறான்.
திண்ணை தூங்கி என்றைக்கும் விடியான்.
திண்ணை தூங்கிக்குப் பெண்ணைக் கொடுப்பார்களா?
திண்ணைக்குத் தேள் கொட்டத் தண்ணீர் மிடாவுக்கு நெறி கட்ட. 12655
திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கு விடியும்.
திண்ணை தூங்கித் தடிராமன்.
திண்ணையில் இருக்கிறவனுக்குத் திடீர் என்று வந்ததாம் கல்யாணம்.
திண்ணையில் கிடந்த கிழவனுக்குத் திடீர் என்று வந்ததாம் திரட்சிக் கல்யாணம்.
திண்ணையில் தேள் கொட்டினால் மொந்தையில் நெறி கட்டிற்றாம். 12660
(தீர்த்தமிடாவில், தண்ணீர்மிடாவில்.)
திண்ணையில் நாம் இருக்க, தெய்வம் படி அளக்க.
திண்ணையில் பெண்ணைத் திருப்பிட வைக்கிறது, மணையில் பெண்ணை மாற்றி வைக்கிறது.
(மூலையில் பெண்னை மாற்றி வைக்கிறது.)
திண்ணை வீணன் திருவாசல் வீணன்.
(தெருவாசல் விணன்.)
திம்மி குத்தினாலும் பொம்மி குத்தினாலும் நெல்அரிசியானால் சரி.
திரட்சிக்கு நீட்சி, புளிப்புக்கு அவள் அப்பன். 12665
(புளியங்காய்.)
திரட்டுப் பால் புரட்டுகிறதா?
திரண்ட பெண் தேரடிக்குப் போகக் காசு எதற்கு? பணம் எதற்கு?
திரவியத்தில் அழுத்தம் ஆனவன் செத்தாலும் கொடான்.
திரள் எலி வளை எடாது,
திரிசங்கு சுவர்க்கம். 12670
திரிசங்குவின் மோட்சம்.
திரித்தமட்டும் பழுதை.
திரித்த வரையிற் கயிறு; திரியாத வரையில் பழுதை.
திரி திரட்ட எண்ணெய் இல்லை; திருச்சிராப்பள்ளிக்குத் தீவட்டி சலாம்.
திரி மிஞ்சுகிறதோ, எண்ணெய் மிஞ்சுகிறதோ? 12675
திரிமூர்த்திகளும் தேவரும் காணார்.
திரு உண்டானால் திறமை உண்டாகும்.
திரு ஏற உரு ஏறும்.
திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கு இல்லை.
திருக் காவணப் பந்தலுக்கு நிழல் உதவி வேண்டுமா? 12680
திருக்குளத்துக்குப் பாசியும் தரித்திரனுக்குப் பிள்ளையும்.
திருகாணிக்கு வலிவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு.
திருச்சிராப்பள்ளித் தேவடியாளுக்கு இருத்தினாற் போலக் கொண்டையாம்.
திருச்செந்தூர் முக்காணிச்சி சொருக்கை நினைத்து அழுதாளாம்.
திருட்டு உடைமை உருட்டிக் கொண்டு போம். 12685
திருட்டு உடைக்கு மத்தனம் மரக்கால்.
திருட்டுக்கு இருட்டு ஏது?
திருட்டுக்கு நவமணி,
திருட்டுக் கை நிற்காது.
திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பைத்தியக்காரப் பட்டமும் வேறு. 12690
திருட்டுச் சாமியாரும் குருட்டுக் கூத்தியாரும்.
திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற் போல்.
திருட்டு நாய்ப் புத்தி.
திருட்டு நெல்லுக்குத் தொம்பாரம் மரக்கால்.
(மத்தளம் மரக்கால், தம்பிரான் மரக்கால்.)
திருட்டுப்பயல் கல்யாணத்தில் முடிச்சு அவிழ்க்கிற பெரிய தனம். 12695
திருட்டுப் பயலுக்குத் திரட்டுப்பாலும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.
திருட்டுப் பயலுக்குப் புரட்டுக் குருக்கள்.
(திருட்டுப் பையனுக்கு,)
திருட்டுப் பால் குமட்டுமா?
திருட்டுப் புத்தி தலைக்கட்டுமா?
திருட்டுப் பூனைக்குச் சலங்கை கட்டினாற்போல. 12700
திருட்டுப் பூனைக்குப் போடு, திருட்டுப் பாலும் சோறும்.
திருட்டுப் பையன் கல்யாணத்தில் முடிச்சு அவிழ்க்கிறவன் பெரிய தனம்.
திருட்டுப் பையன் வருகிறான்; தவலை,செம்பை வெளியில் வையும்.
திருட்டு வாய்ந்தால் திருடமாட்டாரோ?
திருடத் தெரிந்தால் தெற்று மாற்றும் தெரிய வேண்டும். 12705
திருடத் தெரிந்தாலும் தெட்டத் தெரிய வேண்டும்.
திருடத் தெரியாதவன் தலையாரி விட்டிலே திருடினாற்போல.
திருடப் போய்த் தலையாரி வீட்டில் ஒளிந்து கொண்டது போல.
திருடப் போனாலும் தசை வேண்டும்.
(திசை.)
திருடப் போனாலும் திசை வேணும்; அவிசாரி ஆனாலும் அதிர்ஷ்டம் வேணும். 12710
திருடன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதை.
திருடன் துணைக்குத் திருட்டு நாய்.
திருடன் புகுந்த ஆறாம் மாதம் நாய் குரைத்த மாதிரி.
திருடன் பெண்டாட்டி என்றைக்கும் மொட்டைச்சி.
(கைம்பெண்.)
திருடன் மகன் தகப்பன் சாமி. 12715
திருடன் வீட்டு விளக்குப் போல எரிகிறது.
திருடனுக்குத் தெய்வமே சாட்சி.
திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல.
(திருடனை.)
திருடனுக்குத் தோன்றும் திருட்டுப் புத்தி.
திருடனுக்குப் பணம்; நாய்க்கு எலும்பு. 12720
திருடனுக்கு கன்னக் கோல் வைக்க இடம் வேண்டும்.
திருடனைக் கண்டால் குரைக்குமாம்; தலைவனைக் கண்டால் குழைக்குமாம்.
திருடனைக் கொண்டு திருடனைப் பிடிக்க வேண்டும்.
திருடனைப் பதுங்கிப் பிடித்தால் அல்லவா பிடுபடுவான்?
திருடனைப் பிடிக்கத் திருடனை விடு. 12725
திருடனைப் பிடிக்க ராஜனே வேண்டும்.
திருடனையே காவல் போட்டது போல.
திருடனை ராஜமுழி முழிக்கச் சொன்னானாம்.
திருடனை வைத்துக் கதவைச் சாத்தினது போல.
திருடி என்று தெருவில் போகக் கூடாது; அவிசாரி என்று ஆனைமீதும் ஏறலாம். 12730
திருடிக்குத் தெய்வம் இல்லை; சம்சாரிக்கு ஆணை இல்லை.
திருடிக் கொடுத்ததும் அல்லாமல் பைத்தியக்காரப் பட்டமும் கிடைத்தது.
திருடிச் சென்ற கள்ளன் நல்லவன் ஆவானா?
திருடியும் குங்குலியமும் தேவருக்கே.
திருத்தக் கல்லுக்குத் தெற்கிட்டுப் பிறந்தவன். 12735
திருத்தங்கலுக்கு மறுதங்கல் கிடையாது.
(அவ்வூரில் தங்குவது அரிது.)
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்.
திருத்துழாய்க்கு மணம் வாய்த்தாற் போலே.
திருநாளுக்குப் போகிறாயா என்றால் ஆம், ஆம்; திரும்பி வருகிறாயா என்றால் ஊகூம்.
திருநாளுக்குப் போகிறாயா; திண்டிக்குப் போகிறாயா? 12740
திருநாளும் முடிந்தது; எடுபிடியும் கழிந்தது.
திருநாளைக் கண் கொண்டு பார்க்கக்கூட இல்லை.
(பார்க்க முடியவில்லை.)
திருநீற்றிலே ஒட்டாதது கழற்சிக் காய்.
திருநீற்றுக் கழற்கொடிக்காய் போல.
திருந்த ஓதத் திரு உண்டாமே. 12745
திருநெல்வேலி போய்த் திரும்பினவர் இல்லை.
(தருபுர ஆதீன வழக்கு.)
திருப்தி இல்லாத எஜமான் வீண்.
திருப்பணி செய்யக் கருத்து இருந்தால் கருப்படியின் பேரிலே விருப்பு இருக்கும்.
(காத்திருந்தால்.)
திருப்பதி அம்பட்டன் வேலை.
(திருப்பதியில் நாவிதன் கிடைத்தது போல.)
திருப்பதிக் கழுதை கோவிந்தம் போடுமோ? 12750
திருப்பதிக்குப் போய்ப் பரதேசி காலில் விழுந்தானாம்.
திருப்பதிக்குப் போயும் நாய்த்தாதன் காலில் விழுந்த மாதிரி.
திருப்பதிக்குப் போனாலும் துடைப்பம் ஒரு காசு.
(துடுப்பு.)
திருப்பதிச் சொட்டுப் படிப்படியாக எரிந்தது.
திருப்பதி நாய்க்கு இருப்பிடம் ஏது? 12755
திருப்பதியில் எத்தனையோ மொட்டை; இலந்தை மரத்தின்கீழ் எத்தனையோ கொட்டை.
திருப்பதியில் பிறந்த கடா கோவிந்தம் பாடுமா?
திருப்பதியில் மொட்டை அடித்தது போதாமல் ஸ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரிக்க வந்தான்.
திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றாதா? ஸ்ரீரங்கத்தில் சிரித்ததும் பற்றாதா?
திருப்பதியில் மொட்டைத்தாதன் குறையா? 12760
திருப்பதியில் மொட்டைத் தாதனைக் கண்டாயா?
திருப்பதி க்ஷவரம்.
திருப் பார்க்கத் தீங்கெலாம் நீங்கும்.
(சீவக சிந்தாமணி, 1151 உரை.)
திருப்புன்கூர் வெல்லம் திரட்டிக் கொடுத்தாற் போல.
திருப்பூந்துருத்தி உபசாரம்; திருநெல்வேலி ஆசாரம். 12765
திரும்பி வந்த நாயைச் செருப்பால் அடி.
திருமணை செய்யத் தெரியாதவன் தேர்வேலைக்கு அச்சாரம் வாங்கினானாம்.
திருமழபாடிப் பிள்ளையார் என்றைக்கு இருந்தாலும் ஆற்றோடே.
திருமாலை அறியாதவன் திருமாலை அறியாதவன்.
(பெருமாளை.)
திருமுலைப் பால் உண்டார் மறுமுலைப் பால் உண்ணார். 12770
(சீகாழித் திருமுலைப் பால் உற்சவத்தைப் பற்றியது.)
திருவண்ணாமலைக் குடைக்கு நிழல் உண்டு பண்ணுகிறதா?
திருவரங்கம் நடை அழகு.
திருவன் கண்ட பச்சையாப் போயிற்று.
திருவாக்குக்கு எதிர் வாக்கு உண்டா?
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார். 12775
திருவாசகத்துக்கு எதிர் வாசகம் இல்லை.
(மறு வாசகம்.)
திருவாசல் ஆண்டியும் ஒரு வேலைக்கு உதவுவான்.
திருவாதரப்பட்ட குருக்களே தண்டம்; கரியாய்ப் போன சீஷனே கொண்டேன்.
திருவாதிரை ஒரு வாய்க் களி; திருப்பிக் கேட்டால் செருப்பால் அடி.
திருவாதிரை ஒரு வாய்க் களி; திருவாய் திறந்து ஒரு வாக்களிக்கும். 12780
திருவாதிரைக் களி தினமும் அகப்படுமா?
திருவாதிரை மழை இல்லாவிடில் திருப்பி மழை காண்பது அரிது.
திருவாதிரையில் போன பொருள் திரும்பி வருகிறது கண்டிப்பு.
திருவாரூர்த் தெரு அழகு; திருவொற்றியூர்த் தேர் அழகு.
திருவாரூர்த் தேர் அசைகிறமாதிரி அசைகிறான். 12785
திருவாரூர்த் தேர் அழகு; திருவிடைமருதூர்த் தெரு அழகு; மன்னார்குடி மதிலழகு; வேதாரண்யம் விளக்கு அழகு; கும்பகோணம் கோயில் அழகு.
திருவாரூர்த் தேர் ஓட்டம்; திரும்பிப் பார்த்தால் நாய் ஓட்டம்.
திருவாரூர்த் தேருக்கு உலுக்கு மரம் போடுகிறது போல.
திருவாழ்த்தான் இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான்.
திருவாழ்த்தான் குதிரை வளர்த்தது போல. 12790
திருவாழ்த்தான் செத்தானாம்; அந்தப் பழி உன்னை விட்டுப் போகாதாம்.
திருவாழ்த்தான் திருவரங்கப் பொடி விற்றது போல,
திருவிடை மருதூர்த் தெரு அழகு.
திருவிழாப் பார்க்க வந்தவன் கழுத்தில் தவிலைக் கட்டி அடித்தது போல.
திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும்; நெய் வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும். 12795
திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் காக்கும்.
(அளித்திடும்.)
திருவிளக்கு இட்டால் தீவினை தீரும்.
திருவிளக்கு இல்லா வீட்டில் பேய் குடியிருக்கும்.
திருவிளக்கு இல்லா வீடு போல.
திருவேங்கடத்தான் குடியைக் கெடுத்தான். 12800
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
தில்லும் பில்லும் திருவாதிரமும்.
தில்லும் மல்லும் அல்லல்.
தில்லை அந்தணர் கூடுவது எப்போது? ஓடுவது எப்போது?
தில்லைக் காளி எல்லைக்கு அப்பால். 12805
தில்லைக்குத் தீக்ஷிதன்; இலங்கைக்கு ராக்ஷதன்.
தில்லைக்கு வழி எது என்றால் சிவப்புக் காளை முப்பது பணம் என்றது போல.
தில்லைத் தீக்ஷிதனோ; இலங்கை ராக்ஷதனோ?
தில்லைப் பெண் எல்லை விட்டுப் போகாள்.
தில்லை பாதி, திருவாசகம் பாதி. 12810
தில்லை மூவாயிரம்; கடந்தை ஆறாயிரம்.
தில்லை மூவாயிரம்; செந்தில் ஆறாயிரம்.
தில்லை மூவாயிரம்; நாங்கூர் நாலாயிரம்.
திவசமோ, திப்பிசமோ?
திறந்த கதவுக்குத் திறவுகோல் தேடுவானேன்? 12815
திறந்த வீட்டில் நாய் நுழைகிற மாதிரி.
திறந்த வீடு செல்லாத்தாள் கோவில் போல இருக்கிறது.
தின்றவன் தின்னத் திருப்பாத்தான் தண்டம் கொடுத்தாற் போல.
தின்றதைத் தின்னும் தேவாங்கு போல் இருக்கிறான்.
தின்பதும் கொஞ்சம்; ஜீவனும் இல்லை. 12820
(ஜீவநிலை இல்லை.)
தின்ற சோறு உடம்பிலே ஒட்டவில்லை.
தின்றது செரிக்கத் திண்ணைமேல் ஏறிக் குதிக்க.
தின்ற நஞ்சு கொல்லுமா? தின்னா நஞ்சு கொல்லுமா?
தின்ற மண்ணுக்குத் தக்க சோகை.
தின்ற மதம் கண்ணைக் கெடுக்கும். 12825
தின்றவன் தின்னக் கோம்பை; சூப்பினவன்மேல் தண்டம்.
(யாழ்ப்பாண வழக்கு.)
தின்றால் கொல்லுமோ, கண்டால் கொல்லுமோ, விஷம்?
தின்று உமிழ்ந்த தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா?
(தாம்பூலத்தைத் திரும்பத் தின்ன.)
தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது.
தின்று மிகுந்த பாக்கைத் திரும்பவும் போடுவார்களா? 12830
தின்று ருசி கண்டவன் திண்ணைவிட்டுப் போகான்; பெண்டு ருசி கண்டவன் பின்னையும் போகான்.
தின்னத் தவிடு இல்லை; தங்கச் சரப்பளி தொங்கத் தொங்க ஆடுகிறதாம்.
தின்னத் தின்ன ஆசை; துடைப்பக்கட்டைப் பூசை.
தின்னத் தின்னக் கேட்குமாம் பிள்ளை பெற்ற வயிறு.
தின்னத் தெரியாமல் தின்பானேன்? 12835
தின்னத் தெரியாமல் தின்று பேளத் தெரியாமல் பேளுகிறது.
தின்னப் பொசிப்பு உள்ளவனுக்குத் திண்ணைக் கட்டிலே தேன்.
(யாழ்ப்பாண வழக்கு.)
தின்ன வந்த பிடாரி தெருப் பிடாரியைத் துரத்திற்றாம்.
தின்ன வயிற்றுக்குச் சோறும் மொட்டைத் தலைக்கு எண்ணெயும,
தின்ன வேண்டாம்; உண்ண வேண்டாம்; மகளே, மூஞ்சியாவது கழுவிப் பொட்டு வைத்துக் கொண்டு போ. 12840
தின்னா வீட்டில் தின்னி.
தினம் தவநிலையில் மனசை நிறுத்து.
தினவு எடுத்தவன்தான் சொறிந்து கொள்வான்.
தினவுக்குச் சொறிதல் இதம்.
தினை அளவு செய்தாருக்கும் பனை அளவு செய்.
தினை அறுக்கச் சென்ற இடத்தில் பனை முளைத்தது போல. 12845
தினை நன்றி செய்தால் பனையாகத் தோன்றும்.
தினைப் பயிறும் பாலும் தின்னாதிருந்தும் வினைப்பயனை வெல்வது அரிது.
தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
தீ
தீப்பட்ட புண்ணில் ஈர்க்கினால் குத்தியது போல.
தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டைக்குப் பஞ்சமா? 12850
(கரிக்குப்பைக்கு.)
திப்பட்ட வீட்டிலே பிடுங்கினது ஆதாயம்.
(அகப்பட்டது மிச்சம்.)
தீப்பட்ட வீட்டுக்குப் பீக்குட்டைத் தண்ணீர்.
தீப்பட்ட வீட்டுக்கு மேல் காற்றுப் போல.
தீப்பட்டால் பூனை காட்டிலே.
தீப்பந்தம் கண்ட ஆனை போல. 12855
தீப்புண் ஆறும்; வாய்ப்புண் ஆறாது.
தீபத்தில் ஏற்றிய தீவட்டி.
தீபாவளிக் கோழியைப் போல.
தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கல் ஆகாது.
தீமை மேலிடத் தெய்வம் கைவிட்டது. 12860
தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.
தீமையை வெல்ல நன்மையைச் செய்.
தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது; தீயார் பணி செய்வதுவும் தீது.
(தீயார் வரை.)
தீயாரோடு இணங்காதே; சேப்பங் கிழங்குக்குப் புளி குத்தாதே.
தீயில் இட்ட நெய் திரும்பி வருமா? 12865
தீயினால் சுட்ட புண் ஆறும்; வாயினால் சுட்ட புண் ஆறாது.
(நாவினால்.)
தீயும் தீயும் சேர்ந்து பெருந்தீ ஆனாற் போல்.
தீயும் பயிருக்குப் பெய்யும் மழைபோல.
தீயைச் செல் அரிக்குமா?
தீயை மிதித்தவன்போல் திகைத்து நிற்கிறான். 12870
தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.
தீர்க்கத் திறன் அற்றவன் தேசிகன் ஆவான்.
தீர்க்கதரிசி, பீங்கான் திருடி.
தீர்த்தக் கரைப் பாவி.
திரக் கற்றவன் தேசிகன் ஆவான். 12875
தீராக் கோபம் போராய் முடியும்.
(பாடாய் முடியும்.)
தீராச் சந்தேகம் போருக்கு யத்தனம்,
தீராச் செய்கை சீர் ஆகாது,
தீரா நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.
(துணை.)
தீரா நோய்க்குத் தெய்வமே கதி. 12880
தீராப் பொறிக்குத் தெய்வமே துணை.
தீரா வழக்குக்குத் தெய்வமே சாட்சி.
தீரா வழக்கு நேர் ஆகாது.
தீவட்டிக்காரனுக்குக் கண் தெரியாது.
தீவட்டிக் கொள்ளை கால் வட்டிக்கு ஈடு ஆகாது. 12885
(கால்வட்டிக் கொள்ளைக்கு.)
தீவட்டிக் கொள்ளை போன பின் திருமங்கல்யச் சரடு தேடினாளாம்.
தீவட்டி தூக்க வேண்டுமானாலும் திருமண் போடத் தெரியவேணும்.
(ஸ்ரீரங்கத்தில்.)
தீவட்டியின் கீழ் விளக்கு.
திவாள் திடுக்கிடுவாள்; திண்ணைக்கு மண் இடுவாள்; வருகிற கிழமைக்கு வாசலுக்கு மண் இடுவாள்.
தீவிளிக்குத் தீவிளி தலை முழுகுகிறாள். 12890
தீவினை செய்தவர்க்கே சேரும்.
தீவினை செய்யின் பெய்வினை செய்யும்.
(முடியும்.)
தீவினை முற்றிப் பாழ்வினை ஆச்சுது.
(பானை ஆச்சுது.)
தீனிக்கு அடுத்த லத்தி; சாதிக்கு அடுத்த புத்தி.
தீனிக்குத் திம்ம ராஜா, வேலைக்கு வெற்று ராஜா. 12895
(தீனுக்கு.)
தீக்ஷிதன் வீட்டுக் கல்யாணம் திமிலோகப்படுகிறது.
(சிதம்பரத்தில்.)
து
துக்கத்தை எல்லாம் விட்டுவிட்டுத் தொட்டிச்சியைக் குத்தகையாக வைத்துக் கொண்டானாம்.
துக்கத்தைச் சொல்லி ஆற்ற வேண்டும்; கட்டியைக் கீறி ஆற்ற வேண்டும்.
துக்கப்பட்டவருக்கு வெட்கம் இல்லை.
துக்கம் அற்றவனுக்குச் சொக்கட்டான். 12900
துக்கம் உள்ள மனசுக்குத் துன்பம் ஏன் வேறே?
துக்கலூரிலும் கல்யாணம்; துடியலூரிலும் கல்யாணம்; நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது.
துக்கிரிக்குத் துடையிலே மச்சம்.
துக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை.
(கோழி.)
துக்குணிச் சொகன். 12905
(சொக்கணை.)
துஞ்சி நின்றான்; மிஞ்சி உண்ணான்.
துட்டுக்கு இரண்டு; துக்காணிக்கு மூன்று.
துட்டுக்கு எட்டுக் குட்டி ஆனாலும் துலுக்கக் குட்டி உதவாது.
(என்றாலும்.)
துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி எட்டுத் துட்டுக்கு விற்றாலும் வட்டிக்கு ஈடு ஆகாது.
(அல்ல.)
துட்டுக்கு ஒரு சேலை விற்றாலும் நாய் பிட்டம் அம்பலம். 12910
துட்டுக்கு ஒரு பிள்ளை கொடுத்தாலும் துலுக்கப் பிள்ளை கூடாது.
துட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ? திட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ?
துட்டைக் கொடுத்துத் துக்கத்தை வாங்கிக் கொண்டாளாம்.
துடிக்கக் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறது.
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. 12915
துடுப்பு இருக்கக் கை வேளானேன்?
(நோவானேன்? வேகுமா?)
துடைகாலி முண்டை துடைத்துப் போட்டாள்.
துடைகாலி வந்ததும் எல்லாம் தொலைந்து போச்சுது.
துடை தட்டின மனிதனும் அடை தட்டின வீடும் பாழ்.
துடைப்புக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினது போல. 12920
துடையில் புண், மாமனார் வைத்தியம்.
துடையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறதா?
துண்டுப் பாளையக்காரன் இடைநடுவில் அடிக்கிறது போல.
(துடிக்கிறது.)
துண்டும் துணியும் சீக்கிரம் விலை போகும்; பட்டும் பணியும் பையத்தான் விலை போகும்.
துணிக்குப் போதுமானபடி சொக்காய் வெட்டு; வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாதே. 12925
துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை; அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.
துணிந்த மல்லுக்குத் தோளில் சுட்டால் அதுவும் ஒரு ஈக்கடி.
துணிந்த முண்டையைத் துடையில் சுட்டால் அதுவும் ஒர் ஈக்கடி என்று சொன்னாளாம்.
துணிந்தவருக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.
துணிந்தவன் ஐயம்பேட்டையான். 12930
துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை; அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.
துணிந்தவனுக்குத் துணை வேண்டுமா?
துணிந்தவனுக்குப் பயமா?
துணிந்தாருக்குத் துக்கம் உண்டா? பணிந்தாருக்குப் பாடு உண்டா?
துணியைத் தூக்குவதற்கு முன்னே தொடையில் வைப்பது போல. 12935
(இடக்கர்.)
துணிவது பின்; நினைவது முன்.
துணிவும் பணிவும் துக்கம் தீர்க்கும்.
துணை இரண்டானால் தூக்கணத்துக்கு மனைவி இரண்டு.
துணை இருப்பாருக்கு வினை இழைப்பதா?
துணை உடையான் படைக்கு அஞ்சான். 12940
துணைக்குத் துணையும் ஆச்சு: தொண்டைக் குழிக்கு வினையும் ஆச்சு.
துணைப்பட்டால் சாக வேணும்; பிணைப்பட்டால் இருக்க வேணும்,
(பட்டால்.)
துணை பெற்றவன் வீண் போகான்.
துணை போய் இரு; பொங்கினதைத் தேடு.
துணை போனாலும் வினை போகாதே. 12945
துணையோடு அல்லது நெடுவழி போகேல்.
(போகாதே.)
துப்பட்டியில் கிழித்த கோவணந்தானே?
துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தாற் போல.
துப்பு அற்ற நாரிக்குக் கொம்பு அழகைப் பார்.
துப்பு அற்ற புருஷனுக்குத் துறுதுறுத்த பெண்டாட்டி. 12950
துப்பு அற்றவனை உப்பிலே பார்; சீர் அற்றவனை நீரிலே பார்.
துப்புக் கெட்ட சாம்பானுக்கு இரட்டைப் படித்தரம், தூர்ந்த கிணற்றுக்கு இரட்டை ஏற்றம்.
துப்புக் கெட்ட நாய்க்கு இரட்டைப் பங்கு.
(பயலுக்கு.)
துப்புக் கெட்ட மாப்பிள்ளைக்கு இரட்டைப் பெண்டாட்டி.
துப்புக் கெட்டவனுக்கு இரட்டைப் பங்கு. 12955
துப்புக் கெட்டவளுக்கு இரட்டைப் பரிசமா?
(பரியம்.)
தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
தும்பைத் தறித்து வாலைப் பிடிப்பது போல.
தும்பை விட்டுப் பிடிக்க வேண்டும்.
தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே. 12960
(பிடிப்பது போல.)
தும்மல் நன்னிமித்தம்,
தும்மினால் குற்றம், இருமினால் அபராதம்.
தும்பினால் மூக்கு அறுந்து போகிறதே!
தும்பினும் குற்றம்; ஒழியினும் குற்றம்.
தும்முகிற போது போகிற மூக்கா? 12965
துயரப்பட்டால் ஆறுதல் உண்டு; துன்பப் பட்டால் தேறுதல் உண்டு.
துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்.
துர்ச்சனன் உறவிலும் சற்சனன் பகை நலம்.
துர்ச்சனனைக் கண்டால் தூர விலகு.
(துர்ச்சனரை.)
துர்ப்பலத்திலே கர்ப்பிணி ஆனால் எப்படி முக்கிப் பெறுகிறது? 12970
துர்ப்புந்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்; சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்.
துரியோதனன் குடிக்குச் சகுனி வாய்த்ததைப் போல.
துருசு கல்வி; அரிது பழக்கம்.
(அரிப்பது பழக்கம்.)
துருத்தியைக் கண்ட இரும்பா?
துரும்பு கிள்ளுவது துர்க்குறித்தனம். 12975
(துர்க்குறிப் பழக்கம்.)
துரும்பு தூண் ஆகுமா?
துரும்பு தூண் ஆனால் தூண் என்ன ஆகாது?
துரும்பு நுழைய இடம் இருந்தால் ஆனையை நுழைப்பான்.
(கட்டுவான்.)
துரும்பும் கலத் தண்ணீர் தேக்கும்.
துரும்பு முற்றின கோபம் விசும்பு முட்டத் தீரும். 12980
துரும்பைத் தூண் ஆக்குகிறதா?
துரும்பை மலை ஆக்காதே.
துரும்பை வைத்து மூத்திரம் பெய்கிறதா?
துரை ஆண்டால் என்ன? துலுக்கர் ஆன்டால் என்ன?
துரை இஷ்டம்; கனம் இஷ்டம். 12985
துரை உதைத்தது தோஷம் இல்லை; பட்லர் சிரித்தது பழியாய் வளர்ந்தது.
துரைகளுடனே சொக்கட்டான் ஆடினாற் போலே.
துரைகளோடே சொக்கட்டான் ஆடினால் தோற்றாலும் குட்டு; வென்றாலும் குட்டு.
துரைகளோடே சொக்கட்டான் ஆடினாற் போல.
துரைகளோடே சொக்கட்டான் போடலாகுமோ? 12990
துரை கையில் எலும்பு இல்லை.
துரைச் சித்தம் கனச்சித்தம்.
துரை நல்லவர்; பிரம்பு பொல்லாதது.
துரை நாய்ச்சியார் கும்பிடப் போய்ப் புறப்பட்ட ஸ்தனம் உள்ளே போச்சுது.
துரை வீட்டு நாய் நாற்காலி மேல் ஏறினது போல. 12995
துரை வீட்டு நாயைக் கண்டு தோட்டி நாய் கறுவினாற் போல.
துரோகத்தால் கொண்ட துரைத்தனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல்.
துரோபதையைத் துகில் உரிந்தது போல.
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
துலாத்தில் வெள்ளி உலாத்தில் பெய்யும் மழை. 13000
துலுக்குக் குடியில் ஏது பேயாட்டம்?
துலுக்கச்சிக்கு எதற்கு உருக்கு மணி?
துலுக்கத் தெருவிலே ஊசி விற்றது போல.
துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினது போல.
(திருவெம்பாவை.)
துலுக்கன் உடுத்துக் கெட்டான்; பார்ப்பான் உண்டு கெட்டான். 13005
துலுக்கன் கந்தூரி தூங்கினால் போச்சு.
துலுக்கன் செத்தால் தூக்குவது எப்படி?
துலுக்கன் துணியால் கெட்டான்; பார்ப்பான் பருப்பால் கெட்டான்.
துலுக்கன் புத்தி தொண்டைக்குழி வரைக்கும்.
துலுக்கன் வீட்டில் துணிக்கு என்ன பஞ்சம்? 13010
துலுக்கனுக்கு ஏன் துறட்டுக் கடுக்கன்?
துவி நாக்கு இடறும்.
துவைத்துத் தோள்மேற் போட்டுக் கொண்டான்.
துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல; வினாவிக் காட்டாதது கல்யாணமும் அல்ல.
(வினாவிச் செய்யாதது.)
துள்ளாதே, துள்ளாதே ஆட்டுக்குட்டி. என் கையில் இருக்கிறது சூரிக் கத்தி. 13015
துள்ளாதே, துள்ளாதே, குள்ளா, பக்கத்தில் பள்ளமடா.
துள்ளிக் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப் பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.
துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.
துள்ளின மாடு பொதி சுமக்கும்.
துள்ளுகிற கெளுத்துச் செத்துப்போகிறது தெரியாதா? 13020
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
துள்ளும் மாள் துள்ளித் துரவில் விழுந்தது.
துள்ளு மறி கொலை அறியாது.
துளசிக்கு வாசனையும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிற போதே உண்டு.
(தெரியும்)
துளி என்றால் நீர்த்துளி. 13025
துற்றிச் சமுத்திரம் பொங்கினால் கொள்ளுமாம் கிணறு அநேகம்.
(துள்ளிச் சமுத்திரம்.)
துறக்கத் துறக்க ஆனந்தம்; துறந்தபின் பேரின்பம்.
துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?
(வாய்க்கு எட்டுமா.)
துறவறம் இல்லறம் மனசிலே.
துறவறமும் பழிப்பு இன்றேல் எழிலதாகும். 13030
(தண்டலையார் சதகம்.)
துறவிக்கு வேந்தன் துரும்பு.
துறுதுறத்த வாலு, துக்காணிக்கு நாலு.
துன்பத்திற்கு இடம் கொடேல்.
துன்பத்தின் முடிவு இன்பம்.
துன்பம் உற்றவர்க்கு இன்பம் உண்டு. 13035
துன்பம் தருகிற காக்கையின் சத்தத்தால் அதை விரட்டுவார்கள்; இன்பம் தருகிற குயிலை விரட்டார்கள்.
துன்பம் தொடர்ந்து வரும்.
துன்பம் முந்தி; இன்பம் பிந்தி.
துஷ்ட சகவாசம் பிராண சங்கடம்.
துஷ்ட சதுஷ்டயம். 13040
(பாரதம்.)
துஷ்ட நிக்ரகம், சிஷ்ட பரிபாலனம்.
துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்.
துஷ்டர் நேசம் பிராண நஷ்டம்.
துஷ்டருடன் சேருவதைவிடத் தனியே இருப்பது மேலானது.
துஷ்டரைக் கண்டால் தூர விலகு; கெட்டாரைக் கண்டால் காறி உமிழ். 13045
துஷ்டனைக் கண்டால் எட்டி நில்.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு.
(ஓடு.)
தூ
தூக்கணத்துக்குத் துயரம் இல்லை; மூக்கணத்துக்கு முசு இல்லை.
(மூக்கணம்-மூக்ணாங்கயிறு போட்ட எருது.)
தூக்கணாங்குருவி குரங்குக்குப் புத்தி சொன்னது போல.
தூக்க நினைத்து நோக்கிப் பேசு. 13050
தூக்கி ஏற விட்டு ஏணியை வாங்கும் தூர்த்தர் சொல்லைக் கேளாதே.
(ஏணியை எடுக்கும்.)
தூக்கி நிறுத்தடா, பிணக்காடாய் வெட்டுகிறேன் என்றாளாம்.
தூக்கி நினைத்து நோக்கிப் பேசு.
தூக்கிப் போட்டதும் அல்லாமல் குதிரை தோண்டிக் குழிப் பறித்ததாம்.
தூக்கி வளர்த்த பிள்ளையும் துடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படா. 13055
தூக்கி வினை செய்.
தூக்கினால் சென்னி துணிக்கத் துணித்துவிடு; மாக்கினால் சக்கரம் போல அடை.
தூக்கு உண்டானால் நோக்கு உண்டு
தூங்காதவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனுக்கும் விளங்கும் குட்டி.
தூங்காதவனுக்குச் சுகம் இல்லை. 13060
தூங்காதவனே நீங்காதவன்.
தூங்கிய நாய்க்குத் துடைப்பம் எதிரி.
தூங்கினவன் கன்று கிடாக்கன்று.
(கண்ணு.)
தூங்கினவன் கன்று சேங்கன்று.
தூங்கினவன் சாகிறதில்லை; வீங்கினவன் பிழைக்கிறதில்லை; 13065
தூங்கினவன் தொடையிலே கயிறு திரிக்கிறான்.
தூங்கினவன் தொடையிலே திரித்த வரைக்கும் லாபம்.
தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக்குட்டி.
தூங்குகிற நரிக்கு இரை கிடையாது.
(உணவு.)
தூங்குகிற நாய் தூங்கட்டும். 13070
தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பினதுபோல.
(எழுப்புவானேன்?)
தூங்குகிற வரிக்காரனை எழுப்பி விட்டால் போன வருஷத் தீர்வையும் கொடுத்துவிட்டுப் போ என்பான்.
தூங்குகிறவன் துடையிலே சுப்பல் எடுத்துக் குத்தினாற்போல,
(தூங்குகிறவன் பிட்டத்திலே.)
தூங்குகிறவனை எழுப்புவானேன்? அவன் தொண்ணூறு பணம் குறைந்தது என்பானேன்?
தூங்குகிறவனைத் தட்டி எழுப்பி அத்தாளம் இல்லை என்றாற் போல. 13075
(அத்தாளம் - இரவு உணவு.)
தூங்கும் புலியை வால் உருவி விட்டாற் போல.
தூங்கு மூச்சி மாப்பிள்ளைக்கு எருமுட்டை பணியாரம்.
தூங்குவது சிறிய தூக்கம்; போவதே பெரிய தூக்கம்.
தூண்டா விளக்குப் போல.
தூண்டில் காரனுக்கு மிதப்பிலே கண். 13080
(தக்கையிலே கண்.)
தூண்டில் நுனி இரைக்கு ஆசைப்பட்டு மீன் உயிர் இழப்பது போல.
தூண்டில் போட்டவனுக்குத் தக்கைமேல் கண்.
தூண்டில் போட்டு ஆனை பிடிக்கும் புத்திசாலி.
தூண்டிலில் அகப்பட்ட மீன் துள்ளி நத்தினால் விடுவார்களா?
தூண்டிலைப் போட்டு வராலை இழுக்கிறது. 13085
தூண்டின விரல் சொர்க்கம் பெறும்.
தூணி என்கிற அகமுடையானாம்; தூணிப்பதக்கு என்கிற அகமுடையாளாம்; முக்குறுணி என்று பிள்ளை பிறந்தால் மோதகம் பண்ணி நிவேதனம் செய்தார்களாம்.
தூணில் புடைவையைக் கட்டினாலும் தூக்கிப்பார்ப்பான் தூர்த்தன்.
தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்.
தூணிலும் உண்டு; துரும்பிலும் உண்டு; சாணிலும் உண்டு; கோணிலும் உண்டு. 13090
தூத்துக்குடிச் சந்தையிலே துட்டுக்கு ஒரு பெண்டாட்டி.
தூமத் தீயைக் காட்டிலும் காமத் தீக் கொடிது.
தூமை துடைக்கப் பண்ணும்.
தூய்மை வாய்மை தரும்.
தூர்த்தர் என்போர் சொல் எழுத்து உணரார். 13095
(கையெழுத்து உணரார்.)
தூர்த்தர் சொல்லைக் கேட்டால் வாய்த்திடும் கேடு.
தூர்ந்த கிணற்றைத் தூர் வாராதே.
தூர இருந்தால் சேர உறவு.
தூர உறவு சேரப் பகை.
தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது. 13100
தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு.
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
தூரத்துப் பச்சை பார்வைக்கு இச்சை.
தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு; கிட்டப் போனால் கல்லும் கரடும்.
தூரப் பார்வைக்கு மலையும் சமன். 13105
தூரப் போக வேண்டுமா, கீரைப் பாத்தியிற் கை வைக்க?
தூரப் போய்க் கீரைப் பாத்தியிற் பேண்டானாம்.
துார மண்டலம் சேய மழை; சேர மண்டலம் தூர மழை.
தூர நின்றாலும் தூவானம் நில்லாது.
தூலம் இழுத்த கடா நடுவீட்டில் தூங்குமா? 13110
தூற்றித் திரியேல்.
தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
தூறு ஆடின குடி நீறு ஆகும்.
தூஷிப்பாரைப் பூஜிப்பார் இல்லை.
தெ
தெட்டிப் பறிப்பாரை எட்டிடத்தில் பறிக்கிறது. 13115
(எத்தில் பறக்கிறது.)
தெந்தினப் பாட்டுப் பாடித் திருநாமம் இட வந்தான்.
தெய்வ அருள் இருந்தால் செத்தவனும் பிழைப்பான்.
தெய்வத்துக்குச் சத்தியம்; மருந்துக்குப் பத்தியம்.
தெய்வத்துக்குச் செய்வதும் செய்க்கு உரம் போடுவதும் வீண் அல்ல.
தெய்வத்தை இகழ்ந்தவர் செல்வத்தை இழந்தார். 13120
தெய்வப் புலவனுக்கு நா உணரும்; சித்திர ஓடாவிக்குக் கை உணரும்.
(சித்திரக்காரனுக்கு.)
தெய்வ பலமே பலம்.
தெய்வம் இட்டபடி நடக்கிறது.
தெய்வம் இட்டு விடாமல் வீணர் படியிட்டு விடிவதுண்டோ.
தெய்வம் இல்லாமலா பொழுது போகிறதும் பொழுது விடிகிறதும்? 13125
தெய்வம் உண்டு என்பார்க்கு உண்டு; இல்லை என்பார்க்கு இல்லை.
தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?
தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
தெய்வம் கெடுக்காத குடியைத் தெலுங்கன் கெடுப்பான்.
தெய்வம் கைகூட்டி வைத்தது. 13130
தெய்வம் சீறின் கைதவம் ஆகும்.
தெய்வம் துணைக் கொள்; தேகம் அநித்தியம்.
(தெய்வம் பேணி.)
தெய்வம் படி அளக்கும்.
தெய்வம் பண்ணின திருக்கூத்து.
தெய்வமே துணை. 13135
தெய்வ வணக்கம் நரக வாசலை அடைக்கும் தாழ்.
தெரிந்தவர்கள் தென்னம் பிள்ளை வைப்பார்கள்.
தெரிந்தவன் என்று கும்பிடு போட்டால் உன் அப்பன் பட்ட கடனை வைத்துவிட்டுப் போ என்றானாம்.
தெரிந்தவனுக்குத்தான் தெரியும் செம்மறியாட்டு முட்டை,
தெரியாத் துணையே, பிரியாத் துணை நீ. 13140
(தெரியாத துணையே.. பிரியாத துணை..)
தெருச் சண்டைக்கு இடுப்புக் கட்டல்.
(கட்டுகிறதா?)
தெருச்சண்டை கண்ணுக்கு இன்பம்.
(குளிர்ச்சி.)
தெருவில் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே.
தெருவிலே ஊர்வலம் போகிறதென்று திண்ணையில் தூங்குபவன் திணறிக்கொண்டு செத்தானாம்.
தெருவிலே போகிற சனியனை விலை கொடுத்து வாங்கினது போல. 13145
தெருவிலே போகிறவனை அண்ணை என்பானேன்? ஆத்தைக்கு இரண்டு கேட்பானேன்.
(இலங்கை வழக்கு.)
தெருவோடு போகிற சண்டையை வீட்டு வரைக்கும் வந்து போ என்றது போல.
தெருவோடு போகிற வண்டியைக் காலில் இழுத்துவிட்டுக் கொண்டது போல.
தெருளா மனசுக்கு இருளே இல்லை.
தெலுங்கச்சி சுவர்க்கம் போனாற் போல. 13150
(தாமதம்.)
தெவிட்டாக் கனி பிள்ளை; தெவிட்டாப் பானம் தண்ணீர்.
தெள்ளிய திருமணி, திருட்டுக்கு நவமணி.
தெள்ளுப் பிடித்த நாயைப் போல.
தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர்; சேற்றைக் கலக்கி விட்டீர்.
தெளிவு கூறும் பரதேவ தேசிகன். 13155
நெற்கத்திக் குருவியை வடக்கத்திக்குருவி தெற்றி அழைத்ததாம்;சீசம் பழம் தின்னம் போக.
தெற்கு விழுந்த கருக்கலும் தேவடியாளிடம் போன காசும் திரும்பா.
தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?
தெற்கே சாய்ந்தவன் தெரு எல்லாம் கூடை.
(-பிறை)
தெற்கே சாய்ந்தால் தெருவெல்லாம் விலைப் பெட்டி; வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல். 13160
(தைப்பிறை.)
தெற்கே போகிற நாய்க்கு வடக்கே வால்.
தெற்கே போன வெள்ளி வடக்கே வந்தால் மழை.
தெறிக்க அடித்த தட்டானைப் போல.
தென்காசி ஆசாரம்; திருநெல்வேலி உபசாரம்.
தென்காசி வழக்கா, பாதி போடு. 13165
தென் திசைப் புலையன் வட திசைக்கு ஏகின் நடை திருந்திப் பார்ப்பான் ஆவான்.
(கபிலர் அகவல்.)
தென்றல் அடிக்கிற காற்றே, என் இறுக்கத்தை ஆற்றே.
தென்றல் திரும்பியும் மழையா?
தென்றல் முற்றிப் பெருங்காற்று ஆனது போல.
(ஆச்சு.)
தென்றல் முற்றானால் புயலாக மாறும். 13170
தென்றலும் வாடையும் இறக்கும் பயிர்கள்.
தென்னங் குரும்பை திருக்குரும்பை, பன்னாடை எல்லாம், ஒரு மரத்துக் காய்.
தென்னந்தோப்பில் குரங்கு வளர்த்தது போல.
தென்னமரத்தில் ஏண்டா ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றானாம்; தென்னமரத்தில் புல் ஏதடா என்றால், அதுதான் கீழே இறங்குகிறேன் என்றான்.
தென்னமரத்தில் ஏறுபவனை எவ்வளவு தூரம் தூக்கிவிட முடியும்? 13175
தென்ன மரத்தில் தேள் கொட்டப் பன மரத்திலே பதவளை காட்டினது போல.
தென்ன மரத்தில் தேள் கொட்டிப் பனமரத்தில் நெறி ஏறிற்றாம்.
(புன்னை மரத்தில்.)
தென்ன மரத்தில் பாதி, என்னை வளர்த்தாள் பாவி.
தென்ன மரத்திற்குத் தண்ணீர் வார்த்தால் தலையாலே தரும்.
(ஊற்றினால்.)
தென்ன மரத்தின் நிழலும் தேவடியாள் உறவும் ஒன்று. 13180
தென்ன மரத்துக் குரங்கே, என்னைப் பார்த்து இறங்கே.
தென்னாலிராமன் குதிரை வளர்த்தது போல.
தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
தென்னாலிராமன் போட்ட சித்திரம் போல.
தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும். 13185
தென்னையிலே தேள் கொட்டித் திருவையாற்றுக்கு நெறி கட்டியதாம்.
தென்னையிலே பாதி என்னை வளர்த்தாள் பாவி.
தென்னை வைத்து வாழை ஆச்சு; வாழை வைத்து மஞ்சள் ஆச்சு மஞ்சள் வைத்து முள்ளி ஆச்சு.
தே
தேகம் அநித்தியம்; தெய்வம் துணைக் கொள்.
தேகம் சந்தேகம். 13190
தேங்காய் ஆடும்; இளநீர் ஆடும்; திருவுமணையில் தூக்கமா? தேங்காய்க்குள் நீர் போல.
தேங்காய்க்கு மூன்று கண்; எனக்கு ஒரு கண்.
தேங்காய் தின்றவன் ஒருத்தன்; தண்டம் கொடுத்தவன் ஒருத்தன்.
தேங்காய் தின்னலாம், இளநீர் குடிக்கலாம்; திருவு பலகையிலே வந்ததோ தூக்கம்? 13195
தேங்காயிற் சிறிது; மாங்காயிற் பெரிது.
தேங்காயை உடைத்தால், சிரட்டையை உடைக்கிறேன்.
தேங்காயை உடைத்தாற்போல் பேசுகிறான்.
தேங்காயைத் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தண்டம் இறுக்கிறதா?
(சப்பினவன்.)
தேங்காயை விழுங்குகிறது தினை; பருவத்தை விழுங்குகிறது பனை. 13200
தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு,
(ஆசாரம் வேறு.)
தேசத்து நன்மை தீமை அரசர்க்கு இல்லையா?
தேசத்தோடு ஒத்து வாழ்.
தேச பத்தியே தெய்வ பத்தியாம்.
தேசம் எல்லாம் பறக்கும் காகம் தான் இருக்கும் கொம்பை அறியாது. 13205
தேடக் கிடையாது; தேட என்றால் கிட்டாது. திருப்கொட்பா, திருப்பிக் கொடு.
தேடத்தசை இருந்தும் அனுபவிக்க அதிர்ஷ்டம் இல்லை.
தேட நினைப்பது தெய்வத்தை.
தேடப் போன மச்சினன் செருப்படியில் அகப்பட்டது போல.
தேடாது அழிக்கின் பாடாய் முடியும். 13210
தேடாது அழித்த தேவடியாள் தேவடியாள்.
தேடி அழைத்த விருந்துக்கு வாடி இருந்ததுபோல.
தேடி எடுத்துமோ திருவாழி மோதிரத்தை.
தேடித் திருவிளக்கு வை.
தேடித் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர். 13215
தேடிப் பிடித்தாள் தேவடியாள் கள்ளனை.
தேடிப் புதைத்துத் தெருவில் இருக்கிறதா?
தேடிப் போகாதே; கூறி விற்காதே.
தேடிப் போனது அகப்பட்டது போல.
தேடிப் போன தெய்வம் எதிரே வந்தது போல. 13220
தேடிப் போன மருந்துக் கொடி காலில் அகப்பட்டது போல.
தேடியதை எல்லாம் கொடுத்துத் தேட்டு மீன் வாங்கித் தின்னு.
தேடின பூண்டு காலிலே மிதிபட்டது போல.
(பூடு)
தேடின பொருள் காலிலே தட்டினது போல.
தேடுவார் அற்ற பிணம் தெருவோடே. 13225
(பணம்.)
தேய்ந்த அம்மாள் தெய்வயானை, தெய்வத்துக்கு இட்டாலும் ஏறாது.
தேய்ந்த கட்டை மணம் நாறும்.
(தேய்த்த.)
தேய்ந்தாய், மாய்ந்தாய் கொம்பும் கறுத்தாய், தும்பிக்கையும் உள்ளே இழுத்துக் கொண்டாயா?
தேய்ந்தாலும் சந்தனக் கட்டை மணம் போகாது.
(மாறாது.)
தேய்ந்து மாய்ந்து போகிறான். 13230
தேய்ந்து மூஞ்சூறாய்ப் போகிறது.
தேயத் தேய மணக்கும் சந்தனக் கட்டை.
தேர் இருக்கிற மட்டும் சிங்காரம்; தேர் போன பிறகு என்ன?
தேர் ஓடித் தன் நிலையில் நிற்கும்.
(ஓடினாலும்.)
தேர் ஓடி நிலைக்குத்தான் வரவேணும். 13235
தேர் செய்கிற தச்சனுக்கு அகப்பை போடத் தெரியவில்லை.
தேர் தாழ்ந்து தில்லை உயர்ந்தது; ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது.
தேர் தெருத் தெருவாக ஓடினாலும் தன் நிலையில்தான் நிற்கும்.
தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால்.
தேர் வேந்தன் தன் களத்தில் சிலர் வெல்லச் சிலர் தோற்பர்; ஏர் வேந்தன் களத்தில் இரப்பவரும் தோலாரே. 13240
தேராச் செய்கை தீராச் சஞ்சலம்.
தேருக்கு உள்ள சிங்காரம் தெரு எல்லாம் கிடக்கிறது.
தேருக்குப் போகிறபோது தெம்பு; திரும்பி வருகிறபோது வம்பு,
தேருக்குள் சிங்காரம், தெரு எல்லாம் அலங்காரம்.
தேரைகள் பாம்பைத் திரண்டு வளைத்தாற் போல. 13245
தேரை மோந்த தேங்காய் போல.
தேரோடு திருநாள் ஆயிற்று; தாயோடு பிறந்தகம் போயிற்று.
தேரோடு திருநாள் போம்.
தேரோடு நின்று தெருவோடு அலைகிறான்.
(தேரோடு மாலையாகத் தெருவோடு.)
தேவடியாள் இருந்து ஆத்தாள் செத்தால் கொட்டு முழக்கு; தேவடியாள் செத்தால் ஒன்றும் இல்லை. 13250
தேவடியாள் சிந்தாக்கு உள்ள வரையில் நட்டுவனுக்குப் பஞ்சம் இல்லை.
(சிந்தாக்கு - பொட்டு.)
தேவடியாள் குடியில் குமரிப் பெண்ணை ஈடு வைக்கலாமா?
தேவடியாள் சிங்காரிக்கும் முன்னே தேர் ஓடி நிலையில் நின்றது.
(தெருவில்.)
தேவடியாள் செத்தால் பிணம்; தேவடியாள் தாய் செத்தால் மணம்.
தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா? 13255
தேவடியாள் மகன் திவசம் செய்தது போல.
தேவடியாள் மகனுக்கும் திவசம்.
தேவடியாள் மலம் எடுத்தாற் போல.
(பொட்டு எடுத்தாற் போல.)
தேவடியாள் மூக்கில் மூக்குத்தி கிடந்தால் நட்டுவக்காரன் பட்டினி கிடப்பான்.
தேவடியாள் வீட்டில் ஆண் பிள்ளை பிறந்தாற் போல. 13260
தேவடியாள் வீட்டில் பெண்குழந்தை பிறந்தாற் போல.
தேவடியாள் வீடு போவது போல.
தேவடியாளுக்குத் தினமும் ஒரு கணவன்.
தேவர் உடைமை தேவருக்கே.
தேவர்கள் பணிவிடை சேப்பு மேலவன் கர்த்தா. 13265
தேவரீர் சித்தம்; என் பாக்கியம்.
தேவரே தின்றாலும் வேம்பு கைக்கும்.
(பழமொழி நானூறு.)
தேவரைக் காட்டிலும் பூதம் பணி கொள்ளும்.
தேவலோகத்து அமிர்தத்தை ஈ மொய்த்த கதை.
தேவாமிர்தத்தை நாய் இச்சித்த கதை. 13270
தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?
தேள் கொட்டிய நாய் போல்.
தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்டவனையே கொட்டும்.
தேளுக்குக் கொடுக்கில் விடம்; உனக்கு உடம்பெல்லாம் விடம்.
தேளுக்குக் கொடுக்கில் விடம், தீயவருக்கு நாவில் விடம். 13275
தேளுக்குக் கொடுக்கில் விடம்; தேவடியாளுக்கு உடம்பு எங்கும் விடம்; துஷ்டனுக்குச் சர்வாங்கமும் விடம்.
(தேவடியாளுக்கு இடுப்பில் விடம்.)
தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டும்.
(ஜாமத்துக்கு ஜாமம் பத்துத்தரம் கொட்டும்.)
தேளோடு போனாலும் தெலுங்கனோடு போகாதே.
தேற்றிக் கழுத்து அறுக்கிறது.
தேற்றினும் மகப் பிரிவு தேற்றல் ஆகாது. 13280
தேன் உண்டானால் ஈத் தேடி வரும்.
தேன் உள்ள இடத்தில ஈ மொய்க்கும்.
தேள் எடுத்தவரைத் தண்டிக்குமா தேனீ?
தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?
(தேனை அழித்தவன்.)
தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு; மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு. 13285
தேன் ஒழுகப் பேசித் தெருக்கடக்க வழிவிடுவான்.
(தெருவிலே விடுவான், தெரு வழியே விடுகிறது.)
தேன் ஒழுகப் பேசுவான்.
தேன் குடித்த குரங்கைத் தேள் கொட்டியது போல.
தேன் கூட்டிலே கல்லை விட்டு எறியலாமா?
தேன் சர்க்கரை சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா? 13290
தேன் தொட்டவர் கையை நக்காரோ?
(தேன் எடுத்தவர்.)
தேன் நீரைக் கண்டு வான்நீர் ஒழுகுவது போல்.
தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் நுங்கு ஆகுமோ?
தேனாகப் பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்.
தேனில் விழுந்த ஈப்போலத் தவிக்கிறான். 13295
(தத்தளிக்கிறான்.)
தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் உண்டா?
தேனுக்கு ஈயைப் தேடி விடுவார் யார்?
தேனுக்கு ஈயைப் பிடித்து விடவேண்டுமா?
தேனும் தினை மாவும் தேவருக்கு அமிர்தம்.
தேனும் பாலும்போல் இருந்து கழுத்தை அறுத்தான். 13300
தேனும் பாலும் போல் சேரவேண்டும்,
தேனும் பாலும் போல
தேனும் பாலும் செந்தமிழ்க் கல்வி.
தேனை எடுத்தவரைத் தண்டிக்குமாம் தேனீ
தேனைக் குடித்துவிட்டு இளித்த வாயன் தலையில் தடவினாற்போல. 13305
தேனைத் தடவிக் கொண்டு தெருத் தெருவாய்ப் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.
தேனைத் தொட்டாயோ? நீரைத் தொட்டாயோ?
தேனைத் தொட்டு நீரைத் தொட்டாற்போல் பழகுதல்.
தேனை வழிக்கிறவன் புறங்கையை நக்கமாட்டானா?
தேனை வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரங்காய் தேங்காய் ஆகாது. 13310
தை
தை ஈனாப் புல்லும் இல்லை; மாசி ஈனா மரமும் இல்லை,
தை உழவு ஐயாட்டுக் கிடை.
தை உழவோ, நெய் உழவோ?
தை எள்ளுத் தரையில்; மாசி எள் மடியில் பணம்; வைகாசி எள் வாயில்
தைக்கவும் வேண்டாம்; பிய்க்கவும் வேண்டாம். 13315
தைக் குறுவை தரையை விட்டு எழும்பாது.
தைக் குறுவை தவிட்டுக்கும் உதவாது.
தைக் குறுவையோ, பொய்க் குறுவையோ?
தைத்த வாய் இருக்கத் தாணிக் கதவாற் புறப்பட்டாற் போல.
தைத்த வாயிலும் இருக்கத் தாணித்த வாயிலும் இருக்க எங்காலே போனீர் உப்பனாரே! 13320
தைப் பணி தரையைத் துளைக்கும்; மாசிப் பனி மச்சைத் துளைக்கும்.
(தரையைப் பிளக்கும்.)
தைப் பிள்ளையைத் தடவி எடு.
தைப் பிறை கண்டது போல.
தைப் பிறை தடவிப் பிடி; ஆடிப் பிறை தேடிப் பிடி.
தைப் பிறையைத் தடவிப் பார். 13325
தைப் பிறை வட கொம்பு உயர்ந்தால் வடவனுக்குச் சோறு உண்டு; தென் கொம்பு உயர்ந்தால் தெரு எங்கும் தீய வேண்டும்.
தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற் போல.
தை பிறந்தது; தரை வறண்டது.
தை பிறந்தால் தரை ஈரம் காயும்.
தை பிறந்தால் தலைக் கோடை. 13330
தை பிறந்தால் தழல் பிறக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும்.
தை மழை தவிட்டுக்கும் ஆகாது.
தை மழை நெய் மழை.
தை மாசத்து விதைப்புத் தவிட்டுக்கும் ஆகாது. 13335
தை மாசப் பனி தலையைப் பிளக்கும்; மாசி மாசப் பணி மச்சைப் பிளக்கும்.
தை மாசம் தரை எல்லாம் பனி.
தை மாசம் தரையும் குளிரும்; மாசி மாசம் மண்ணும் குளிரும்.
(மரமும் குளிரும்.)
தையல் இட்ட புடைவை நைய நாள் செல்லும்.
தையல் சொல் கேட்டால் எய்திடும் கேடு. 13340
தையல் சொல் கேளேல்.
தையலின் செய்கை மையலை ஊட்டும்.
தையலும் இல்லான், மையலும் இல்லான்.
தையலும் மையலும்.
தையலே உலகம் கண்ணாடி, 13345
.
தையில் கல்யாணமாம்; ஆடியிலே தாலி கட்டிப் பார்த்துக் கொண்டாளாம்.
தையில் வளராத புல்லும் இல்லை; மாசியில் முளையாத மரமும் இல்லை.
தையும் மாசியும் வையகத்து உறங்கு,
தைரியம் ஒன்றே தனமும் கனமும்.
தைரியமே சகல நன்மையும் தரும். 13350
தைரிய லக்ஷ்மி தனலக்ஷ்மி.
தை வாழை தரையில் போடு,
தை வெள்ளம் தாய்க்குச் சோறு.
தொ
தொக்கலூரிலும் கல்யாணம்; தொங்கலூரிலும் கல்யாணம்.
(கொங்கு நாட்டு வழக்கு.)
தொங்குகிறது குட்டிச் சுவர்; கனாக் காண்கிறது மச்சுவீடு. 13355
தொட்ட காரியம் துலங்காது.
தொட்டது துலங்கும்; வைத்தது விளங்கும்.
தொட்டதை விட்டபின், விட்டதைத் தொடுமுன் கல்வி கல்.
தொட்டவன் மேல் தொடுபழி.
தொட்டவன் மேலே பழி; உங்கள் அப்பனை பிடித்து வலி. 13360
தொட்டால் கெட்டுவிடும் கண்; தொடாவிட்டால் கெட்டுவிடும் தலை.
தொட்டால் சிணுங்கி.
தொட்டால் சிணுங்கி, தோட்டத்து முள்ளங்கி.
தொட்டால் தோழன்; விட்டால் மாற்றான்.
(பகை.)
தொட்டால் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். 13365
தொட்டால் விடாது தொட்டியப் பிசாசு.
(பேய், தொட்டியர் சாதிப் பிசாசு.)
தொட்டான்; மூக்கு அறுந்து போச்சு என்றாளாம்.
தொட்டியப் பேய் சுடுகாடு மட்டும்.
தொட்டில் கண்ட இடத்தில் தாலாட்டலாமா?
தொட்டிலில் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன். 13370
தொட்டிலுக்குப் பிள்ளையும் கொட்டிலுக்குப் பெண்ணும்.
தொட்டிலை ஆட்டித் தொடையைக் கிள்ளுவது போல.
(தொடையை அறுக்கிறான்.)
தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுவாள்.
தொட்டு எடுத்த பணத்தைத் தட்டிப் பறித்தாற்போல. 13375
தொட்டு ஒற்ற எண்ணெய் இல்லை; தோட்டமெல்லாம் குளோபு; வாரி முடிக்க எண்ணெய் இல்லை; வாசல் எல்லாம் குளோபு.
தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
(கொடாத வித்தை குட்டிக்கரணம் போட்டாலும்.)
தொட்டுக் கெட்டது கண்; தொடாமற் கெட்டது தலை.
தொட்டுக் கொள் துடைத்துக் கொள் என்று இருக்கிறது.
தொட்டுத் தடவ எண்ணெய் இல்லை அடிமகளே, தோட்டம் எல்லாம் தீ விளக்காம். 13380
தொட்டுத் தடவ எண்ணெய் இல்லை; போடுடா பட்டுக் கோட்டைக்கு இரண்டு தீவட்டி.
தொட்டுப் பார்த்தால் தோட்டியும் உறவு.
தொடங்குகிறது குட்டிச்சுவர்; நினைப்பது மச்சு மாளிகை.
தொடாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்; தொட்ட தொழிலை விட்டவனும் கெட்டான்.
தொடுக்கத் தெரியாவிட்டாலும் கெடுக்கத் தெரியாதா? 13385
தொடுத்த காரியத்தை விடுகிறதா?
தொடையிலே சிரங்கு; மாமனார் வைத்தியம்.
தொண்டர்கள் அன்பன் துணைக்கு நிற்பவன்.
தொண்டு எனப் படேல்.
தொண்டை பெரிதென்று அம்பட்டன் கத்தியை விழுங்குகிறதா? 13390
தொண்டைமான் நாட்டில் தொட்டதெல்லாம் கல்.
தொண்டையிலே கண்டமாலை புறப்பட,
தொண்டையிலே தூறு முளைக்க.
தொண்டையைக் கிழித்துக் கொண்டு பேசுகிறான்.
தொண்டை வலிக்குச் சாராயம்; தொடை வலிக்கு வெந்நீர். 13395
தொண்ணூற்றோடே துவரம் பருப்பு ஒரு பணம்.
தொண்ணூறு பணம் கடனோடே துவரம் பருப்புக் காற்பணம்.
(பொன்னோடே.)
தொத்துக்குத் தொத்து சாட்சி; துவரம் பருப்புக்கு மத்தே சாட்சி.
தொத்துக்கு வந்தவன் துரைத்தனம் செய்வானா?
தொத்தும் என்றால் மீனாட்சி; தொனுக்கும் என்றால் காமாட்சி. 13400
தொப்புள் அறுத்த கத்தி என்னிடத்தில் இருக்கிறது.
தொப்புளுக்கு மேல் கஞ்சி.
தொம்பைக் கூண்டிலே எலியைக் காவல் வைத்துக் கட்டினது போல,
தொழில் இல்லாதவன் தோட்டம் செய்.
தொழிலை விட்டவன் முகடி தொட்டவன். 13405
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்.
(குறள்.)
தொழுதாலங்குடிக்குப் பொழுதும் போகவேணுமா?
(தொழுதாலங்குடி - மாயூரத்திற்கு அருகிலே உள்ளதோரூர், பகலிலே திருட்டுப் பயம்.)
தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமல் போகுமா?
தொழுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில். 13410
தொழுவார்க்கு ஒரு கோயிலும் உழுவார்க்கு ஒரு நிலமும் கிடையாவா?
தொன்மை நாடி நன்மை நாடாதே.
தொன்மை மறவேல்.
தொன்னிலம் முழுதும் தோன்றியது கல்வி.
தோ
தோகை அழகைத் தொட்டுப் பொட்டு இட்டுக் கொள்ளலாம். 13415
தோசிப் பெண்ணுக்கு ஏற்ற சொறியங் கொள்ளி மாப்பிள்ளை.
தோசைக்குத் தோசை ஓட்டை.
தோசை சுட்டது கைவிட்டது.
தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
தோட்டக்காரனும் திருடனும் சேர்ந்தால் விடிய விடியத் திருடலாம். 13420
தோட்டத்தில் அந்தம்.
தோட்டத்தில் பழம் இருக்கத் தூரத்தில் போவானேன்?
தோட்டத்தில் பாதி கிணறு.
தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா?
(வராது.)
தோட்டத்துப் பச்சிலைக்கு வீரியம் மட்டு. 13425
தோட்டத்துப் பச்சிலை மருந்துக்கு உதவாது.
தோட்டப் பாய் முடைகிறவனுக்குத் தூங்கப் பாய் இல்லை.
தோட்டம் நிலைக்குமுன் கத்தரிக் கொல்லை வைக்கிறாயே?
தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்க வேணும்?
தோட்டம் முச்சாண்; சுரைக்காய் அறு சாண். 13430
தோட்டம் வைத்தால் வாட்டம் இல்லை.
தோட்டி உறவு தமுக்கோடு சரி.
தோட்டி பிள்ளை அவனுக்குத் துரைப்பிள்ளை.
தோட்டிபோல் உழைத்துத் துரைபோல் சாப்பிட வேண்டும்.
(உழைத்தால் துரைபோல் சுகிக்கலாம்.)
தோட்டிபோல் உழைத்துத் தொண்டைமான் போல் வாழ். 13435
(பாடுபட்டால் தொண்டைமான் போல் சாப்பிடலாம்.)
தோட்டி முதல் தொண்டைமான் வரையில்.
தோடு ஒரு நகையா? தோசை ஒரு பலகாரமா?
தோண்டக் குறுணி; தூர்க்க முக்குறுணி.
தோண்டிக் கள்ளைத் தொடர்ந்து குடித்தால் பாண்டியன் மகனும் பறையன் ஆவான்.
தோண்டியும் பொத்தல்; தாம்பும் அறுதல். 13440
தோண்டுகிறது பதக்கு; தூற்றுகிறது முக்குறுணி
தோணி போகும்; துறை கிடக்கும்.
தோ தோ என்றால் மூஞ்சியை நக்கிற்றாம்.
தோ தோ நாய்க்குட்டி, தொத்தி வா; குடிநாய்க்குட்டி, வேறு பெண்சாதி. தண்ணீருக்குப் போகிறாள், வீட்டைப் பார்த்துக் கொள் நாய்க்குட்டி.
தோ தோ நாயே, செட்டியார் வீட்டு நாயே, வியாழக்கிழமை சந்தைக்குப் போகிறேன்; வீட்டைக் காத்துக் கொள் நாயே. 13445
தோ தோ நாயே தொட்டியாங்குளத்து நாயே, நீராவிக்குப் போகிறேன்; வீட்டைக் காத்துக் கொள் நாயே.
தோய்க்கிற வண்ணாத்திக்கு உஸ் என்ன ஓர் ஆளா?
தோய்த்துக் கொண்டு தின்பேன்; உனக்கென்ன?
தோரணி கெட்டால் கோரணி.
தோல் இருக்கச் சுளை போமா? 13450
தோல் இருக்கச் சுளை விழுங்கி.
தோல்வியே வெற்றிக்கு அறிகுறி.
தோல் விற்ற காசு வீசுமா?
(செட்டிநாட்டு வழக்கு.)
தோலுக்குத் தோலாட்டம்; தோல்பனாட்டுக்கு நாயாட்டம்.
(மண்டாட்டம் - மண்டாட்டம் யாழ்ப்பாண வழக்கு.)
தோலோடு வாழைப்பழம். 13455
தோழனாவது துலங்கிய கல்வி.
தோழனோடும் ஏழைமை பேசேல்.
தோழி வீட்டுக்குப் போனாலும் தூக்கோடு போக வேணும்.
தோளில் இருந்து செவியைக் கடிக்கிறதா?
(காதை.)
தோளின் பேரில் தொண்ணூறு அடி அடித்தாலும் துடைத்துப் போடுவான். 13460
தோளின் மேலே தொண்ணூறடி; துடைத்துவிட்டால் ஒன்றும் இல்லை.
தோளுக்கு மிஞ்சினால் தோழன்.
தோளுக்கு மேலே துண்ணூறு, துடைச்சுப் பார்த்தால் ஒன்றும் இல்லை.
தோளுக்கு மேலே துண்ணூறு, துடைத்துப் பார்த்தால் வெண்ணீறு.
தோளோடு தாலி தொங்கத் தொங்க மகராஜி 13465
தோற்பது கொண்டு சபை ஏறேல்.
(ஏறுகிறதா?)
தோற்பும் கெலிப்பும் ஒருவர் பங்கு அல்ல.
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு.
தோற்றின யாவும் தோற்றம் அற்று ஒழியும்.
தோன்றின யாவும் அழியும். 13470
தோஷம் பிறந்தால் ஆடு புழுக்கை இடாதா?
தெள
தெளவித் திரியேல்.
தெளவையின் மனசுக்கு ஒப்புதல் இல்லை.
ந
நக்கத் தவிடும் இல்லை; குடிக்கத் தண்ணீரும் இல்லை.
நக்கல் வாய் தேட, நாறல் வாய் அழிக்க. 13475
நக்கவாரக் கச்ச வடம்போல.
(நிர்வாண தேச வியாபாரம்.)
நக்க விட்ட நாயும் கொத்த விட்ட கோழியும் நில்லா.
நக்கிக் கொண்ட நாயும் கொத்திக் கொண்ட கோழியும் போகா.
நக்கு உண்டார் நா எழார்.
நக்குகின்ற நாய்க்குச் செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியுமா? 13480
(உண்டா? தெரியாது.)
நக்குகிற பொழுது நாவு எழும்புமா?
நக சிகை பரியந்தம்.
நகத்தால் கிள்ளாததைக் கோடரி கொண்டு வெட்ட நேரிடும்.
நகத்தால் கிள்ளாவிட்டால் கோடரி வெட்டுக்கும் அசையாது.
நகத்தாலே கிள்ளுவதைக் கோடரி கொண்டு வெட்டுகிறதா? 13485
நகமும் சதையும் போல.
(வாழ்கிறார்கள்.)
நகரத்துக்கு இரண்டாமவனாக இருப்பதிலும் நாட்டுப் புறத்துக்குத் தலைவனாய் இருப்பதே நன்று.
நகரம் எல்லாம் நமக்குச் சொந்தம்; ஆனால் தங்கத்தான் இடம் இல்லை.
நகரிப் பெண் நாடு ஏறாது.
(நகரி-ஆழ்வார் திருநகரி.)
நகரேஷு காஞ்சி. 13490
நகரைக்குப் பெத்தை வழி காட்டுகிறதோ?
நகைக்கு மகிழ்ச்சி; நட்புக்கு நஞ்சு.
நகைச் சொல் தருதல் பகைக்கு ஏதுவாம்.
நகைத்து இகழ்வோனை நாய் என நினை.
நகை போட்டதும் இல்லை; போட்டவர்களைப் பார்த்ததும் இல்லை. 13495
நங்கும் நாளமும்.
நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல.
நச்சுப் பேச்சு நாளும் தரித்திரம்.
நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா?
நச்சுமரம் ஆனாலும் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். 13500
நச்சுமரம் ஆனாலும் வைத்தவன் மரம்.
(வச்சவன்.)
நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் குடியிருந்தாற்போல.
நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் பெண் கொடுத்தது போல.
(பெண் கொண்டது போல.)
நசை கொன்றான் செல் உலகம் இல்.
(பழமொழி நானூறு.)
நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி, குப்பையில் இருந்தாலும் கோமேதகம். 13505
நஞ்சு நாற்கலம் வேண்டுமா?
நட்ட அன்றும் சாவி; அறுத்த அன்றும் பட்டினி.
நட்ட அன்று மழையும், கெட்ட அன்று விருந்தும் கேடு.
(இழவும் கேடு.)
நட்ட குழி நாற்பது நாள் காக்கும்.
நட்டது எல்லாம் மரம் ஆமா? பெற்றது எல்லாம் பிள்ளை ஆமா? 13510
நட்ட நடுவில் முழம் ஆனேன்; நடவு திரும்பிச் சாண் ஆனேன்; தட்டான் இட்ட வேளாண்மை தானாய்ப் பொன்னிறம் ஆச்சுது.
நட்டாலும் தில்லை நாயகம் நடவேண்டும்.
நட்டாற்றில் கைவிட்டாற் போல.
நட்டாற்றுக் கோரையைப் போல.
நட்டு அறான் ஆதலே நன்று. 13515
நட்டு ஆயினும், பட்டு ஆயினும்.
(பனை.)
நட்டுக் காய்ந்தால் நாழி நெல் காணாது.
நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா?
(நொட்டி)
நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டு அடிக்கத் தெரியாதா?
நட்டுவன் பிள்ளைக்கு நாட்டியம் கற்க வேண்டுமா? 13520
நட்டுவன் பிள்ளைக்கு முட்டு அடிக்கத் தெரியாதா?
நட்டுவனுக்கு உண்டு தட்டுவாணித் தனம்.
(நட்டுவச்சிக்கு.)
நட்டுவனுக்கு நொட்டுப் பழக்குகிறாயா?
(கொட்டிக் காட்ட வேண்டுமா?)
நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காதவழி.
(மாட்டாதவனுக்கு.)
நடக்கக் கற்ற பிள்ளை தவழக் கற்றதாம்; தாயார் செய்த தவம். 13525
நடக்கப் பால்மாறிச் சிற்றப்பன் வீட்டில் பெண்கட்டிக் கொண்டானாம்.
நடக்க மாட்டாத தலவாடிக்கு நாலு பக்கமும் சவாரி.
நடக்க மாட்டாதவன் சிற்றப்பன் வீட்டிலே பெண் கேட்டாற் போல.
நடக்கிறது நடக்கட்டும், தெய்வம் இருக்கிறது.
நடக்கிற பிள்ளை தவழ்கிறது; தாயார் செய்த தருமம். 13530
நடக்கிற வரையில் நாராயணன் செயல்.
(நடந்தவரைக்கும்.)
நடக்கும் கால் இடறும்.
நடக்குந்தனையும் நாடங்கம்; படுத்தான்தான் பாயும் தானும்.
(யாழ்ப்பாண வழக்கு.)
நடக்கும் கால் தவறுதலிலும் நாத் தவறுதல் கெட்டது.
நடத்தை தப்பினவன் அண்ணனாகிலும் தம்பியாகிலும் நறுக்கு. 13535
நடந்த காலிலே சீதேவி; இருந்த காலிலே மூதேவி.
நடந்தபிள்ளை நகருகிறது.
நடந்த மட்டும் நடக்கட்டும்; நஷ்டத்துக்கு உத்தரவாதம் பண்ணப் போகிறீரா?
நடந்தவரை நமது செயல்; நாளை நடப்பது நாயன் செயல்.
நடந்தவன் காலிலே சீதேவி; இருந்தவன் காலிலே மூதேவி. 13540
நடந்தார்க்கு நாடு எங்கும் உறவு; கிடந்தார்க்குப் பாயே உறவு.
நடந்தால் நடை அழகி; நாவிலும் பல் அழகி.
நடந்தால் நாடு எல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை.
(நாடு எல்லாம் செல்லும் உறவு இருந்தால் படுத்த தலையணையும் பாயும்கூட உறவில்லை.)
நடபடி உண்டானால் மிதியடி பொன்னாலே.
நடலப் புடலங்காய் காய்க்கிறதாம்! நாழிக்குப் பத்தெட்டு விற்கிறாளாம். 13545
(காய்த்ததாம், விற்கிறதாம்.)
நடவாத காரியத்தில் பிடிவாதம் பிடிக்கிறது.
நடவில் சிரிப்பு; அறுவடையில் நெருப்பு.
நடவுக்குத் தெளி, நாலத் தொன்று.
(நாலில் ஒன்று.)
நடவு நட்டாலும் நாற்று மீந்தாலும் நான் நடக்கிற நடை இதுதான் என்று சொல்லுமாம் கடா.
நடு உழவிலே நத்தை தெறித்தது போல. 13550
நடு ஊரிலே நச்சுமரம் பழுத்து என்ன?
(பழுத்தாற் போல, பழுக்கலாமா?)
நடுக்கடல் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர்.
(வடுப்படாமல்.)
நடுக்கடலில் விழுந்து அலைகிறவனுக்கு ஒரு தெப்பம் அகப்பட்டதைப் போல.
நடுக்கத் தட்டானுக்குக் கல்யாணம்; நாற்பத்தெட்டாந் தேதி.
(இருபத் தெட்டாந்தேதி.)
நடுக்காட்டில் போனாலும் வடுப்படாமல் வருவார். 13555
நடுங்க அடித்துப் பிடுங்குகிறதா?
நடுச் சமுத்திரத்திலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நடுச் செவியில் நாராசம் காய்ச்சி விட்டாற்போல.
நடுத்தரம் ஆனவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்ற வைத்தால் மாறும்.
நடுத் தெரு நாராயணன். 13560
நடுத்தெருப் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?
நடுப்படையில் போனாலும் வடுப்படாமல் வருவான்.
(வருகிறது.)
நடுப்புடைவையில் கோவணம் கிழிக்கிற மாதிரி.
நடு மேட்டில் நரி கத்திற்றாம், தீர்த்த முடக்கில் தேள் கொட்டிற்றாம்.
நடைக்கு அஞ்சிச் சிற்றப்பன் வீட்டில் பெண் கொண்டானாம். 13565
நடைக்குச் சோம்பற்பட்டுச் சிற்றப்பன் வீட்டில் வாழ்க்கைப் பட்டாளாம்.
நடை சிறிது ஆகில் நாள் ஏறும்; படை சிறிது ஆகில் பயம் ஏறும்.
(நாக் குழறும்.)
நடை பாக்கியம்; இடை போக்கியம்.
நண்டு அளந்த நாழி போல.
நண்டு இழந்த நாழி போல. 13570
நண்டு இழந்த நாழியும் தொண்டு இழந்த கயிறும்.
(நண்டுக்குச் சிவன் போகிறது.)
நண்டு உதவும்; நண்டுகள் உதவா.
நண்டு ஊர நாடு செழிக்கும்.
நண்டு எழுத்துக் கண்டு எழுதலாமா?
நண்டு எழுத்துப் போல். 13575
நண்டுக்கு அழகு சேறும் கலங்கலும்.
நண்டுக்குக் கல்யாணம்; நரிக்குச் சங்கராந்தி.
நண்டுக் குடுவையை நடுத் தெருவில் உடைத்தது போல.
நண்டுக்குச் சீவன் போகிறது; நரிக்குக் கொண்டாட்டம்.
நண்டுக்குத் திண்டாட்டம், நரிக்குக் கொண்டாட்டம். 13580
(நண்டுக்குச் சீவன் போகிறது.)
நண்டுக்குப் பட்டால்தான் தெரியும்; குரங்குக்குச் சுட்டால்தான் தெரியும்.
நண்டுக்குப் புளியங்காய் இட்டு நறுக்கினாற் போல.
நண்டுக்கடி காலைவிட்டு ஓடியது போல.
நண்டு கால் விரித்தாற் போல.
நண்டு கொழுத்தால் வளையில் இராது; பள்ளி கொழுத்தால் பாயில் இரான். 13585
நண்டு பொரித்திட்டுத் திகைப்பூண்டு கண்டாற் போல.
நண்டு வளையிற் கை இட்டது போல.
நண்டு வளையைச் சுற்றிய நரியைப் போல.
நண்டைக் கொடுக்கு ஒடித்தாற் போல.
நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தது போல. 13590
(நாயை.)
நண்டை நாழி கொண்டு அளக்கலாமா?
நண் பொருள் கொடுத்து நன்றாய் ஓது.
நத்தத்திலே நாய் பெருத்தது போல.
நத்த வாழைக்கு நித்தம் ஒரு காசு.
நத்த வாழையிலே நித்தம் காற் பணம். 13595
நத்துக்கும் சுழி, முத்துக்கும் சுழி, குன்றிமணிக்கும் பிட்டத்திலே சுழி.
நத்துப் புல்லாக்கு நாணயம் பார்க்கிறது; இரட்டைக் குண்டு அட்டிகை எட்டி எட்டிப் பார்க்கிறது.
நத்தையின் வயிற்றில் முத்துப் பிறந்தது போல.
நதி எல்லாம் பால் ஆனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.
நதி மூலத்தையும் ரிஷி மூலத்தையும் விசாரிக்கக் கூடாது. 13600
நந்தன் தோல் காசு வழங்கினாற் போல.
நந்தன் படைத்த பண்டம் நாய் பாதி, பேய் பாதி.
(நாய்வந்தி ஆவாரி.)
நந்தன் படை வீடா?
நந்தோ ராஜா பவிஷ்யதி.
நபும்சகன் கையில் ரம்பை அகப்பட்டது போல. 13605
நம் நிழல் நம்மோடே.
நம்ப நட, நம்பி நடவாதே.
(யாழ்ப்பாண வழக்கு.)
நம்பமாட்டாதவன் பெண்சாதிக்கு நாற்பது பேர் மாப்பிள்ளைமார்.
நம்பவைத்து கழுத்து அறுக்கலாமா?
நம்பியான் விட்டதே தீர்த்தம். 13610
(வார்த்ததே.)
நம்பின பேருக்கு நடராஜா, நம்பாத பேருக்கு யமராஜா.
நம்பினவரை உண்மையில் காத்தான்.
நம்பினவரைக் காட்டில் விடலாமா?
நம்பினவரை நட்டாற்றில் விடலாமா?
(நம்பின பேரைக் கைவிடுவதா?)
நம்பினால் தெய்வம்; நம்பாவிட்டால் கல். 13615
நம்பூதிரி சொத்தை எழுதி வைத்த மாதிரி.
(நிறையச் சாப்பிட்ட சந்தோஷத்தில் இனி எதற்கு என்று எழுதிவைத்து விட்டானாம். பாலைக்காட்டு வழக்கு.)
நம்பூதிரி வெற்றிலை போட்டுக் கொண்ட மாதிரி.
(புதிய வெற்றிலையைக் கண்டு அருமை பாராட்டி உண்ண மனம் இன்றிப் பழைய வெற்றிலையைப் போட்டுக் கொள்வான்.)
நம்மாழ்வார் நம்மைக் கெடுத்தார்; கூரத்தாழ்வார் குடியைக் கெடுத்தார்.
நம்மைச் செருப்பால் அடித்தாலும் நம் அண்ணன் வீட்டுப் பயலை வாடா, போடா என்னலாமா?
நம்மை நம்ப வேண்டாம்; அம்மாளைத் தாலி வாங்கச் சொல். 13620
நம்மை வணங்குகிறவனை நாம் வணங்குகிறதா?
நம் வீட்டு விளக்கென்று முத்தம் இடலாமா?
நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும்.
நமக்கு எல்லாம் எப்போது அமாவாசை? சூத்திரர்களுக்கு எப்போது அமாவாசை?
(கோமுட்டிகன் கேட்பது.)
நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது. 13625
நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
(இல்லை.)
நமன் அறியாமல் உயிர் போய் விடுமா?
நமன் எடுத்துக் கொண்டு போகும் பொழுது நழுவி விழுந்தவன்.
நமன் வாயிலே மண் போட்டாயா?
நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்க மாட்டான். 13630
நயத்தில் ஆகிறது பயத்தில் ஆகாது.
நய மொழியால் ஜயம் உண்டு.
நரசிம்மரை நரி மிரட்டியதாம்; நரியை நாய் மிரட்டியதாம்.
நரப்புப் புல்லைப் பிடுங்கினாலும் வரப்புப் புல்லைப் பிடுங்காதே.
நரா போகம் சரா போகம். 13635
(கரா போகம், சிலா போகம்.)
நரி அம்மணமாய்ப் போகிறதா?
நரி இடம் போனால் நல்லதா? வலம் போனால் நல்லதா என்றால் மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது என்பது.
நரி ஊரை விட்டுப் புலி ஊருக்குப் போனேன்; புலி ஊரும் நரி ஊர் ஆயிற்று.
நரி ஊளையிட்டால் சமுத்திரம் மட்டும்.
நரி எதிர்த்தால் சிங்கம். 13640
நரி ஒரு சாலுக்கு உழப் போனது.
நரிக்கு அதிகாரம் கொடுத்தால் கிடைக்கு ஒரு கிடாய் கேட்கும்.
(இடம் கொடுத்தால், நாட்டாண்மை கொடுத்தால், கிடைக்கு இரண்டு ஆடு.)
நரிக்கு உபதேசம் செய்தாற் போல.
நரிக்குக் கல்யாணம்; நண்டுக்குப் பிராம்மணார்த்தம்.
நரிக்குக் கொண்டாட்டம்; நண்டுக்குத் திண்டாட்டம். 13645
நரிக்குட்டிக்கு ஊளை இடப் பழக்க வேண்டுமோ?
நரிக்கு நண்டு ஆசை; நாய்க்கு எலும்பு ஆசை.
நரிக்கு மணியம் கொடுத்தால் கிடைக்குக் கிடை இரண்டு ஆடு கேட்கும்.
(இளக்காரம் கொடுத்தால், பெரிய தனம் கொடுத்தால்.)
நரிக்கு வால் முளைத்தாற்போல.
நரிக் குளிப்பாட்டி. 13650
(-தப்பித்துக் கொள்பவன்.)
நரிக் கூப்பாடு கடல் முட்டிப் போகும்.
(நரிக்கூச்சல். கடல்மட்டும்.)
நரிக் கொம்பு போல.
நரி கல்யாணத்துக்கு வெயிலோடு மழை.
நரி கல்யாணத்துக்கு நண்டு பிராமணார்த்தம்.
நரி கிணற்றில் விழுந்தால் தண்டடி தடியடி. 13655
(தண்டெடு, தடியெடு.)
நரி குசு விட்டதாம், கடல் கலங்கிப் போயிற்றாம்.
நரி கூக்குரல் சமுத்திரம் எட்டியது போல.
நரி கூப்பிட்டுக் கடல் ஒதுங்குமா?
(முட்டுமா?)
நரி கொழுத்தால் வளையில் இராது.
(நண்டு.)
நரி கொழுத்து என்ன? காஞ்சிரம் பழுத்து என்ன? 13660
நரி செத்த இடத்திலே நாய் வட்டம் போட்டது போல.
நரி தின்ற கோழி போல.
நரி நாலு கால் திருடன்; இடையன் இரண்டு கால் திருடன்.
நரி முகத்தில் விழித்தது போல.
நரி முன்னே நண்டு கரணம் போட்டது போல. 13665
நரியின் கல்யாணத்தில் வெயிலோடு மழை.
நரியின் கையில் இறைச்சியை வைத்த கதை.
நரியின் கையிலே குடல் கழுவக் கொடுத்தது போல.
நரியின் பிரசவத்துக்கு நாய் மருத்துவச்சி.
நரியை எழுப்பிப் புலியைக் கலைப்பது போல. 13670
நரியை ஏய்க்கப் பார்க்கிறதாம் தில்லை நண்டு.
நரியை நனையாமல் குளிப்பாட்டுவான்.
நரியை வெள்ளரிக்காய் மிரட்டினாற் போல.
நரி வாயிலே மண் போட்டாயா?
நரி வால்பற்றி நதி கடக்கல் ஆகாது. 13675
நரி வாலைக்கொண்டு கடல் ஆழம் பார்க்கிறது போல.
நரைத்த மயிர் கறுத்து நங்கை நாய்ச்சியார் கொண்டை முடிப்பாளாம்.
(கறுத்தால்தான்.)
நரைத்த தலைக்கு இட்ட எண்ணெயும் இதயமற்றவனுக்குப் போட்ட சோறும்.
நரைத்தவன் எல்லாம் கிழவனா?
நரைத்தவன் கிழவன், நாமம் இட்டவன் தாதன். 13680
நரை திரை இல்லை; நமனும் அங்கு இல்லை.
நல் இணக்கம் அல்லது அல்லற் படுத்தும்.
நல் இனத்தில் நட்பு வலிது.
நல் உடலுக்கு இளைப்பாற்றிக் கொடாவிடினும் நாவுக்குக் கொடு.
நல்ல அமைச்சு இல்லாத அரசு, விழியின்றி வழிச் செல்வான் போலாம். 13685
நல்ல ஆத்மாவுக்கு நாற்பது நாள்.
நல்ல ஆரம்பமே நல்ல முடிவு.
நல்ல இளங்கன்றே, துள்ளாதே.
நல்ல உயிர் நாற்பது நாள் இருக்கும்.
நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது என்ன? 13690
(குறுக்கே போகிறது போல.)
நல்ல எழுத்து நடுக்கே; கோணல் எழுத்துக் குறுக்கே.
நல்ல கதை நீளம் இல்லை.
நல்ல காரியத்துக்கு நானூறு இடைஞ்சல்.
நல்ல காலத்திலேயே நாயகம்.
(நாளிலேயே,)
நல்ல குடிக்கு நாலத்தொரு பங்காளி. 13695
(நாளில் ஒரு.)
நல்ல குதிரை புல்லுக்கு அழுகிறது; நொண்டிக் குதிரை கொள்ளுக்கு அழுகிறது.
நல்ல குருவினை நாடிக் கொள்.
நல்லது எல்லாம் பொல்லாதது, நாய் எல்லாம் பசு.
நல்லதுக்கா நரையான் இடமாச்சு?
நல்லதுக்கா நாய்க்குணம்? 13700
நல்லதுக்கா நாய்மேல் சன்னதம் வந்தது?
நல்லதுக்கா வந்திருக்கிறது, நாய்மேல் சங்கராந்தி?
நல்லதுக்கு ஒரு பொல்லாதது; பொல்லாததுக்கு ஒரு நல்லது.
நல்லதுக்கு நாலு இடையூறு வரும்.
நல்லது கண்டால் இறைவனுக்கு என்பார் நல்லோர். 13705
நல்லது கண்டால் நாயகனுக்கு நல்குவார்.
நல்லது கெட்டது நாலுபேர் சொல்வார்கள்.
நல்லது கெட்டால் நாய்க்கும் கடை.
(வழங்காது.)
நல்லது செய்கிறவன் பெண்சாதியை நாய்க்குப் பிடித்துக் கட்டு.
நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாதது போகிற வழியே போகிறது. 13710
நல்லது செய்வதில் நாலு இடையூறு வரும்.
நல்லது சொல்ல நாட்டுக்கு ஆகாது.
நல்லது சொல்ல நாடும் இல்லை; உற்றது சொல்ல ஊரும் இல்லை.
நல்லது சொல்லிக் கெட்டார் இல்லை.
நல்லது சொல்லி நடுவழியே போனாலும் பொல்லாதது போகிற வழியே போகும். 13715
நல்லது தெரியுமா நாய்க்கு?
நல்லது நாற்கலம்; ஊத்தை ஒன்பது கலம்.
நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் தெரியும்.
நல்ல தேசத்துக்கு நாலு செம்பு.
நல்ல நாய் ஆனாலும் நரகலை நாடித்தானே செல்லும் 13720
நல்ல நாய்ச்சியார் கடைந்த மோர் நாழி முத்துக்கு நாழி மோர்.
நல்ல நாயைக் கிள்ளியா பார்க்க வேணும்?
நல்ல நாளில் நாழிப்பால் கறக்காது; அதிலும் கன்று செத்த கசுமாலம்.
நல்ல நாளில் நாழிப்பால் கறவாதது, கன்று செத்துக்கப்பால் கறக்குமா?
(கன்று செத்தால் கேட்க வேண்டுமா?)
நல்ல நாளில் நாழிப்பால் கறவாத மாடா ஆகாத நாளிலே அரைப்படி கறக்கும்? 13725
நல்ல நாளிலே நாழிப் பால் கறவாதது, கோடை நாளிலே குறுணி கறக்குமா?
நல்ல நினைவை அநுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல்.
நல்ல பாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியது போல.
நல்ல பாம்பை ஆட்டுகிற பிடாரன் நாகப்பூச்சியைக் கண்டு பயப்படுவானா?
நல்ல பிராணன் நாற்பது நாள். 13730
நல்ல பெண்டுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஓர் அடி.
நல்ல மரத்தில் நச்சுக்கனி பழுக்காது.
நல்ல மரத்தில் நரையான் விழுந்த மாதிரி.
நல்ல மரத்தில் நல்ல பாம்பு குடியிருந்தாற் போல.
நல்ல மரத்தில் புல்லுருவி முளைத்தது போல. 13735
(புல்லுருவி பாய்ந்தாற் போல்.)
நல்ல மரம் நச்சுக் கனியைத் தராது; நச்சு மரத்திலே நல்ல கனியும் வராது.
நல்ல மனைவி நல்லதைக் கண்டால் நமது புருஷனுக்கு என்பாள்.
(என்று எடுத்து வைப்பாள்.)
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
(பெண்ணுக்கு.)
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; பட்டி மாட்டுக்குப் பத்துச் சூடு.
நல்ல மாட்டுக்கு ஓர் அடி; நல்ல மனுஷர்களுக்கு ஒரு சொல். 13740
நல்ல மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா?
நல்லவர் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்.
நல்லவர் கண்ணில் நாகம் பட்டாலும் கொல்லார்
(கண்ணில் பட்ட நாகமும் சாகாது. அகப்பட்ட நாகமும்.)
நல்லவர்களுக்குச் சொல்லாமல் சாவு வரும்.
நல்லவர் கெட்டால் நாயும் சீந்தாது. 13745
நல்லவர் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர் போல உதவும்.
நல்லவரிடத்தில் நல்ல பாம்பும் சேரும்.
நல்லவரிடத்தில் நன்மை விளங்கும்.
நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்க வேண்டும்; கெட்டவன் உறவைப் பத்துப் பணம் கொடுத்து நீக்க வேண்டும்.
நல்லவன் என்று பெயர் எடுக்க நாள் செல்லும். 13750
நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
(ஒருவன் நடுவே நிற்... அற்றுப்போகும்.)
நல்லவனுக்கு அடையாளம் சொல்லாமற் போவது.
நல்லவனுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஓர் அடி.
நல்லவனுக்குக் காலம் இல்லை.
நல்லவனுக்கு நாடு எங்கும் உறவு. 13755
நல்லவனுக்கு நாலு இடத்தில் மயிர்; போக்கிரிக்குப் பொச்சு வாயெல்லாம் மயிர்.
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நாட்டும் வேண்டாம்; சீட்டும் வேண்டாம்.
நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்குகிறான்.
(தாக்குகிறான்.)
நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு வராது.
நல்ல வீடு என்று பிச்சைக்கு வந்தேன்; கரியை வழித்துக் கன்னத்தில் தடவினார்கள். 13760
நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான்.
நல்ல வேளை முளைக்கிற இடத்தில் நாய் வேளையும்முளைக்கிறது.
நல்ல வேளையிலே ஞாயிற்றுக் கிழமையிலே.
நல்லறம் உள்ளது இல்லறம்.
நல்லறம் செய்வது, செய்யாது கேள். 13765
(கேள்-உறவினர்.)
நல்லாயிருந்தது தாதரே, பல்லை இளித்துக்கொண்டு பாடினது.
நல்லாக் கள்ளி விழித்தாற் போல.
நல்லார் ஒருவர்க்குப் பெய்யும் மழை எல்லார்க்கும் ஆம்.
(பெய்யும்.)
நல்லார்க்கு நாக்கில் உரை; பொன்னுக்குக் கல்லில் உரை.
நல்லார் கையில் நாகம் அகப்பட்டாலும் கொல்லார். 13770
நல்லார் சங்காத்தம் நல்ல மண்ணில் விழுந்த நீர்போல உதவும்.
நல்லார் நடக்கை தீயோர்க்குத் திகில்.
நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.
நல்லாருக்குப் பெய்த மழை எல்லாருக்கும் ஆம்.
நல்லாரும் நல்ல பாம்பைப் போலத் தங்கள் வலிமையை அடக்கி மறைத்திருப்பார் சில வேளை. 13775
நல்லாரைக் கண்டால் நாய் போல; பொல்லாரைக் கண்டால் பூனை போல.
நல்லாரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை.
நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்.
நல்லுடலுக்கு இளைப்பாற்றிக் கொடாவிடினும் நாவிற்குக் கொடு.
நல்லெருமை நாகு; நற்பசு சேங்கன்று; அடியாள் பெண்பெற. 13780
(இடையர் வழக்கு.)
நல்லோர்க்குப் பொறுமையே துணை.
நல்லோர் நடத்தை தீயோருக்குத் திகில்.
நல்லோரை ஏசினால் நாவு புழுக்கும்.
நல்லோரை நாடு அறியும்; பொன்னை நெருப்பு அறியும்.
நல்லோரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை. 13785
நல்லோன் என வளர்.
நலம் உள்ளோன் கவலை தீர்க்க, நமக்கு அந்தக் கவலை ஏற்க நல்லது.
நவாபு அத்தனை ஏழை; புலி அத்தனை சாது.
நவாபு தர்பார்.
நவாபு நா அசைந்தால் நாடு அசையும்; பக்கிரி நாடு அசைந்தால் மோவாய்க் கட்டைதான் அசையும். 13790
நழுவ முடிந்தால் நம்பாதே.
நழுவப் போகிறவனைத் தழுவிப் பிடிக்கிறதா?
நளபாகம் பீமபாகம் போல.
நற்குணமே நல்ல ஆஸ்தி.
நற்சிங்கத்துக்கு நாயா முடி சூட்டுகிறது. 13795
நற் பெண்டாட்டிக்கு ஒரு சொல்.
நற் பெண்டிர் நல்லதைக் கண்டால் நமது நாயகனுக்கு என்பார்.
நற் பெண்டுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
நற் பெயரே பணத்தை விட மேலானது.
நறுக்குத் தெறித்தாற் போல நாலு வார்த்தை பேசு. 13800
நறுவிலிப்பழம் திருத்தினாற் போல.
நன்செய்க்கு ஏர் உழவு; புன்செய்க்கு நால் உழவு.
நன் பொருள் கொடுத்தும் நன்றாய் ஓது.
நன்மை ஆனதைக் கொடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.
நன்மை கடைப்பிடி. 13805
நன்மை செய்தார் நன்மை பெறுவார்? தீமை செய்தார் தீமை பெறுவார்.
(தின்மை.)
நன்மை செய்திடில் நாலு இடையூறும் வரும்.
நன்மை செய்பவருக்கு இடையூறு செய்கிறதா?
நன்மை செய்யக் கன்மம் விடையாது.
நன்மை செய்யக் கனம். 13810
நன்மை செய்வார் நலம் பெறுவர்; தீமை செய்தால் தீமை பெற்று நலிவர்.
நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.
நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி.
நன்றாய் இருக்கிறது நாயகரே, பல்லை இளித்துக் கொண்டு ஆடுகிறது.
நன்றாய் இருந்தாலும், நல்லி சுட்ட பணியாரம். 13815
நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; கெட்டாலும் தாங்க மாட்டார்கள்.
நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; நலம் தப்பினாலும் பார்க்கமாட்டார்கள்.
(நலம் கெட்டாலும்.)
நன்றாய் முடிவது எல்லாம் நன்றே.
நன்றிக்கு நாய்; கர்வத்துக்குக் களிறு.
நன்றி கெட்ட நாய் தின்றதெல்லாம் மண்ணா? 13820
நன்றி கெட்டவன் நாயினும் கடையன்.
நன்றி செய்த கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை போல.
நன்றி செய்தவனை நாயின் கழுத்தில் கட்டு.
நன்றி மறந்தாரைத் தெய்வம் நின்று கொல்லும்.
நன்றி மறந்தாரை நடுங்கக் கேட்கும் தெய்வம். 13825
நன்றி மறவேல்.
நன்று செய் மருங்கில் தீது இல்.
(அகநானூறு.)
நன்னிலம் கரந்தை; நடு நிலம் கொளிஞ்சி.
நனவிலும் இல்லது கனவிலும் இல்லை.
(குறள், 1217 பரிமேலழகர் உரை.)
நனைத்துச் சுமக்கிறதா? 13830
நனைந்த கிழவன் வந்தால் உலர்ந்த விறகுக்குச் சேதம்.
(கிழவி.)
நனைந்த கோழி மயிர் போலே.
நனையா வறட்டி இல்லையெனில் ஆனைக்கால் நோய் இல்லை.
நஷ்டத்துக்கு ஒருவன், நயத்துக்கு ஒருவன்.
நஷ்டத்துக்குப் பலர்; நயத்துக்கு ஒருவனோ? 13835
நக்ஷத்திரத்தை எண்ண முடியாது; நாய்வாலை நிமிர்த்த முடியாது.
நா
நா அசைய நாடு அசையும்.
(நா அசைந்தால்.)
நா உள்ளவன் கழு ஏற மாட்டான்.
நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம்.
நாக்காலே போட்ட முடி பல்லால் கடித்து இழுத்தாலும் வருமா? 13840
நாக்கில் இருக்கின்றன நன்மையும் தீமையும்.
நாக்கில் தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க வேணும்.
நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறான்.
நாக்கில் புண்ணாம்; நாய் நொண்டி நொண்டி நடந்ததாம்.
நாக்கிலே வெல்லம், நாவிலே விஷம். 13845
நாக்கிற்கு நரம்பு இல்லை.
(எலும்பு இல்லை.)
நாக்கு ஒன்றா இரண்டா?
நாக்குக்கு எலும்பு இல்லை; எப்படிப் புரட்டினாலும் புரளும்.
(நரம்பு இல்லை.)
நாக்குப் புரட்டர் போக்குப் புகல்வர்.
நாக்குப் புரண்டாலும் வாக்குப் புரளாது. 13850
நாக்கும் சீக்கும் பொல்லா.
நாக்கை அடக்கிப் பேசு.
நாக்கைத் தொங்கவிட்டுத் தலை ஆட்டும் நாய் போல.
நாக்கை நறுக்கி நாய்க்குப் போடவேண்டும்.
நாக்கைப் படைத்தவர்கள் நாலையும் சொல்வார்கள்; பல்லைப் படைத்தவர்கள் பத்தையும் சொல்வார்கள். 13855
நாக்கை விற்று ஆக்கித் தின்கிறது.
நாகசுரம் என்றால் தெரியாதா? மத்தம் போலக் கலகல என்னும்.
நாகசுரம் பொய், நாசனம் பொய், நாயினம் ஆயினேனே!
நாகப்பட்டினம்.
(-பைத்தியம்.)
நாகப் பாம்பு ஆடினதைப் பார்த்து நாங்கூழ்ப் பூச்சியும் ஆடினதைப் போல. 13860
நாகம் கட்டினால் நாதம் கட்டும்.
நாகரிகப் பெண்ணுக்கு நாக்குத் தூக்கு மிச்சம்.
நாகலோகத்து நஞ்சு அமிர்தம் உண்டவன்.
நாகூர் உபசாரம்.
நாகைக்கும் காரைக்கும் காதம், காரைக்கும் கடவூருக்கும் காதம்; கடவூருக்கும் காழிக்கும் காதம்; காழிக்கும் தில்லைக்கும் காதம். 13865
நாகை செழித்தால் நாடு செழிக்கும்.
(நாகை பழுத்தால்.)
நாங்களும் கங்கணம் கட்டினது உண்டு; கழுத்துக்குக் கங்கணம் கட்டினது இல்லை.
நாங்கை நாலாயிரம்.
(-நாங்கூர்த்திருப்பதியில் நாலாயிரம் குடும்பத்தினர் வைணவர்கள்.)
நாச்சியாரும் ஒன்றைப் பற்றி வார்க்கிறாள்; நானும் ஒன்றைப் பற்றிக் குடிக்கிறேன்.
நாச்சியாரைக் காணாத இடத்திலே முணுமுணுப்பது போல. 13870
நாசியால் போகிற சீவனைக் கண்ட்ர கோடரியால் வெட்டுவதா?
நாசுவக் கிருதும் வண்ணான் ஒயிலும்.
நாசேத்தி மாத்ரா, வைகுண்ட யாத்ரா.
(நாசேத்தி மாத்ரா-என் கை மாத்திரை, தெலுங்கு.)
நாட்கள் பாரேல்.
நாட்டரசன் கோட்டை, நாலு பக்கம் ஓட்டை. 13875
நாட்டாண்மைக் காரனைப் பகைத்துக் கொண்டால் பழைய கந்தாயத்தைக் கேட்பான்.
நாட்டாண்மை யாரடா கொடுத்தார்? நானும் என் பெண்சாதியுமாக வைத்துக் கொண்டோம்.
நாட்டாள் பெற்ற குட்டி, நாகரிகம் பேச வல்ல குட்டி.
நாட்டாளுக்கு ஒரு சீட்டாள்; வெற்றிலை மடிக்க ஒரு வெற்றாளி.
நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ? 13880
நாட்டான் பெண்சாதி என்றால் ஏன் என்பாள்; நாலு பேருக்குச் சோறு என்றால் ஊமை எனபாள்.
(ஊம் என்பாள்.)
நாட்டில் பஞ்சாங்கம் போனால் நட்சத்திரமும் போச்சோ?
நாட்டிலே விளைந்தால் நன்னாரி; மலையிலே விளைந்தால் மாகாளி.
நாட்டுக் கலப்பையால் நாலு முறை உழு.
நாட்டுக்கு அடுத்தது கொங்கராயனுக்கு. 13885
நாட்டுக்கு அரசன்; வீட்டுக்கு நாய்.
நாட்டுக்கு ஒரு தலைவன்; நாய்க்கு ஒரு எஜமானன்.
நாட்டுக்கு ஒரு மழை; நமக்கு இரண்டு மழை.
(ஓட்டைக் குடிசைக்காரன் கூற்று.)
நாட்டுக்குக் கரும்பு; வீட்டுக்கு வேம்பு
நாட்டுக்கு நல்ல துடைப்பம்;வீட்டுக்குப் பீற்றல் துடைப்பம். 13890
நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமை போகாது.
(தப்பாது.)
நாட்டுக்குப் பேச்சு; நாய்களுக்கு வார்த்தை.
நாட்டுக்குப் பொல்லான்; நாரணனுக்கு நல்லான்.
நாட்டுட்கு ராஜா; வீட்டுக்கு வேம்பு.
நாட்டுக் கோட்டைக் செட்டி, நாகபட்டினம் ராவுத்தர், மொட்டைப் பாப்பாத்தி மூவருக்கு மயிர்பிடி சண்டை நடந்தது போல. 13895
நாட்டுப் புறத்தான் மிட்டாய்க் கடையை விறைத்துப் பார்த்தது போல.
நாட்டை ஆளப் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது.
நாட்டைக் கலக்கி நாளில் நாட்டினாலும் நாய் வாலை நிமிர்த்த அரனாலும் முடியாது.
நாடி அறிவான் நமன் அறிவான்.
நாடிக் கொடுப்பாரைக் கூடிக் கெடுக்கிறதா? 13900
(கெடுக்கிறது.)
நாடிய பொருள் கைகூடும்.
(கம்ப ராமாயணம்.)
நாடிய வரம் எல்லாம் நல்கும் நாயகன்.
நாடு அறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் ஏன்?
(வேணுமா? சாட்சியா? + பின்குடுமி எதற்கு?)
நாடு அறிந்த பெருச்சாளி.
நாடு ஆண்டதும் பாண்டவர்; காடு ஆண்டதும் பாண்டவர். 13905
நாடு ஆளப் பிறந்தானா? காடு ஆளப் பிறந்தானா?
நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை.
(எங்கும் மெலிந்தால் கேடு ஏதும் இல்லை.)
நாடு எல்லாம் உழைத்தாலும் நாய்வால் நேராகாது.
நாடு எல்லாம் பாதி; நாட்டை வாய்க்கால் பாதி ஜலம்.
நாடு ஏற்பன செய். 13910
நாடு ஓட நடு ஓடு.
(+ ஊர் ஓட ஒக்க ஓடு.)
நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகுமா?
(போகாது.)
நாடு காடு ஆயிற்று; காடு கழனி ஆயிற்று.
நாடு சுற்றியும் வீடு வந்து சேரவேண்டும்.
நாடு செழித்தால் கேடு ஒன்றும் இல்லை. 13915
நாடு செழித்தால் நாகரிகம் தானே வரும்.
நாடு பாதி; நங்கவரம் பாதி.
நாண் இல்லா நங்கை, பூண் இல்லா மங்கை.
நாணம் இல்லாக் கூத்தாடிக்கு நாலு திக்கும் வாசல்.
(சிறுக்கிக்கு நாலு புறமும்; நாணம் அற்றவனுக்கு.)
நாணம் இல்லாத பெண் நகைக்கு இடம் வைப்பாள். 13920
நாணம் இல்லாத கூத்தாடிக்கு நாலு திக்கும் கூத்தி.
நாணம் கெட்ட நாரி ஓணம் வந்தாள் வருவாளா?
நாணமும் அச்சமும் நாய்களுக்கு ஏது?
நாணமும் இல்லை; மானமும் இல்லை.
நாணி நடந்தாலும் மாமி குணம் போகுமா? 13925
நாணினால் கோணும்; நடந்தால் இடறும்.
நாணும் கால் கோணும்; நடக்கும் கால் இடறும்.
நாதமும் கீதமும் ஒத்திருப்பது போல வேதமும் போதமும் ஒத்திருக்க வேண்டும்.
நாதன் நாயைப் பிடித்தது போல.
நாதனின் பட்சம் ஆயிரம் லட்சம். 13930
நாதாரி வீட்டுக்கு நாலு பக்கம் வாசற்படி.
நாதி அற்றவன்.
நாதிக்காரன் பாதிக்காரன் போல.
நாம் ஒருவருக்குக் கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்.
நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். 13935
நாம் நாயை மறந்தாலும் நாய் நம்மை மறக்குமா?
நாமம் போட்ட குரங்கு ஆனாலும் நடுத்தெருவிலே போக முடியுமா?
நாமம் போட்டவன் எல்லாம் தாதனா? விபூதி பூசினவன் எல்லாம் ஆண்டியா?
நாமம் போட்டு விடுவான்.
நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது. 13940
நாய் அடிக்கக் குறுந்தடியா?
(கோலா?)
நாய் அடிக்கக் கோல் தேவையா?
நாய் அடிக்கிற மாதிரி அடிக்கிறான்.
நாய் அடித்த துட்டு குரைத்தா காண்பிக்கிறது?
நாய் அடித்த படுபாவி சேய் இல்லாது அழுதானாம். 13945
நாய் அடையுமா, சிவலோக பதவி?
நாய் அறியுமா, ஒரு சந்திப் பானை?
நாய் அறியுமா, நறு நெய்யை.
நாய் அன்பு நக்கினாலும் தீராது.
நாய் ஆசை மலத்தோடு. 13950
நாய் ஆனாலும் அதற்கும் ஒரு வாயும் வயிறும் உண்டல்லவா?
நாய் ஆனாலும் சேய் போல.
நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
நாய் இருக்கிற வீட்டில் திருடப் போனது போல.
நாய் இருப்பது ஓர் ஆள் இருக்கிற மாதிரி. 13955
நாய் இல்லா ஊரில் நரி அம்பலம் பண்ணிற்றாம்.
நாய் இறந்ததென்று ஓநாய் அழுததாம்.
நாய் உண்ட புலால் போல.
நாய் உதறினால் நல்ல சகுனம்.
நாய் உள்ள ஆட்டுக் கிடையில் நரி புகுந்தாற் போல. 13960
நாய் உளம்புதல் மாதிரி.
நாய் ஊளையிட்டா மழை பெய்ய வேண்டும்?
நாய் ஊளையிட்டால் ஊர் நாசம் ஆகும்.
நாய் ஊளையிட்டாற் போல.
நாய் ஊளையிடுவது நடுச்சாமத்துக்கு மேல். 13965
நாய் ஊளையும் சொல்லி நரி ஊளையும் சொல்லலாமா?
நாய் எங்கே? சிவலோகம் எங்கே?
நாய் எச்சில், தாய் எச்சில்.
நாய் என்றாலும் நாயகன்; பேய் என்றாலும் புருஷன்.
நாய் ஏறினாலும் உப்பு மூட்டை நாழி குறையும். 13970
நாய் ஒரு சிறு எலும்புக்கும் சந்தோஷம் அடையும்.
நாய் ஓட்டமும் சில்லறைப் பாய்ச்சலும்.
நாய் ஓட ஓட நரியும் விரட்டும்.
நாய் ஓடினால் துரத்தும்; துரத்தினால் ஓடும்.
நாய்க் கடிக்குச் செருப்படி. 13975
நாய்க் கடிக்கு நாற்பது நாள் பத்தியம்.
நாய்க்கடி பட்டவன் நாற்பதாம் நாள் குரைத்தாற் போல.
நாய்க்கடி பட்டவனுக்கு நாட்டில் ஒரு மூலிகை இல்லாது போகாது.
நாய்க்கடி போதாதென்று செருப்படி பட்டானாம்.
நாய்க்கடி விஷம் நாற்பத்தெட்டு நாள். 13980
நாய்க்கருக்கு அவசரம்; நாலு மூன்று மாசப் பாடு.
நாய்க்கால் சிறு விரல் போல.
நாய்க் காவல் தாய்க்காவல் போல.
நாய்க்கு அழகு வாலும், வாய்க்கு அழகு பல்லும்.
நாய்க்கு இரும்புக் கடையில் அலுவல் என்ன? 13985
நாய்க்கு உண்டான நல்லறிவும் இல்லை; பேய்க்கு உண்டான பெரிய அறிவும் இல்லை.
நாய்க்கு உண்டோ நாளும் கிழமையும்?
நாய்க்கு உண்டோ மலப் பஞ்சம்? நாவிதனுக்கு உண்டோ மயிர்ப் பஞ்சம்?
நாய்க்கு உபசாரம் நாள் முழுக்கச் சொன்னாலும் வள்வள் என்பதை விடாது.
நாய்க்கு உள்ள அறிவு கூட இல்லையா? 13990
நாய்க்கு உள்ள நன்றி நல்லவர்க்கும் கிடையாது.
நாய்க்கு எங்கே அடிப்பட்டாலும் காலைத்தான் நொண்டும்.
நாய்க்கு எச்சில் இலை; பேய்க்கு வேப்பிலை.
நாய்க்கு எதற்கு நன்னாரிச் சர்பத்து?
நாய்க்கு எதிரே நாய் வராமல் இருந்தால் காசிக்குப் போய்த் திரும்புமாம். 13995
நாய்க்கு எலும்புத் துண்டம் போட்ட மாதிரி.
நாய்க்கு என்ன வேலை? கஞ்சியைக் கண்டால் குடிக்க வேண்டியது; கதுப்பைக் கண்டால் குரைக்க வேண்டியது.
நாய்க்கு ஏது சேமியா பாயசம்?
(பால் பாயசம்?)
நாய்க்குத் தெரியுமா ஒரு சந்திப் பானை?
நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க? 14025
நாய்க்குத் தெரியுமா தீவட்டி வெளிச்சம்?
நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?
நாய்க்குத் தெரியுமா தோல் தேங்காய்?
நாய்க்குத் தெரியுமா நல்லெண்ணெய்ப் பானை?
நாய்க்குத் தேனீக் கொட்டினால் சுற்றிச் சுற்றிக் குரைக்குமாம். 14030
நாய்க்குத் நக்கத் தெரியும்; முதலைக்கு முழுங்கத் தெரியும்.
நாய்க்கு நடை போட்டால் நாய்க்கு அழகா? நாயகனுக்கு அழகா?
நாய்க்கு நடவாத நடப்பு நடக்கும்.
நாய்க்கு நரகல் சர்க்கரை.
நாய்க்கு நரிக் குணம். 14035
நாய்க்கு நருள் வேண்டும்; பூனைக்கு இருள் வேண்டும்.
நாய்க்கு நல்ல காலம் என்றால் நான்கு எச்சில் இலை கிடைக்கும்.
நாய்க்கு நல்ல தனம்; பேய்க்குப் பெரிய தனம்.
நாய்க்கு நல்ல ருசி தெரியுமா?
நாய்க்கு நறு நெய் இணங்காது. 14040
(தகுமோ?)
நாய்க்கு நாக்கில் வேர்க்கும்; காக்கைக்கு மூக்கில் வேர்க்கும்.
நாய்க்கு நாக்கில் ஜலம் சொட்டுகிறது போல.
(கொட்டுகிறது.)
நாய்க்கு நாணயம் எதுக்கு?
நாய்க்கு நாய் பகை; கோழிக்குக் கோழி பகை; வைத்தியனுக்கு வைத்தியன் பகை, தாசிக்குத் தாசி பகை.
நாய்க்கு நாலு சலாம் போட்டாலும் நன்றி கெட்டவனுக்குச் சலாம் போடாதே. 14045
நாய்க்கு நாலு மாசம்; பூனைக்கு ஆறு மாசம்.
நாய்க்கு நாறல் கஞ்சி வார்த்தாலும் அது வீண் போகாது.
நாய்க்கு நோய் ஏது?
நாய்க்குப் பகை நாயேதான்.
நாய்க்குப் பட்டம் கட்டினால் நாயகன் பேரைச் சொல்லும். 14050
நாய்க்குப் பயந்து நரியிடம் ஒளிந்தாற் போல.
நாய்க்குப் பல் நாற்பத்திரண்டு.
நாய்க்குப் பிறந்த நாயே.
நாய்க்குப் பிறந்தவனை இப்போதுதான் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
நாய்க்குப் பின்னால் வால் வளைவு; ஆனைக்கு முன்னால் கை வளைவு. 14055
நாய்க்குப் புண் வந்தால் நக்கும்; கோழிக்குப் புண் வந்தால் கொத்தும்.
நாய்க்குப் பூர்வ ஜன்ம வாசனை வந்தது போல.
நாய்க்குப் பெயர் முத்துமாலை; அதற்கு ஆக்கிப் படைக்கிறது வரகந் தவிடு.
நாய்க்குப் பெரிய தனம் தந்தால் விநாடிக்கு ஒரு தரம் கடிக்காதா?
நாய்க்கும் ஈக்கும் தடை இல்லை. 14060
நாய்க்கும் உண்டு சூல் அழகு.
(சூல் அழகிடும்.)
நாய்க்கும் உதவாது; நளவனுக்கும் உதவாது.
நாய்க்கும் தன் வீடுதான் பெரிது.
நாய்க்கும் தெளியும் நாலாம் மாதம்.
நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் ஆனால் உனக்கு என்ன ஆச்சு? எனக்கு என்ன ஆச்சு? 14065
நாய்க்கும் நாகத்துக்கும் தலை உயிர் நிலை.
நாய்க்கும் நாய்க்குடைக்கும் என்ன சம்பந்தம்?
நாய்க்கும் பருத்திக் கடைக்கும் என்ன சம்பந்தம்?
நாய்க்கும் பேய்க்கும் உறவு இல்லை.
நாய்க்கும் பேய்க்கும் கோவில் பெயராம். 14070
நாய்க்கு மட்டையோடு தேங்காய் கிடைத்தது போல.
நாய்க்கு மீசை முளைத்தால் நாவிதனுக்கு என்ன வேலை?
நாய்க்கு முழுத் தேங்காய் கிடைத்தாற் போல
(முழுத் தேங்காய் தக்குமா? தகுமா?)
நாய்க்கு முறை இல்லை.
நாய்க்கு மூத்தாள் தாய்க்கும் ஈயாள். 14075
(மூத்தாள்.)
நாய்க்கு வால் போனால் என்ன? கழுதைக்குப் பல் போனால் என்ன?
நாய்க்கு வாழ்க்கைப் பட்டால் குரைக்க வேணும்; பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்தில் ஏற வேணும்.
நாய்க்கு வாழ்ந்து நாலு பிள்ளை பெற்றாலும் தாய்க்கு உதவி.
நாய்க்கு வெண்டயம் கட்டினால் நாயகனுக்கு அழகு.
(நாயகனுக்குப் பெருமை.)
நாய்க்கு வெண்டயம் போட்டது போல. 14080
நாய்க்கு வேர்வை நாக்கிலே சொட்டும்.
நாய்க்கு வேலை இல்லை; அதைப் போல் அலைச்சல் இல்லை.
நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை.
நாய்க் கூத்துக் கட்டினால் குரைக்க வேணும்.
நாய் கக்கித் தின்றது போல. 14085
நாய் கடித்ததற்கும் செருப்பால் அடித்ததற்கும் சரி.
(அடித்தாற் சரி,)
நாய் கடித்ததும் அல்லாமல் செருப்படியும் படவேண்டும்.
நாய் கடித்த வீட்டில் நீராகாரம் சாப்பாடு.
நாய் கடித்தால் கூட வைத்துக் கட்டக் காசு இல்லை.
நாய் கடித்தால் செருப்பால் அடிக்கலாமா? 14090
(அடி)
நாய் கத்தினால் நமனும் பயப்படுவான்.
நாய் கருப்புக் கட்டியைக் கடித்தாற் போல.
நாய்களிலுமா ஜாதி வித்தியாசம்?
நாய் காசிக்குப் போன மாதிரி.
நாய் காணிற் கற்காணாவாறு. 14095
(பழமொழி நானூறு.)
நாய் கிழடானாலும் மலம் தின்னும் புத்தி போகாது.
நாய் குட்டி போட்ட இடமும் நாரத்தை பட்ட இடமும் பாழ்.
நாய் குப்பை மேட்டிலே; பேய் புளிய மரத்திலே.
நாய் குரைக்கப் பேய் நடுங்கும்.
நாய் குரைத்துக் காது செவிடானது; நாய் கடித்து கால் ரணமானது. 14100
நாய் குரைத்துக் குட்டி தலையில் வைத்தது போல.
நாய் குரைத்து நத்தம் பாழாகுமா?
நாய் குரைத்து நந்தவனம் பாழாகாது.
நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?
நாய் கெட்ட கேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு சந்தி. 14105
(ஞாயிற்றுக் கிழமை விரதமாம்.)
நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப் பாலும் சோறுமா?
நாய் கெட்ட கேட்டுக்கு நடு வீட்டில் ஒரு சந்தியா?
நாய் கெட்ட கேட்டுக்குப் பூமரம் நிழலாம்.
நாய் கெட்ட கேட்டுக்கு மாமரத்து நிழல்; அது கெட்ட கேட்டுக்குப் புளி போட்ட கறி.
நாய் கெட்ட கேட்டுக்கு வெள்ளிக் கிழமை விரதமா? 14110
நாய் கெட்டால் குப்பையிலே.
நாய் கொடுத்ததாம் அரசு பதவி; சிங்கமும் அதை ஏற்றுக் கொண்டதாம்.
நாய் கொண்டு போன பானையை ஆர் கொண்டு போனால் என்ன?
நாய் கோவிலுக்குப் போவானேன்? கோவில் காத்தவன் தண்டம் இறுப்பானேன்?
நாய்ச் சகவாசம் சீலையைக் கிழிக்கும். 14115
நாய் சண்டை நாலே விநாடிதான்.
நாய் சத்திரத்திலே போனாலும் நக்குத் தண்ணீர்.
நாய் சந்தைக்குப் போகிற மாதிரி.
நாய் சந்தைக்குப் போச்சாம்; அங்கும் தராசுக் கோலால் அடிபட்டதாம்.
நாய் சந்தைக்குப் போய் மொந்தையடி வாங்கிற்றாம். 14120
நாய் சந்தைக்குப் போனதென்று நரியும் சந்தைக்குப் போனதாம்.
நாய் சாம்பலிற் சுருட்டினாற் போல.
நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா?
நாய் சிலிர்த்தால் நல்ல சகுனம்.
நாய் சொப்பனம் கண்டாற் போல. 14125
நாய்த் தூக்கம் போல.
நாய்த் தோல் செருப்பு ஆகுமா?
நாய்த் தோலில் கட்டி வரும் நல்லதொரு பெருங்காயம்.
நாய் தன் கடமையில் தவறியதென்று கழுதை ஆத்திரப் படுவானேன்?
நாய் தின்றதோ, நரி தின்றதோ, யார் கண்டார்கள்? 14130
நாய் துப்பட்டி வாங்கினாற் போல.
நாய் தொட்ட சட்டி நல்லதுக்கு உதவாது.
(சட்டிக்கு விமோசனம் ஏது?)
நாய் தொட்ட பாண்டம்.
நாய் நக்க நக்கக் கல் தேயும்.
நாய் நக்கிக் குளம் வற்றி விடுமா? 14135
நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா?
நாய் நக்கிப் பிழைக்கும்; காக்கை கத்திப் பிழைக்கும்.
நாய் நக்கிப் பிழைக்கும்; கோழி குத்திப் பிழைக்கும்.
நாய் நக்கிய கற்சட்டி.
நாய் நக்கிய சட்டியை நாய்க்கே போடு. 14140
நாய் நக்கினாற் போல.
நாய் நடு ரோட்டில் உறங்கும்; சேய் தாய் மடியில் உறங்கும்.
நாய் நம்மைக் கடித்தால் நாம் நாயைக் கடிக்கிறதா?
நாய் நல்லதானால் குணம் நல்லதாகுமா?
நாய் நல்ல வழி காட்டும்; பூனை பொட்டை வழி காட்டும். 14145
நாய் நன்றி மறவாது; பசு கன்றை மறவாது.
நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?
நாய் நுழையலாம்; நான் நுழையக் கூடாதாம்.
நாய் நொண்டி ஆனாலும் எச்சில் இலை கண்டால் ஓடத்தான் செய்யும்.
நாய்ப் பஞ்சம் நக்கித் தீரும்; கோழிப் பஞ்சம் கொத்தினால் போல. 14150
(கொத்தினால் தீரும்.)
நாய் நடு ரோட்டில் உறங்கும்; சேய் தாய் மடியில் உறங்கும்.
நாய்ப் பிட்டத்தில் தேள் கொட்டினால் நாய்தான் நக்க வேணும்.
நாய்ப் பிட்டத்தில் தேன் வைத்த மாதிரி.
நாய்ப் பிறவி.
நாய்ப் பீயை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவானேன்? 14155
நாய்ப் புண்ணுக்குச் சாம்பல் மருந்து.
நாய்ப் புத்தியைச் செருப்பால் அடி.
நாய் பகைத்தால் நாழி அரிசியோடே; பேய் பகைத்தால் ஒரு பிள்ளையோடே.
நாய் பட்ட பாடு தடிக் கம்புக்குத் தெரியும்.
நாய் பல்லைக் கெஞ்சுகிறாற் போல. 14160
நாய் பிடிக்க மனிதன் குரைத்தானாம்.
நாய் பிடுங்கினாற் போல.
நாய் பின்னோடே நாலைந்து குட்டிகள்; பீப்பன்றிகள் பின்னோடே பத்தெட்டுக் குட்டிகள்.
நாய் பூபாளம் பாடுகிறது.
நாய் பெற்ற தெங்கம் பழம். 14165
நாய் பொல்லாதது ஆகுமா? நல்ல பசு மாடு ஆகுமா?
நாய் போல அலைகிறான்.
நாய் போல் அலைந்தாலும் நாலு காசு கிடைக்கும்.
நாய் போல் உழைத்தாலும் வாய்ச் சோறு இல்லை.
நாய் போல் ஏன் எறிந்து விழுகிறாய்? 14170
(எரிந்து.)
நாய் போல் குரைத்து நடுத் தெருவில் நிற்பானேன்?
நாய் மடி சுரந்தால் என்ன? சுரக்காமற் போனால் என்ன?
நாய் மலையைப் பார்த்துக் குரைத்ததாம்; பேய் மரத்தைப் பிடித்துக் குலுக்கிற்றாம்.
நாய் மனிதனைக் கடித்தால் அதற்காக மனிதன் நாயைக் கடிப்பதா?
நாய் மாதிரி இளைப்பு வாங்குகிறது. 14175
நாய் மாதிரி காத்துக் கிடந்தேன்.
நாய் மாதிரி சுருட்டிக் கொண்டு படுத்துக் கிட.
நாய் மாதிரி விழுவான்; நரி மாதிரி குழைவான்.
நாய் முகத்திலே மீசை முளைத்தால் அம்பட்டனுக்கு என்ன லாபம்?
நாய் முழுத் தேங்காயை உருட்டுகிற மாதிரி. 14180
நாய் முன் தின்னாதே; கொதி வந்து விடும்.
நாய் மூத்திரம் குத்துக் கல்லில்.
நாய் மேல் ஏறி வையாளி விட்டால் என்ன? வீழ்ந்தால் என்ன?
நாய் மேல் ஏறி வையாளி விட்டாற் போல.
நாய் மோப்பம் பிடிக்கிற மாதிரி. 14185
நாய் ராஜ்யத்தில் காதல் ஏது? கல்யாணம் ஏது?
நாய் ராஜாவுக்கு எச்சில் இலை கப்பம்.
நாய் வந்தால் நாழி எண்ணெய்க்குக் கேடு; பேய் வந்தால் ஒரு பிள்ளைக்குக் கேடு.
நாய் வயிற்றில் நரி பிறக்குமா?
நாய் வயிற்றில் நாலு; பன்றி வயிற்றில் பத்துப் பிறந்தது போல. 14190
நாய் வயிற்றைப் போல்.
நாய் வளர்த்தால் நல்வழி காட்டும்.
நாய் வாசலைக் காத்து என்ன? கையில் இல்லாதவன் பணக்காரனைக் காத்து என்ன?
நாய் வாய்ச் சீலை போல.
நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா? 14195
நாய் வாய் வைத்தது போல.
(+ வேலையைச் செய்கிறது.)
நாய் வாயில் அகப்பட்ட முயல் போல.
நாய் வாயில் கோல் இட்டால் லொள் லொள் என்றுதானே குரைக்கும்?
நாய் வாயில் கோல் இடலாமா?
(கொடுத்தது போல, விட்டது போல.)
நாய் வாயில் நெய் சொட்டுகிறது என்றால் கேட்பவருக்கு மதி இல்லையா? 14200
நாய் வாயிலும் நாலு சோறு.
நாய் வாயை வைத்தது போல் வேலை செய்கிறது.
நாய் வால் அசைந்தாலும் பிடுங்க வராது.
நாய் வாலிலே தேன் வைத்தால் ஆருக்குக் கூடும்?
நாய் வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாற் போல. 14205
(புளிச்சையை வைத்து.)</small
நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?
(+ பொல்லாக் குணத்துக்கு நல்ல மருந்து உண்டா?)
நாய் வாலைக் குறை நீக்கலாமா?
நாய் வாலைக் கொண்டு சமுத்திரத்தை அடைக்கலாமா?
நாய் வாலை நறுக்க நாவிதன் வேண்டுமா?
நாய் வாலை நிமிர்த்தப் பேயால் ஆகுமா? 14210
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது; பேய்க் காலைப் பார்க்கவும் முடியாது.
நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா?
(வாலை நம்பி ஆற்றைக் கடக்கலாமா? ஆற்றில் நீந்தலாமா?)
நாய் வாலைப் பிடித்துக் கொண்டு காவிரியைக் கடக்க முடியுமா?
நாய் வாழ்ந்தால் என்ன? உறி அறுந்தால் என்ன? 14215
நாய் வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன?
நாய் விற்ற காசு குரைக்குமா? மீன் விற்ற காசு நாறுமா?
(+ நாரத் தேங்காய் விற்ற காசு கசக்குமா? வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?)
நாய் விற்ற துட்டைக் குரைத்தா காண்பிக்கிறது?
நாய் வீட்டைக் காக்கும்; புலி காட்டைக் காக்கும்.
நாய் வீட்டைக் காக்கும்; பூதம் பணத்தைக் காக்கும். 14220
நாய் வீட்டைக் காக்கும்; பூனை அடுப்படியைக் காக்கும்.
நாய் வீட்டைக் காக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
நாய் வீட்டைச் சுற்றும்; நோய் உடலைச் சுற்றும்.
நாய் வேட்டை ஆடும்; குதிரை ஓட்டம் ஓடும்.
நாய் வேண்டும் என்றால் நரியைக் கொண்டு வருகிறான். 14225
நாய் வேதம் படித்தது போல.
நாய் வேஷம் போட்டால் குரைக்க வேண்டும்; பேய் வேஷம் போட்டால் ஆடவேண்டும்.
நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும்.
நாயகன் பட்சம் ஆயிரம் லட்சம்.
நாயம் கேட்டுக் கொண்டா காயம் உரைக்கிறார்கள்; அம்மியைக் கேட்டுக் கொண்டா மிளகாய் அரைக்கிறார்கள்? 14230
நாயன் இல்லாத நங்கை இருந்தென்ன போயென்ன?
நாயாகக் கத்திப் பேயாகப் பறந்தாலும் முடியாது.
நாயா சிங்கத்துக்கு நற்பட்டம் கட்டுகிறது?
நாயாடி மக்களோடு போய் ஆட வேண்டாம்.
நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும். 14235
நாயால் ஆகுமா கொக்குப் பிடிக்க?
நாயிடம் தேன் இருக்கிறது; நக்கவா, துக்கவா, எதுக்கு ஆகும்?
நாயின் அவசரம் வாலுக்குத்தான் தெரியும்.
நாயின் கழுத்தில் நவரத்தினம் கட்டினாலும் நாய்க்குத் தெரியுமா அதன் மகிமை?
நாயின் காதில் தேன் அடை வைத்தது போல. 14240
நாயின் கோபத்தைப் பற்றிப் பூனையைக் கேட்டால் தெரியும்.
நாயின் நிழல் போல வாழ் நாள், கடிகம் பால் கழிவது போல.
நாயின் பின்னோடு நாலைந்து; பன்றியின் பின்னோடு பத்தெட்டு.
நாயின் புண்ணை நாய் கக்கும்.
நாயின் மலத்தை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவானேன்? 14245
நாயின் முதுகில் அம்பாரியைக் கட்டினது போல.
நாயின்மேல் ஏறி வையாளி விட்டால் என்ன? விழுந்தால் என்ன?
நாயின் வாயில் கோலைக் கொடுக்கிறதா?
நாயின் வாயில் சிக்கிய எலியைப் போல.
நாயின் வாலைக் குணக்கு எடுக்கலாமா? 14250
நாயின் வாலைப் பன்னீராண்டு குழலில் இட்டாலும் எடுக்கும்போது வளைந்துதானே இருக்கும்?
நாயின் விசுவாசம் பூனைக்கு வருமா?
நாயின் வீரம் தன் வீட்டு வரையில்தான்.
நாயினும் கடையேன்.
நாயும் எறும்பும் போல. 14255
நாயும் கரிச் சட்டியும் போல.
(களிச் சட்டியும்.)
நாயும் காகமும் போலச் சண்டை போடாதே.
நாயும் சரி, நாவியும் சரி உனக்கு.
நாயும் தன் நிலத்துக்கு ராஜா.
நாயும் தீண்டாத உணவு; புலையனும் தீண்டாத யாக்கை. 14260
நாயும் நரியும் ஊளையிட.
நாயும் நரியும் ஒன்றாகுமா?
( நன்றாகுமா?)
நாயும் நரியும் போல.
நாயும் நாயும் போல.
நாயும் பசுப்பட்டு மோரும் விலை போகிறபோது பார்க்கலாம்.{{float_right|14265} }
நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.
(பாரதியார்.)
நாயும் பூனையும் அடித்துக் கொண்டது போல.
நாயும் பூனையும் போல.
நாயும் பேயும் பிள்ளை ஆகுமா?
நாயும் வர உறியும் அறுந்தவன் சீலம். 14270
நாயும் வயிறு வளர்க்கும் நடு ஜாமத்திலே.
நாயும் வளர்த்து நரகலையும் வாருவானேன்?
நாயே நல்லப்பா, பேயே பெரியப்பா.
நாயே பேயே, நங்கண்ண, செங்கண்ண, தாயார் வளர்த்த தறிதலையே, பாட்டுக்கும் உனக்கும் எவ்வளவு தூரம்?
நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமா? 14275
நாயை அடக்க நாலு பேர்; நாவை அடக்க நாலாயிரம்.
நாயை அடிக்கக் குறுந்தடி வேண்டுமா?
நாயை அடிக்காதே; நாய் முள்ளைச் சுமக்காதே.
நாயை அடித்த பாவம் குரைத்தால் போகுமா?
நாயை அடித்தால் காலைத் தூக்கும். 14280
நாயை அடித்தாலும் நாலு காசு கிடைக்குமா?
நாயை அடித்துப் பல்லியைப் பார்ப்பானேன்?
நாயை அடித்துப் போட்டது போல.
நாயை அடிப்பதற்கு நல்ல தடி வேண்டுமா?
நாயை அடிப்பானேன்? காலைக் கடிப்பானேன்? 14285
நாயை அடிப்பானேன்? காலைப் பிடிப்பானேன்?
நாயை அடிப்பானேன்? பல் இழிவு பார்ப்பானேன்?
நாயை அடிப்பானேன்? நடு வீடெல்லாம் கழிவானேன்?
நாயை அடிப்பானேன்? மலத்தைச் சுமப்பானேன்?
நாயை உசுப்பச் செய்து நரி உள்ளே நுழைந்து கொண்டது. 14290
நாயை எங்கே அடித்தாலும் காலில்தான் நோக்காடு.
நாயை ஏய்க்குமாம் நரி, அதையும் ஏய்க்குமாம் ஒற்றைக் கால் நண்டு.
நாயை ஏவினால் அது தன் வாலை ஏவுமாம்.
(ஏவுகிறது.)
நாயை ஓட்டிப் பேயைக் கூட்டி வந்தானாம்.
நாயை ஓட்டிவிட்டு நடுக் குப்பையில் உட்காரவா வேண்டும்? 14295
நாயைக் கட்டிக் கொண்டு அழுவது போல.
நாயைக் கட்டி மாரடித்து நல்ல மனிதனும் நாயாய்ப் போனான்.
நாயைக் கண்டா காயம் கரைக்கிறது?
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
நாயைக் கண்டால் நகர்ந்து போ. 14300
நாயைக் கண்டால் நரிக்கு லட்டுண்டை மாதிரி.
நாயைக் கண்டால் பேயும் விலகும்.
நாயைக் கண்டால் மனிதனுக்குப் பயம்; மனிதனைக் கண்டால் நாய்க்கும் பயம்.
நாயைக் கண்டு காயம் கரைக்கிறதா?
(கண்டுதானா கரைக்கிறது?)
நாயைக் கண்டு பயந்த முயல் போல. 14305
நாயைக் கிளப்பிவிட்டு முயலைப் பிடிப்பது போல.
நாயைக் குளிப்பாட்டி நட்டுள்ளே வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு மலம் தின்னப் போகும்.
நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு வாசலில்தான் படுக்கும்.
நாயைக் குளிப்பாட்டிப் பல்லக்கில் ஏற்றினாலும் எலும்பைக் கண்டால் வள்ளென்று தாவும்.
நாயைக் கூப்பிடுகிற நேரத்தில் மலத்தையும் எடுத்துச் சாணத்தையும் பூசிவிடலாம். 14310
நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.
(மூஞ்சியை.)
நாயைக் கொண்டு போனால் மிளாவைக் கொண்டு வரலாம்.
நாயைக் கொழுக்கட்டையால் எறிந்தது போல.
நாயைக் கொன்ற பாவம் நாலு ஜன்மம் எடுத்தாலும் போகாது.
நாயைச் சீ என்றால் காத வழி போகும். 14315
நாயை நல்லம்மா என்றும், பேயைப் பெத்தப்பா என்றும் பேச வேண்டிய காலம்.
நாயைப் பற்றிக் கேட்பாரும் இல்லை; நடு வீட்டில் வைப்பாரும் இல்லை.
நாயைப் பார்க்க நரி தேவலை; ஊரைப் பார்த்து ஊளை இட.
(இடுகிறது.)
நாயைப் பிடித்துக் கட்டிப் பிச்சை போட்டாற் போல.
நாயைப் பிடித்து நரிக்குக் கல்யாணம் செய்து வைத்தது போல. 14320
நாயைப் பூஜித்தாலும் அதனிடம் புனுகு உண்டாகுமா?
நாயைப் போல் அலைந்தாலும் நாலு காசுக்கு வழி இல்லை.
நாயைப் போல் குழைகிறான்.
நாயைப் போல் நாக்கு நாலு முழம்.
நாயைப் போல் நான்கு யுகம் வாழ்ந்து என்ன? 14325
நாயைப் போல் பல்லை இளிக்காதே.
நாயைப் போல் பாடுபட்டால் ஆனையைப் போல் அரசாளலாம்.
நாயையும் சூக் காட்டி முயலையும் எழுப்பி விடுவது போல.
நாயையே திருடன் அடித்துக் கொண்டு போனால் யார் ஐயா குரைப்பது?
நாயை வளர்த்தால் நல்ல வழி காட்டும்; பூனையை வளர்த்தால் பொட்டை வழி காட்டும். 14330
நாயை விரட்டிவிட்டு நடுவழியில் படு.
நாயை வெட்டிச் சூக் காட்டினாலும் அது தன் வாலை ஆட்டும்.
நாயை வைத்துக் கொண்டு தானே குரைத்தாற் போல்.
நாயோடு சேர்ந்தாலும் நல்ல முயல் கிடைக்கும்.
நாயோடு படுப்பானேன்? தெள்ளுப் பூச்சியோடு எழுந்திருப்பானேன்? 14335
நார் அற்றால் கூடும்; நரம்பு அற்றால் கூடுமா?
நார் அறுந்தால் முடியலாம்; நரம்பு அறுந்தால் முடியலாம்; மனம் அறுந்தால் முடியலாகாது.
நார் இல்லாமல் மாலை தொடுக்கலாமா?
நாரசிங்கமும் இரணியனும் போல.
நாரத்தங்காய்க்கு இட்ட உப்பும் நாத்தனாருக்கு இட்ட சாதமும் எவ்வளவானாலும் போதா. 14340
நாரத்தங்காய்க்குப் போடுகிற உப்பும் நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண் போகா.
(நாட்டுப் பெண்ணுக்கு.)
நாரத்தங்காய் விற்ற காசு கசக்குமா?
நாரத்தை காய்க்க நாய்ப்பலி இட வேண்டுமாம்.
நாரதா, கலகப்ரியா.
நாராசம் காய்ச்சி நடுச் செவியில் விட்டாற் போல். 14345
(பார்த்தாற் போல.)
நாராயணன் ஒருவன்தான்; இரண்டாமவன் ஒருவனும் இல்லை.
நாராயணன் குடுமியை நாராலே பின்னிக் கோபாலன் குடுமியைக் கோரையாலே பின்னி.
நாராயணன் கோவிலுக்கு நாலு வாசல்.
நாரும் பூவும் போல.
நாரை அறியாத குளமும் நமன் அறியாத உயிரும் உண்டோ? 14350
நாரையைப் பார்க்க நரியே தேவலாம், ஊரைப் பார்த்து ஊ ளை இட.
நால்வர் கூடினால் தேவர் சபை.
(தேவர் வாக்கு.)
நால்வர் வாக்குத் தேவர் வாக்கு.
(வேதவாக்கு.)
நால்வரோ தேவரோ?
நாலடி இரண்டடி கற்றவனிடம் வாயடி கையடி அடிக்காதே. 14355
(நாலடி-நாலடியார், இரண்டடி-குறள்.)
நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.
நாலாம் பாதம் நாழி பிடித்து உட்காரும்; எட்டாம் மாதம் எடுத்து அடி வைக்க வேணும்.
(குழந்தை.)
நாலாம் பிறை பார்த்தால் நாய் அலைச்சலாய்த்தான் முடியும்.
நாலாம் பேற்றுப் பெண் நாதாங்கியை விற்று உண்ணும்.
நாலாவது பெண், நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை. 14360
(பெண் பிறந்தால் நாதாங்கியும் கிடையாது.)
நாலு அடி அடித்துப் போர்மேல் போட்டாயிற்று.
நாலு ஆறு கூடினால் பாலாறு.
(நாலாறு-கெளண்டின்ய ஆறு, அகஹரம் பெண்ணையாறு; செய்யாறு, கிளியாறு.)
நாலு கரண்டி நல்லெண்ணெய்; நாற்பத்தாறு தீவட்டி; வாரார் ஐயா சுப்பையா; வழிவிடடி மீனாட்சி.
நாலு காரை கூடினால் ஒரு பழுதை.
நாலு கால் சோமாரியும் ஒரு காலிலே இறங்கினாற் போல. 14365
(இரண்டு காலிலே.)
நாலு காலிலே நரி கள்ளன்; இரண்டு காலிலே இடையன் கள்ளன்.
நாலு செத்தை கூடினது, ஒரு கத்தை.
நாலு தடவை தப்பினவனுக்கு நமன் பயம் ஏது?
நாலு தலைமுறைக்கு முன் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.
நாலு பறையனடி, நானூறு பள்ளனடி; ஆள் இல்லாப் பாவமல்லோ ஆளேற்றம் கொள்கிறான்? 14370
(-நானூறு பள்ளிகளின் ஓலம்.)
நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு; ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு.
நாலு பிள்ளையும் நல்ல பிள்ளையானால் மேலும் பிள்ளை பெறுவானேன்?
நாலு பேர் கூடினது சபை.
நாலு பேர் போன வழி.
(இரு பொருள்.)
நாலு பேர் போன வழியில் நாமும் போக வேண்டும். 14375
நாலு பேர் வாக்குத் தெய்வ வாக்கு.
நாலு பேர் வாழ நடுவிலே நாம் வாழ.
நாலு பேருக்குச் சொல்லி மனசிலே போட்டு வைக்கிறவன்.
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி; ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
நாலும் கிடக்க நடுவிலே நாத்தனார் தலையைச் சிரைத்தாளாம். 14380
நாலு மாதம் வரையில் நாய்கூடப் பிள்ளையை வளர்க்கும்.
நாலு முழத்தில் நடுவில் ஒரு முழம்.
நாலு வீட்டில் கல்யாணம்; நாய்க்கு நாய் தொங்கோட்டம்.
நாலு வீட்டில் நக்கிக் குடிக்கிற நாய்க்கு ஏன் இந்த வாய்?
நாலு வீட்டுச் செல்ல நாய் நடுத் தெருவில் அலைகிறது. 14385
நாலு வீடு ஆடுது; ஒரு வீடு ஆடுது.
நாலு வேதமும் தெரியும்; ஆறு சாஸ்திரமும் தெரியும்; வாய் மட்டும் ஊமை.
நாவல் பழுத்தால் நாடு செழிக்கும்.
நாவலும் பாவலும் ரத்த புஷ்டிக்கு.
நாவாய் கவிழ்த்த நாய்கன் போல. 14390
நாவிதன் செய்தி அறிந்து குடுமியைப் பத்திரப் படுத்தினானாம்.
நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.
நாவு அசைய நாடு அசையும்.
நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.
நாவுக்கு எலும்பு இல்லை; எப்படிப் புரண்டாலும் புரளும். 14395
நாவை அடக்கி ஆளாவிட்டால் அது தன்னையே ஆளும்.
நாவைச் சுற்றிப் பிடிக்கிற தாரத்துக்கு நாள் கேட்டானாம் கிணறு வெட்ட.
(நாள் பார்த்தானாம்.)
நாழி அரிசிச் சாதம் சாப்பிட்டாலும் நாய் நாலு வீட்டில் நக்கித் தான் தின்னும்.
நாழி அரிசி சோறு உண்டவன் நமனுக்கு உயிர் கொடான்.
நாழி அரிசிச் சோறு தின்றாலும் நாய்க்குக் குடல் நிறையாது. 14400
நாழி அரிசி நாய் கொண்டு போனால் ஞானமும் கல்வியும் பேய் கொண்டு போகும்.
நாழி உடைந்தால் நெல்லுக்குச் சேதமா?
நாழி உப்பும் நாழி அப்பும் நாழி ஆன வாறு போல.
(சிவ வாக்கியர்.)
நாழி உள்ளார்க்கு நானாழி கடனோ?
(கடன் நொய்.)
நாழி நெல்லுக்கு ஓர் அந்து. 14405
நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய் நிர்வாணந்தான்.
(நாய்ப் பிட்டம் அம்மணம்.)
நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.
நாழிப் பால் வார்த்தாலும் நடுச் சொல்வர் அறிவுடையோர்.
நாழி மாவுக்கு நானாழி வெள்ளம்.
(வெல்லம்.)
நாழி முகவாது நானாழி. 14410
(நல்வழி.)
நாழியாய சமுத்திரத்தில் நானாழி மொள்ளலாமா?
நாழியை மூளி என்றால் மரக்காலைப் பொட்டை என்பது போல்.
நாழிவர மூதேவி; மரக்கால் வரச் சீதேவி.
(நாழிவரச் சீதேவி...மூதேவி.)
நாள் ஆற்றுகிறது நல்லார் ஆற்றார்.
நான் ஏர் உழும் போதே வரப்பிலே ஏற்றினாளாம். 14415
நான் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமும்
நான் ஏறினால் கீழ் ஏறும்.
நாள் செய்வது நல்லுற்றார் செய்யார்.
(நல்லோர்.)
நாள் சென்ற கொடை நடைக்கூலி ஆகும்.
நான் சென்ற கொடை நடைக் கூலியும் ஆகாது. 14420
நாள் வருமட்டும் நாராய்த் தோலாய் இழுத்துக் கொண்டிருக்கும்.
நாளுக்கு நாள் நகர்ந்தது சாண் அம்மானை.
நாளுக்கு நான் நரியாய்ப் போகிறது.
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை.
(நாளும் கோளும், வெற்றிவேற்கை)
நாளும் கோளும் நன்மை செய்யும். 14425
நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்.
(ஏமாற்றுவதற்கு.)
நாளை என்பது நமன் நாள் ஆகும்.
நாளை என்பதைவிட இல்லை என்பவர் நல்லவர்.
நாளைக்குக் கல்யாணம்; பிடியடி பாக்கு வெற்றிலையை.
நாளைக்குத் தாலி கட்டுகிறேன்; கழுத்தே சுகமாய் இரு. 14430
நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிறகளாப் பழம் நல்லது.
நாளைக்குத் தெரியும் நாச்சியாத்தாள் மாரடி.
(நாளைத் தெரியும்.)
நாளைக்கும் சீர் நடக்கத்தான் போகிறது; இன்றைக்கும் சீர் இருக்கத்தான் போகிறது.
நாளைக் குறைத்தால் தன்னைக் குறைக்கும்.
நாளை மடக்கினால் நம்மை மடக்கும். 14435
நாளை வரும் நெற்குவியலிலும் இன்று உள்ள படி விதை பெரிதென்று விழுங்கலாமா?
நாளை வரும் பலாக்காயை விட இன்று வரும் களாக்காய் நல்லது.
(தின்கிற பழத்தைவிட)
நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.
நாற்பதுக்குமேல் சென்றால் நாய்க் குணம்.
(நாய்க்குச் சரி.)
நாற்பதுக்குமேல் நாய்க்குணம்; அம்பதுக்கு ஆட்டம்; அறுபதுக்கு ஓட்டம். 14440
நாற்பது வந்தால் நரை வரும்.
நாற்றக் கூழுக்கு அழுகல் மாங்காய்.
நாற்று முப்பது சாற்று முப்பது.
நாறல் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.
நாறல் சாணியை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவு வானேன்? 14445
(நாறல் மலத்தை.)
நாறல் சோற்றுக்குப் பதம் பார்க்கிறது ஏன்?
நாறல் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம்.
நாறல் மலத்தை மிதிக்கவும் வேண்டாம்; நல்ல தண்ணீர் விட்டுக் கழுவவும் வேண்டாம்.
நாறல் மீனைப் பூனை பார்த்தாற் போலே.
நாறல் வாயன் சேர்த்து வைக்கக் கர்ப்பூர வாயான் அநுவிக்கிறான். 14450
(தேடியதை அழிக்கிறான்.)
நாறல் வாயன் சேர்த்து வைத்தான்; சர்க்கரை வாயன் செலவு செய்தான்.
நாறல் வாயன் தேட ஊத்தை வாயன் உண்டானாம்.
நாறல் வாயன் தேடினதை நல்ல வாயன் தின்றாற்போல்.
நாறல் வாயன் தேடினான்; கர்ப்பூர வாயன் அழித்தான்.
நாறல் வாயனிடத்தில் இருந்தாலும் நச்சு வாயனிடத்தில் இராதே. 14455
நாறலையும் மீறலையும் கண்டால் நாத்தனாருக்குக் கொடுப்பாள்.
நான் ஆம் ஆம் என்றால் ஹரி ஹரி என்கிறான்.
நான் இட்ட மருந்தும் போக ஒட்டாது; நன்னாரி வேரும் சாக ஒட்டாது.
நான் இருக்கு மட்டும் ஊர் இருக்கும்.
நான் உங்கள் கடனைத் தீர்க்கிறவரைக்கும் நான் சாப்பிடுகிற சாப்பாடு சாப்பாடு அல்ல; மலம். 14460
நான் என்றால் இளக்காரம்; என் மலம் என்றால் பலகாரம்.
(என் சொத்து.)
நான் என்றால் உனக்குக் கடை வாயில் மலம்.
நான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது.
நான் ஒன்றை எண்ண, விதி ஒன்றை எண்ணிற்று.
நான் கண்டதே காட்சி; நான் கொண்டதே கோலம். 14465
(கொள்கை.)
நான் கண்ணாரக் கண்டேன், நாராயணக் குழம்பு வேண்டாம்.
நான் கத்தை கொடுத்தேன்; அவன் மெத்தை கொடுத்தான்.
நான்காம் மாதம் நாய்க்கும் மெருகிடும்.
நான் காய்ச்சிக் குடிக்கிறேன்: நீ பீய்ச்சிக் குடி.
நான் கிடக்கிறேன் வீட்டிலே; என் பேச்சுக் கிடக்கிறது நாட்டிலே. 14470
நான் கெட்டாலும் எதிரி வாழ வேண்டும்.
நான் கொக்கோ? கொங்கு நாட்டானே.
நான் சாப்பிட்டது சாப்பாடு அல்ல; மலம்.
நான் செத்த நாளும் இல்லை; நீ அழுத நாளும் இல்லை.
நான் செத்து ஏழு பிறப்புப் பிறந்தாலும் அவன் செய்த நன்கொடையை மறக்க மாட்டேன். 14475
(நன்றியை.)
நான் செய்கிறதற்கு நீதான் ஆர்?
நான் செருப்பு விடுகிற இடத்தில்கூட அவன் நிற்க யோக்கியன் அல்ல.
நான் தேடிப் பிச்சை போட, நாரிகள் எல்லாம் வந்தார்கள் தெய்வம் ஆட.
நான் நட்டேன்; நாதன் பயிர் ஆக்கினான்.
நான் நீட்டின விரலை மடக்க மாட்டேன்; நீட்டி நீட்டிப் பேசுவேன். 14480
நான் நோகாமல் அடிக்கிறேன்; நீ ஓயாமல் அழு.
நான் நோகாமல் அடித்தேன்; நீ ஓயாமல் அழுதாய்; அவன் போகாமல் வந்தான்.
நான் பட்ட பாடு நாய்கூடப் படாது.
நான் படும் பாடு பஞ்சுதான் படுமோ?
(அருட்பா.)
நான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்கிறதா? 14485
நான் பெண் பிறந்து தெருவிலே நிற்கிறேன்.
நான் பெற்றால் என்ன? என் அண்ணன் பெற்றால் என்ன?
நான் போனால் சண்டை வரும்; எங்கள் அக்காள் போனால் மயிரைப் பிடித்து இழுத்து வருவாள்.
நான் போனால் மோட்சம் போகலாம்.
(நான்-அகங்காரம்.)
நான் வந்தேன் நாற்றமும் போச்சு. 14490
நான் வருகிறேன் பெண்ணுக்கு இருக்க; என் அம்மாள் வருகிறாள் பிள்ளையை எடுக்க.
(பெண்ணைக் காத்திருக்க.)
நான் வாழ்ந்த வாழ்வைக் சொல்லுகிறேன்; அண்டை வீட்டுக்காரன் இருக்கிறானா? பார்.
நான்று கொண்டு சாகச் சாண் கயிறு பஞ்சமா?
நானிலந் தன்னில் நாயகம் கல்வி.
நானும் அறியேன், அவளும் பொய் சொல்லாள். 14495
(கம்பர் கூற்று.)
நானும் ஓட்டை; என் நடு வீடும் பொத்தல்.
நானும் நரைத்து நரை மண்டை ஆனேன்; காடு கடக்கக் கண்டது புதுமை.
நானும் பிழைத்தேன்; என் கந்தலும் பிழைத்தது என்றானாம்.
நானும் பூசாரி; எனக்கும் சுவாமி ஆட்டம் உண்டு.
நானும் வந்தேன், மாமியார் வீட்டு நாற்றமும் போயிற்று. 14500
நானோ நானல்லவோ என்று திரிகிறான்.
(அகம்பாவம்.)
நி
நிச்சயம் இல்லாத வாழ்வு; நிலை இல்லாத காயம்.
நிசங்கனுக்குக் கோட்டை முற்றுகை கண்டது உண்டா?
நிசம் ஒன்று பல தீங்கு நீக்கும்.
நிசம் நிச போகம்; வியாசம் வியாச போகம். 14505
நித்தம் என்றால் முத்தமும் சலிக்கும்.
(முற்றமும்.)
நித்தம் சாவார்க்கு அழுவார் உண்டா?
நித்தம் நடந்தால் முற்றமும் சலிக்கும்.
(நித்தம் போனால்.)
நித்திய கண்டம் பூர்ணாயுசு.
நித்திய கல்யாணம்; பச்சைத் தோரணம். 14510
நித்திய தரித்திரத் தகப்பனாரை நின்ற நிலையில் வரச் சொன்னாள்.
நித்திய தரித்திரனுக்கு ஆசை அதிகம்.
நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு?
நித்திரைக்கு நேரிழை சத்துரு.
(நித்திரை சத்துரு, நேரிழை சத்துரு.)
நித்திரை சுகம் அறியாது; பசி ருசி அறியாது. 14515
நித்திரையிலும் தண்ணீர்ப்பால் குடிக்கிறது இல்லை.
நிதம் கண்ட கோழி நிறம் கொடுக்கும்.
(நிறம் கெடும்.)
நிதானியே நேராணி.
நிதி அற்றவன் பதி அற்றவன்.
நிந்தனை சொல்லேல். 14520
(+ நீதியைக் கடைப்பிடி.)
நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன்; பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் மகன்.
நிமிர்ந்தால் வானம்; குனிந்தால் பூமி.
நிமிர்ந்து போட்டது என்ன? குனிந்து எடுத்தது என்ன?
நிமிஷ நேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம்.
நிமிஷ நேரம் நீடிய இன்பம். 14525
நிமைப் பொழுதேனும் நில்லாது நீச உடல்.
நியாய சபைத் தீர்ப்பு, சேற்றில் நாட்டிய கம்பம் போல; மதில்மேற் பூனை போல.
நிர்வாண தேசத்தில் சீலை கட்டினவள் பைத்தியக்காரி.
நிர்வாண தேசத்தில் நீர்ச் சீலை கட்டினவன் பைத்தியக்காரன்.
(நிர்வாணப் பட்டணத்தில்.)
நிரக்ஷர குக்ஷி. 14530
நிருபன் ஆன போதே கருவம் மெத்த உண்டு.
நில்லாத காலடி நெடுந்தூரம் போகும்.
நில்லாது ஏதும்; நிலையே கல்வி.
நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் அழிய வேண்டும்.
(மடிய வேண்டும்.)
நிலத்து அளவே பயிர்; குலத்து அளவே குணம். 14535
நிலத்துக்கு ஏற்ற நீரும் குலத்துக்கு ஏற்ற சீரும்.
நிலத்துக்கு ஏற்ற விதை; குலத்துக்கு ஏற்ற பெண்.
நிலத்துக்குத் தகுந்த களியும் குலத்துக்குத் தகுந்த குணமும்.
(சனியும்.)
நிலத்தைப் பொறுத்து எரு விடு.
நிலம் ஓய்ந்து வாழ்க்கைப்பட முடியுமா? 14540
நிலம் கடக்கப் பாயலாமா?
நிலம் பொட்டல் அல்ல; தலைதான் பொட்டல்.
நிலவுக்கு ஒளித்துப் பரதேசம் போனதுபோல.
(அஞ்சி போகலாமா?)
நிலாக் காய்கிற இடமும் தெரியாது; நெல் விளைகிற பூமியும் தெரியாது.
நிலாப் புறப்பட எழுந்தானாம்; நெல்குழி வரைக்கும் நகர்ந்தானாம். 14545
நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.
நிலை குலைந்தால் சீர் குலையும்.
நிலைமை தப்பியவனுக்கு நீதி.
நிலையாமை ஒன்றே நிலையானது.
நிலையிற் பிரியேல். 14550
நிலைவிட்டால் நீச்சல்.
நிழல் அருமை வெயிலில் தெரியும்.
நிழல் கடக்கப் பாயலாமா?
நிழல் நல்லது; முசிறு ஒட்டாது.
(கெட்டது பொல்லாதது.)
நிழலின் பெருமை வெயிலில் போனால் தெரியும். 14555
நிழலுக்கு இடம் கொடுத்தாலும் நீருக்கு இடம் கொடாதே.
நிழலுக்கும் கனவுக்கும் ஒத்தது ஆக்கை.
நிற்க நிழல் இல்லை; சாயச் சுவர் இல்லை.
(உட்காரச் சுவர் இல்லை.)
நிற்க ஜீவன் இல்லாமல் போனாலும் பேர் நிரப்புக் கட்சி.
நிறம் சுட்டாற் போம்; குணம் கொன்றாற் போம். 14560
நிறை குடத்தில் பிறந்து நிறை குடத்தில் புகுந்தவன்.
நிறைகுடம் தளும்பாது.
நிறைகுடம் நிற்கும்; குறை குடம் கூத்தாடும்.
நிறைகுடம் நீர் தளும்பல் இல்.
(பழமொழி நானூறு.)
நிறைந்த ஆற்றிலே பெருங்காயம் கரைத்தது போல. 14565
நிறைந்த சால் நீர் கொள்ளுமா?
நிறை பொதியிலே கழுதை வாய். வைத்தாற் போல்.
நிறையக் குளித்தால் கூதல் இல்லை.
நிறையக் குறுணி வேண்டாம்; தலை தடவிக் குறுணி கொடு.
நிறையக் கேள்; குறையப் பேசு. 14570
நிறைய முழுகினால் குளிர் இல்லை.
நின்ற இடத்தில் நெடுநேரம் போனால் நின்ற மரமே நெடு மரம்.
(போனாலும்.)
நின்ற மரமே நெடுமரம்.
நின்ற வரைக்கும் நெடுஞ்சுவர்; விழுந்தாற் குட்டிச் சுவர்
(நின்றால்)
நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று. 14575
நின்றால் நெடு மரம்; விழுந்தால் பன மரம்.
நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.
நின்று தின்றால் குன்றும் மாளும்.
(கரையும், குறையும்.)
நின்று போட்டதும் இல்லை; குனிந்து எடுத்ததும் இல்லை.
நினைக்க முத்தி அண்ணாமலை. 14580
நினைக்கும் முன் வருவான்; நினைப்பதும் தருவான்.
நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்.
நினைத்ததும் கறி சமைத்ததும்.
நினைத்த நேரம் நெடு மழை பெய்யும்.
நினைத்த போது பிள்ளை பிறக்குமா? 14585
நினைத்துக் கொண்டாளாம் கிழவி, வயசுப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட.
(மாலையிட.)
நினைப்பின் வழியது உரை.
நினைப்பு எல்லாம் பிறப்பு.
நினைப்புக் குடியைக் கெடுத்ததாம்; நேர்வானம் பிட்டத்தைக் கெடுத்ததாம்.
நினைப்புப் பிழைப்பைக் கெடுத்தது; நீர்த்த தண்ணீர் உப்பைக் கெடுத்தது. 14590
நினைவே கனவு.
நிஜமாகத் தூங்குகிறவனை எழுப்பலாம், பொய்யாகத் தூங்குகிறவனை எழுப்ப முடியாது.
நிஜாம் அலி தண்டில் நிஜார்க்காரனைக் கண்டாயா?
(கண்டதுண்டா?)
நிஷ்டூரன் கண்ணைத் தெய்வம் கெடுக்கும்; நீதிமான் கண்ணைப் பரிதானம் கெடுக்கும். நீ
நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; ஊதி ஊதித் தின்னலாம். 14595
நீ அறையில் ஆட்டினாய்; நான் அம்பலத்தில் ஆட்டினேன்.
நீ இருக்கிற அழகுக்கா திருட வந்தாய்?
நீ இழு, நான் இழு, மோருக்கு வந்த மொட்டச்சி இழு.
நீ உளறாதே; நான் குழறுகிறேன்.
நீக்குப் போக்குத் தெரியாமல் நேர்ந்தபடி. 14600
நீ கஜகர்ணம் போட்டாலும் நடக்காது.
நீ கூத்திக்கு வாழ்க்கைப்பட்டுக் குடியிருப்பு வீடு, செப்பனிட்டாலும் நான் வாத்திக்கு வாழ்க்கைப்பட்ட வயிற்றெரிச்சல் தீராது.
நீ கோபம் மா லாபம்.
(-உன் கோபம் என் லாபம். தெலுங்கு.)
நீச்சம் அறியாதவரை வெள்ளம் கொண்டு போகும்.
நீச்சக் கடலிலே நெட்டி மிதிக்கிறது போல. 14605
நீச்சத் தண்ணீருக்குக் கெஞ்சினவன் பசும்பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
நீச்சு நிலை இல்லாத ஆற்றிலே நின்று எப்படி முழுகுகிறது?
நீசர் ஆனவர் நிலைபெறக் கல்லார்.
நீசனை நீசன் நோக்கில் ஈசன் ஆவான்.
(ஜோதிடம்.)
நீ செத்தால் உலகம் எல்லாம் எறும்பாய்ப் போகுமா? 14610
நீ செய்த நன்றிக்கு நான் நன்றியாப் பெற்றுப் பேர் இட வேணும்.
நீ சொம்மு நா சொம்மே, நா சொம்மு நீ சொம்மே.
(உன் சொத்து என் சொத்தே; என் சொத்து உன் சொத்தே. தெலுங்கு.)
நீ சொல்கிறது நிஜம் ஆனால் நாக்கினால் மூக்கைத் தொடு.
நீட்டவும் மாட்டார்; முடக்கவும் மாட்டார்.
(மடக்கவும்.)
நீட்டிச் சுருக்கின் மூண்டது நெடும்பகை. 14615
(நீட்டிக் குறுக்கினால்.)
நீட்டி நீட்டிப் பேசுகிற வேளாளப் பையா, உங்கள் துரைசாணி எங்கள் சிறைச்சாலையில் இருக்கிறான்.
நீட்டின விரலில் பாய்வது போல.
நீட்டு வித்தை ஏறாது.
(ஏறுமா?)
நீண்ட கை குறுகாது.
(+ சொத்திக்கை நீளாது.)
நீண்ட கை நெருப்பை அள்ளும். 14620
நீண்ட தச்சும் குறுகிய சொல்லும்.
(தச்சனும்.. கொல்லனும்.)
நீண்ட பல்காரன் சிரித்தாலும் அழுவது போல் இருக்கும்.
நீண்ட புல் நிற்க நிழலாமா?
நீ தடுக்கிலே நுழைந்தால் நான் கோலத்திலே நுழைவேன்.
நீதி அற்ற பட்டணத்திலே நிறை மழை பெய்யுமா? 14625
நீதி இல்லா ஊருக்குப் போகிறதே வழி.
நீதி இல்லாத நாடு நிலவு இல்லாத முற்றம்.
நீதி கேளாமல் தலை வெட்டுவார்களா?
நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா? நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மரிப்பானா?
(பீதி இல்லாதவன்.)
நீந்த அறியாதவனுக்கு வெள்ளம். 14630
நீந்த அறியாதவனை ஆறு இழுத்துப் போகும்.
(கொண்டு போகும்.)
நீந்தத் தெரியாமல் குளத்தில் இறங்கமாட்டேன் என்றானாம்.
நீந்த மாட்டாத மாட்டை வெள்ளம் கொண்டு போகும்.
நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகிறது.
நீ நட்சத்திரந்தான். 14635
(நட்சத்திரம் - குரங்கு.)
நீ படித்த பள்ளியிலேதான் நானும் படித்தேன்.
நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும்.
நீ போய் அலப்பிவிட்டு வராதே; நான் போய் உளறிவிட்டு வருகிறேன்.
நீயும் நானும் அடா, சாறும் சோறும் அடா.
நீயும் நானும் அடி, எதிரும் புதிரும் அடி. 14640
நீர் அடித்தால் நீர் விலகுமா?
(விலகாது.)
நீர் அழியச் சீர் அழியும்.
நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்.
நீர் ஆழம் கண்டாலும் நேரிழையார் நெஞ்சாழம் காண முடியாது.
நீர் ஆனாலும் மோர்; பேய் ஆனாலும் தாய். 14645
நீர் இருக்க மோருக்கு என்ன குறை?
நீர் இல்லா நாடு நிலவு இல்லா முற்றம்.
நீர் இல்லா நாடும் சீர் இல்லா ஊரும்.
நீர் இல்லையானால் மீன் இல்லை.
நீர் உயர நெல் உயரும். 14650
உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
(நீர் போனால் மீன் துள்ளுமா?)
நீர் என்று சொல்லி நெருப்பாய் முடிந்தது.
நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?
நீர் என்று சொன்னால் நெருப்பு அவிவதும் சர்க்கரை என்று சொன்னால் அதனால் வாய் இனிப்பதும் உண்டா?
நீர் ஏற நெல் ஏறும் 14655
நீர் ஓட்டித்தில் தெப்பம் செல்வதைப் போல.
நீர்க்கடன் நிழற்கடன் கொடுத்து வைத்தமட்டும் இருக்கும்.
நீர்க்குள் பாசிபோல் வேர்க் கொள்ளாது.
(வெற்றி வேற்கை.)
நீர் கண்ட இடத்தில் சாப்பிடு; நிழல் கண்ட இடத்தில் படுத்து உறங்கு.
நீர்க்குமிழி போல. 14660
நீர்ச்சிலை இல்லை; நெடு முக்காடா?
நீர்ச்சோறு தின்று நிழலில் இருந்தால் மலடிக்கும் மசக்கை வரும்.
(நிழலில் படுத்தால்.)
நீர்ப்பாடு மெய்யானால் கெளபீனம் தாங்குமா?
(நீர்ப்பாண்டு.)
நீர்ப்பாம்பு கடித்தாலும் ரஸப்பட்டியாகும்.
நீர் பெருத்தால் நெல் சிறுக்கும். 14665
நீர் போனால் மீன் துள்ளுமா?
(துள்ளும்.)
நீர் மடையும் அம்பலமும் நின்றவனுக்கு உண்டு.
நீர்மேல் எழுத்துக்கு நிகர்.
நீர்மேல் குமிழிபோல் நிலையில்லாக் காயம்.
நீர் மோருக்கும் கதியற்ற வீட்டிலே ஓமத்துக்கும் பசு நெய் கேட்டாற்போல. 14670
நீர் மோரும் சாதமும் நெடுநாளைக்கு இருந்தால் போதும்.
நீர் வளம் உண்டானால் நெல்வளம் உண்டாகும்.
நீர் வறண்டால் மீன் துள்ள மாட்டாது.
நீர் விளையாடேல்.
நீர் விற்ற காசு நீரோடு பேச்சு; மோர் விற்ற காசு மோரோடு போச்சு. 14675
நீர் வேலி கோப்பாய் நிலை செல்வம் ஆவார்.
(யாழ்ப்பாண வழக்கு.)
நீரகம் பொருந்திய ஊரகத்திரு.
நீரளவே ஆகுமாம் நீராம்பல்.
நீராலே விலகினாய் நீ; நான் நெருப்பாலே விலகினேன்.
நீரில் இறங்கினால் தவளை கடிக்குமா? 14680
நீரில் எழுத்தாகும் யாக்கை.
(நீதிநெறி விளக்கம்.)
நீரில் குமிழி இளமை.
(நீதிநெறி விளக்கம்.)
நீரும் கொல்லும்; நெருப்பும் கொல்லும்.
நீரும் சோறும் தின்று நிழலில் படுத்தால் மலடிக்கும் மயக்கம் வரும்.
(மசக்கை.)
நீரும் பாசியும் கலந்தாற் போல. 14685
நீரே பிராணாதாரம்.
நீரை அடித்தால் நீர் விலகுமா?
நீரை அடித்தால் வேறாகுமா?
நீரைக் கழுவி நிழலைப் புதைப்பது போல.
நீரைச் சிந்தினையோ? சீரைச் சிந்தினையோ? 14690
நீரைச் சுருக்கி மோரைப் பெருக்கு.
நீரைத் தொட்டாயோ, பாலைத் தொட்டாயோ?
நீரைத் தொட்டுத் தேனைத் தொட்டாற் போல.
நீரோடு வந்தது ஆற்றோடே போச்சு, பாலோடு வந்தது காலோடே வந்தது.
நீலம் கட்டுப்படப் பேசுகிறாள். 14695
நீலம் பிடிக்கிற வார்த்தை.
(பொய்.)
நீலத்துக்குக் கறுப்பு ஊட்ட வேண்டுமா?
நீலிக்குக் கண்ணீர் நிமையிலே,
(இமையிலே.)
நீலிக்குக் கண்ணீர் நெற்றியிலே; மாலிக்குக் கண்ணீர் மடிமேலே.
நீலிக்கு நிலக்கண்ணில் தண்ணீர். 14700
நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
நீறு இல்லா நெற்றி பாழ்.
(+ நெய் இல்லா உண்டி பாழ்,)
நீறு பூத்த நெருப்புப் போல்,
நு
நுகத்துப் பகலாணி போல.
(பழமொழி நானூறு.)
நுங்கு தின்றவள் போகக் கூந்தல் நத்தியவன் அகப்பட்டது போல. 14705
நுட்பப் புத்திமான் திட்டச் சித்தனாவான்.
நுண்ணறிவுடையார் நண்ணுவார் புகழே.
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
நுண்ணிய ஞானம் உரைப்பார்கள்; சொன்னபடி ஒன்றும் நடவார்கள்.
(சொன்னதில்.)
நுண்பொருள் கொடுத்து நுண்ணியர் ஆவர். 14710
நுண்மை நுகரேல்.
நுணலும் தன் வாயாற் கெடும்.
(நாலடியார்.)
நுரை ஒத்ததுவே தரையில் பவிஷு.
நுரையைத் தின்றால் பசி போகாது.
(பசி போகுமா?)
நுழையாத வீடு இல்லை; அடிக்காத செருப்பு இல்லை. 14715
நுழை விட்டுச் செய், நூல் கற்று அடங்கு.
நுளையன் அறிவானா, ரத்தினத்தின் பெருமை?
நுளையன் பேச்சு அம்பலம் ஏறாது.
(அம்பலத்தில் ஏறுமா?)
நுனையிலே ஆசாரமா?
நுனிக்கொம்பில் ஏறி அடிக் கொம்பை வெட்டுவார்களா? 14720
நுனிப்புல் மேய்தல்.
(மேயந்தாற் போல.)
நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டுபவன் போல்,
(மரத்தில் ஏறி.)
நுனியில் மேய்கிறது.
நூ
நூரணிப் பெண் ஊருணி தாண்டாது.
(நூரணி மலையாளத்தில் உள்ளதோரூர்.)
நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு. 14725
(நல்வழி.)
நூல் இல்லாமல் மாலை கோத்தது போல.
நூல் இழந்த நங்கை போல.
நூல் கற்றவனே மேலவன் ஆவான்.
நூல் முறை அறிந்து சீலத்து ஒழுகு.
நூலுக்கு ஏற்ற சரடு. 14730
நூலும் சூலும் சேரக் கூடாது.
(நூல்-பூணூல் கல்யாணம்; சூல்-சீமந்தக் கல்யாணம்.)
நூலும் புடைவையும் நூற்றெட்டுக் காலமா?
நூலைக் கற்றோர்க்கு உண்டு நுண்ணறிவு.
நூலைப் போல் சேலை; தாயைப் போல் மகள்.
நூற்க வேண்டுமானால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம். 14735
நூற்றில் ஒன்று; ஆயிரத்தில் ஒன்று.
நூற்றுக் கிழவி போல் பேசுகிறாள்.
(பேசுகிறாள்.)
நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அறைக்கீரைதான்.
(இரைதான்.)
நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.
நூற்றுக்கு ஒரு பேச்சு. 14740
நூற்றுக்கு ஒரு பேச்சு; ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.
நூற்றுக்குத் துணிந்த துற்றுக் கூடை.
(கூற்றுக் கூடை.)
நூற்றுக்கு மேல் ஊற்று,
(+ ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.)
நூற்றெட்டு அடிக் கம்பத்திலே ஆடினாலும் பூமியில் வந்துதான் தானம் வாங்க வேண்டும்.
நூற்றைக் கெடுத்ததாம் குறுணி, 14745
நூறு ஆண்டு ஆயினும் கல்வியை நோக்கு.
நூறு குற்றம், ஆறு பிழை கொண்டு பொறுக்க வேண்டும்.
நூறு நாள் ஓறி ஆறு நாள் விடத் தீரும்.
நூறு பலம் மூளையை விட ஒரு பலம் இதயம் உயர்ந்தது.
நூறு பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் மருத்துவம் பார்க்கப் போனாளாம். 14750
நூறு வயசுக் கிழவன். ஆனாலும் நுழைந்து பார்க்க ஆசை.
நூறோடு நூற்றொன்று.
நூறோடு நூறு ஆகிறது; நெய்யிலே சுட்ட பணியாரம்.
நெ
நெகிழ்ந்த இடம் கல்லுகிறதா?
நெகிழ்ந்த இடம் பார்த்துக் கல்லுவது போல. 14755
நெசவாண்டிக்கு ஏன் கோதிபில்லா?
(கோதிபில்லா-குரங்குக் குட்டி தெலுங்கு.)
நெசவு நெய்பவனுக்குக் குரங்கு எதற்காக?
நெஞ்சில் ஈரம் இல்லாதவன்.
நெஞ்சிலே கைவைத்துச் சொல்.
நெஞ்சு அறி துன்பம் வஞ்சனை செய்யும். 14760
நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ?
நெஞ்சு அறியாத பொய் இல்லை.
நெஞ்சு இலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச லட்சணம் தெரிந்து பயன் என்ன?
நெஞ்சு ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
நெஞ்சு மிக்கது வாய் சோறும். 14765
நெஞ்சைப் பஞ்சைப் போட்டுத் துவட்டியிருக்கிறது.
நெட்டி ஒரு பிள்ளை, சர்க்கரைக்குட்டி ஒரு பிள்ளையா?
நெட்டைக் குயவனுக்கும் நேரிட்ட கம்மாளனுக்கும் பொட்டைக்கும் புழு ஏர்வை.
நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக்கூடாது.
நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியலாம். 14770
நெடுங்கடல் ஓடியும் நிலையே கல்வி.
நெடுங்காலம் நின்றாலும் நெல் முற்றிப் பணம் இரட்டி.
நெடுங் கிணறும் வாயாலே தூரும்.
நெடுந்தீவான் சரக்கு வாங்கப் போனது போல.
(சரக்கு-பிரசவ மருந்துச் சரக்கு; யாழ்ப்பாண வழக்கு.)
நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு. 14775
நெடு மரம் விழுந்தால் நிற்கிற மரம் நெடுமரம்,
நெய் இல்லாத உண்டி பாழ்.
நெய் உருக்கி மோர் பெருக்கி நீர் அருக்கிச் சாப்பிட வேண்டும்.
நெய்க் குடத்தில் எறும்பு மொய்த்தாற் போல.
நெய்க் குடத்தைத் தலையில் வைத்து எண்ணமிட்டவனைப் போல. 14780
நெய்க் குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.
(வேட்டை.)
நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?
நெய்கிறதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன்.
நெய்கிறவனுக்கு ஏன் குரங்குக்குட்டி?
நெய் நேத்திர வாயு; அன்னம் அதிக வாயு. 14785
நெய் முந்தியோ, திரி முந்தியோ?
நெய்யும் திரியும் போனால் நிற்குமா விளக்கு?
நெய்யும் நெருப்பும் சேர்ந்தாற் போல.
நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்.
நெய்வதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன். 14790
நெய் வார்த்த கடன் நின்று வாங்கினாற் போல.
நெய் வார்த்த பணம் முழுகிப் போகிறதா?
நெய் வார்த்து உண்டது நெஞ்சு அறியாதா?
நெருக்க நட்டு நெல்லைப் பார்; கலக்க நட்டுக் கதிரைப் பார்.
நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும்? 14795
(ஆனாலும்.)
நெருஞ்சி முள்ளுக்குக் கோபம் வந்தால் கவட்டை மட்டுந்தானே?
நெருப்பால் வெந்த குழந்தை நெருப்பைப் பார்த்தால் பயப்படும்; சூடுண்ட பூனை அடுப்பங்கரை போகாது.
நெருப்பில் ஈ மொய்க்குமா?
(நெருப்பை.)
நெருப்பில் நெய் விட்டது போல.
நெருப்பில் பஞ்சு போட்டாற் போல. 14800
நெருப்பில் பட்ட மெழுகைப் போல.
நெருப்பில் புழுப் பற்றுமா?
நெருப்பில் போட்டாலும் நெஞ்சு வேகாது.
நெருப்பில் போட்டாலும் வேகுமா?
நெருப்பில் மெழுகைப் போட்டாற் போல. 14805
நெருப்பில் விழுந்த புழுப் போல.
(+ துடிக்கிறது.)
நெருப்பினும் பொல்லாச் செருப்பு.
நெருப்பினும் பொல்லாது கருப்பின் வாதை.
(கருப்பு-பஞ்சம்.)
நெருப்பு அருகில் செத்தை கிடந்த கதை.
நெருப்பு ஆறு, மயிர்ப்பாலம். 14810
நெருப்பு இருக்கிற காட்டை நம்பினாலும் நீர் இருக்கிற காட்டை நம்பக் கூடாது.
(நாட்டை.)
நெருப்பு இல்லாமல் நீள் புகை எழுமா?
நெருப்பு இல்லாமல் புகை கிளம்பாது.
நெருப்பு என்றால் வாய் சுடுமா?
நெருப்பு என்றால் வீடு வெந்து போகுமா? 14815
நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடாது.
நெருப்புக்கு ஈரம் உண்டா?
நெருப்புக்குத் தீட்டு இல்லை; எச்சிலும் இல்லை.
நெருப்புககு நீர் பகை.
நெருப்புச் சிறிது எனறு முன்றானையில் முடியலாமா? 14820
நெருப்புச் சுட்டு உமிக் காந்தலில் விழுந்தது போல.
நெருப்பு நிறை காட்டில் ஏதாவது நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது.
நெருப்புப் பந்தம் கட்டிக் கொண்டு நிற்கிறான்.
நெருப்புப் பந்தலிலே மெழுகுப் பொம்மை ஆடுமா?
நெருப்பும் சரி; பகையும் சரி. 14825
நெருப்பு ஜ்வாலையில் தண்ணீர் விட்டு அணைத்தது போல.
நெருப்பை அறியாமல் தொட்டாலும் சுடும்.
நெருப்பை ஈ மொய்க்குமா?
நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும்; காணாமல் மிதித்தாலும் சுடும்.
நெருப்பைச் சார்ந்த யாவும் அதன் நிறம் ஆகும். 14830
நெருப்பைச் சிறிது என்று நினைக்கலாமா?
நெருப்பைச் செல் அரிக்குமா?
நெருப்பைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் அதன் ஜ்வாலை கீழ் நோக்குமா?
நெருப்பை நம்பினாலும் நீரை நம்பக்கூடாது.
நெருப்பைப் புழுப் பற்றுமா? 14835
நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறான்.
(கட்டிக்கொண்டிருப்பது போல.)
நெருப்பை மடியில் முடிகிறதா?
(முன்றானையில்.)
நெல் அல்லாதது எல்லாம் புல்.
நெல் இருக்கப் பொன்; எள் இருக்க மண்.
நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சே. 14840
நெல் ஏறக் குடி ஏற.
நெல் குறுணி; எலி முக்குறுணி.
நெல்லால் அடித்தால் கல்லால் அடிப்பான்.
நெல்லிக்காய் மூட்டை.
நெல்லிக்காயைத் தின்று தண்ணீர் குடித்தால் உடன் பிறந்தவர்களுடன் பேசினமாதிரி இருக்கும்; மாம்பழம் தின்று தண்ணீர் குடித்தால் மாமியாருடன் பேசினமாதிரி இருக்கும். 14845
நெல்லுக்கடை மாடு கன்று போடட்டும்.
நெல்லுக் காய்ச்சி மரம் என்று கேட்டவன் போல.
(நெல்லுக் காய்க்கிற.)
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்.
நெல்லுக்குத் தாளும் பெண்ணுக்குத் தோழனும்.
நெல்லுக் குத்தினவனுக்கு நேர் உடன் பிறந்தாள். 14850
(உறவு இல்லை என்ற குறிப்பு.)
நெல்லுக் குத்துகிறவளுக்குக் கல்லுப் பரீட்சை தெரியுமா?
நெல்லுக்கு நேரே புல்.
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
நெல்லுக்குள் அரிசி இருக்கிறது என்றானாம்.
நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது; எள்ளுக்குள்ளே எண்ணெய் இருக்கிறது. 14855
நெல்லுடன் பதரும் சேர்ந்தே இருக்கும்.
நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக்கூடுமா?
நெல்லூர் மாடுபோல இருக்கிறாள்.
நெல்லைக் காணாத காக்கை அரிசியைக் கண்டாற் போல.
நெல்லை விற்ற ஊரில் புல்லை விற்பதா? 14860
நெல்லோடு பதரும் உண்டு.
நெல்வகை எண்ணினாலும் பள்ளுவகை எண்ண முடியாது.
நெல் விளைந்த பூமியும் அறியாய்: நிலா எறித்த முற்றமும் அறியாய்.
(நிலமும் தெரியாது; நிலாக் காய்கிற இடமும் தெரியாது.)
நெல் வேர் இடப் புல் வேர் அறும்.
நெற் செய்யப் புல் தேய்ந்தாற் போல. 14865
(பழமொழி நானூறு.)
நெற்பயிர் செய்யின் பிற்பயிர் விளையும்.
நெற்றிக் கண் காட்டினாலும் குற்றம் குற்றமே.
(நக்கீரர் கூற்று: திருவால. 16.27)
நெற்றிக்குப் புருவம் தூரமா?
நெற்றியில் கண்.
நெற்றியில் கண் படைத்தவனா? 14870
நெற்றியில் மூன்று கண் படைத்தவன் வரவேண்டும்.
நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்தான்.
நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண்.
நே
நேசம் உள்ளளர் வார்த்தை நெல்லிக்கனி தின்றது போல.
நேசமும் பாசமும் நேசனுக்கு உண்டு. 14875
நேத்திர மணியே சூத்திர அணியே.
நேயமே நிற்கும்.
நேர் உத்தரம் சென்மப் பழி.
நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வாசமாகார்.
நேர்பட ஒழுகு. 14880
நேர்மை இல்லா மந்திரியும் நீதி இல்லா அரசும் பாழ்.
நேர்மை உண்டானால் நீர்மையும் உண்டு.
நேர்வழி நெடுக இருக்கக் கோணல் வழி குறுக்கே வந்ததாம்.
நேரா நோன்பு சீர் ஆகாது.
நேருக்கு நேர் சொன்னாலும் கூர் கெட்டவனுக்கு உறைக்காது. 14885
நேரும் சீருமாக.
நேரும் சீருமாய்ப் போக வேண்டும்.
நேரே போனால் எதிரும் புதிரும்.
( : சொந்தம் என்னவென்றால் சொல்லும் வழக்கம்.)
நேற்று இருந்தவனை இன்றைக்குக் காணோம்.
நேற்று உள்ளார் இன்று மாண்டார். 14890
நேற்றுப் பிறந்த நாய்க்கு வந்த பசியைப் பார்.
நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்.
நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.
நேற்று வந்தாளாம் குடி; அவள் தலைமேல் விழுந்ததாம் இடி.
நேற்று வெட்டின கிணற்றில் முந்தா நாள் முதலை புறப்பட்டதாம். 14895
(குளத்தில், முந்தாநாள் வந்த முதலை.)
நேற்றே நெருப்பு அணைந்துவிட்டது என்பாளே அவள்.
நை
நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
(நையவா.)
நையக் கற்கினும் நொய்ய நன்குரை.
நையப் புடைத்தாலும் நாய் நன்றி மறவாது. 14900
நைவினை நணுகேல்.
நொ
நொடிக்கு நூறு கவி.
நொடிக்கு நூறு குற்ற நொடிக்கு நூறு வசனம் சொல்வாள்.
நொடிப் போதும் வீண் கடேல். 14905
நொண்டி ஆயக்காரன் கண்டு மிரட்டுகிறது போல.
நொண்டி ஆனைக்கு நூறு குறும்பு.
நொண்டி ஆனை நொடியில் அழிக்கும்.
நொண்டிக் கழுதைக்குச் சறுக்கினது சரக்கு.
நொண்டிக்கு உண்டு நூற்றெட்டுக் கிறுக்கு. 14915
(நூறு கிறுக்கு.)
நொண்டிக்குக் குச்சோட்டமா?
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
நொண்டிக் குப்பன் சண்டைக்குப் போனான்.
நொண்டிக்கு நூற்றெட்டுக் கால்.
நொண்டிக்குப் பெயர் தாண்டவராயன்; நொள்ளைக் கண்ணனுக்குப் பெயர் செந்தாமரைக் கண்ணன். 14920
நொண்டிக்கு விட்ட இடத்திலே கோபம்.
நொண்டிக் கோழிக்கு உரல் கிடை தஞ்சம்.
நொண்டி நாய்க்கு ஓட்டமே நடை.
நொண்டி நொண்டி நடப்பானேன்? கண்டதற் கெல்லாம் படைப்பானேன்?
நொண்டி புரத்தான் முயல் போச்சு. 14925
தொண்டியால் முயல் போயிற்று.
நொண்டுகிற மாடு பொதி சுமக்காது.
நொந்த கண் இருக்க நோக்கக் கண்ணுக்கு மருந்து இட்ட மாதிரி.
நொந்ததை உண்டால் நோய் உண்டாகும்.
நொந்த புண்ணிலே வேல் கொண்டு குத்தலாமா? 14930
நொந்த மாட்டில் ஈ ஒட்டினது போல.
நொந்தவர்களைக் கொள்ளை இடுகிறதா?
நொந்து அறியாதவன் செந்தமிழ் கற்றோன்.
(அறியார்.)
நொந்து நூல் அழிந்து போகிறது.
நொந்து நொந்து சொன்னாலும் நீசக்கயவர் வசமாகார், 14935
நொய் அரிசி கொதி பொறுக்குமா?
(தாளாது?)
நொய் அரிசி பொரி பொரிக்காது.
நொய்யர் என்பவர் வெய்யவர் ஆவார்.
நொள்ளைக் கண்ணனுக்கு நோப்பாளம்.
(கண்ணுக்கு.)
நொள்ளைக் கண்ணனுக்கு மை இடுகிறதா? 14940
நொள்ளைக் கண்ணு நரிவிழுந்து லோகம் மூணும் சென்ற கதை.
நொள்ளைக் கண் மூடி என்ன? விழித்தென்ன?
நொள்ளை நாய்க்கு வெள்ளை காண்பித்தாற் போல.
நொறுங்கத் தின்றால் நூறு ஆயிசு.
(வயசு.)
நொறுங்குண்டவனைப் புறங்கொண்டு உரைப்பான். 14945
(நொறுக்குண்டவணை உரைப்பாய்.)
நோ
கத்துக்கு ஒதுங்கு.
நோக்க நோக்குவ, நோக்காமுன் நோக்குவான்.
நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்.
நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழு.
(அடித்தேன், அழுதான்.)
நோஞ்சல் பூனை மத்தை நக்குகிறது போல. 14950
நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நோய் அற்ற வாழ்வே வாழ்வு; குறைவற்ற செல்வமே செல்வம்,
நோய் ஒரு பக்கம்; சூடு ஒரு பக்கமா?
நோய்க்கு இடம் கொடேல்.
நோய்க்கும் பார்; பேய்க்கும் பார். 14955
நோய் கண்டார் பேய் கண்டார்.
(கொண்டார்.)
நோய் கொண்டால் பார்ப்பாரும் தின்பார் உடும்பு.
(பழமொழி நானூறு.)
நோய் தீர்ந்தபின் வைத்தியனை மதிக்கமாட்டார்.
நோய்ந்த புலியானாலும் மாட்டுக்கு வலிது.
(நோய் பிடித்த.)
நோய்ப்புலி ஆகிலும் மாட்டுக்கு வல்லது. 14960
நோய் பிடித்த கோழி போலத் தூங்கி வழிகிறான்.
நோய் போக்குவது நோன்பு; பேய் போக்குவது இரும்பு.
(வேம்பு)
நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற் போல,
நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம்.
நோயாளி தலைமாட்டில் பரிகாரி இருந்து அழுதாற் போல. 14965
(பரிகாரி-வைத்தியன்.)
நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேதாளி ஆவான்,
(விழியாளி.)
நோயைக் கண்ட மனிதன் போல்; நாயைக் கண்ட திருடன் போல்.
நோயோடு நூற்றாண்டு.
நோயோ, பேயோ?
நோலா நோன்பு சீர் ஆகாது. 14970
நோலாமையினால் மேலானது போம்.
நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற் போல.
நோவு ஒன்று இருக்க, மருந்து ஒன்று கொடுத்தது போல.
நோவு காடு எறிப் போச்சு.
நோன்பு என்பது கொன்று தின்னாமை. 14975
நௌ
நௌவித் தொழில் நாசம்.
நௌவியில்தானே கல்வியறிவைக் கல்.
நௌவியும் முதுமையும் நடுவும் அற்றவன்.
நௌவியும் வாழ்க்கையும் அழகு அல்ல. நற்குணம் ஒன்றே அழகு.
ப
பக்கச் சொல் பதினாயிரம். 14980
பக்குவம் தெரிந்தால் பல்லக்கு ஏறலாம்.
பக்தர் உளத்தில் ஈசன் குடியிருப்பான்.
பக்தி இருந்தால் முக்தி கிடைக்கும்.
பக்தி இல்லாச் சங்கீதம் பாடுவதேன்? சக்தி இல்லாவிட்டால் சிவனே என்று இரு.
பக்தி இல்லாப் புத்தி அசேதனம். 14985
பக்தி இல்லாப் பூசை போல.
பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்கு ஏறுமா?
பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்குப் போயிற்றாம், நெத்திலி மீனை வாயிலே கல்விக் கொண்டு.
பக்தி உண்டானால் முக்தி உண்டாம்.
பக்தி உள்ள பூனை பரலோகம் போகிறபோது, கச்சைக் கருவாட்டைக் கட்கத்திலே இடுக்கிக் கொண்டு போயிற்றாம். 14990
பக்தி உள்ளவனுக்குப் புட்டுக் கூடை அண்டம் புறப்பட்டுப் போயிற்றா?
பக்திக்கும் சிரத்தைக்கும் பகவான் பலன் கொடுப்பான்.
பக்தி கொள்பவன் முக்தி உள்ளவன்,
பக்தி படபட, யானை சட்டி லொட லொட.
பக்தியோடே பாகற்காய் சட்டியோடே தீய்கிறது. 14995
பகட்டிப் பங்கு எடுத்தால் என்ன? இடியடி பொரியரிசி.
பகடிக்குப் பத்துப் பணம் கொடுப்பார்; திருப்பாட்டுக்கு ஒரு காசும் கொடார்.
(பத்துக் காசு ஒரு காசு.)
பகடியைப் பாம்பு கடித்தது போல.
பகல் உண்ணான் பருத்திருப்பான்.
பகல் உணவுக்குப் பாகல், 15000
பகல் கனவாய் முடிந்தது.
பகலில் தோட்டக்காரன்; இரவில் பிச்சைக்காரன்.
பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே.
பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவில் எருமை மாடு தெரியுமா?
பகலில் பன்றி வேட்டைக்கு அஞ்சும் நாய், இரவில் கரித்துண்டுக்கு அஞ்சும். 15005
பகலை இருள் விழுங்குமா?
பகற் கனாப் போல,
பகிடியைப் பாம்பு கடித்தது போல,
(பகடியை.)
பகிர்ந்து தின்றால் பசி ஆறும்.
பகுத்தறிவு இல்லாத துணிவு, பாரம் இல்லாத கப்பல். 15010
(பகுத்தல் இல்லாத.)
பகுத்து அறியாமல் துணியாதே; படபடப்பாகப் பேசாதே.
(செய்யாதே.)
பகுஜன வாக்யம் கர்த்தவ்யம்,
பகைக்கச் செய்யேல்; மறு ஜனனப்படு.
பகைத்தவர் சொல்லாதது இல்லை; பசித்தவர் தின்னாதது இல்லை.
பகைத்தவன் பாட்டைப் பகலில் கேள், 15015
பகைத்தால் உறவு இல்லை.
பகையாளிக்குப் பருப்பிலே நெய் விட்டது போல.
பகையாளி குடியை உறவாடிக் கெடு.
பகையாளி குடியைக் கெடுக்க வெங்காயக் குழி போடச் சொன்னது போல.
(பங்காளி குடியை.)
பகையும் உறவும் பணம் பக்குவம். 15020
பகைவர் உறவு புகை எழா நெருப்பு.
(எழு நெருப்பு.)
பகைவரிடம் நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு இல்லை.
பகைவன் இல்லாத ஊரில் குடி இருக்காதே.
பங்கறை சாவானுக்குப் பல்லழகைப் பார்.
(பதங்குறைந்த.)
பங்கன் இருக்குமிடத்தைத் தேடிக் கங்கை வந்தது போல. 15025
(பங்கன்-நொண்டி.)
பங்காளத்து நாய் சிங்காசனம் ஏறினதென்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.
(பங்களா நாய்.)
பங்காளிக்குப் பல்லிலே விஷம்.
பங்காளிச் சண்டை பொங்கலுக்கு இருக்காது.
பங்காளியையும் பனங்காயையும் பதம்பார்த்து வெட்ட வேண்டும்.
பங்காளியோ, பகையாளியோ? 15030
பங்காளி வீடு வேகிறது; சுக்கான் கொண்டு தண்ணீர் விடு.
பங்கில் பாதி பரத்வாஜம்.
(பரத்வாஜ கோத்திரம்.)
பங்கு இட்டவளுக்குப் பானைதான் மிச்சம்.
பங்கு இடுபவன் பந்து ஆனால் பந்தியில் எங்கே இருந்தால் என்ன?
பங்கு இல்லாப் பங்கை விழுந்து அள்ளலாமா? 15035
பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.
பங்குனி சித்திரையில் பகல் வழி நடப்பது போல.
பங்குனிப் பனி பால் வார்த்து முழுகியது போல.
பங்குனி மழை பத்துக்கும் நஷ்டம்.
(சேதம்.)
பங்குனி மழை பதம் கொடுக்கும். 15040
பங்குனி மழை பல விதத்திலும் சேதம்.
பங்குனி மழையால் பத்தெட்டும் சேதம்.
பங்குனி மாதம் பகல் வழி நடந்தவன் பெரும்பாவி.
(நடப்பது தோஷம்; நடந்தவன் படுபாவி.)
பங்குனி மாதம் பகல் வழி நடந்தவனைப் பார்த்திருப்பவனும் பாவி.
(யாழ்ப்பாண வழக்கு.)
பங்குனி மாதம் பத்துக்கும் நஷ்டம். 15045
பங்குனி மாதம் பதர்கொள்.
பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
பங்கூர் ஆண்டி கட்டின மடம்.
பச்சரிசியும் பறங்கிக் காயும் உடம்புக்கு ஆகா.
பச்சிலைத் தோசை அறியாத பன்னாடை இட்டலியைப் பார்த்ததும் எடுத்து எடுத்துப் பார்த்ததாம். 15050
பச்சிலையும் கிள்ளப் படுமோ பராபரமே.
பச்சை உடம்பிலே போடாத மருந்தும் மருந்தா? பந்தியிலே வைக்காத சீரும் சீரா?
பச்சைக் குழந்தைக்கு எத்தத் தெரியும்.
பச்சைக் கூட்டோடே கைலாயம் சேர்வாய்,
பச்சை கண்டால் ஒட்டடி மகளே. 15055
பச்சை கொடுத்தால் பாவம் தீரும்; வெள்ளை கொடுத்தால் வினை தீரும்;
பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு; தூவு பருக்கை வயிற்றுக்குக் கேடு.
பச்சைத் தண்ணீரிலே விளக்குக் கொடுத்துப் படா பத்தினித் தாயே; பெண்டாண்டவனே, உன்னைத் தொட்டவர்கள் எத்தனை பேரடி? துலுக்குப் பத்தினித் தாயே.
பச்சை நெல்லுக்கு பறையனிடத்தில் சேவிக்கலாம்.
பச்சைப் பாண்டத்தில் பாலை வைத்தால் பாலும் உதவாது; பாண்டமும் உதவாது. 15060
பச்சைப் புண்ணில் ஊசி எடுத்துக் குத்தினது போல.
பச்சை பாதி புழுங்கல் பாதி,
பச்சை மட்டைக்குப் போனவன் பதினெட்டாந் துக்கத்துக்கு வந்தாற் போல.
(வந்தானாம்.)
பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?
பச்சை மரத்தில் ஆணி அடித்தது போல. 15065
பச்சை மரத்துக்கு இத்தனை என்றால் பட்ட மரத்துக்கு எத்தனை?
பச்சை மரம் படப் பார்ப்பான்.
பச்சை மீனைப் பட்டிலே பொதித்து வை.
பச்சையைக் கண்டால் ஒட்டடி மகளே,
பசங்கள் கஷ்டம் பத்து வருஷம். 15070
பசி இல்லாதவனுக்குக் கருப்பு மயிர் மாத்திரம்.
(கருப்பு-பஞ்சம்;மயிருக்குச் சமானம்.)
பசி உள்ளவன் ருசி அறியான்.
(உடையான்.)
பசி உற்ற நேரத்தில் இல்லாத பால் பழம் பசி அற்ற நேரத்தில் ஏன்?
பசி ஏப்பக்காரனுக்கும் புளி ஏப்பக்காரனுக்கும் வித்தியாசம் இல்லையா?
பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப் பயிர் இட்டாற் போல. 15075
பசி ஏப்பமா? புளி ஏப்பமா?
பசிக்குக் கறி வேண்டாம்; தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.
பசிக்குப் பனம் பழம் தின்னால் பித்தம் பட்ட பாடு படட்டும்.
(படுத்துகிற பாடு படுத்தட்டும்).
பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் போகும் இடத்துக்குப் போகும்.
பசிக்குப் பனம் பழம் தின்றால் பின்னால் பட்டபாடு படலாம். 15080
(பித்தம் பட்ட பாடு படலாம்.)
பசிக்குப் பனம் பழமும் ருசிக்கும்.
பசிக்குமுன் பத்தும் பறக்கும்.
பசித்த கணக்கன் பழங்கணக்குப் பார்த்ததுபோல.
பசித்த செட்டி பாக்கைத் தின்றானாம்.
பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார். 15085
பசித்தவன் தின்னாததும் இல்லை; பகைத்தவன் சொல்லாததும் இல்லை.
பசித்தவன் பயிற்றை விதை; இளைத்தவன் என்னை விதை.
பசித்தவன் பழங்கணக்கைப் பார்த்தது போல.
பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?
(வையாதே.)
பசித்தவனுக்குப் பால் அன்னம் இட்டாற் போல. 15090
பசித்த வீட்டில் பச்சை நாவி சேராது.
பசித்தார் பொழுதும் போம்; பாலுடனே அன்னம் புசித்தால் பொழுதும் போம்.
பசித்தால் ௫சி இல்லை. பசித்துப் புசி.
பசித்து வந்து பானையைப் பார்க்காமல், குளித்து வந்து கொடியைப் பார்க்காமல். 15095
பசித்து வருவோர் கையிலே பரிந்து அமிர்தம் ஈந்தாற் போல.
பசித்தோர் முகம் பார்.
பசி தீர்ந்தால் பாட்டும் இன்பமாம்.
(இன்பமயம்.)
பசி பசி என்று பழையதில் கை விட்டாளாம்.
பசியாத போது புசியாதே. 15100
பசியாமல் இருக்க மருந்து கொடுக்கிறேன்; பழையது இருந்தால் போடு என்பது போல.
(பழங்கஞ்சி இருந்தால், ஒருகை போடு.)
பசியாமல் வரம்தருகிறேன்; பழங்கஞ்சி இருந்தால் பார்.
பசியா வரம் படைத்த தேவர் போல.
பசியிலும் எழை இல்லை; பார்ப்பாரிலும் ஏழை இல்லை.
பசியுடன் இருப்பவனுக்குப் பாதித் தோசை போதாதா? 15105
பசி ருசி அறியாது; நித்திரை சுகம் அறியாது.
(அறியுமா?)
பசி வந்தால் பக்தி பறக்கும்.
பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.
(பறக்கும்.)
பசி வேளைக்குப் பனம் பழம் போல வை.
பசு உரத்திலும் பழம் புழுதி நல்லது. 15110
பசு உழுதாலும் பயிரைத் தின்ன ஒட்டான்.
பசு ஏறு வாலும் எருது கூழை வாலும்.
பசுக் கறக்கு முன் பத்துப் பாட்டம் மழை பெய்யும்.
(பன்னிரண்டு முறை.)
பசுக் கறந்தாற் போல.
பசு கறுப்பானால் பாலும் கறுப்பா? 15115
பசு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
பசு குசுவினாற் போல.
பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?
(பார்ப்பான் சாதுவும்.)
பசு கிழமானால் பால் ருசி போமா?
பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் நம்பப்படாது. 15120
பசுத் தின்னாவிடில் பார்ப்பானுக்கு.
பசுத் தோல் போர்த்த புலி.
பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.
பசுந்தாள் உரமே பக்குவ உணவாம்.
பசுப் பிராயம். 15125
பசுப் போல இருந்து புலிபோலப் பாய்கிறான்.
பசு போன வழியே கன்று போகும்.
பசும் உரத்திலும் பழம் புழுதி மேல்.
பசும் புல் தேய நட வாத பாக்கியவான்.
பசும்புல் நுனிப் பனி ஜலம் போல 15130
பசு மரத்தில் அறைந்த ஆணி போல.
(தைத்த.)
பசுமாடு நொண்டியானால் பாலும் நொண்டியா?
பசுமாடும் எருமை மாடும் ஒன்று ஆகுமா?
பசுவன் பிடிக்கப் போய்க் குரங்கானாற் போல.
பசுவில் ஏழை, பார்ப்பானில் ஏழை. 15135
பசுவில் மோழையும் இல்லை; பார்ப்பானில் ஏழையும் இல்லை.
(மோழையையும்... ஏழையையும் நம்பாதே.)
பசு விழுந்தது புலிக்கு ஆதாயம்.
பசுவிலே சாதுவையும் பார்ப்பானிலே ஏழையையும் நம்பக்கூடாது.
பசுவின் உரத்திலும் பழம் புழுதி மேல்.
பசுவின் வயிற்றில்தான் கோரோசனை பிறக்கிறது. 15140
பசுவுக்கு இரை கொடுத்தால் மதுரமான பால் கொடுக்கும்.
பசுவுக்குத் தண்ணீர் பத்துப் புண்ணியம்.
பசுவுக்குப் பிரசவ வேதனை; காளைக்குக் காம வேதனை.
பசுவும் பசுவும் பாய்ச்சலுக்கு நிற்க, நடுப்புல் தேய்ந்தாற்போல.
பசுவும் புலியும் பரிந்து ஒரு துறையில் நீர் உண்கின்றன. 15145
பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?
பசுவைக் கொன்று செருப்புத்தானம் செய்ததுபோல.
பசுவைப் போல் இரு; புலியைப் போல் பாய்.
பசுவை விற்றால் கன்றுக்கு வழக்கா?
(வழக்கு எது?)
பசையைக் கண்டால் ஒட்டடி மகளே. 15150
பஞ்சத்தில் அடிபட்ட மாடு கம்பங் கொல்லையிற் புகுந்தாற்போல.
பஞ்சத்தில் அடிபட்டவன் போல.
பஞ்சத்தில் பிள்ளை விற்றது போல.
பஞ்சத்துக்கு இருந்து பிழை; படைக்கு ஓடிப் பிழை.
பஞ்சத்துக்கு மழை பனி போல. 15155
பஞ்சபாண்டவர் என்றால் தெரியாதா, கட்டில் சாலைப்போல் மூன்று பேர் என்று இரண்டு விரல் காட்டி ஒரு கோடு எழுதினாள்.
(எழுது.)
பஞ்சம் இல்லாக் காலத்தில் பசி பறக்கும்.
பஞ்சம் தீரும்போது கொல்லும்.
பஞ்சம் பணியாரம் சுட்டது; வீங்கல் வெறிக்க வெறிக்கப் பார்க்கிறது.
பஞ்சம் போம்; பஞ்சத்தில் பட்ட வசை போகாது. 15160
பஞ்சம் போம்; பழி நிற்கும்.
பஞ்சம் வந்தாலும் பரதேசம் போகாதே,
பஞ்சமே வந்தாலும் நெஞ்சமே அஞ்சாதே.
பஞ்சாங்கக் காரன் மனைவி வெற்றிலை போடுகிறது போல.
பஞ்சாங்கக் காரன் வீட்டில் சாப்பாடு நடக்கிற வேளை. 15165
பஞ்சாங்கம் கிழிந்தாலும் நட்சத்திரம் அழியாது.
பஞ்சாங்கம் கெட்டுப் போனாலும் நவக்கிரகம் கெட்டுப் போகுமா?
பஞ்சாங்கம் பல சாத்திரம்; கஞ்சி குடித்தால் கல மூத்திரம்.
பஞ்சாங்கம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
பஞ்சாங்கம் போனால் அமாவாசையும் போய்விடுமா? 15170
பஞ்சாங்கம் போனாலும் நட்சத்திரம் போகாது.
பஞ்சானும் குஞ்சானும் பறக்கத் தவிக்கின்றன.
பஞ்சு கயிறானாலும் பாரம் தாங்கும்.
பஞ்சுப் பொதியில் நெருப்புப் பட்டாற் போல.
பஞ்சுப் பொதியில் பட்ட அம்பு போல. 15175
(நைத்த.)
பஞ்சு பட்ட பாடு போல.
பஞ்சு படாப் பாடு படும்.
பஞ்சு படிந்த பழஞ்சித்திரம் போல.
பஞ்சு பறந்தாலும் படியும், ஒரு தேசம்; நெஞ்சு பறப்பதற்கு ஒரு நிலை காணோம் லவலேசம்.
(பஞ்சு படிந்தாலும்.)
பஞ்சு போலப் பறக்கிறேன் 15180
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தாற் போல
பஞ்சும் நெருப்பும் போல.
பஞ்சை நாரி பலகாரம் சுட்டாள்; வீங்கி நாரி விசாரப்பட்டாள்.
(பணியாரம் சுட்டதும்...விசாரப்பட்டதும்.)
பட்சத்துக்குக் கண் இல்லை. 15185
பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது.
(எட்டிக் கனியை)
பட்சி சிறகு பறி கொடுத்தாற் போல.
பட்சித்தாலும் அவர் சித்தம்; ரட்சித்தாலும் சித்தம்.
பட்சி மாறி விட்டது. 15190
பட்ட இடம் பொழுது; விட்ட இடம் விடுதி.
பட்ட கடனுக்குக் கொட்டை நூற்று அடைத்தாளாம்.
பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்.
பட்ட குணம் சுட்டாலும் போகாது.
(திருவால வாயுடையார் திருவிளையாடற் புாரணம், 34.6.)
பட்டடையோடு நின்று தின்ற மாட்டுக்குக் கட்டி வைத்துப் போடக் கட்டுமா? 15195
(யாழ்ப்பாண வழக்கு.)
பட்டணத்தாள் பெற்ற குட்டி; பணம் பறிக்க வல்ல குட்டி.
பட்டணத்துக் காசு பாலாறு தாண்டாது.
பட்டணத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்ததாம்.
பட்டணத்துப் பெண் தட்டுவாணி; பட்டிக் காட்டுப் பெண் ருக்மிணி.
பட்டணத்து வாசலைப் பட்டாலே மூடியிருக்கிறதோ? 15200
(படலாலே, படலாலே மூடுகிறதா?)
பட்டணத்தைப் படல் கட்டிச் சாத்தலாமா?
(காக்க முடியுமா?)
பட்டணம் பறி போகிறது.
பட்டத்து ஆனை பல்லக்குக்குப் பின்னே வருமா?
பட்டத்து ஆனை பவனி வந்தாற் போல.
பட்டத்து ஆனையைப் பார்த்துக் காட்டானை சிரித்ததாம். 15205
பட்டது எல்லாம் பாடு; நட்டது எல்லாம் சாவி.
(பட்டதும் பாழாச்சு; நட்டதும் சாவி ஆச்சு)
பட்டது கெட்டது எல்லாம் பக்கத்தில் பக்கத்தில் வைத்து விட்டுப் புட்டுக் கூடையை ஏந்திக் கொண்டாள் பூப்பறிக்க.
பட்டதும் கெட்டதும் பாய் முடைந்து விற்றதும் ஓலை முடையாமல் உட்கார்ந்திருந்ததும்.
பட்டப் பகல் போல,
பட்டப் பகல் போல் நிலவு எறிக்கக் குட்டிச்சுவரிலே முட்டிக் கொள்ள என்ன வெள்ளெழுத்தா? 15210
பட்டப் பகல் விளக்குப் பாழடைந்தாற் போல.
(பழுதடைந்தாற் போல)
பட்டப் பகலில் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்வதா?
பட்டப் பகலில் நட்சத்திரம் கண்டாற் போல.
பட்டப் பகலில் பட்டணம் கொள்ளை போச்சாம்.
(பறிபோச்சாம்.)
பட்டப் பகலில் டோகிறவளுக்குத் தட்டுக் கூடை மறைப்பா? 15215
(போகிற தேவடியாளுக்கு மறைப்பு ஏன்?)
பட்டப் பகலைப் போல நிலா எறிக்கக் குட்டிச் சுவரிலே முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா?
பட்ட பாட்டிலும் பெருத்த பாடாக,
பட்ட பாட்டுக்குப் பலன் கைமேலே.
பட்ட பாடும் கெட்ட கேடும்.
பட்டம் அறிந்து பயிர் இடு. 15220
பட்டம் கட்டின குதிரைக்கு லட்சணம் பார்ப்பதுண்டா?
பட்டம் தப்பினால் நட்டம்
பட்ட மரம் காற்றுக்கு அஞ்சாது.
பட்ட ருணம் சுட்டாலும் தீராது.
(ருணம்-கடன்.)
பட்டர் வீட்டில் பாவம் படுத்திருக்கும். 15225
பட்டவர்க்கு உண்டு பலன்.
பட்டவர்க்குப் பதவி உண்டு.
பட்டவர்கள் பதத்தில் இருப்பார்கள்.
பட்டவளுக்குப் பதவி; படாதவளுக்கு நரகம். 15230
பட்டவளுக்குப் பலன் உண்டு; பதவியும் உண்டு.
பட்டவனுக்குத் தெரியும் படையிற் கலக்கம்.
பட்டறை போட்ட பிறகு குறியோடுவது போல.
பட்டறை வாய்த்தால் பணி வாய்க்கும்.
பட்டா உன் பேரில்; சாகுபடி என் பேரில்,
(என் ஊரிலே.)
பட்டா ஒருவர் பேரில்; அநுபவம் ஒருவருக்கு. 15235
பட்டா ஒருவன் மேல்; பயிர்ச் செலவு ஒருவர் மேல்.
பட்டாடை வாய்த்தால் பணி வாய்க்கும்,
பட்டால் அறிவான் சண்டாளன்; மழை பெய்தால் அறிவான் வேளாளன்.
பட்டால் தெரியும் கஷ்டம்.
பட்டால் தெரியும் பறையனுக்கு; சுட்டால் தெரியும் நண்டுக்கு. 15240
(பள்ளிக்கு... பூனைக்கு.)
பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு; கெட்டால் தெரியும் செட்டிக்கு.
(பள்ளிக்கு + படாமல் தெரியும் பறையனுக்கு.)
பட்டால் பகற்குறி; படாவிட்டால் இராக்குறி
(கறி)
பட்டால் பலன் உண்டு.
பட்டால் பாழ் போகுமா?
பட்டி என்று பேர் எடுத்தும் பட்ட கடன் அடையவில்லை. 15245
பட்டிக்காட்டான் ஆனையைக் கண்டது போல்.
பட்டிக்காட்டான் நாய்க்கு அஞ்சான்; பட்டினத்தான் பேய்க்கு அஞ்சான்.
பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை முறைத்துப் பார்த்தாற் போல.
(பட்சணக் கடையை.)
பட்டிக் காட்டானுக்குச் சிவப்புத் துப்பட்டி பீதாம்பரம்.
(பட்டிக் காட்டுக்கு.)
பட்டிக் காட்டுப் பெருமாளுக்குக் கொட்டைத் தண்டே கருட கம்பம். 15250
பட்டிக்குப் பிராயச்சித்தம் உண்டு; பழையக்துகுப் பிராயச்சித்தம் இல்லை.
பட்டி குரைத்தால் படி திறக்குமோ?
(நாஞ்சில் நாட்டு வழக்கு.)
பட்டி கூட ஆனை போதும்.
(கூட்ட.)
பட்டி நாய்க்குப் பட்டது சரி.
பட்டி நாய் தொட்டி சேராது. 15255
பட்டி மாட்டுக்குக் கட்டை கட்டினது போல.
பட்டி மாட்டுக்குச் சூடு போட்டது போல.
பட்டினத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்தாற் போல.
பட்டினம் பெற்ற கலம்.
(பழமொழி நானூறு.)
பட்டினி இருக்கும் நாய்க்குத் தின்னப் பகல் ஏது? இரவு ஏது? 15260
பட்டினியே சிறந்த மருந்து.
பட்டு அறி; கெட்டு அறி; பத்தெட்டு இறுத்து அறி.
(பத்தும் எட்டும் அறி.)
பட்டுக் கத்தரித்தது போலப் பேச வேண்டும்.
பட்டுக் கிடக்கிற பாட்டிலே கட்டிக் கொண்டு அழ முடிய வில்லையாம், கற்றாழை நாற்றம்.
பட்டுக் கிடப்பானுக்கு வாழ்க்கைப் பட்ட நாள்முதல் நெட்டோட்டம் ஒழியக் குச்சோட்டம் இல்லை. 15265
பட்டுக் கிழிந்தால் தாங்காது; பங்கரைக்கு வாழ்வு வந்தால் நிற்காது.
பட்டுக்கு அழுவார், பணிக்கு அழுவார்; வையகத்தில் பாக்குக்கு அழுத பாபத்தைக் கண்டதில்லை.
(பாரதத்தை.)
பட்டுக் குலைந்தால் பொட்டு.
பட்டுக் கோட்டைக்கு வழி எது என்றால், கொட்டைப் பாக்குப் பணத்துக்குப் பத்து என்றாளாம்.
(நூறு பணம் என்றாளாம்.)
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு விலை என்ன என்றான். 15270
பட்டு நூல் தலை கெட்டாற் போல.
பட்டு நூலுக்குள்ளே சிக்கெல்லாம் இருக்கிறது.
பட்டுப் புடைவை இரவல் கொடுத்ததும் அல்லாமல் பாயையும் தூக்கிக் கொண்டு அலையலாயிற்று.
(பலகையையும் தூக்கிக் கொண்டு அலைந்தது போல.)
பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணையை எடுத்துக் கொண்டுதிரிவது போல.
பட்டுப் புடைவை கொடுத்துத் தடுக்கும் போடுகிறதா? 15275
பட்டுப் புடைவையில் ஊசி தட்டுகுவிப் பாய்ந்தாற் போல.
பட்டும் ஒன்று, பழுக்காயும் ஒன்றா?
பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும்? காற்காசுக் கந்தை ஓடி உலாவும்.
(பட்டாடையும், ஒரு காசு.)
பட்டும் பாழ்; நட்டும் சாவி.
பட்டு மட்கினாலும் பெட்டியிலே. 15280
(மட்கினால்.)
பட்டு மடிச்சால் பெட்டியிலே; பவிஷு குறைந்தால் முகத்திலே.
பட்டைக்குத் தகுந்த பழங்கயிறு.
பட்டை நாமத்தைப் பாக்கச் சாத்தினான்.
பட்டை பட்டையாய் விபூதி இட்டால் பார்ப்பான் என்று எண்ணமோ?
படர்ந்த அரசு, வளர்ந்த ரிஷபம். 15285
(திருவாவடுதுறையில்.)
படாத பாடு பதினெட்டுப் பாடும் பட்டான்.
படாள் படாள் என்கிற பாடகன் மகள் பாடையில் ஏறியும் பட்டானாம்.
படி ஆள்வார் நீதி தப்பின் குடி ஆர் இருப்பார் குவலயத்தில்,
படிக்கம் உடைந்து திருவுருக் கொண்டால் பணிந்து பணிந்து தான் கும்பிட வேண்டும்.
படிக்கிறது சிவ புராணம்; இடிக்கிறது சிவன் கோயில், 15290
(படிக்கிறது திருவாசகம்.)
படிக்கிறது திருவாய்மொழி; இடிக்கிறது. பெருமாள் கோயில்.
(படிக்கிறது ராமாயணம்.)
படிக்கிற பிள்ளை பாக்குப் போட்டால் நாக்குத் தடிப்பாயப் போம்.
படிக்கு அரசன் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.
படிக்குப் படி நமசிவாயம்.
(பிடிக்குப் பிடி.)
படிக்குப் பாதி தேறாதா? 15295
படிக்கும் மரக்காலுக்கும் இரண்டு பட்டை. பார்ப்பாரப் பையனுக்கு மூன்று பட்டை,
படித்த முட்டாள் படு முட்டாள்.
படித்த முட்டாளாக இருக்கிறான்.
படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்,
படித்தவன் பின்னும் பத்துப் பேர்; பைத்தியக்காரன் பின்னும் பத்துப் பேர். 15300
படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் கொக்குக்கும் அன்னத்துக்கும் உள்ள வித்தியாசம் போல.
படித்த வித்தை பதினெட்டும் பார்த்தான்.
(நாஞ்சில் நாட்டு வழக்கு.)
படித்துக் கிழித்தான்.
படித்துக் கெட்டவன் இராவணன்; படிக்காமல் கெட்டவன் துரியோதனன்.
படிதாண்டாப் பத்தினி. 15305
படிப்படியாகத்தான் ஏற வேண்டும்.
படித்தது ராமாயாணம்; இடிப்பது பெருமாள் கோவில்.
படிப்பது திருவாசகம்; இடிப்பது சிவன் கோயில்.
(படிப்பது வேதம்.)
படிப்பது வேதம்; அறுப்பது தாலி.
படிப்புக்கும் பதவிக்கும் சம்பந்தம் இல்லை. 15310
படுக்கப் படுக்கப் பாயும் பகை,
படுக்கப் பாயும் கொடான், நிற்க நிழலும் கொடான்.
(தூங்க இடமும் கொடான்.)
படுக்கைச் சுகம் மெத்தை அறியாது.
(அறியுமோ?)
படுக்கை உள்ளுக்கும் பட்சணம் வேணும்.
படுகளத்தில் ஒப்பாரியா? 15315
படுகளப்பட்ட பன்னாடை.
படுகுழி வெட்டினவன் அதிலே விழுவான்.
படுத்தால் பசி பாயோடே போய் விடும்.
படுத்திருப்பவன் எழுவதற்குள்ளே நின்றவன் நெடுந்துாரம் போவான்.
படுதீப் பட்டு வேகிற வீட்டில் படுத்துக் கொள்ள இடம் கேட்டானாம். 15320
படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும்.
படைக் களத்திலே ஒப்பாரி இடுகிறதா?
படைக்காமல் படைத்தானாம்; காடு மேடு எல்லாம் இழுத்து அடித்தானாம்.
படைக்கு ஒருவன்; கொடைக்கு ஒருவன்.
(படைக்கும் கொடைக்கும்.)
படைக்கு ஓடி வாழ்; பஞ்சத்துக்கு இருந்து வாழ், 15325
(ஓடிப் பிழை.)
படைக்குப் பயந்து செடிக்குள் ஒளிகிறதா?
படைக்குப் போகாதவர் நல்ல வீரர்.
படை கெட்டு ஓடுகையில் நரைமயிர் பிடுங்குகிறதா?
படைச்சாலுக்கு ஒரு பணம் இருந்தாலும் பயிர் இல்லாதவன் பாவி.
படைச்சாலுக்கு ஒரு பணம் கொடுத்தாலும் பயிரிடும் குடிக்குச் சரி ஆமா? 15330
படைத்த உடைமையைப் பாராமல் போனால் பாழ்.
படைத்தவன் காக்க வேண்டு.
படை பண்ணியும் பாழும் கோட்டை.
(பாழாம்.)
படை மிருந்தால் அரண் இருக்கும்.
(இல்லை.)
படை முகத்தில் ஒப்பாரியா? 15335
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
படையாது படைத்த மருமகளே. உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.
(மாமியாரே.)
படையிலும் ஒருவன்; கொடையிலும் ஒருவன்.
பண்டம் ஓரிடம்; பழி ஓரிடம்.
பண்டம் ஓரிடம்; பழி பத்திடம். 15340
பண்டாரத்துக்கும் நாய்க்கும் பகை.
பண்டாரம் என்றால் இலை போடும் ஆளா?
பண்டாரம் கூழுக்கு அழச்சே, லிங்கம் பரமான்னத்துக்கு அழுத கதை.
பண்டாரம் கூழுக்கு முன்றானையா?
பண்டாரம் படபடத்தால் பானைசட்டி லொடலொடக்கும். 15345
(பண்டாரம் பட் என்ன, லொடலொட என்று உடையாதா? குடு குடு என்ன.)
பண்டாரம் பழத்துக்கு அழும்போது பிள்ளை பஞ்சாமிர்தத்துக்கு அழுததாம்.
பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான்; லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறது.
பண்டாரம் பிண்டத்துக்கு அழுதானாம்; லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டதாம்.
பண்டாரமே, குருக்களே, பறைச்சி மூத்திரம் குடித்தவரே!
பண்டித வம்சம். 15350
பண்டிதன் பிள்ளை சும்பன்.
பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெற்குத்திப் பொங்கல் இடுகிறாள்.
பண்ணப் பண்ணப் பல விதம் ஆகும்.
பண்ணாடி படியிலே பார்த்தால், ஆண் நடையிலே பார்த்துக் கொள்வான். 15355
பண்ணாடிக்கு மாடு போன கவலை; சக்கிலிக்குக் கொழுப்பு இல்லையே என்ற கவலை.
பண்ணிப் பார்த்தாற் போல.
பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
பண்ணிய பாவத்துக்குப் பயன் அநுபவித்தாக வேணும்.
பண்ணிய பாவத்தைப் பட்டுத் தொலைக்க வேண்டும். 15360
பண்ணி வைத்தாற் போல, பையனுக்கு ஏற்றாற் போல.
பண்ணின பொங்கல் பத்துப் பேருக்குத்தான்.
பண்ணைக் காரன் பெண்டாட்டி பணியக் கிடந்து செத்தாளாம்.
பண்ணெக்காரன் பெண்டு பணியக் கிடந்து செத்தாளாம், பரியாரி பெண்டு புழுத்துச் செத்தான்.
(யாழ்ப்பாண வழக்கு.)
பண்ணைப் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை. 15365
பண்ணையார் வீட்டு நாயும் எச்சில் இலை என்றால் ஒருகை பார்க்கும்.
பண ஆசை தீமைக்கு வேர்.
பணக் கள்ளி பாயிற் படாள்.
பணக்கார அவிசாரி பந்தியிலே; ஏழை அவிசாரி சந்தியிலே.
(விபசாரி.)
பணக்காரத் தொந்தி. 15370
பணக்காரன் பின்னும் பத்துப் பேர்; பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
(பணக்காரனைச் சுற்றி பைத்தியக்காரனைச் சுற்றி.)
பணக்காரன் பின்னே பத்துப் பேர்; பரதேசி பின்னே பத்துப் பேர்.
பணக்காரனுக்குத் தகுந்த பருப்புருண்டை; ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை.
பணக்காரனுக்குத் தகுந்த மண் உண்டை; ஏழைக்குத் தகுந்த எள் உருண்டை.
பணக்காரனுக்குப் பச்சிலை மருந்து சொல்லாதே. 15375
பணக்காரனுடன் பந்தயம் போடலாமா?
பணக்காரனும் தூங்கமாட்டான், பைத்தியக்காரனும் தூங்கமாட்டான்.
பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.
பணத்துக்கு ஓர் அம்பு கொண்டு பாழில் எய்கிறது போல.
(பாழுக்கு எய்கிறதா? பாழுக்கு இறைத்தது போல.)
பணத்துக்குப் பயறு பத்துப்படி; உறவுக்குப் பயறு ஒன்பது படி. 15380
பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.
பணத்தைக் கொடுக்கச் சொல்லி உயிரை வாங்குகிறது.
பணத்தைக் கொடுத்தானாம்; காட்டைக் கேட்டானாம்.
பணத்தைக் கொடுத்துப் பணியாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்ன வேண்டுமோ?
பணத்தைக் கொடுத்துப் பழந் தொழி வாங்கு. 15385
பணத்தைப் பார்க்கிறதா? பழமையைப் பார்க்கிறதா?
பணந்தான் குலம்; பசிதான் கறி,
பணம் அற்றால் உறவு இல்லை; பசி அற்றால் ருசி இல்லை.
பணம் இருக்க வேணும்; இல்லா விட்டால் பத்து ஜனம் இருக்க வேணும்.
பணம் இருந்தால் பாட்சா; இல்லா விட்டால் பக்கிரி. 15390
(பாதுஷா.)
பணம் இல்லாதவன் பிணம்.
பணம் உண்டானால் படையையும் வெல்வான்.
பணம் உண்டானால் மணம் உண்டு.
(மனம்.)
பணம் என்றால் பிணமும் கை தூக்கும்.
(எழுந்திருக்கும்.)
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும. 15395
பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறான்.
(பறக்கிறது.)
பணம் என்ன செய்யும்? பத்து விதம் செய்யும்.
(பத்து வகை.)
பணம் என்ன பாஷாணம்; குணம் ஒன்றே போதும்.
பணம் கண்ட தேவடியாள் பாயிலே படுக்க மாட்டாள்.
பணம் குணம் ஆகும்; பசி கறி ஆகும். 15400
பணம் செல்லா விட்டால் அரிசிக்காரிக்கு என்ன?
பணம் பசியைப் போக்காது
பணம் பணந்தோடே சேரும்; இனம் இனத்தோடே சேரும்,
பணம் பந்தியிலே; குலம் குப்பையிலே,
(பந்தலிலே, குணம்.)
பணம் பாதாளம் மட்டும் பாயும். 15405
பணம் பார்த்துப் பண்டம் கொள்; குணம் பார்த்துப் பெண்ணைக் கொள்.
பணம் பாஷாணம்.
பணம் பெரிதா? குணம் பெரிதா?
பணம் பெரிதோ? பழமை பெரிதோ?
பணம் பெருத்தது நீலகிரி. 15410
பணம் போனால் சம்பாதிக்கலாம்; குணம் போனால் வராது.
பணம் போனாலும் குணம் போகாது.
பணம் வேண்டும்; அல்லது பத்துச் சனம் வேண்டும்.
பணமும் பத்தாய் இருக்க வேண்டும்; பெண்ணும் முத்தாய் இருக்க வேண்டும்.
(+முறையும் அத்தை மகளாய் இருக்க வேண்டும்.)
பணி செய்வோன் வாயும் சங்குப் பின்னுமாய்ப் பேசுகிறான். 15415
பணியாரம் தின்னச் சொன்னார்களா? பொத்த லை எண்ணச் சொன்னார்களா?
பணியாரமோ கிலுகிலுப்போ?
பக்தங்கி கல்யாணம் பகலோடே.
(புத்தங்கி-சாமவேதி.)
பத்தங்கியானையும் பலாக்காயையும் பார்த்த இடத்தில் சிராத்தம் பண்ணலாம்.
பத்தரை மாற்றுப் பசுந்தங்கம். 15420
பத்தாம் பசலிப் பேர் வழி.
பத்தாம் பேறு பாடையில் வைக்கும்.
பத்தாம் வீட்டைப் பார்ப்பான் பதவியைக் கொடுப்பான்.
(சோதிடம்)
பத்தியத்திற்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால் பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டு வருகிறான்.
(பால் வாங்கி வா என்றால்)
பத்தியம் இருந்தாலும் மருந்து எதற்கு? பத்தியம் இல்லா விட்டாலும் மருந்து எதற்கு? 15425
பத்தியம் பத்து நாள்; இளம் பிள்ளை இரண்டு மாதம்.
பத்திய முறிவுக்குப் பாகற்காய்.
பத்திரம், என் வாசலில் அடி வைக்காதே.
(கால்)
பத்திரிகை படியாதவன் பாதி மனிதன்.
பத்தில் குரு வந்தபோது பரமனும் பிச்சை எடுத்தான். 15430
பத்தில் பசலை; இருபதில் இரும்பு.
(இரும்பு)
பத்தில் பார்வை; இருபதில் ஏற்றம்; முப்பதில் முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம்.
பத்தில் விழுந்த பாம்பும் சாகாது.
பத்தினி என்ற பெயரோடே பத்துப் பிராயம் கழித்தாளாம்.
பத்தினிப் பானை படபடவென வெடிக்கிறது. 15435
பத்தினிப் பெண்ணைப் பதற்றமாய்ப் பேசாதே.
பத்தினி படாபடா என்றாளாம், பானைசட்டி லொட லொட என்றனவாம்.
பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் கெட்டதும்.
(பட்டதும்.)
பத்தினியைப் பஞ்சணையில் வைத்துக் கொள்.
பத்தினி வாக்குப் பலிக்கும் 15440
பத்தினி வாக்குக்குப் பழுது வராது.
பத்தினி வாக்கும் உத்தமி வாக்கும் பலித்தே விடும்.
பத்து அடி பிள்ளை, எட்டு அடி வாழை.
(பிள்ளை-தென்னம்பிள்ளை.)
பத்து அரிசியும் வேகவில்லை, பாவி என் பிராணனும் போக வில்லை.
(பிராமணனும்)
பத்து ஆண்டிக்கு ஒருவன் பாதக் குறட்டாண்டி, 15445
பத்து ஆனாலும் பதற்றம் வேண்டாம்; அஞ்சு ஆனாலும் அவசரம் வேண்டாம்.
பத்து இறுத்த பின்பு பாரச் சந்தேகம் தீர்ந்தது.
பத்து இறுத்தாலும் பராச் சத்தேகம் தீராது.
பத்து உள்ள என் தம்பி, பணமுள்ள என் தம்பி, காசுள்ள என் தம்பி, கணக்கப் பிள்ளை உன்தம்பி.
பத்து ஏர் வைத்துப் படி முறமும் தோற்றேன்; எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்? 15450
(விவசாயி ஜைனவிக்கிரகத்தைப் பார்த்துக் கேட்டது. படைமுறமும்.)
பத்துக் கப்பல் வந்தாலும் பறந்த கப்பல்; எட்டுக் கப்பல் வந்தாலும் இறந்த கப்பல்.
பத்துக் காதம் போனாலும் பழக்கம் வேண்டும்.
பத்துக் குட்டி அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.
பத்துக் குடியைக் கெடுத்தவன் பணக்காரன்.
பத்துக்குப் பத்தரை விற்றால் ஒரு பள்ளிக் குடும்பம். 15455
(பள்ளிக் குப்பம்.)
பத்துக்குப் பின் பயிர்.
பத்துக்கு மிஞ்சின பதி விரதை எது?
(பத்துக்கு மேல்- இல்லை.)
பத்துக்கு மேலே ஒரு பறையனுக்காவது தள்ள வேண்டும்.
பத்துப் பணம் கையில் தந்தால் பதிவிரதையும் வசப்படுவாள்.
பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது. 15460
பத்துப் பணம் வேணும்; இல்லாவிட்டால் பத்து ஜனம் வேணும்.
பத்துப் பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கிக் காட்டினாளாம்.
(யாழ்ப்பாண வழக்கு.)
பத்துப் பேர் கண்ட பாம்பு சாகாது.
பத்துப் பேர் மருத்துவச்சிகள் கூடிக் கொண்டு குழந்தை கையை ஒடித்தார்கள்.
பத்துப் பேர் மெச்சப் படிக்கிறதிலும், ஆயிரம் பேரை அடிக்கிறதிலும், நாலு பேர் மெச்ச நடிக்கிறதிலும், மிடாமிடாவாகக் குடிக்கிறதே கெட்டிக்காரத்தனம். 15465
பத்துப் பேருக்குப் பல் குச்சி; ஒருவனுக்குத் தலைச்சுமை.
பத்துப் பேரைக் கொன்றவன் பரியாரி,
(வேரை, பரியாரி வைத்தியன்.)
பத்துப் பேரோடு பதினோராம் பேராய் இருக்க வேணும்.
பத்தும் தெரிந்தவன் பல்லக்கு ஏறுவான்; சூனியமானவன் சுமந்து செல்வான்.
பத்து மாட்டில் கட்டுக்கு அடங்காதவன். 15470
பத்து மிகை இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்.
(மிளகு.)
பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது; ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது.
(அஞ்க வந்தாலும் அவசரம்.)
பத்து வயதானால் பறையனுக்காவது பிடித்துக் கொடுக்க வேண்டும்.
பத்து வயதிலே பாலனைப் பெறு.
பத்து வராகன் இறுத்தோம்; என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே. 15475
பத்து வராகனுக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை.
பத்து வருஷம் கெட்டவன் பருத்தி விதை; எட்டு வருஷம் கெட்டவன் எள் விதை.
பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக்கூடாது.
பத்து விரலாலே வேலை செய்தால் ஐந்து விரலால் அள்ளிச் சாப்பிடலாம்.
(பத்து விரலாலே பாடுபட்டால்)
பத்தூர் பெருமாளகரம்; பாழாய்ப் போன கொரடாச்சேரி; எட்டூர் எருமைக் கடா? இழவெடுத்த நாய். 15480
பத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தையிலே வைத்தால் அது பத்தையைப் பத்தையைத்தான் நாடும்.
(யாழ்ப்பாண வழக்கு)
பத்தோடே பதினொன்று; அத்தோடே இது ஒன்று
பத்மாசுரன் பரீட்சை வைத்தது போல.
பதக்குக் குடித்தால் உழக்குத் தங்காதா?
பதக்குப் போட்டால்முக்குறுணிஎன்றானாம். 15485
பதத்துக்கு ஒரு பருக்கை.
பதம் கெட்ட நாயைப் பல்லக்கில் வைத்தால் கண்ட இடமெல்லாம் இறங்கு இறங்கு என்னுமாம்.
பதமாய்ச் சிநேகம் பண்ண வேண்டும்.
(செய்ய வேண்டும்)
பதவி தேடும் இருதயம் போல.
பதறாத காரியம் சிதறாது. 15490
பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப் போகும்.
பதறின காரியம் பாழ்.
பதனம் பத்துக்கு எளிது.
(பத்துக் கழஞ்சு)
பதி இல்லாத பூனை பரதேசம் போயிற்றாம், நெத்திலி மீனை வாயிலே கவ்விக் கொண்டு,
பதிவிரதா பத்தினி கதை கேட்டு வந்தேன்; பட்டுக் கிடப்பாய் காலை மடக்கு. 15495
பதிவிரதை ஆனால் தேவடியாள் வீட்டிலும் தங்கலாம்.
பதிவிரதைக்குப் பர்த்தாவே தெய்வம்.
பதிவிரதையைக் கெடுக்கப் பதினைந்து பொன்.
பதின்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.
பதின்காதம் போனாலும் பழக்கம் வேண்டும், 15500
பதின்மர் பாடும் பெருமாள்.
பதினாயிரம் கொடுத்தாலும் பதைபதைப்பு ஆகாது.
பதினாறு பல்லில் ஒரு நச்சுப் பல் இருக்கும்.
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்.
பதுங்குகிற புலி பாய்ச்சலுக்கு அடையாளம். 15505
(பதுங்குகிறதெல்லாம்)
பதுமை போல நடிக்கின்றான்.
பத்தடி போல் துள்ளிப் பரிதவிக்கிறது.
பத்தைக் கண்டு பயந்த ஆனை போல.
பந்தம் கெட்டு மோட்சம் காணி யாட்சி ஆகும்.
பந்தம் சொன்னால் படைக்கு ஆகார், 15510
பந்தமும் கூத்தும் விடிந்தால் தெரியும்.
பந்தல் இல்லாத வாழைக்காய் பரப்பிக் கொண்டு ஆடுதாம்.
பந்தல் பரக்கப் போட்டான் சந்திரநாதன்; வந்தி நெருங்க வைத்தான் பத்திர பாகு.
பந்திக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறதாம்.
(தொங்கவா?)
பந்திக்கு முந்த வேண்டும்; படைக்குப் பிந்த வேண்டும். 15515
(பந்திக்கு முந்திக்கொள்)
பந்திக்கு வேண்டாம் என்றால் இலை பீற்றல் என்றானாம்.
(பொத்தல் என்றான்)
பந்தியில் உட்காராதே என்றால் இலை பீற்றல் என்றானாம்.
(பொத்தல் என்றான்)
பப்பு மிஞ்சினால் உப்பு; உப்பு மிஞ்சினால் பப்பு.
பம்பரமாய் ஆட்டி வைக்கிறார்.
பயணக்காரன் பைத்தியக்காரன். 15520
பயந்த மனுஷி பரிமாறப் போனாளாம்; பந்தியில் இருந்தவர்கள் எல்லாம் எடுத்தார்கள் ஓட்டம்.
(பரிமாற வந்தாள். இருந்தவர்கள் எல்லாம் எழுந்து போய் விட்டார்கள்.
இருந்த ஆண்கள் எல்லாம்.)
பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
பயம் உள்ளவரை ஜயம் இல்லை.
பயல் சரண் உயரம்; பழையது முழ உயரம்.
பயற்றங்கூழுக்குப் பங்கு இழந்தவன் கதைபோல. 15525
பயற்றம் பருப்புப் பத்தியத்துக்கு.
பயறு பயறு என்ற பிள்ளை பசறு பசறு என்கிறது.
(என்கிறதாம்.)
பயிர் கிளைத்தால் ஆச்சு; களை கிளைத்தால் போச்சு.
பயிர் செழிக்கப் பார் செழிக்கும்.
பயிர் பலிக்கும் பாக்கியவானுக்கு; பெண்டு பலிக்கும் புண்ணியவானுக்கு. 15530
பயிருக்குக் களை எடுத்தாற்போல.
பயிரைக் கொடுத்துப் பழந்தொழி வாங்கு.
(பழம் புழுதி.)
பயிரை வளர்ப்பான் உயிரை வளர்ப்பான்.
பர்த்தாவும் பார்த்திருக்கப் புத்திரனும் கொள்ளி வைக்க.
(சுமங்கலியாகச் சாதலைக் குறிப்பது.)
பரக்கத் தலை விரித்துப் பட்டினியாச் சீராட்டி. {{float_right|15535}
பரக்கப் பரக்க அலைந்தாலும் இருக்கிறதுதான் இருக்கும்,
பரக்கப் பரக்கப் பாடுபட்டும் படுக்கப் பாய் இல்லை.
பரணி அடுப்புப் பாழ் போகாது.
பரணியான் பாரவன்.
பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான். 15540
பரத்தைக்குக் கொடுக்கும் பணத்தைக் குடிப் பெண் வாங்கிக் குலம் கெடுவாளா?
பரதம் எப்படி, பக்தர்கள் அப்படி.
பரதவர் சேரியில் பரிமளப் பொருள் விற்றது போல்,
பரதேசிக்குச் சுடு சோறு பஞ்சமா?
பரதேசியின் நாய்க்குப் பிறந்த ஊர் நினைவு வந்தது போல. 15545
பரப்பான் பயிர் இழந்தான்; இரப்பான் சுகம் இழந்தான்.
பரப்பிரமத்தை தியானம் செய்வதனால் பிரகாசிக்காமல் இருந்த விஞ்ஞானமும் பிரகாசிக்கிறது.
பரபரப்பிலே பாழும் சுடலை ஆச்சு.
பரபோகம் தேடி, இக போகம் நாடி, வாழ்க்கை பெற வேண்டும்.
பரம்பரை ஆண்டியோ? பஞ்சத்துக்கு ஆண்டியோ? 15550
பரிக்கு இடும் கடிவாளத்தை நரிக்கு இடுகிறது.
பரிகாசப்பட்டவனைப் பாம்பு கடித்தாற்போல.
பரிகாரி உறவு தெருவாசல் மட்டும்.
பரிகாரி கடை கொள்ளப் போன கதை.
பரிகாரி தலைமாட்டிலிருத்து அழும் தன்மை போல. 15555
பரிசத்துக்கு அஞ்சிக் குருட்டுக் கன்னியைக் கொண்டது போல.
பரிசத்துக்கு லோபி இழிகண்ணியைக் கொண்டானாம்.
(பரிசத்துக்குப் பால் மாறி.)
பரிசு அழிந்தாரோடு தேவரும் ஆற்றிலர்.
(பழமொழி நானூறு.)
பரிந்த இடம் பாழ்.
பரிந்து இட்ட சோறு பாம்பாய்ப் பிடுங்குகிறது. 15560
பரிந்து இடாத சோறும் சொரிந்து தேய்க்காத எண்ணெயும் பாழ்.
பரிவு இல்லாப் போசனத்தில் பட்டினி நன்று; பிரியம் இல்லாப் பெண்டிரிற் பேய் நன்று.
பருத்தவள் சிறுப்பதற்குள் சிறுத்தவள் செத்துப் போவாள்.
பருத்தி உழுமுன்னே தம்பிக்கு எட்டு முழம்.
பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன? 15565
(என்ன வேலை?)
பருத்திக் காடு உழுகிறதற்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம்.
பருத்திக் கொட்டை பழம் புளி.
(-உபயோகம் அற்றவை.)
பருத்திச் செடி புடைவையாய்க் காய்த்தது போல.
பருத்திச் செடியும் பாலும் உள்ளானுக்குப் பஞ்சம் இல்லை.
பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறி போல. 15570
பருத்தி பட்ட பாடு எல்லாம் படுகிறது.
பருத்தி புடைவை புடைவையாய்க் காய்த்தாற் போல.
பருத்தி புடைவையாய்க் காய்த்தால் எடுத்து உடுத்தல் அரிதா?
பருத்தி விதைக்கும் போதே, அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்றாளாம்.
பருந்தின் கழுத்தில் பவளத்தைக் கட்டினால் கருடன் ஆகுமா? 15575
பருந்து எடுத்துப் போகுதென்று பார்க்க வந்தனையா? இந்தக் குரங்கு எடுத்துப் போடுதே கோவிந்தா!
பருப்பிலே நெய் விட்டது போல.
(வார்த்தது போல.)
பருப்பு இல்லாமல் கல்யாணமா?
(கல்யாணம் உண்டா?)
பருப்புச் சோற்றுக்குப பதின்காதம் வழி போவான்.
பருப்புத் தின்ற பண்டிதன் போல். 15580
பருப்புத் தின்னிப் பார்ப்பான்.
பருப்புத் தேங்காய் இல்லாமல் கல்யாணமா?
பருப்பும் அரிசியும் கலந்தாற்போலப் பெண்ணும் பிள்ளையும்.
பருப்பும் பச்சரிசியும்.
பருமரத்திலே சிறு காய் எடுத்தாற் போல. 15585
பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது.
பருமரத்தைச் சேர்ந்தால் பல்லியும் பொன் நிறம் ஆகும்.
பருவத்தில் பெற்ற சேயும் புரட்டாசி பாதிச் சம்பா நடுகையும்,
பருவத்தே பயிர் செய்.
பருவத்தோடு ஒத்து வாழ். 15590
பருவம் தப்பினால் பனங்கிழங்கும் நாராகும்.
(பருவத்துக்கு.)
பருவம் வந்தால் பன்றிக் குட்டியும் நன்றாகும்.
பரோபகாரம் இதம் சரீரம்.
பரோபகாரமே பெரிது.
பல் அசைந்தால் பசி தீரும். 15595
(ஆறும்.)
பல் ஆடப் பசி ஆறும்.
பல் இழந்தான், சொல் இழந்தான்.
பல் முந்தினால் சொல் பிந்தும்; சொல் முந்தினால் பல் பிந்தும்.
(யாழ்ப்பாண வழக்கு.)
பல்லக்கில் போகும் நாய் ஆனாலும் எச்சில் இலையைக் கண்டால் விடுமா? 15600
பல்லக்கு ஏறப் போகம் உண்டு; உன்னி ஏறச் சீவன் இல்லை.
(பலம், சக்தி.)
பல்லக்கு ஏறுவதும் நாவாலே; பல் உடைபடுவதும் நாவாலே.
பல்லக்கு ஏறுவோரும் பல்லக்குச் சுமப்போரும் அவரவர் செய்த நல்வினை, தீவினையே.
பல்லக்கு வருகிறதும் வாயினாலே; பல்லுப் போகிறதும் வாயினாலே.
பல்லாண்டு விளைந்த நிலம். 15605
(-மதுரை.)
பல்லாய் இல்லாமல் பால் கறப்பான்.
பல்லி சொல்வதெல்லாம் நல்லது; முழுகுவதெல்லாம் கழுநீர்ப்பானை.
பல்லில் பச்சரிசி வைக்க.
பல்லுக்கு எட்டாத பாக்கும், பக்கத்துக்கு எட்டாத அகமுடையானும் விண்.
பல்லுத் தேய்த்தற்குப் பதக்கு நெல் கொடுத்தேன். 15610
பல்லுப் பிடுங்கின பாம்பு போல.
பல்லுப் பெருத்தால் ளொள்ளும் பெருக்கும்.
பல்லுப் போனால் சொல்லும் போச்சு.
(பல்லுப் போச்சு, பழைய சொல்லும் போச்சு.)
பல்லுப் போனாலும் ளொள்ளும் போகாது.
பல்லும் பவிஷும். 15615
பல்லைக் காட்டிச் சிரிக்காதே.
பல்லைக் காட்டிப் பரக்க விழிக்காதே.
(காட்டிப் பரிதவிக்கிறது.)
பல்லைக் குத்தி மோந்து பார்த்தால் தெரியும் நாற்றம்.
பல்லைக் குத்தி மோந்து பார்த்தால் போலே.
பல்லைத் தட்டித் தொட்டிலிலே போடு. 15620
பல்லைப் பல்லை இளித்தால் பறையனும் மதிக்கமாட்டான்.
பல்லைப் பிடுங்கின பாம்பு போல.
பல் வரிசை இரண்டுக்கும் நடுவில் பதுங்கிவிட்ட நாக்குப் போல.
பல்விழுந்த புடையன்.
பல் விழுந்த புடையனுக்குக் கிருதா. 15625
பல உமி தின்றால் ஓர் அவல் தட்டாதா?
(ஓர் அவிழ் தட்டும்.)
பல எலி கூடினால் புற்று எடுக்காது.
(யாழ்ப்பாண வழக்கு.)
பல கரும்பிலும் ஒரு கைவெட்டு.
பலசரக்குக் கடைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்தது போல.
பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு. 15630
பலத்தவனுக்கு மருத்து சொன்னால் பிடுங்கிக் கொடுத்துத் தீர வேண்டும்.
பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.
பல துளி ஆறாய்ப் பெருகும்.
பல துளி பெரு வெள்ளம்.
பல தொல்லைக்காரன். 15635
பல நாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல நாளை வெயில் ஒறுத்தாலும் ஒரு நாளை மழை ஒறுக்காதே.
பல பாளம் தீர ஒரு புண்ணியமாகிலும் பண்ண வேண்டும்.
பல பிச்சை ஆறாய்ப் பெருகும்.
பல பீற்றல் உடையான் ஒரு பீற்றல் அடையான். 15640
பலம் தேயப் போய்ப் பழி வந்து சேர்ந்தது போல.
(பலன்.)
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
பல மரம் கண்டவன் ஒரு மரமும் ஏறப் போவதில்லை.
பல முயற்சி செய்யினும் பகவான்மேல் சிந்தைவை.
பலர் கண் பட்டால் பாம்பும் சாகும். 15645
பல வாய்க்கால் ஆறாய்ப் பெருகும்.
பல வீட்டு உறவு முறை பட்டினி,
பல வீட்டுப் பிச்சை ஒரு வீட்டுச் சோறு.
பலவும் தின்றால் ஓர் அவல் தட்டாதா?
பலன் இல்லாப் பல நாளிலும் அறம் செய்த ஒரு நாள் பெரிது. 15650
பலன் தேடப் போய்ப் பழி வந்து நேர்த்தது போல,
பலா உத்தமம்; மா மத்திமம்; பாதிரி அதமம்.
பலாக் காயையும் சாம்பானையும் கண்ட இடத்தில் வெட்டு.
(சாமானையும்.)
பலாப் பழத்துக்கு ஈப் பிடித்து விடுவார் உன்டோ?
(ஈ பிடித்து விடவேண்டுமா.)
பலாப் பிஞ்சு கண்ட இடத்திலே திவசம் செய்ய வேண்டும். 15655
பலிக்குப் போகிற ஆடுபோலே.
பவிசு கெட்ட பாக்கு வெட்டிக்கு இரு புறமும் தீவட்டியாம்.
(பாட்டிக்கு.)
பழக்கம் கொடியது. பழக்கம் வழக்கம்.
பழக்கமேணும் சரசம் இன்றி ரவிக்கையில் கைபோடக் கூடாது. 15660
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பழகாத நாய்மாதிரி விழுகிறான்.
பழகிய பகையும் பிரிவு இன்னாது.
(நற்றிணை.)
பழங்கணக்குப் பருத்தி விதைக்கும் ஆகாது.
பழங்காலைத் தூர்க்காதே; புதுக்காலை வெட்டாதே. 15665
(தூர்க்கவும் வேண்டாம்)
பழத்திலே பழம் மிளகாய்ப் பழம்.
பழத்துக்குத் தெரியும்; வௌவாலுக்குத் தெரியும்.
பழந்தீர் மரவயிற் பறவை போல.
பழந் தேங்காயிலேதான் எண்ணெய்.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது; அதுவும் நழுவி வாயில் விழுந்தது. 15670
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல.
பழம்பகை நட்பாதல் இல்.
(பழமொழி நானுாறு.)
பழம் பழுத்தால் கொம்பில் தங்காது.
பழம் புண்ணாளி பாதி வைத்தியன்.
(பர்யாரி.)
பழமும் தின்று கொட்டையும் போட்டான். 15675
பழமை பாராட்ட வேண்டும்.
பழமை பாராட்டினால்தான்.
பழமொழியில் உமி இல்லை.
பழி ஓரிடம், பாரம் ஓரிடம்.
பழி ஓரிடம், பாவம் ஓரிடம். 15680
பழிக்கு அஞ்சாதவன் கொலைக்கு அஞ்சுவானா?
பழிக்கு அஞ்சு; பாவத்துக்கு அஞ்சு.
பழிக்கு ஆனோர் சிலர்; பழிக்கப் படுவோர் சிலர்.
பழிக்குப் பழி.
பழித்தார் தலையில் பாடு வரும். 15685
பாமுனை பகரேல்.
பழி போட்டுத் தலை வாங்குகிற ஜாதி.
பழி விட்டுப் போகாது.
பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரித்ததாம்.
(பழ இலையை, பச்சை இலை சிரித்ததாம்.)
பழுத்த பழம் போல. 15690
பழுத்த பழம் வௌவாலை அழைக்குமா?
(அழைக்குமாம்.)
பழுத்தல் இல்லாத துணிவு பாரம் இல்லாத கப்பல்.
பழுத்துக் கெடுப்பது பாகல்; பழுக்காமல் கெடுப்பது இரத்தக் கட்டி.
பழுது செய்ததை அறிக்கையிடில் பாதி நிவர்த்தி.
பழுதை என்று கிடக்கப்படவும் இல்லை; பாம்பு என்று நினைக்கப் படவும் இல்லை. 15695
பழுதை என்று மிதிக்கவும் முடியாது; பாம்பு என்று தாண்டவும் முடியாது.
பழுதை பாம்பாய்த் தோன்றுவது போல.
பழுதையைப் பார்த்துப் பாம்பு என்கிறான்.
பழைய ஆத்தியை உருவத் தெரியும்; பருப்புச் சட்டியைக் கழுவத் தெரியும்; அவிட்டத்திற்கு ஆக்கத் தெரியும்.
(ஆத்தியை உருக்கத் தெரியும்.)
பழைய கறுப்பன் கறுப்பனே; பழைய மண் கிண்ணி கிண்ணியே. 15700
பழைய குருடி கதவைத் திறடி.
பழையது சாப்பிட்டுப் பள்ளிக்குப் போகச் சொன்னால் சுடு சோற்றைத் தின்று விட்டுச் சுற்றிச் சுற்றி வருகிறான்.
பழையது போடு; உனக்குப் பசியா வரம் தருகிறேன்.
பழையது மிகுந்த இடமே சாணியாட்சி.
பழைய நினைப்படா பேராண்டி. 15705
பழைய பகையை எண்ணிப் பழ முள்ளுக் கிளையாதே.
பழைய பெருச்சாளி.
பழைய பொன்னனே பொன்னன்; பழைய கப்பறையே கப்பறை.
பழையனூர் நீலி பரிதவித்து அழுதது போல.
பள்ளத்தில் இருக்கிறவன் பள்ளத்திலே இருப்பானா? 15710
பள்ளத்தில் இருந்தால் பெண் சாதி; மேட்டில் இருந்தால் அக்காள்,
(பெண்டாட்டி, மேட்டில் ஏறினால் தாயார்.)
பள்ளத்துாரான் போனதே போக்கு.
பள்ளத்தைக் கண்டால் பாய்ந்தோடும் தண்ணீர் போல,
பள்ளம் இருந்தால் தண்ணீர் தங்கும்.
(பள்ளம் உள்ள இடத்தில்.)
பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டு போவான். 15715
(போகிறான்.)
பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்.
(பள்ளம் கண்ட.)
பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்; பயம் உள்ள இடத்திலே பழி போம்.
(கண்ட இடத்திலே.)
பள்ளம் மேடு இல்லாமல் பருத்தி விதைக்கிறது.
(விளைக்கிறது.)
பள்ள மடையில் பாய்ச்சிய நீர் போல.
பள்ளனுக்குப் பல் தேய்த்தால் பசிக்கும்; பார்ப்பானுக்குக் குளித்தால் பசிக்கும். 15720
பள்ளி ஒளித்திரான்; பார்ப்பான் குளித்திரான்.
பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது.
(கணக்கன் உதவான்.)
பள்ளிக்கு ஓர் இடம் எச்சில்; பார்பானுக்குக் கண்ட இடம் எல்லாம் எச்சில்,
பள்ளிக் குப்பத்து அப்பட்ட வாத்தியார்.
(பள்ளிக்குப்பத்துக்கு அம்பட்டன் வாத்தியார்.)
பள்ளிக்குப் பத்து மனை. 15725
பள்ளிக்குப் பல்லு. பார்ப்பானுக்கு முழுக்கு.
பள்ளிக்கும் இரும்புக்கும் பதம் பார்த்து அடி.
பள்ளிக்கும் நாய்க்கும் பதம் பார்த்து அடிக்க வேண்டும்.
பள்ளிக்கு வைக்காமல் கொள்ளிக்கு வைத்தான்.
(குறைத்து வைத்தார்.)
பள்ளிக்கூடத்துக்குப் போனால் வாத்தியார் அடிப்பார். 15730
பள்ளிக்கூடம் போகிறதற்கு முன்னே பயறு பயறு என்று சொன்னதாம்; பள்ளிக்கூடம் போன பிறகு பசறு பசறு என்றதாம்.
பள்ளி கெட்டால் பத்துச் சேர் மண்வெட்டி; பார்ப்பான் கெட்டால் சத்திரம் சாவடி.
பள்ளி கையில் பணம் இருந்தால் பாதி ராத்திரியில் பாடுவான்.
பள்ளி கொழுத்தால் பாயில் தங்கமாட்டான்; நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.
பள்ளிச் சிநேகிதம் பசுமரத்தாணி. 15735
பள்ளி தேய்த்திருக்கான்; பார்ப்பான் குளித்திருக்கான்.
பள்ளிப் பிள்ளை என்றால் செல்வம் குறையுமா?
(செல்லம்.)
பள்ளிப் பிள்ளைக்குப் பகுத்தறிவு ஏது?
பள்ளி பாக்குத் தின்றால் பத்து விரலும் சுண்ணாம்பு,
பள்ளி புத்தி பறையன் பானையிலே, 15740
பள்ளி மச்சான் கதை போல.
பள்ளி முத்தினால் படையாச்சி.
பள்ளியை நினைத்துப் பாயில் படுத்தால் பரமசிவன் போல் கனவு வரும்.
(பிள்ளை வரம்)
பள்ளியையும் இரும்பையும் பதம் பார்த்து அடி.
பள்ளியையும் பனங்காயையும் பதம் பார்த்து அடிக்கவேண்டும். 15745
பள்ளி வாழ்வு பத்து வருஷம்; பார்ப்பான் வாழ்வு முப்பது வருஷம்,
பள்ளி வெற்றிலை போட்டால் பத்து விரலும் சுண்ணாம்பு.
பள்ளி வைத்திய நாதன் கோயில்.
பள்ளுப் பறை பதினெட்டுச் சாதி.
பளியரிடம் புனுகு விற்றது போல. 15750
பற்றாததற்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திர நேரம் குடை.
(யாழ்ப்பாண வழக்கு, பற்றாப் பொறுக்கிக்குப் பவிசு வந்தால் பாதி ராத்திரியிலே குடை.)
பற்றுக் கோலுக்கு என்று பிடித்தால் அரிவாள் பிடிக்கு வந்துநிற்கும்.
பற்றுப் பறக்கடிக்கும்; எச்சில் இரக்கப் பண்ணும்.
பற்று விட்டால் சித்தி.
(சித்து.)
பறக்கிற குருவி சிறகிலே இறை கொண்டு போமா? 15755
பறக்கிற பட்சிக்கு எது தூரம்?
பறக்கும் காகத்துக்கு இருக்கும் கொம்பு தெரியாது.
(தெரியாதா?)
பறக்கும் குருவிக்கு இருக்கும் கொம்பு தெரியாது; பரதேசிக்குத் தங்கும் இடம் தெரியாது.
(குருவிக்கு இருக்கும் இடம்)
பறக்கையில் தெரியாதா காக்கையின் முடுக்கு. 15760
(புடுக்கு.)
பறங்கிக்காய் அழுகலைப் பசுவுக்குப் போடு; பசுவுத் தின்னா விட்டால் பார்ப்பானுக்குக் கொடு.
பறங்கிக் காய் திருடினவன் தோளைத் தடவிப் பார்த்தது போல,
பறங்கிக்குத் தெரியுமா சடங்கும் சாஸ்திரமும்?
பறங்கி நல்லவன்; பிரம்பு பொல்லாதது.
பறந்து பறந்து பாடுபட்டாலும் பகலுக்குச் சோறு இல்லை. 15765
பறந்து போகிற எச்சில் இலைமேல் கல்லைத் தூக்கி வைத்தாற்போல,
(பாறாங்கல்லை.)
பறந்து போகிற காகமும் பார்த்து நின்று பறந்து போகும்.
பறப்பான் பயிர் இழந்தான்; அறக் காஞ்சி பெண்டு இழந்தான்.
பறவை பசித்தாலும் எட்டிக் கனியைத் தின்னாது.
பறிகொடுத்த கட்டில் பயம் இல்லை. 15770
பறி நிறைந்தால் கரை ஏறுவேன்.
பறைக்குடி நாய் குரைத்தால் பள்ளக்குடி நாயும் குரைக்கும்.
பறைச்சி பிள்ளையைப் பள்ளிக்கு வைத்தாலும் பேச்சிலே ஐயே என்னுமாம்.
பறைச்சி பெண் ஆனாலும் துடைத்துவிட்டாற் போல் இருக்கிறது.
பறைச்சி முலை அழகு; பாப்பாத்தி தொடை அழகு; கோமுட்டிச்சி குறி அழகு. 15775
பறைச்சி வெற்றிலை போட்டால் பத்து விரலும் சுண்ணாம்பு.
பறைச்சேரி அழிந்தால் அக்கிரகாரம்.
பறைச்சேரி நாய் குரைத்தால் பள்ளச்சேரி நாயும் குரைக்கும்.
பறைச்சேரி மேளம் கல்யாணத்துக்குக் கொட்டும்; கல்லெடுப்புக்கும் கொட்டும்.
பறைச்சேரியில் முளைத்த வில்வமரம் போல. 15780
(பறைத் தெருவில் வில்வம் முளைத்தது போல.)
பறை தட்டினாற் போல.
பறைந்த வாயும் கிழிந்த சீலையும் கிடவா.
(யாழ்ப்பாண வழக்கு.)
பறைப்பாட்டுக்கும் பறைப் பேச்சுக்கும் சுரைப் பூவுக்கும் மணம் இல்லை.
பறைப் பிள்ளையைக் கொண்டு போய்ப் பள்ளிக்கூடத்தில் வைத்தாலும் அணை என்கிற புத்தி போகாது.
(எதற்கும் அணை என்பதைச் சேர்த்துப் பேசுவார்கள். கொங்கு நாட்டு வழக்கு.)
பறைப் புத்தி அரைப் புத்தி. 15785
பறைப் பூசம்.
பறையரிலே சிவத்தவனையும் பார்ப்பானிலே கறுத்தவனையும் நம்பக் கூடாது.
பறையன் பாக்குத் தின்பதும் பறைச்சி மஞ்சள் குளிப்பதும் அறிப்பும் பறிப்பும் மட்டும்.
பறையன் பொங்கல் போட்டால் பகவானுக்கு ஏலாதோ?
(ஏறாதோ?)
பறையன் வளர்த்த கோழியும் பார்ப்பான் வளர்த்த வாழையும் உருப்படா. 15790
பறையன் வீட்டில் பால் சோறு ஆக்கி என்ன? நெய்ச் சோறு ஆக்கி என்ன?
பறையனுக்குக் கல்யாணமாம்; பாதி ராத்திரியிலே வாண வேடிக்கையாம்.
பறையனுக்குப் பட்டால் தெரியும்; நண்டுக்குச் சுட்டால் தெரியும்.
பறையனுக்கு வரிசை வந்தால் பாதி ராத்திரியிலே குடை பிடிப்பான்.
பறையனுக்கு வள்ளுவன் பாதிச் சைவன். 15795
பறையனும் பார்ப்பானும் போல,
பறையனை நம்பு; பார்ப்பானை நம்பாதே.
பறையனைப் போல் பாடுபட்டுப் பார்ப்பானைப் போல் சாப்பிட வேண்டும்.
பறையைப் பள்ளிக்கு வைத்தாலும் துறைப் பேச்சுப் போகுமா?
பறை வேலை அரை வேலை. 15800
பன்றிக் குட்டி ஆனை ஆகுமா?
பன்றிக் குட்டிக்கு ஒரு சந்தி ஏது?
பன்றிக் குட்டிக்குச் சங்கராந்தி ஏது?
(சோமவாரமா?)
பன்றிக்குட்டி பருத்தால் ஆனைக்குட்டி ஆகுமா?
பன்றிக்குத் தவிடு வைக்கப் போனாலும் உர் என்கிறது; கழுத்து அறுக்கப் போனாலும் உர் என்கிறது. 15805
பன்றிக்குத் தவிடு வைப்பது தெரியாது; கழுத்தை அறுப்பதும் தெரியாது.
பன்றிக்குப் பல குட்டி; சிங்கத்துக்கு ஒரு குட்டி.
பன்றிக்குப் பின் போன கன்றும் மலம் தின்னும்,
(பசுங்கன்றும்.)
பன்றிக்கும் பருவத்தில் அழகிடும்.
பன்றி பட்டால் அவனோடே; காட்டானை பட்டால் பங்கு. 15810
பன்றி பல ஈன்று என்ன ஆனைக்குட்டி ஒன்று போதாதா?
(குஞ்சரம் ஒன்று போதும்.)
பன்றி பல குட்டி; சிங்கம் ஒரு குட்டி.
பன்றி பல குட்டி போட்டாற் போல.
பன்றி புல் தின்றதனால் பயன் உண்டா?
பன்றியின் பின்னோடு பத்தெட்டும் போகிறது. 15815
பன்றி வேட்டையில் பகல் கால் முறிந்த நாய்க்கு இரவு கரிப் பானையைக் கண்டால் பயம்.
பன்னக்காரன் பெண்டிர் பணியக் கிடந்து செத்தான்; பரியாரி பெண்டிர் புழுத்துச் செத்தான்.
பன்னப் பன்னப் பல விதம் ஆகும்.
(தோன்றும். யாழ்ப்பாண வழக்கு.)
பன்னி உரைத்திடிலோ பாரதம் ஆம்.
பன்னிப் பழங்கதை படியாதே. 15820
(பேசாதே.)
பனங்காட்டில் இருந்து கொண்டு பால் குடித்தாலும் கள் என்பார்கள்.
பனங்காட்டில் மிரளுகிறதா?
பனங்காட்டு நாரி சலசலப்புக்கு அஞ்சுமா?
பனங்காயையும் பங்காளியையும் பதம் பார்த்து வெட்ட வேண்டும்.
பனங்கிழங்கு முற்றினால் நாராகும். 15825
பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.
பனிக்காலம் பின்னிட்டது; இனிக் காலனுக்கும் பயம் இல்லை.
(போச்சுது.)
பனிக்குப் பலிக்கும் வரகு; மழைக்குப் பலிக்கும் நெல்.
பனி நீராற் பாவை செய்தாற் போல.
(தேவாரம்.)
பனிப் பெருக்கிலே கப்பல் ஓட்டலாமா? 15830
பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.
பனி பெய்தால் வயல் விளையுமா?
பனி பெய்து கடல் நிறையுமா?
பனி பெய்து குளம் நிரம்புமா? மழை பெய்து குளம் நிரம்புமா?
பனியால் குளம் நிறைதல் இல். 15835
(பழமொழி நானுாறு.)
பனியிலே கப்பல் ஓட்டலாமா?
பனியை நம்பி ஏர் பூட்டினது போல.
பனை அடியில் இருந்து பால் குடித்தாலும் சம்சயம்.
பனை ஆயிரம்; பாம்பு ஆயிரம்.
பனை இருந்தாலும் ஆயிரம் வருஷம்; இறந்தாலும் ஆயிரம் வருஷம். 15840
பனை ஏறியும் பானை தொடாது இறங்கினாற்போல.
(பானை தொடவில்லை.)
பனை ஏறி விழுந்தவனை ஆனை ஏறி மிதித்தது போல.
(பனையாலே விழுத்தவனை மாடேறி மிதித்தது போல.)
பனை ஏறுபவனை எந்த மட்டும் தாங்குகிறது?
பனை ஓலையில் நாய மொண்டது போல.
(கடா மூண்டது போல.)
பனைக்குப் பத்தடி. 15845
பனை நிழலும் நிழலோ? பகைவர் உறவும் உறவோ?
பனை நின்று ஆயிரம்; பட்டு ஆயிரம்.
(பனை நட்டு ஆயிரம்.)
பனை மட்டையில் மழை பெய்தது போல.
பனை மட்டையில் மூத்திரம் பெய்தது போல.
பனை மரத்தின்கீழ் இருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பார்கள். 15850
பனை மரத்துக்கு நிழல் இல்லை; பறையனுக்கு முறை இல்லை.
(உறவு.)
பனை மரத்து நிழல், பாம்பாட்டி வித்தை, தெலுங்கன் உறவு, தேவடியாள் சிநேகம் நாலும் பகை.
பனையில் ஏறுகிறவனை எட்டும் வரையில்தான் தாங்கலாம்.
பனையிலிருந்து விழுந்தவனை பாம்பு கடித்தது போல.
பனையின் நிழலும் நிழலோ? பறையர் உறவும் உறவோ? 15855
(பகைவர் உறவும்.)
பனைவிதை பெரிதாக இருந்தும் நிழல் கொடுக்க மாட்டாது.
பனை வெட்டின இடத்தில் கழுதை வட்டம் போட்டது போல.
பனை வைத்தவன் பார்த்துச் சாவான்; தென்னை வைத்தவன் தின்று சவான்.
பஹு ஜன வாக்யம் கர்த்தப்யம்.
பிழை:அப்படிப்பட்ட அட்டவணை இல்லை
பி
பிகுவான சம்பந்தி இழுத்தாராம் இரண்டு இலை. 16245
பிகுவோடு சம்பந்தி கழற்றினாளாம் துணியை.
பிச்சன் வாழைத் தோட்டத்தில் புகுந்ததுபோல.
(தோட்டத்தில்.)
பிச்சை இட்டால் மோட்சம்.
பிச்சை இட்டுக் கெட்டவர்களும் இல்லை; பிள்ளை பெற்றுக் கெட்டவர்களும் இல்லை.
(உண்டோ?)
பிச்சை எடுக்கப் போனாலும் முகராசி வேண்டும். 16250
பிச்சை எடுக்குமாம் பெருமாள்; அத்தைப் பிடுங்குமாம் அனுமார்.
(எடுக்குமாம் கருடன்.)
பிச்சை எடுக்கிறதிலும் பிகுவா?
(வலிவா)
பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.
பிச்சைக்கார நாய்க்குப் பட்டுப் பல்லக்கு.
பிச்சைக்கார நாரிக்கு வைப்புக்காரன் பெருமை; கூலிக்குச் செய்பவனுக்குக் கூத்தியாள் பெருமை. 16255
பிச்சைக்காரன் சோற்றில் சனீசுவரன் புகுந்தது போல.
பிச்சைக்காரன் சோற்றை எச்சில் நாய் பங்கு கேட்டதாம்.
பிச்சைக்காரன் பிச்சைக்குப் போனால் எங்கள் வீட்டுக்காரர் அதுக்குத்தான் போகிறார் என்றாளாம்.
பிச்சைக்காரன் மேலே பிரம்மாஸ்திரம் தொடுக்கிறதா?
பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாற் போல் 16260
பிச்சைக்காரனுக்கு ஏது கொட்டு முழக்கு?
பிச்சைக்காரனுக்கு ஒரு மாடாம்; அதைப் பிடித்துக்கட்ட ஓர் ஆளாம்.
பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் இருக்கிறதா?
(விடுகிறதா?)
பிச்சைக்காரனுக்குப் பிச்சைக்காரன் பொறாமை அதிகம்.
பிச்சைக்காரனை அடித்தானாம்; அடுப்பங்கரையிலே பேண்டானாம். 16265
பிச்சைக்காரனை அடித்தானாம்; சோளியைப் போட்டு உடைத்தானாம்.
(செம்பைப் போட்டு, சோளி-பை.)
பிச்சைக்காரனைக் கடனுக்கு வேலை வாங்கினானாம்.
பிச்சைக்காரனைப் பேய் பிடித்ததாம்; உச்சி உருமத்தில்.
(உருமத்தில் ஜாமத்தில்.)
பிச்சைக்கு அஞ்சிக் குடிபோனாளாம்; பேனுக்கு அஞ்சித் தலையைச் சிரைத்தாளாம்.
பிச்சைக் குட்டிக்குத் துக்கம் என்ன? பெருச்சாளிக்கு வாட்டம் என்ன? 16270
பிச்சைக் குடிக்கு அச்சம் இல்லை.
பிச்சைக்குடி பெரிய குடி.
(பிச்சைக்குப் பெரிய குடி)
பிச்சைக் குடியிலே சனீசுவரன் புகுந்தது போல.
பிச்சைக்குப் பிச்சையும் கெட்டது; பின்னையும் ஒருகாசு நாமமும் கெட்டது.
பிச்சைக்குப் பெரிய குடி, 16275
பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.
(கச்சவடம் வியாபாரம்.)
பிச்சைக்கு வந்த ஆண்டி இல்லை என்றால் போவாளா?
பிச்சைக்கு வந்த பிராமணா, பெருங்காயச் செம்பைக் கண்டாயோ?
(பெருங்காயச் சிமிழை. என்றாளாம்.)
பிச்சைக்கு வந்தவன் ஆண்டார் இல்லை என்றால் போகிறான்.
பிச்சைக்கு வந்தவனைப் பெண்டாள அழைத்தது போல. 16280
பிச்சைக்கு வந்தவன் எல்லாம் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?
பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளை ஆனான்.
பிச்சைச் சோற்றிலும் எச்சில் சோறா?
பிச்சைச் சோற்றிலும் குழந்தைச் சோறா?
பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறு உண்ணலாமா? 16285
(குழந்தை.)
பிச்சைச் சோற்றுக்கு இச்சகம் பேசுகிறான்.
பிச்சைச் சோற்றுக்கு எச்சில் இல்லை.
பிச்சைச் சோற்றுக்குப் பஞ்சம் உண்டா?
பிச்சைச் சோற்றுக்குப் பேச்சும் இல்லை; ஏச்சும் இல்லை.
பிச்சைப் பாத்திரத்தில் கல் இட்டது போல. 16290
பிச்சைப் பாத்திரத்தில் சனீசுவரன் புகுந்தாற் போல.
பிச்சை புகினும் கற்கை நன்றே.
பிச்சை போட்டது போதும்; நாயைக் கட்டு,
பிச்சை வேண்டாம் தாயே; நாயைப் பிடி.
பிசினாரி தன்னை வசனிப்பது வீண், 16295
பிஞ்சிலே பழுத்தவன்.
(பழுத்தாற் போல்.)
பிஞ்சிலே முற்றிய பீர்க்காங்காய்.
பிஞ்சு வற்றினால் புளி ஆகாது.
பிட்சாதிபதியோ, லட்சாதிபதியோ?
பிட்டு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும். 16300
பிட்டுக் கூடை முண்டத்தில் பொறுக்கி எடுத்த முண்டம்.
(புட்டுக் கூடை.)
பிட்டுத் தின்று விக்கினாற் போல.
பிடரியைப் பிடித்துத் தள்ளப் பெண்ணுடைய சிற்றப்பன் என்று நுழைந்தானாம்.
பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா?
பிடாரன் கைப் பாம்பு போல. 16305
பிடாரனுக்கு அஞ்சிய பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்,
(எலியை உறவு கொள்ளும்.)
பிடாரியாரே, கடா வந்தது.
பிடாரியைப் பெண்டு கொண்டாற் போல்.
பிடாரியைப் பெண்டு வைத்துக் கொண்டவன் பேயன்.
(பேயனானது போல்.)
பிடாரி வரம் கொடுத்தாலும் ஓச்சன் வரம் கொடுப்பது அரிது. 16310
(ஓச்சன்-பூசாரி.)
பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்.
(அழரி இட்டால்.)
பிடிக்கிற முலை அல்ல; குடிக்கிற முலை அல்ல.
பிடிக்குப்பிடி நமச்சிவாயம்.
(நமஸ்காரம், துறைசைப்பக்கத்தில் வழங்குவது.)
பிடிக்குப் பிடி நமஸ்காரம்.
(செங்கற்பட்டு வைஷ்ணவ வழக்கு.)
பிடித்த காரியம் கடித்த வாய் துடைத்தாற் போல் வரும். 16315
பிடித்த கிளையும் மிதித்த கொம்பும் முறிந்து போயின.
பிடித்த கொம்பு ஒடிந்து மிதித்த கொம்பும் முறிந்தாற் போல ஆனேன்.
(ஒடிந்து போக.)
பிடித்த கொம்பும் விட்டேன்; மிதித்த கொம்பும் விட்டேன்,
பிடித்த கொம்பை விடாதே.
பிடித்ததன் கீழே அறுத்துக் கொண்டு போகிறது. 16320
பிடித்த துன்பத்தைக் கரைத்துக் குடிக்கலாம்,
பிடித்தவர்க்கு எல்லாம் பெண்டு.
(+ஆவாள்.)
பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்.
பிடித்தால் குரங்குப் பிடி பிடிக்க வேண்டும்; அடித்தால் பேயடி அடிக்க வேண்டும்.
பிடித்தால் சுமை; விட்டால் கூளம். 16325
பிடித்தால் பானை, விட்டால் ஓடு.
பிடித்தால் புளியங்கொம்பைப் பிடிக்க வேணும்.
(புளியாங்கிளையை.)
பிடித்தால் பெரிய கொம்பைப் பிடிக்க வேணும்.
பிடித்தாலும் பிடித்தாய், புளியங்கொம்பை.
பிடித்து ஒரு பிடியும், கிழித்து ஒரு கிழியும் கொடுத்தது உண்டா? 16330
பிடித்துத் தின்றதைக் கரைத்துக் குடிக்கலாம்.
பிடித்து வைத்தால் பிள்ளையார்; வழிந்து எறிந்தால் சாணி மொத்தை.
(சவட்டித் தேய்த்தால்.)
பிடி பிடியாய் நட்டால் பொதி பொதியாய் விளையுமா?
பிடி யானையைக் கொண்டு களிற்று யானையை வசப்படுத்துவது போல.
பிடியில் அழகு புகுந்தால் வபன் அழகு ஆவாள். 16335
பிடிவாதம் குடி நாசம்.
(குல நாசம்.)
பிடி விதை விளையும்; மடி விதை தீயும்.
பிண்டத்துக்குக் இருக்காது; தண்டத்துக்கு இருக்கும்,
(கிடைக்காது, தண்டத்துக்கு அகப்படும்.)
பிண்டத்துக்குக் கிடையாது; தண்டத்துக்கு அகப்படாது.
பிண்டம் பெருங்காயம்; அன்னம் விலவாதி லேகியம். 16340
(அன்னம் கஸ்தூரி.)
பிண்ணாக்குத் தராவிட்டால் செக்கிலே பேளுவேன்.
பிண்ணாக்குத் தின்பாரைச் சுண்ணாம்பு கேட்டால் வருமா?
பிணத்துக்கு அழுகிறாயா? குணத்துக்கு அழுகிறாயா?
பிணத்தை மூடி மணத்தைச் செய்.
பிணம் சுட்ட தடியும் கூடத்தான் போட்டுச் சுடுகிறது. 16345
பிணம் தின்கிற பூச்சி போல.
பிணம் தின்னிக் கழுகு.
பிணம் தூக்குவதில் தலைமாடு என்ன? கால்மாடு என்ன?
பிணம் பிடுங்கத் தின்றவன் வீட்டில் புத்தரிசி யாசகத்துக்குப் போனானாம்.
பிணம் போகிற இடத்துக்குத் துக்கமும் போகிறது. 16350
பிணை ஓட்டினாலும் நெல் கொரிக்கலாம்.
பிணைப்பட்ட நாயே குப்பையைச் சும.
(மலத்தை.)
பிணைப்பட்டாயோ? துணைப் பட்டாயோ?
பிணைப்பட்டால் குரு; துணைப்பட்டால் சா.
பிணைப்பட்டுக் கொள்ளாதே; பெரும்பாவத்தை உத்தரிப்பாய். 16355
பிணைப்பட்டுத் துணைப் போகாதே.
பிணையில் இட்ட மாட்டின் வாயைக் கட்ட முடியுமா?
பித்தம் கிறுகிறு என்கிறகு; மலம் கரைத்துக் குடி குடி என்கிறது.
பித்தம் பத்து விதம்.
பித்தருக்குத் தம் குணமே செம்மையான பெற்றி. 16360
(நூலினும் செவ்வை. தண்டலையார் சதகம்.)
பித்தளை சோதித்தாலும் பொன்குணம் வருமா?
(துலக்கினாலும்.)
பித்தளை நாற்றம் போகாது.
(அறியாது.)
பித்தளை மணி அற்ற வருக்குப் பொன்மணி என்று பெயர்.
பித்தனுக்குப் புத்தி சொன்னால் கேட்பானா?
பித்தியுடைய பாகற்காய் சட்டியோட தீயுது. 16365
பித்தும் பிடித்தாற் போலப் பிடித்ததைப் பிடிக்கிறது.
பிதாவைப் போல் இருப்பான் புத்திரன்.
பிந்திகா மார்ஜால நியாயம்.
பிய்த்து விட்டாலும் பேச்சு; பிடுங்கி விட்டாலும் போச்சு.
பிய்ந்த சீலையும் பேச்சுக் கற்ற வாயும் சும்மா இரா. 16370
பிய்ப்பானேன்? தைப்பானேன்?
(கடிப்பானேன்.)
பிரகசரண ஊழல்.
பிரகசரணம் பெப்பே.
பிரசங்க வைராக்கியம்.
பிரசவ வைராக்கியம், புராண வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம். 16375
பிரதோஷ வேளையில் பேய்கூடச் சாப்பிடாது.
பிரம்மசாரி எள்ளுக் கணக்குப் பார்த்ததுபோல.
பிரம்மசாரி ஓடம்கவிழ்த்ததுபோல.
பிரம்மச்சாரி குடித்தனம்.
பிரம்ம செளசம். 16380
(தாமதம்.)
பிரம்ம தேவன் நினைத்தால் ஆயுசுக்குப் பஞ்சமா?
பிரம்ம தேவன் போட்ட புள்ளிக்கு இரண்டாமா?
பிரம்ம வித்தையோ?
பிரம்மா நினைத்தால் ஆயுசுக்கு என்ன குறை?
(பஞ்சம்.)
பிராணன் போகும் போது மென்னியைப் பிடித்த மாதிரி. 16385
பிராணன் போனாலும் மானம் போகிறதா?
பிராமணப் பிள்ளை நண்டு பிடித்தது போல.
பிராமணனுக்கு இடம் கொடாதே.
(இடம்-இடப்பக்கம் விடாதே, பிரதட்சினையாக போகவேண்டும் என்பது கருத்து.)
பிராமணா உன் வாக்குப்பலித்தது
பிராமணா, பிராமணா, உன் கால் வீங்குகிறதே; எல்லாம் உன் தாலி அறுக்கத்தான். 16390
பிராமணா போஜனப்ரியா.
(பஹுஜனப்ரியா.)
பிராமணார்த்தக்காரனுக்கு நெய்விலை எதற்கு?
பிராமணார்த்தம் சாப்பிட்டுப் பங்கு மனையை விற்றானாம்.
பிரிந்த அன்றைத் தேடித் திரும்பும் பசுவைப்போல.
(வ௫ம்.)
பிரியம் இல்லாத கூடு, பிண்டக்கூடு 16395
பிரியம் இல்லாத சோறு, பிண்டச் சோறு.
பிரியம் இல்லாத பெண்டாட்டியிலும் பேய் நன்று.
பிரியைக் கட்டி இழுப்பேன்.
பிழுக்கை வாரியும் பால்கொள்வர்.
(சுந்தரர் தேவாரம்.)
பிழைக்கப் போன இடத்திலே பிழை மோசம் வந்தது போல. 16400
பிழைக்க மாட்டாத பொட்டை, என் பெண்ணை ஏண்டா தொட்டாய்?
பிழைக்கிற பிள்ளை ஆனால் உள்ளூரிலே பிழைக்காதா?
பிழைக்கிற பிள்ளை ஆனால் பிறந்தபோதே செத்துப் போலிருக்கும்.
பிழைக்கிற பிள்ளை குரைக் கழிச்சல் கழியுமா?
பிழைக்கிற பிள்ளை பிறக்கும் போதே தெரியாதா? 16405
பிழைக்கிற பிள்ளையைக் காலைக் கிளப்பிப் பார்த்தால் தெரியாதா?
பிழைத்த பிழைப்புக்குப் பெண்டாட்டி இரண்டு.
பிழைப்பு இல்லாத நாசுவன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.
பிழைப்பு இல்லாத நாவிதன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்.
பிழை பொறுத்தார் என்று போகிறவர் குட்டுகிறதா? 16410
பிள்ளை அருமை பெற்றவருக்குத் தெரியும்.
(தாயுமானவர் பாடல்.)
பிள்ளை அருமை மலடி அறிவாளா?
பிள்ளை ஆசைக்கு மலச்சீலையை மோந்து பார்த்தாற் போல.
பிள்ளை இருக்கப் பிடித்து விழுங்கி,
பிள்ளை இருக்கப் பிடித்து விழுங்கினாள், கொள்ளா கொள்ளி வயிறே. 16415
பிள்ளை இல்லாச் சொத்துப் பாழ் போகிறதா?
(கொள்ளைக் போகிறதா?)
பிள்ளை இல்லாச் சோறு புழு.
பிள்ளை இல்லாத பாக்கியம் பெற்றிருந்து என்ன சிலாக்கியம்?
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம்.
பிள்ளை இல்லாதவன் வீட்டுக் கூரை கூடப் பொருந்தாதே. 16420
பிள்ளை எடுத்துப் பிழைக்கிறதை விடப் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்.
(பிழைப்பது மேல்.)
பிள்ளை என்றால் எல்லாருக்கும் பிள்ளை.
பிள்ளை என்றால் பேயும் இரங்கும்.
பிள்ளைக்கா பிழுக்கைக்கா இடம்கொடுக்கப் போகாது.
பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுகிறான்; பணிச்சவன் காசுக்கு அழுகிறான். 16425
(பணிச்சவன் பிணத்தைத் தூக்கி செல்பவன்.)
பிள்ளைக்காரி குசுவிட்டாய் பிள்ளைமேல் சாக்கு.
பிள்ளைக்கு அலைந்து மலநாயைக் கட்டிக் கொண்டது போல.
பிள்ளைக்கு இளக்காரம் கொடுத்தாலும் புழுக்கைக்கு இளக்காரம் கொடுக்கக்கூடாது.
பிள்ளைக்குப் பால் இல்லாத தாய்க்குப் பிள்ளைச் சுறாமீனை சமைத்துக் கொடு.
பிள்ளைக்குப் பிள்ளைதான் பெறமுடியாது; மலத்துக்கு மலம் விடிக்க முடியாதா? 16430
பிள்ளைக்கும் பிள்ளையாயிருந்து பெட்டைப் பிள்ளையை வேலை ஆக்கினான்.
பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடம் கொடாதே.
பிள்ளைக்கு வாத்தியார்; பெண்ணுக்கு மாமியார்.
பிள்ளைக்கு விளையாட்டு; சுண்டெலிக்குப் பிராண சங்கடம்.
பிள்ளைகள் கல்யாணம், கொள்ளை கிடைக்காதா? 16435
பிள்ளை குலம் அழித்தால் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்?
பிள்ளைச் சீர் கொள்ளக் கிடைக்குமா?
(கிடையாது.)
பிள்ளைத் தாய்ச்சி நோயைச் சவலைப் பிள்ளை அறியுமா?
பிள்ளைதான் உயர்த்தி; மலம் கூடவா உயர்த்தி?
பிள்ளை திறத்தைப் பேள விட்டுப் பார். 16440
பிள்ளை நல்லதுதான்; பொழுது போனால் கண் தெரியாது.
பிள்ளை நோவுக்குக் கள்ளம் இல்லை.
(பிள்ளைப் பிணிக்கு.)
பிள்ளைப் பாசம் பெற்றோரை விடாது.
பிள்ளைப் பேறு பார்த்ததும் போதும்; என் அகமுடையானைக் கட்டி அணைத்ததும் போதும்.
பிள்ளைப் பைத்தியம் பெரும் பெத்தியக். 16445
பிள்ளைப் போதும் மழைப் போதும் யாருக்குத் தெரியும்?
பிள்ளை படிக்கப் போய் பயறு பசறு ஆச்சு,
பிள்ளை படைத்தவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை.
பிள்ளை பதினாறு பெறுவாள் என்று எழுதியிருந்தாலும் புருஷன் இல்லாமல் எப்படிப் பெறுவாள்?
பிள்ளை பாதி, புராணம் பாதி. 16450
(பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் லரலாறு பெரும்பகுதி.)
பிள்ளை பிறக்கும்; பூமி பிறக்காது.
பிள்ளைப் பிறக்கிறதற்கு முன்னே தின்று பார்; மருமகள் வருவதற்கு முன்னே பூட்டிப் பார்.
(மக்கள், மகள், கட்டிப்பார், போட்டுப் பார்)
பிள்ளை பிறந்த ஊ௫க்குப் புடைவை வேணுமா?
பிள்ளை புழுக்கை; பேர் முத்துமாணிக்கம்.
பிள்ளை பெற்றபின் அன்றோ பேரிட வேண்டும்? 16455
பிள்ளை பெற்றவளோ? நெல் எடுத்த குழியோ?
பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு எறிந்து பயன் என்ன?
(ஆவது என்ன?)
பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி பெருமூச்சு விட்டு அழுதது போல.
பிள்ளை பெற்றாயோ, பிறப்பை எடுத்தாயோ?
பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை; பிச்சை எடுத்து வாழ்ந்தவனும் இல்லை. 16460
(பெற்றுத் தாழ்ந்தவனும்.)
பிள்ளை பெற்றுப் பிணக்குப் பார்; கல்யாணம் முடித்துக் கணக்குப் பார்.
பிள்ளை பெற்றுப் பேர் இட வேண்டும்.
பிள்ளை பெறப் பெற ஆசை; பணம் சேரச் சேர ஆசை.
பிள்ளை மலபாதை செய்ததென்று துடையை அறுக்கிறதா?
(மடியில் பேண்டுவிட்டால்.)
பிள்ளையாண்டான் கெட்டிக்காரன்; பொழுது போனால் கண் தெரியாது. 16465
பிள்ளையாய்ப் பிறந்து சோடையாய்ப் போனேனே!
பிள்ளையார் அப்பா, பெரியப்பா, பிழைக்கும் வழியைச் சொல்லப்பா.
பிள்ளையார் குட்டுக் குட்டி ஆயிற்று.
பிள்ளையார் கோயில் பெருச்சாளி போல.
பிள்ளையார் கோயிலில் திருடன் இருப்பான். 16470
(கள்ளன்.)
பிள்ளையார் கோயிலைப் பெருக்கலாம்; மெழுகலாம்; அமேத்தியம் விடித்தால் கண் போய் விடும்.
(பேள மட்டும் கூடாது.)
பிள்ளையார் சதுர்த்திக்கும் மீராசாயபுவுக்கும் என்ன சம்பத்தம்?
பிள்ளையார் சுழி போட்டாயிற்று.
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.
பிள்ளையார் பிறகே திருடன் இருக்கிறான்; சொன்னால் கோளாம். 16475
பிவளையார் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க விடமாட்டான்.
பிள்ளையார் வேஷம்.
(-கர்ப்பிணி.)
பிள்ளையாருக்குக் கல்யாணம் நடக்கிறபோது.
பிள்ளையாருக்குப் பெண் கொள்வது போல.
(பெண் பார்த்தது.)
பிள்ளையாரைக் கண்டால் தேங்காயைக் காணோம்; தேங்காயைக் கண்டால் பிள்ளையாரைக் காணோம். 16480
பிள்ளையாரைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்கிற்றாம்.
பிள்ளையாரைச் சாக்கு வைத்துப் பூசாரி போட்டாற்போல.
பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தைப் பிடித்தது போல.
பிள்ளையின் அழகைப் பேளவிட்டுப் பார்த்தால் உள்ள அழகும் ஓட ஓடக் கழிகிறது.
பிள்ளையின் திறமையைப் பேளவிட்டுப் பார்த்தானாம். 16485
பிள்ளையின் நிறமையை வேலை விட்டுப் பார்.
பிள்ளையின் பாலைப் பீச்சிக் குடிக்கிறதா?
பிள்ளையின் மடியிலே பெற்றவன் உயிர் விட்டால் பெருங்கதி உண்டு.
பிள்ளையும் இல்லை; கொள்ளியும் இல்லை.
பிள்ளையும் மலமும் பிடித்ததை விடா. 16490
பிள்ளையும் பிழுக்கையும் சரி.
பிள்ளையை அடித்து வளர்க்க வேணும்? முருங்கையை ஒடித்து வளர்க்க வேணும்.
பிள்ளையைக் காட்டிப் பூதம் விழுங்குகிறது.
பிள்ளையைப் பெற்றபின்தான் பெயர் இடவேண்டும்.
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறதா? 16495
பிள்ளையை விட்டுத் திருடுவது போல.
பிள்ளை வரம் கேட்கப் போய்ப் புருஷனையே பறி கொடுத்தது போல
பிள்ளை வருத்தம் பெற்றவளுக்குத் தெரியும்; மற்றவளுக்குத் தெரியுமா?
(தாயுமானவர்.)
பிள்ளை வீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்தது போல,
பிறக்காத பிள்ளைக்கு நடக்காத தொட்டில். 16500
(கிடக்காக)
பிறக்கிற பிள்ளையை நம்பி இருக்கிற பிள்ளையைக் கொன்றது போல.
பிறக்கிறபொழுதே முடமானால் இட்டுப் படைத்தால் தீருமா?
(தெய்வத்துக்குப் படைத்தால்; பேய்க்குப் படைத்தால்.)
பிறக்கும்போது தம்பி; பெருத்தால் தாயாதி.
பிறக்கும்போது யார் என்ன கொண்டு வந்தார்?
(தண்டலை யார் சதகம்.)
பிறத்தியார் புடைவையில் தூரம் ஆவது என்றால் கொண்டாட்டம். 16505
பிறத்தியார் வளர்த்த பிள்ளை பேய்ப் பிள்ளை.
பிறத்தியாருக்கு வாத்தியார்.
பிறத்தியானுக்கு வெட்டுகிற குழி தனக்கு.
பிறந்த அன்றே இறக்க வேண்டும்.
பிறந்து இடத்து வண்மையை உடன்பிறந்தானிடத்தில் சொல்கிறதா? 16510
பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம்; பெண்டு இருந்த ஊருக்குத் தாலி வேண்டாம்.
பிறந்த ஊருக்குப் புடைவை வேணுமா?
பிறந்தகத்துக்குச் செய்த காரியமும் பிணத்துக்குச் செய்த அலங்காரமும் வீண்.
பிறந்தகத்துப் பெருமையை அக்காளிடம் சொல்வது போல.
பிறந்தகத்துப் பெருமையை உடன் பிறந்தானோடு சொன்னாளாம். 16515
(பிறந்தகத்து வரிசையை.)
பிறந்தகத்துத் துக்கம் கொல்லையிலே.
பிறந்தது எல்லாம் பிள்ளையா?
பிறந்த நாளும் திருவாதிரையும்.
(அடிபடுதல்.)
பிறந்த நாளும் புதன் கிழமையும்.
பிறந்த பிள்ளை பிடி சோற்றுக்கு அழுகிறது; பிறக்கப் போகிற பிள்ளைக்குத் தண்டை சதங்கை தேடுகிறார்கள். 16520
பிறந்த பிறப்போ பெருங் கணக்கு.
பிறந்தவன் இறப்பதே நிஜம்.
(உறுதி.)
பிறந்த வீட்டுச் செல்லி.
பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தானிடம் சொல்லிக் கொண்டாளாம்.
பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும். 16525
பிறந்தால் தம்பி; வளர்ந்தால் பங்காளி.
பிறந்தால் வெள்ளைக்காரனாகப் பிறக்க வேணும்; இல்லா விட்டால் அவன் வீட்டு நாயாய்ப் பிறக்க வேணும்.
பிறந்தும் பிறந்தும் பேதைப் பிறப்பு.
பிறப்பும் சிறப்பும் ஒருவர் பங்கு அல்ல. 16530
பிறப்பு உரிமை வேறு, சிறப்பு உரிமை வேறு.
பிறர் குற்றம் அறியப் பிடரியிலே கண்.
பிறர் பொருளை இச்சிப்பான் தன் பொருளை இழப்பான்.
பிறர் மனைத் துரும்பு கொள்ளான், பிராமணன் தண்டு கொண்டான்,
பிறவாத குழந்தைக்கு நடவாத தொட்டில் இட்டாளாம். 16535
(பிறவாப் பிள்ளைக்கு.)
பிறவிக்குணத்துக்கு மட்டை வைத்துக் கட்டினாலும் தீராது.
(மாறாது.)
பிறவிக்குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.
பிறவிக்குணம் பொங்கல் இட்டாலும் போகாது.
பிறவிக்குருடன் காது நன்றாகக் கேட்கும்.
பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல. 16540
பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல.
பிறவிக் குருடனுக்குப் பண நோட்டம் தெரியுமா?
பிறவிச் செவிடனுக்குப் பேசத்திறம் உண்டா?
பிறவிச் செல்வம் பின்னுக்குக் கேடு.
பிறை வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல்; தெற்கே சாய்ந்தால் தெற்கெல்லாம் பாழ். 16545
பின் இருக்கிறது புரட்டாசிக் காய்ச்சல்.
பின் இருந்து உண்டு குடைகிறான்.
பின் இன்னா பேதையார் நட்பு.
(பழமொழி நானூறு.)
பின் குடுமி புறங்கால் தட்ட ஓடுகிறான்.
பின்புத்திக்காரன் பிராமணன். 16550
பின்னல் இல்லாத தலை இல்லை; சன்னல் இல்லாத வீடு இல்லை.
பின்னால் இருந்து கூண்டு முடைகிறான்.
பின்னால் வரும் பலாக்காயினும் முன்னால் வரும் களாக்காய் நலம்
பின்னே ஆனால் எறியும்; முன்னால் ஆனால் முட்டும்.
(பின்னே ஆனால் உதைக்கும்.)
பின்னே என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம். 16555
பின்னை என்பதும் பேசாதிருப்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.
பிக்ஷாதிபதி, லக்ஷாதிபதி.
(பக்ஷாதிபதியோ, லக்ஷாதிபதியோ?)
பீ
பீக்கு முந்தின குசுப் போல.
பீச்சண்டை பெருஞ்சண்டை.
பீடம் தெரியாமல் சாமி ஆடினது போல. 16560
பீடு படைத்தவன் கோடியில் ஒருவன்.
பீதாம்பரத்துக்கு உண்டு ஆடம்பரச் செய்கை.
பீ தின்கிறது போலக் கனவு கண்டால் பொழுது விடிந்தால் யாருக்குச் சொல்கிறது?
பீ தின்கிறவன் வீட்டுக்குப் போனால் பொழுது விடியுமட்டும் பேளச் சொல்லி அடித்தானாம்.
பீ தின்னப் போயும் வயிற்றுவலிக்காரன் பீயா? 16565
பீ தின்ன வந்த நாய் பிட்டத்தைக் கடிக்கப் போகிறதா?
பீ தின்ன வேண்டுமென்றால் வாயை நன்றாய்க் கழுவிப் போட வேண்டும்.
பீ தின்னுகிற நாய்க்குப் பேர் முத்துமாலை.
பீ தின்னும் வாயைத் துடைத்தது போல.
பீ போடப் புறக்கடையும் பிணம் போட வாசலும். 16570
பீ போனால் பலம் போச்சு.
பீ மேலே நிற்கிறாற் போல.
பீயிலே கல விட்டு எறிந்தால் மேலேதான் தெறிக்கும்.
பீயிலே தம்படி இருந்தாலும் பெருமாளுக்குத் தளிகை போடுவான்.
பீயும் சோறும் தின்கிறதா? ஈயும் தண்ணீரும் குடிக்கவா? 16575
பீயும் சோறும் பிசைந்து தின்கிறான்.
(சோறு மாய்ப் பிசைகிறது.)
பீயும் பிள்ளையும் பிடித்ததைப் பிடிக்கும்.
பீயைப் பெரிதாய் எண்ணிப் பொய்க்காமல் வேடு கட்டுவானேன்,
(வேலி.)
பீர்க்குப் பூத்தது; விளக்கை ஏற்று.
பீலா பூத்த சோறு பெரிய பறங்‘கிலாப்’ பேளும் பேளும். 16580
பீலி காலாழி இன்றியும் கல்யாணமா?
பீற்றல் பட்டைக்கு அறுதற் கொடி.
பீற்றல் முறமும் எழுதாத ஓலையும்.
பீற்றிக் கொள்கிறான்.
பீறின புடைவை பெருநாள் இராது. 16585
(வராது, நில்லாது.)
பீறின புடைவையும் பொய் சொன்ன வாயும் நிற்குமா?
பு
புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி.
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
புகழால் புண்ணியம்.
புகுந்தடித்துப் போனோம் ஆனால் பிடித்து அடித்துத் தள்ளுவார்களா? 16590
புகை இருந்தால் நெருப்பு இருக்கும்.
புகைக்கினும் காரசில் பொல்லாங்கு கமழாது.
புகைச் சரக்கு வகைக்கு ஆகாது.
புகைந்த கொள்ளி புறத்தே.
(நாஞ்சில் நாட்டு வழக்கு.)
புகைந்த வீட்டைச் சுற்றுகிறது. 16595
புகை நுழையாத இடத்தில் புகுந்திடும் தரித்திரம்.
(புகுந்து வரும்.)
புகை நுழையாத இடத்திலும் அவன் நுழைவான்.
புகை நுழையாத இடத்திலும் போலீஸ் நுழையும்.
புகையிலைக்குப் புழுதிக் கொல்லை.
புகையிலையைப் பிரிக்காதே; பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே. 16600
புகையிலை விரித்தால் போச்சு; பெண் பிள்ளை சிரித்தால் போச்சு,
புகை வீட்டைச் சுற்றும்.
புங்க நிழலும் புது மண்ணும் போல்.
புங்கப் புகழே, தங்க நிழலே.
புங்கை நிழலுக்கும் புளியைத் தழலுக்கும். 16605
புஞ்சையிற் புதிது; நஞ்சையிற் பழையது.
புட்டுக்கூடை முண்டத்திலும் பொறுக்கி எடுத்த முண்டம்.
புட்பம் என்றும் சொல்லலாம்; புஸ்பம் என்றும் சொல்லலாம்; ஐயர் சொன்னமாதிரியும் சொல்லலாம்.
புடம் இட்ட பொன் போல.
புடைக் கட்டுப் பயிருக்கு மடைக்கட்டுத் தண்ணீர். 16610
புடைவை கொடுப்பாள் என்று பெண் வீட்டுக்குப் போனால்; கோணிப் பையைக் கட்டிக் கொண்டு குறுக்கே வந்தாளாம்.
புடைவையை வழித்துக்கொண்டு சிரிக்க வேணும்.
புண் எல்லாம் ஆறி விட்டது; தாமரை இலை அகவந்தான் இருக்கிறது என்றானாம்,
புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்த்தால் போல.
புண்ணியத்துக்குக் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல. 16615
புண்ணியத்துக்குப் பசுவைக் கொடுத்தால் பல் எத்தனை என்றாளாம்.
புண்ணியத்துக்குப் புடைவை கொடுத்தால் புறக்கடையில் போய் முழம் போட்டாளாம்.
(புண்ணியம் என்று பழம் புடைவைகொடுத்தால்-)
புண்ணிய பாவத்துக்குப் புடைவை கொடுத்தாளாம்; பின்னாலே போய் முழம் போட்டுப் பார்த்தாளாம்.
புண்ணியம் இல்லாத வழிகாட்டி வீண்.
புண்ணியம் ஒருவர் பங்கு அல்ல. 16620
புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம்.
புண்ணில் எரி இட்டது போல.
புண்ணில் கோல் இட்டது போல.
(வேல் இட்டது போல.)
புண்ணில் புளிப் பெய்தாற் போல.
புண்ணுக்கோ மருந்துக்கோ வீச்சம். 16625
புண்ணைக் கீறி ஆற்ற வேண்டும்.
புண்பட்ட புலிக்கு இடுப்பு வலி எம்மாத்திரம்?
புத்தி அற்றவர்கள் பக்தியாய்ச் செய்வதும் விபரீதம் ஆம்.
புத்தி அற்றான் பலன் அற்றான்.
புத்தி இல்லா மாந்தர் புல்லினும் புல்லர் ஆவார். 16630
புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்.
புத்தி உரம்.
புத்தி உள்ளவர் பொறுப்பார்.
புத்தி உறப் புகழ்.
புத்தி எத்தனை? சுத்தி எத்தனை? 16635
புத்தி கட்டை, பெயர் முத்து மாணிக்கம்.
புத்தி கெட்ட புதுப்பாளையம், போக்கிரி பாண்டமங்கலம், மூணும் கெட்ட மோகனூர்.
புத்தி கெட்ட ராஜாவுக்கு மதி கெட்ட மந்திரி.
புத்திசாலியின் விரோதம் தேவலை; அசட்டின் நட்பு உதவாது.
புத்திமான் பலவான் ஆவான். 16640
புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை.
புத்தியோ கட்டை, பெயரோ முத்துமாணிக்கம்.
புத்தூர் சிறுப்பிட்டி பூம்பட்டி ஆவார்.
(யாழ்ப்பாண வழக்கு. இவை சிறு குன்று உள்ள இடங்கள்.)
புத்தூரான் பார்த்திருக்க உண்பான்; பசித்தோர் முகம் பாரான்; கோத்திரத்துக்குள்ள குணம்.
(யாழ்ப்பாண வழக்கு.)
புத்ராத் சதகுணம் புத்ரீ. 16645
புதன் கோடி தினம் கோடி.
(தினமும் கிடைக்குமாம்.)
புதன் சனி முழுகு.
புதிது புதிதாய்ப் பண்ணையம் வைத்தால் மசிரு மசிரா விளைஞ்சதாம்.
புதிசுக்கு வண்ணான் கோணியும் வெளுப்பான்,
புதிதாய்ப் புதிதாய்க் குலம் புகுந்தேன், பீலாப் பூத்தகச் சோறு. 16650
புதிதாய் வந்த சேவகன் நெருப்பாய்க் கட்டி வீசுகிறான்.
புதிதாய் வந்த மணியக்காரன் நெருப்பாய் இருக்கிறான்.
(நெருப்பாய் வாரி இறைக்கிறான்.)
புதிய காரியங்களில் புதிய யோசனை வேண்டும்.
புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும்.
(புதிய விளக்குமாறு.)
புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான். 16655
புதிய வண்ணானையும் பழைய அம்பட்டனையும் தேடவேண்டும்.
புதிய வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போயிற்று.
புதியாரை நம்பிப் பழையாரைக் கைவிடலாமா?
புதுக் குடத்தில் வார்த்த தண்ணீரைப் போல.
புதுக்கோட்டை அம்மன் காசு பெற மாட்டான். 16660
புதுக்கோட்டைக் கறுப்பண்ணனுக்கும் பூணைப் பார்; செட்டி நாட்டுத் தூணுக்கு உறையைப் பார்.
புதுக்கோட்டைப் புஷ்பவல்லியைப் பார்; தேவகோட்டைத் தேவடியாளைப் பார்,
புதுக்கோடி கிடைத்தாலும் பொன் கோடி கிடைக்காது.
புதுத்துடைப்பம் நன்றாய்ப் பெருக்கும்.
(சுத்தமாய்ப் பெருக்கும்.)
புதுப்பணக்காரனிடம் கடன் வாங்காதே. 16665
புதுப்பணம் படைத்தவன் அறிவானோ போன மாதம் பட்ட பாட்டை.
(யாழ்ப்பாண வழக்கு.)
புதுப்பானைக்கு ஈ சேராது.
புதுப்புனலும் புதுப்பணமும் மண்டையை இடிக்கும்; தொண்டையை அடைக்கும்.
புதுப் புடைவையிலே பொறி பட்டாற் போல.
புதுப் பெண் என்று தலை சுற்றி ஆடுகிறதா? 16670
புதுப் பெண்ணே, புதுப் பெண்ணே, நெருப்பு எடுத்து வா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்படி.
புதுப் பெண் போல் நாணுகிறது.
(நாணிக் கோணுதல்.)
புதுப் பெண் மோடு தூக்கும்.
புது மண அறைப் பெண் போல நாணுகிறது.
புது மாட்டுப்பெண் மேட்டைத் துடைக்கும். 16675
புது மாடு குளிப்பாட்டுகிறது போல.
புது மாடு புல்லுப் பெறும்.
புதுமைக்கு வண்ணான் கரை கட்டி வெளுப்பான்; பழகப் பழகப் பழந் துணியும் கொடான்.
(பறை தட்டி அன்று வெளுப்பான். யாழ்ப்பாண வழக்கு.)
புதுமையான காரியந்தான் இந்தக் கலியுகத்தில்.
புது வண்ணான் கோணியும் வெளுப்பான். 16680
புது வாய்க்கால் வெட்ட வேண்டாம்; பழ வாய்க்கால் தூர்க்க வேண்டாம்.
புது வெள்ளத்தில் கெளுத்தி மீன் ஏறுவது போல,
புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு போயிற்று.
புதையல் எடுத்தவனைப் போல.
புயலுக்குப் பின் அமைதி. 16685
புரட்டாசிக் கருக்கல் கண்ட இடத்து மழை.
புரட்டாசிக் காய்ச்சல்.
புரட்டாசிச் சம்பா பொன் போல் விளையும்
புரட்டாசி நடுகை, திரட்சியான நடுகை
புரட்டாசிப் பகலில் பொன் உருகக் காய்ந்து இரவிலே மண் உருகப் பெய்யும் 16690
புரட்டாசி பதினைந்தில் நடவே நடாதே.
புரட்டாசி பாதியில் சம்பா நடு.
புரட்டாசி பெய்தாலும் பெய்யும்; காய்ந்தாலும் காயும்.
புரட்டாசி பெய்து பிறக்க வேணும்; ஐப்பசி காய்ந்து பிறக்க வேணும்.
புரட்டாசி மாதத்தில் கோவிந்தா என்ற குரலுக்குப் பஞ்சமா? 16695
புரட்டாசி மாதத்து நடவு பெரியோர் தேடிய தனம்.
புரட்டாசி மாதத்தில் பேரெள் விதை; சித்திரை மாதத்தில் கூர் எள் விதை.
புரட்டாசி மாதம் முப்பதும் ஒரு கந்தாயமா?
புரட்டாசியில் பொன் உருகக் காய்ந்தாலும் காயும்; மண்ணுருகப் பெய்தாலும் பெய்யும்.
புரட்டாசியில் பொன் உருகக் காயும்; ஐப்பசியில் மண் உருகப் பெய்யும். 16700
புரட்டாசி விதை ஆகாது; ஐப்பசி நடவு ஆகாது.
புரட்டாசியில் வில் போட்டால் புனல் அற்றுப் போகும்.
(உணவு.)
புரட்டாசி வெயில் பொன் உருகக் காய்ந்து மண் உருகப் பெய்யும்.
புரட்டாசி வெயிலில் பொன் உருகும்.
புரட்டிப் புரட்டி உதைக்கிற போதும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றான். 16705
(மண் படவில்லை.)
புரண்டும் பத்து நாள்; மருண்டும் பத்து நாள்; பின்னையும் பத்து நாள்.
புரவி இல்லாப் படை போல,
புரளன் கரை ஏறமாட்டான்.
புராண வைராக்கியம்.
புரிந்ததா மட்டைக்கு இரண்டு கீற்று என்று? 16710
புருவத்தில் பட்டால் கரிக்குமோ? கண்ணில் பட்டால் கரிக்குமோ?
புருவத்துக்கு மை இட்டால் கண்ணிக்கு அழகு.
புருஷக் கைம்பெண்.
புருஷன் அடிக்கக் கொழுந்தனைக் கோபித்தது போல.
புருஷன் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரித்ததுதான் கோபம். 16715
புருஷன் இல்லாமல் பிள்ளை பெறலாமா?
புருஷன் செத்தால் வெட்கம்; பிள்ளை செத்தால் துக்கம்.
புருஷன் வலு இருந்தால் பெண்டாட்டி குப்பை மேடு ஏறிச் சண்டை போடுவாள்.
புருஷனுக்கு ஏற்ற மாராப்பு.
புருஷனைப் பார்க்கும்போது தாலி எங்கே என்று தேடினாளாம். 16720
புருஷனை வைத்துக் கொண்டு அவிசாரி போவது போல்,
புல் அற உழாதே; பயிருக்கு வேலி கட்டாதே.
(மாட்டை வேளையோடு கட்டி வேளையோடு உழு; நடுக்கழனியாக வாங்கு என்பது கருத்து)
புல் உள்ள இடத்தில் மேயாது; தண்ணீர் உள்ள இடத்தில் குடிக்க ஒட்டாது.
புல் என்றாலும் புருஷன்; கல் என்றாலும் கணவன்.
புல்லனுக்கு எது சொன்னாலும் கேளான். 16725
புல்லனுக்கு நல்லது சொன்னால் புண்ணிலே கோல் இட்ட கதை.
புல்லும் பூமியும் உள்ள மட்டும் என் நிலத்தை அநுபோகம் பண்.
புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ள மட்டும்.
புல்லூரோ, நெல்லூரோ?
(புல்லூர்; திருவாடானைத் தாலூக்காவில் உள்ள ஊர்.)
புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா? 16730
புல்லோருக்கு நல்லோர் சொன்ன பொருளாகி விட்டது.
(கம்ப ராமாயணம்)
புல் விற்கிற கடையிலே பூ விற்கிறது.
புலவர் இல்லாத சபையும் அரசன் இல்லாத நாடும் பாழ்.
புலவர் வறுமை பூமியிலும் பெரிது.
புலவருக்கு வெண்பாப் புலி. 16735
புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும்.
(கிலி பிடிக்கும்.)
புலி இருக்கிற காட்டில் பசு போய்த் தானே மேயும்?
புலி இருந்த குகையில் போகப் பயப்படுகிறதா?
புலி இளைத்தாலும் புல்லைத் தின்னாது.
புலி ஏகாதசி விரதம் பிடித்தது போல. 16740
புலிக் காட்டிலே புகுந்த மான் போல.
(புலிக் குகையிலே.)
புலிக்கு அஞ்சாதவன் படைக்கு அஞ்சான்.
புலிக்கு அரிய உணவைப் பூனை புசிக்குமோ?
புலிக்குத் தன் காடு பிறவி காடு இல்லை.
(அசல் காடு)
புலிக்குத் தன் காடு வேற்றுக் காடு உண்டா? 16745
(பிறர் காடு என்று கிடையாது.)
புலிக்குப் பயந்தவர்கள் எல்லாரும் என்மேல் படுத்துக் கொள்ளுங்கள்.
(பொட்ட வந்து)
புலிக்குப் பயந்து பூனை புழுக்கையை மூடுமாம்.
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
(பூனை ஆகுமா?)
புலிக்குப் பிறந்தது நகம் இல்லாமல் போகுமா?
புலிக்குப் புதர் துணை; புதருக்குப் புலி துணை. 16750
புலிக் கூட்டத்தில் மான் அகப்பட்டது போல.
புலி குத்தின சூரி என்று கையில் எடுத்தாலும் போதும்; பூனை குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா?
(எடுத்தாலும் பெருமை)
புலி செவி திருகிய மத களிறு.
புலி நகம் படாவிட்டாலும் அதன் மீசை குத்தினாலும் விஷம்.
(குத்தினால் அதுவே விஷம்)
புலிப் பாய்ச்சல் பாய்கிறான். 16755
புலிப்பால் குடித்தவன் போல் இருக்கிறான்.
புலிப்பால் வேண்டுமானாலும் கொண்டு வருவான்.
புலிப்பாலைக் கொணர்ந்தவன் எலிப்பாலுக்கு அலைந்தானாம்,
புலி பசித்தால் புல்லைத் தின்னுமா?
(தின்னாது)
புலி பதுங்கிப் பாயும். 16760
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
புலி புலி என்று ஏமாற்றுவது போல.
புலிமேல் வீச எடுத்த கத்தியைப் பூனைமேல் வீசுகிறதா?
புலியின் கைப்பட்ட பாலகனைப் போல
புலியின் முகத்தில் உண்ணி எடுக்கலாமா? 16765
புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிக்க.
புலியும் பசுவும் பொருந்தி வாழ்ந்தாற்போல.
புலியூருக்குப் பயந்து நரியூருக்கு வந்தேன்; நரியூரும் புலியூராய்ப் போயிற்று.
புலியூருக்குப் பயந்து புத்தூருக்குப் போனால் புத்தூரும் புலியூரான கதை.
(மதுரைப்பக்க வழக்கு)
புலியூரை விட்டு எலியூருக்குப் போக, எலியூரும் புலியூர் ஆனது போல. 16770
புலியை இடறின சிதடன் போல.
(சிதடன்-குருடன்.)
புலியைக் கண்ட மான் போல.
புலியைக் கண்டால் கிலி.
புலியைப் பார்த்த நரி சூடிக் கொண்டது போல.
(பூனை சூடிக் கொண்டது போல.)
புலியை விடக் கிலி பெரிது. 16775
புலி வயிற்றில் பிறந்தால் நகம் இல்லாமல் போகுமா?
புலையனுக்குப் பூமுடி பொறுக்குமா?
புலையனுக்கு வாக்குச் சுத்தியும் ஆணையும் இல்லை.
(சுத்தமும்.)
புலையாடியும் பொருளைத் தேடு; பொருள் வந்து புலையை நீக்கும்.
புலையும் கொலையும் களவும் தவிர். 16780
புவி அரசர் போற்றும் கவி அரசர் கம்பர்.
புழுக்கை ஒழுக்கம் அறியாது; பித்தளை நாற்றம் அறியாது.
புழுக்கை ஒழுக்கம் அறியுமா? பிண்ணாக்குக் கட்டி பதம் அறியுமா?
புழுக்கைக்குணம் போகாது ஒரு காலும்.
புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே. 16785
புழுக்கைக்குப் பொன்முடி பொறுக்குமா?
புழுக்கை கலம் கழுவித் தின்னாது.
(உண்ணாது, உண்ணுமா?)
புழுக்கைக்கு மேல் சன்னதம் வந்தால் பூ இட்டுக் கும்பிட வேண்டும்.
புழுக்கை சுகம் அறியுமா?
புழுக்கை வெட்கம் அறியுமா? 16790
புழுங்கிப் புழுங்கி மா இடித்தாலும் புழுக்கைச்சிக்கு ஒரு கொழுக்கட்டை.
புழுத்த சரக்கு; கொழுத்த பணம்,
(புழுத்தகன்).
புழுத்த நாய் குறுக்கே போகாது.
புழுதி உண்டானால் பழுது இல்லை.
புழுவும் புரளும். 16795
புழைக்கடைக் கீரை மருந்துக்கு உதவாது
(பச்சிலை.)
புழைக்கடை மருந்து சுவைக்கு உதவாது.
(கவைக்கு.)
புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா?
புள்ளிக் கணக்குப் பள்ளிக்கு உதவாது.
புள்ளிக்காரன் கணக்குப் பள்ளிக்கு உதவாது. 16800
(புள்ளிக் கணக்கு.)
புள்ளிப் பொறி பாய்ந்த மூங்கில் கொள்ளிச் சாம்பல் ஆனாற்போல.
புள்ளும் புறாவும் இரை தின்னா.
(அநீதி அடைந்தால்.)
புளி ஆயிரம், போந்து ஆயிரம்.
(பொந்து)
புளி எத்தனை தூக்கு? ஒரே தூக்கு.
புளி ஏப்பக்காரனும் பசி ஏப்பக்காரனும். 16805
புளித்த காய்க்குப் புளி யுகுத்துவாயோ?
(புகுத்தினாயோ?)
புளியங்காய்க்குப் புளிப்புப் புகுத விட்டால் வருமா?
புளியங் கொட்டைக்குச் சனி மூலையா?
புளியங் கொம்பைப் பிடிக்கப் போகிறது புத்தி.
புளியந் தோடும் பழமும் போல. 16810
(ஓடும்.)
புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வேணுமா?
(புகுதவிட வருகிறாயோ?)
புளியம் பழமும் ஓடும் போல.
புளிய மரத்தில் ஏறினவன் நாக்கு எரிவு காணாமுன் இறங்குவானா?
புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்.
(நாக் கூசினால்.)
புளிய மரத்துப் பிசாசு பிள்ளையாரையும் பிடித்ததாம். 16815
புளிய மரத்தைக் கண்டால் வாயும் நில்லாது; வீதியிலே போகிற நாயைக் கண்டால் கையும் நில்லாது.
புளியும் ஓடும் போல் ஒட்டாமல் இருக்கிறது.
புளி வற்றினால் கரைக்கலாம்; பிஞ்சு வற்றினால் கரைக்கலாமா?
புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்.
புற்றில் ஆந்தை விழிப்பது போல விழிக்கிறான். 16820
புற்றில் ஈசல் புறப்பட்டது போல.
புற்றில் ஈசல் புறப்பட்டாலும் மண்ணில் கறையான் கூடினாலும் மழை வரவே வரும்.
(பெய்யவே பெய்யும்.)
புற்றில் கால் இட்டாற் போல.
புற்றில் கிடந்த புடையன் எழுந்தது போல.
புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டது போல. 16825
புற்று அடிமண் மருந்தும் ஆகும்.
புறக்குடத்துத் தண்ணீர் போல.
புறக் குற்றம் அறியப் பிடரியிலே கண்.
புற மடையில் பொலியைத்துவி அடைக்கப் பார்த்தானாம்.
புறமுதுகு காட்டி ஓடாதே. 16830
புறாவுக்கு எறிந்த கல்லை மடியில் கட்டுகிறதா?
புன்சிரிப்புக்கு மருந்து சாப்பிடப் போய் உள்ள சிரிப்பும் போச்சுதாம்.
(குஞ்சிரிப்புக்கு)
புன்டெயிற் புதியது; நன்செயிற் பழையது.
புன்னாலைக் கட்டுவன் பாழ்ப்பட்டுப் போவார்.
(புன்னாலைக் கட்டுவான்-யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் ஊர். யாழ்ப்பாண வழக்கு)
புஷ்பம் கொடுத்த புண்ணியவதி. 16835
புஸ்தகம் ஹஸ்த பூஷணம்,
பூ
பூ இல்லாக் கொண்டை புலம்பித் தவிக்கிறதோ?
பூ இல்லாமல் மாலை கோத்துப் புருஷன் இல்லாமல் பின்ளை பெறுகிறது போல.
(யாழ்ப்பாண வழக்கு.)
பூ உதிரப் பிஞ்சு உதிரக் காய் உதிரக் கனி உதிர.
பூ உள்ள மங்கையாம், பொற்கொடியாம், போன இடம் எல்லாம் செருப்படியாம். 16840
பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?
பூச்சாண்டி காட்டுதல்.
பூச்சி காட்டப் போய்த் தான் பயந்தாற் போல.
பூச்சி காட்டப் போய்ப் பேய் பிடித்த கதை.
பூச்சி பூச்சி என்றால் புழுக்கை தலைமேல் ஏறும். 16845
பூச்சி பூச்சி என்றாளாம் பூலோகத்திலே; அவளே போய் மாட்டிக் கொண்டாளாம் சாலகத்திலே.
பூச்சி பூச்சி என்னும் கிளி பூனை வந்தால் சீச்சுக் கீச்சு என்னுமாம்.
பூச்சி மரிக்கிறது இல்லை; புழுவும் சாகிறதில்லை.
பூச்சூட்ட அத்தை இல்லை; போரிட அத்தை உண்டு.
பூசணிக்காய் அத்தனை முத்தைக் காதில் ஏற்றுகிறதா? மூக்கில் ஏற்றுகிறதா? 16850
(முத்தை எங்கே இட்டுக் கொள்கிறது?)
பூசணிக்காய் அத்தனை முத்தைப் போட்டுக் கொள்கிறது எங்கே?
பூசணிக்காய் அத்தனையும் சதை.
பூசணிக்காய் அழுகினது போல.
பூசணிக்காய் எடுத்தவனைத் தோளிலே காணலாம்.
(தூக்கினவனை.)
பூசணிக்காய்க்கும் புடலங்காய்க்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறாய். 16855
பூசணிக்காய் களவாடினவன் தோளைத் தொட்டுப் பார்த்துக் கொண்ட கதைபோல.
பூசணிக்காய்ப் பருமன் முத்து; அதைக் காதில் தொங்கவிடலாமா? மூக்கில் தொங்க விடலாமா?
பூசணிக்காய் போகிற இடம் தெரியாது; கடுகு போகிறதை ஆராய்வார்.
பூசப் பழையது பூனைக்கும் ஆகாது.
பூசப் பூசப் பொன் நிறம்; தின்னத் தின்னத் தன்னிறம். 16860
(திருநீறு.)
பூசாரி ஆலய மணியை அடித்தால் ஆனை தெரு மணியைத் தானே அடிக்கும்?
பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை.
பூசாரி புளுகும் புலவன் புளுகும் ஆசாரி புளுகில் அரைப் புளுக்குக்கு ஆகாது.
பூசாரி பூ முடிக்கப் போனானாம்; பூவாலங்காடு பலாக்காடாய்ப் போச்சுதாம்.
பூசாரி பெண்டாட்டியைப் பேய் பிடித்த கதை. 16865
பூசுவது தஞ்சாவூர் மஞ்சளாம்; அதைக் கழுவுவது பாலாற்றுக் கரைத் தண்ணீராம்.
பூசை வளர்ந்தது போச்சு.
(பூசை-பூனை.)
பூசை வேளையில் கரடி விட்டு ஒட்டியது போல்.
(பூசை பண்ணுகிற போது. பூசை முகத்திலே, கெருடி.)
பூட்டிக் சுழற்றினால் பறைச்சி; பூட்டாமலே இருந்தால் துரைச்சி.
பூட்டிப் புசிக்காமல் புதைப்பார்; ஈயைப் போல் ஈட்டி இழப்பார். 16870
பூட்டும் திறப்பும் போல.
(திறப்பு-சாவி.)
பூண்டிப் பொத்தறை, ஏண்டி கத்தறாய்?
(பொத்தறை; வட ஆர்க்காட்டு மாவட்டத்தில் உள்ள ஊர்.)
பூண்டியில் விளையாடும் புலிக்குட்டிப் பசங்கள்.
பூணத் தெரிந்தால் போதுமா? பேணத் தெரிய வேண்டாமா?
பூணாதார் பூண்டால் பூஷணமும் விழுந்து அழும். 16875
பூத்தது என்றால் காய்த்தது என்பது போல.
பூத்தானம் ஆன பிள்ளை ஆத்தாளைத் தாலி கட்டிற்றாம்.
(கட்டினது போல.)
பூத்தானம் ஆன பிள்ளை பிறந்து பூவால் அடிபட்டுச் செத்தது.
(பூத்தானம்.)
பூத்துச் சொரியப் பொறுப்பார்கள்; முட்டிக் கட்டக் கலங்குவார்கள்.
பூத உடம்பு போனால் புகழ் உடம்பு. 16880
பூதலம் தன்னில் இவ்வூர் புண்ணியம் என் செய்ததோ?
பூதலம் யாவும் போற்றும் முச்சுடர்.
பூப்பட்டால் கொப்புளிக்கும் பொன்னுத் திருமேனி.
பூ மலர்ந்து கெட்டது; வாய் விரிந்து கெட்டது.
பூமி அதிர நடவாத புண்ணியவான். 16885
பூமி ஆளலாம் என்று மனப்பால் குடிக்கிறது போல,
பூமி கிருத்தி உண்.
பூமியில் வரகு கொடுத்தால் கொடுக்கலாம்; இல்லாவிட்டால் ராஜன் கொடுக்க வேண்டும்.
பூமியைப் போலப் பொறுமை வேண்டும்.
பூர்வ சேஷ்டை போச்சுதோ, இருக்கிறதோ என்று பார்த்தானாம். 16890
பூர்ளோத்தரம் மேரு சாத்திரம் போல் இருக்கிறது.
பூராடக்காரன் ஊசாடத் தீரும்.
(யாழ்ப்பாண வழக்கு)
பூராடக்காரனோடு போராட முடியாது.
பூராடக்காரி ஊசாட ஊசாடப் பொருள் தொலையும்.
(யாழ்ப்பாண வழக்கு.)
பூராடத்தன் அப்பன் ஊராடான். 16895
பூராடத்திலே பிறந்தவளுக்கு நூல் ஆகாது.
பூராடத்தின் கழுத்தில் நூல் ஆடாது.
பூராயமாய் வேலை கற்றுக் கொள்ள வேண்டும்.
பூரி இல்லாத கல்யாணமா?
பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். 16900
பூலு அம்மின ஊருல கட்டிலு அம்ம தகுனா?
(-பூவிற்ற ஊரிலே கட்டை விற்கத் தகுமா? தெலுங்கு.)
பூலோகத்தார் வாயை மூடக் கூடுமா?
பூலோக முதலியார் பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல்.
பூவரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்?
பூவிரிந்து கெட்டது; வாய் மலர்ந்து கெட்டது. 16905
பூவிலே பூ பூனைப் பூ.
பூ விழுந்த கண்ணிலே கோலும் குத்தியது.
பூ விற்ற கடையிலே புல் விற்றது போல.
பூ விற்ற கடையிலே புல் விற்கவும், புலி இருந்த காட்டிலே பூனை இருக்கவும், சிங்கம் இருந்த குகையிலே நரி இருக்கவும், ஆனை ஏறினவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே.
பூ விற்ற காசு மணக்குமா? புலால் விற்ற காசு நாறுமா? 16910
பூ விற்றவளைப் பொன் விற்கப் பண்ணுவேன்.
பூவுக்கும் உண்டு புது மணம்.
பூவும் மணமும் போல.
பூவைத்த மங்கையாம், பொற் கொடியாம், போன இடமெல்லாம் செருப்படியாம்.
பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெற்றது போல. 16915
பூனியல் தன் வாயால் கெட்டது போல.
(பூனியல்; ஒரு பறவை.)
பூனை இளைத்தால் எலி சுலவிக் களிக்கும்மாம்.
பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேத்தி எடுக்கிறது.
பூனை எச்சில் புலவனுக்குக் கூட ஆகாது; நாய் எச்சில் நாயகனுக்கு ஆகும்.
(புலையனுக்குக் கூட.)
பூனைக்கு இல்லை தானமும் தவமும். 16920
பூனைக்கு ஒரு சூடு போடுவது போலப் புலிக்கும் ஒரு சூடு போடு.
பூனைக்கு ஒன்பது இடத்திலே உயிர்.
பூனைக்குக் கும்மாளம் வந்தால் பீற்றல் பாயைச் சுரண்டுமாம்.
பூனைக் குட்டிக்குச் சிம்மாளம்; ஓலைப் பாய்க்குக் கேடு.
பூனைச்குக் கொண்டாட்டம்; எலிக்குத் திண்டாட்டம். 16925
பூனைக்குச் சிங்கம் பின் வாங்குமா?
பூனைக்குச் சிம்மாளம் வந்தால் பீற்றல் பாயில் புரளுமாம்.
பூனைக்குத் தன் குட்டி பொன் குட்டி.
பூனைக்குப் பயந்தவன் ஆனையை எதிர்த்துப் போனானாம்.
பூனைக்குப் பயந்திருப்பாள்; புலிக்குத் துணிந்திருப்பாள். 16930
பூனைக்கு மருந்து வாங்க ஆனையை விற்பதா?
பூனைக்கு மீன் இருக்கப் புளியங்காயைத் தின்றதாம்.
(தின்னுமா?)
பூனைக்கு யார் மணி கட்டுவது?
பூனை கட்டும் தோழத்தில் ஆனை கட்டலாமா?
(தொழுவத்தில்.)
பூனை கண்ணை மூடினால் உலகமே அஸ்தமித்து விடுமா? 16935
பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்ட தென்று நினைக்குமாம்.
பூனை குட்டி போட்டாற்போல் தூக்கிக் கொண்டு அலைகிறான்.
பூனை குட்டியைத் தூக்கிக் கொண்டு போவது போல,
பூனை குண்டு சட்டியில் தலையை விட்டுக் கொண்டு பூலோகம் எல்லாம் இருண்டு போச்சென்று நினைக்குமாம்.
(இட்டுக் கொண்டு.)
பூனைக் குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா? 16940
பூனை கொன்ற பாவம் உன்னோடே; வெல்லம் தின்ற பாவம் என்னோடே.
பூனை சிரித்ததாம்; எலி பெண்டுக்கு அழைத்ததாம்.
பூனை செய்கிறது துடுக்கு; அதை அடித்தால் பாவம்.
பூனை நோஞ்சல் ஆனாலும் சகுனத்தடையில் குறைவு இல்லை.
பூனை பால் குடிக்கிறது போல. 16945
பூனை பிராமண போஜனம் பண்ணுகிறது என்று பூணூல் போட்டுக் கொண்டதாம் எலி.
பூனை பிராமண போசனம் பண்ணுகிறேன் என்று பூணூல் போட்டுக் கொண்டதாம்.
பூனை புறக்கடை, நாய் நடு வீடு.
பூனை போல் அடங்கினான்; புலிபோல் பாய்ந்தான்.
(ஒடுங்கினான்.)
பூனை போல் இருந்து புலி போல் பாயும், 16950
(பூனை போல் நடுங்கி,)
பூனை போல் ஒடுங்கி ஆனை போல் ஆக்கிரமிக்கிறது.
பூனை போல நடுங்கிப் புலி போலப் பாய்வான்.
பூனை போன்ற புருஷனுக்கு வாழ்க்கைப் பட்ட சுண்டெலிப் பெண் போல்.
பூனை மயிர் ஆனாலும் பிடுங்கினது மிச்சம்.
பூனைமுன் கிளிபோல் புலம்பித் தவிக்கிறது. 16955
பூனையின் அதிர்ஷ்டம், உறி அறுந்து விழுந்தது.
பூனையும் எலியும் போல்.
பூனையைக் கண்ட கிளிபோல.
பூனையைக் கண்டு புலி அஞ்சுமா?
பூனையைக் கொன்ற பாவம் உனக்கு; பிடி வெல்லம் தின்ற பலன் எனக்கு. 16960
பூனையைத் தான் வீட்டுப் புலி என்றும் எலியரசன் என்றும் சொல்வார்கள்.
பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது போல்,
பூனையை வளர்த்தால் பொல்லாத வழி; நாயை வளர்த்தால் நல்ல வழி.
பூனை வயிற்றில் ஆனை பிறந்தது போல.
பூனை வாய் எலிபோல் புலம்பித் தவிக்கிறது. 16965
பூனை வாயில் அகப்பட்டி எலி போல்.
பூனை விற்ற காசுக்கு ஆனை வாங்க இயலுமா?
கி.வா.ஜ.
இவர் 11.4.1906-ம் ஆண்டு பிறந்தார். தந்தை வாசுதேவ ஐயர், தாயார் பார்வதி அம்மாள். இவர் பள்ளியில் படிக்கும்போதே ‘விவேக சிந்தாமணி’ பாடல்களை மனப்பாடம் செய்து, அதற்கு அர்த்தம் சொல்லுவார். அந்தப் பருவத்திலேயே இவர் மேலும் சில தமிழ்ப் புத்தகங்களை வாங்கி, மனப்பாடம் செய்து விட்டு, தானும் அதேபோல் பாடல்களை எழுதி விடுவாராம். இந்த ஆற்றலால் ரெயிலில் போய்வரும் போது கூட ரெயில் ஓட்டத்தின் குதியோசைக்கு ஏற்ப ஏதாவது பாடிக் கொண்டே இருப்பாராம். இவரது கன்னி முயற்சியில் உருவானது. ‘போற்றிப் பந்து’ என்னும் பதிகம். வடுவூர் துரைசாமி ஐயங்கார் நடத்தி வந்த ‘ஒற்றுமை’ பத்திரிகையில் அது வெளியானது. 1927-ல் இவர் மகாவித்துவான் உ.வே. சுவாமிநாத ஐயரிடம் மாணாக்கராகச் சேர்ந்தார். 1933-ல் இவர் ‘வித்துவான்’ பட்டம் 1949-ல், காஞ்சி மஹா சுவாமிகள் இவருக்கு ‘திருமுருகாற்றுப்படை அரசு’ என்ற பட்டத்தையும், 1951-ல் ‘வாகீச கலாநிதி’ என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவித்தார்.1982-ம் ஆண்டு ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இலக்கியம் சமயம் ஆகிய இரு துறைகளிலும் உரையாற்றுவதில் வல்லவர், நூற்றுக் கணக்கான தமிழ் நூல்களை எழுதிய இவர் 4.11.1988-ம் ஆண்டு தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டார்.